என் மலர்
புதுச்சேரி
புதுவையில் அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதங்களில் சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு ஊழியர்கள் சம்பளத்தை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் கடந்த சில ஆண்டுகளாக நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் அரசின் கையிருப்பு குறைந்துள்ளது. அரசுக்கு வருமானம் அளித்து வந்த மது விற்பனை, பத்திரப்பதிவு, சுற்றுலா, போக்குவரத்து ஆகியவை முற்றிலும் முடங்கியுள்ளதால் வருமானமும் வெகுவாக குறைந்துள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீடு, 7-வது ஊதிய குழுவுக்கு வழங்க வேண்டிய தொகை என பல்வேறு நிதியும் கிடைக்கவில்லை. கொரோனா தடுப்பு பணிக்கும் மத்திய அரசு நிதி அளிக்கவில்லை.
இதனால் அடுத்த மாதங்களில் புதுவையில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு ஊழியர்கள் சம்பளத்தை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த தலைமை செயலாளருக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
மாநிலத்தின் நிதிநிலை மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என்றும், மானியம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளேன்.
பல மாநிலங்களில் அரசு ஊழியர்களின் சம்பளத்தை பாதியாக குறைத்துள்ளனர். ஊழியர்களின் அகவிலைப்படியை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
பல மாநிலங்கள் இதுபோன்று நடவடிக்கை எடுத்து நிதி பற்றாக்குறையை சமாளிக்க ஏற்பாடு செய்து வருகின்றன.
புதுவை மாநிலத்தில் இது தொடர்பாக அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
நானும், அரசு ஊழியர் சம்மேளன தலைவர்களை அழைத்து பேசி மே மாதம் சம்பளம் போடும்போது நம் மாநிலத்தின் நிதி பற்றாக்குறையை எந்த அளவுக்கு சரிசெய்ய முடியும் என்று ஆலோசனை நடத்த உள்ளேன்.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

புதுவையில் நாளை மறுநாள் திங்கட்கிழமை முதல் மதுபான கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படும் என தெரிகிறது.
புதுச்சேரி:
ஊரடங்கு உத்தரவால் புதுவையில் 50 நாட்களுக்கும் மேலாக மதுபான கடைகள் மூடப்பட்டு கிடக்கிறது.
புதுவையில் கலால்துறை மூலம் புதுவை அரசுக்கு சுமார் ரூ.1000 கோடி வருமானம் கிடைக்கிறது. மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 4-ந் தேதி ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. இதனைத்தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, டெல்லி, தமிழ்நாடு, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட்டது.
தமிழகத்தில் 7-ந் தேதி மதுபான கடைகள் திறக்கப்பட்டது. மதுபான கடைகளை திறக்க தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் புதுவையில் மதுபான கடைகள் திறப்பது தள்ளிப்போனது.
இதனிடையே ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் மதுபான கடைகள் 9-ந் தேதி முதல் மூடப்பட்டது. இதனால் புதுவையில் மதுபான கடைகளை திறப்பதில் சிக்கல் நிலவியது.
ஐகோர்ட்டு உத்தரவு புதுவைக்கும் பொருந்தும் என்பதால் மதுபான கடைகளை திறக்கும் முடிவை அரசு கைவிட்டது. மே 17-ந் தேதிக்கு பிறகு மதுபான கடைகளை திறக்கலாம் என அரசு முடிவெடுத்திருந்தது.
இந்நிலையில் தமிழக அரசு தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இது மாநில அரசுகளின் முடிவு எனக்கூறி மதுபான கடைகளை திறக்க பச்சைக்கொடி காட்டியது. இதனையடுத்து இன்று முதல் தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது.
புதுவையில் மதுபான கடைகள் திறப்பது எப்போது? என மது பிரியர்களின் கேள்வியாக எழுந்துள்ளது. மதுபிரியர்கள் அண்டைமாநிலங்களுக்கு செல்வதை தவிர்க்க புதுவையில் மதுபான கடைகளை திறக்க வேண்டும் என அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசும் ஊரடங்கில் மேலும் பல்வேறு தளர்வுகளை அறிவிக்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே புதுவை அமைச்சரவையில் மே 17-ந் தேதிக்கு பிறகு மதுபான கடைகளை திறப்பது குறித்து முடிவெடுக்கலாம் என தீர்மானித்திருந்தனர்.
இதனால் அநேகமாக நாளை மறுநாள் திங்கட்கிழமை முதல் புதுவையில் மதுபான கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படும் என தெரிகிறது. அதே நேரத்தில் மதுபான விற்பனையுடன் கூடிய ரெஸ்ட்டாரெண்டுகளுக்கு அனுமதி வழங்க காலதாமதமாகும் என தெரிகிறது.

தினம்தினம் அடித்து உதைத்து சித்ரவதை செய்ததால் கள்ளக்காதலனை ஏவி கணவரை காரை ஏற்றி கொலை செய்ததாக மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார்.
வில்லியனூர்:
திருக்கனூர் அருகே காட்டேரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது41). இவர் தொண்டமாநத்தத்தில் உள்ள தனியார் பள்ளியில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி புவனேஸ்வரி (26).
கடந்த மார்ச் 14-ந் தேதி இரவு கந்தசாமி பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். பத்துக்கண்ணு பகுதியில் வந்த போது அந்த வழியாக வந்த கார் மோதி கந்தசாமி படுகாயம் அடைந்தார். ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
இதுதொடர்பாக வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கந்தசாமி சாவில் மர்மம் உள்ளதாகவும் அவரை யாரோ திட்டமிட்டு காரை ஏற்றி கொலை செய்ததாக கந்தசாமியின் தாயார் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரை தொடர்ந்து வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேலு, சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
ஏற்கனவே கணவன்- மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு போலீசில் புகார் தெரிவித்து இருந்த தால் கந்தசாமியின் மனைவி புவனேஸ்வரி மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து புவனேஸ் வரியை பிடித்து வில்லியனூர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் புவனேஸ்வரி கள்ளக் காதலனை ஏவி காரை ஏற்றி கந்தசாமியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து புவனேஸ்வரி மற்றும் அவரது கள்ளக் காதலன் அஜித்குமார் மற்றும் காரை ஏற்றி கொலை செய்த அஜித்குமாரின் நண்பர் பிரவீன்குமார் ஆகிய 3 பேரையும் பிடித்தனர். பின்னர் அவர்களை கொரோனா பரிசோதனைக்கு பின்பு போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது போலீசாரிடம் புவனேஸ்வரி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அவர் கூறியதாவது:-
எனது கணவர் கந்தசாமி யின் நண்பரான அஜித்குமாரை அடிக்கடி வீட்டுக்கு அழைத்து வந்தார். அப்போது அஜித்குமார் நண்பராக என்னிடம் பழகினார். ஆனால் அதனை எனது கணவர் தவறான கண்ணோட்டத்தில் பார்த்தார். இதுதொடர்பாக அடிக்கடி என்னிடம் தகராறு செய்து வந்தார்.
மேலும் வில்லியனூரில் நான் அடகு கடையில் வேலை செய்து வந்த போது என் கணவர் கந்தசாமி சந்தேகப்பட்டு வேலைக்கு செல்லும் போதும் வேலை முடிந்து வீடு திரும்பும் போதும் என்னை பின் தொடர்ந்து கண்காணிப்பார். தவறு செய்யாத என்மீது கணவர் தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததால் தவறு செய்தால் என்ன? என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. இதனால் நானும் அஜித்குமாரும் நெருங்கி பழகி வந்தோம்.
இதனை நேரிலேயே பார்த்து விட்ட எனது கணவர் கந்தசாமி தினமும் என்னை அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்தார். இதுபற்றி நான் அஜித்குமாரிடம் தெரிவித்து வந்தேன்.
தொடர்ந்து என்னை எனது கணவர் சித்ரவதை செய்ததால் அவரை கொலை செய்ய நானும் அஜித்குமாரும் முடிவு செய்தோம். அதற்கான திட்டத்தை அஜித்குமார் ஏற்பாடு செய்தார். சம்பவத்தன்று அவரது நண்பர் பிரவீன்குமார் மூலம் காரை ஏற்றி எனது கணவரை கொலை செய்தோம்.
இவ்வாறு புவனேஸ்வரி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

புதுவையில் ‘சீல்’ வைக்கப்பட்ட கடைகளில் மதுபாட்டில்களை உடைத்து எலிகள் அட்டகாசம் செய்திருப்பதை கண்ட ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
புதுச்சேரி:
ஊரடங்கு உத்தரவால் புதுவையில் உள்ள 400-க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் கடந்த 50 நாட்களாக மூடப்பட்டுள்ளன.
கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்கப்பட்டதால் கலால்துறை அனைத்து மதுபான கிடங்கு மற்றும் கடைகளுக்கு சீல் வைத்தனர் தொடர்ந்து கலால் துறையினர் மதுபான கடை மற்றும் கிடங்கில் இருப்பு கணக்குகளை ஆய்வு செய்தனர்.
இதில் சரக்கு இருப்பில் மாறுபாடு இருந்ததினால் 100 மதுபான கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 70 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மறைமலை அடிகள் சாலையில் உள்ள மதுபான கடையை திறந்து கலால் துறை அதிகாரிகள் இருப்பு கணக்கை ஆய்வு செய்தனர். அப்போது மது பாட்டில்கள் உடைந்து காணப்பட்டன.
ஒயின் பாக்கெட்டுகள் கிழிந்து காணப்பட்டன. இதனால் கடை முழுவதும் நாற்றம் வீசியது. கடைக்கு பின்புறம் உள்ள காலிமனையிலிருந்து ஏராளமான எலிகள் கடைக்குள் நுழைந்து மதுபாட்டில்களை கீழே தள்ளி மதுவை குடித்தும், ஒயின் பாக்கெட்டுகளை கிழித்தும் எலிகள் கடித்துள்ளன.
இதனால், இருப்பு கணக்கில் சில பாட்டில் மதுவும், ஒயின் பாக்கெட்டுகளும் குறைந்தது. இதற்கு எலிகள் மீதா வழக்கு போடுவது.? என அதிகாரிகள் புலம்பியபடியே வெளியேறினர்.

புதுவை அரசு தற்போதே மாற்று திட்டங்களுக்கு வழிவகை செய்து, வரும் காலத்தில் புதுவை பாதுகாப்பான சுற்றுலா நகரம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்று அத்தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரி:
யூனியன் பிரதேசமான புதுவை கனிம வளம் இல்லாத பகுதியாகும். இதனால் 20 ஆண்டிற்கு முன்பு வரை புதுவை சந்தை மாநிலமாக இருந்து வந்தது. கார், மோட்டார் சைக்கிள், எலெக்ட்ரிக், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், டயர், மது பானங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு வரி குறைவாக இருந்தது. இதனால் அண்டை மாநிலங்களில் இருந்து புதுவைக்கு வந்து தங்கி பொருட்கள் வாங்கிச் சென்றனர்.
இந்நிலையில் வாட் வரி, சமச்சீர் வரி ஆகியவற்றை மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வந்த பின்னர் அண்டை மாநிலங்களுக்கும், புதுவைக்கும் உள்ள பொருட்களின் விலை வித்தியாசம் வெகுவாக குறைந்தது. இதனால் புதுவையின் முகம் மாற தொடங்கியது. அன்றிலிருந்து சுற்றுலா நகரமாக புதுவை மாற தொடங்கியது. இதற்கேற்ப அரசும் சுற்றுலாவை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகளை அளித்தது.
இதனால் புதுவை நகரம் முழுவதும் விடுதிகளின் எண்ணிக்கை பெருகியது. சுற்றுலா சார்ந்த தொழில்களும் பெருக தொடங்கியது. பன்னாட்டு அளவிலும், அகில இந்திய அளவிலும் செயல்படக்கூடிய உணவகங்கள், விடுதிகளும் புதுவைக்கு வர தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. திருவிழாக்கள், வார இறுதி நாட்கள், புத்தாண்டு ஆகிய நாட்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது.
புதுவையில் பல்வேறு தரப்பு மக்களும் தங்குவதற்கு வசதியாக பட்ஜெட் ஓட்டல் முதல் 5 நட்சத்திர விடுதிகள் வரை நூற்றுக்கணக்கானவை தற்போது இயங்கி வருகிறது. சிறிய உணவகம் முதல் உயர்ரக உணவகம் வரை நூற்றுக்கணக்கில் நகரத்தில் உள்ளது.
அரசும் சுற்றுலாத்துறை மூலம் படகு குழாம், விடுதிகளையும் நடத்தி வருகிறது. வார இறுதி நாட்களில் மட்டும் சுற்றுலாவை மேம்படுத்தி வாரம் முழுவதும் சுற்றுலா பயணிகளை வரவழைக்கும் விதமாக மாற்றவும் அரசு தீவிரம் காட்டி வந்தது.
இத்தகைய சூழலில் பேரடியாக கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகமே சீர்குலைந்துள்ளது. உலகளவில் உள்ள சுற்றுலா நகரங்கள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதேபோல புதுவையிலும் சுற்றுலா முற்றிலுமாக முடங்கியுள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் குறைந்தபட்சம் 6 மாதத்திற்கு மேலாக புத்தாண்டு வரை சுற்றுலா எழுச்சி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிக குறைவாகவே உள்ளது.
போக்குவரத்தை அனுமதித்தாலும் வெளி மாநிலத்திலிருந்து அத்தியாவசிய பணிகள் தவிர வேறு பணிகளுக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை. இதனால் சுற்றுலாவை நம்பியுள்ள, அதனை சார்ந்த தொழில்களை நடத்துவோறும், அதில் பணியாற்றுபவர்களும் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு அரசு தற்போதே மாற்று திட்டங்களுக்கு வழிவகை செய்ய வேண்டும். அதேநேரத்தில் வரும் காலத்தில் மீண்டும் புதுவை பாதுகாப்பான சுற்றுலா நகரம் என்ற நம்பிக்கையை சுற்றுலா பயணிகளிடம் ஏற்படுத்த வேண்டும். சுற்றுலா சார்ந்த தொழில்களில் ஈடுபட்டவர்கள் இந்த பாதிப்பை தாக்குப்பிடிக்க முடியாமல் வெளியேறும் அபாயமும் உள்ளது.
எனவே நசிந்து போயுள்ள சுற்றுலா தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சிறப்பு திட்டங்கள், சலுகைகளை வழங்கவும் அரசு முன்வர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் புதுவை மது பிரியர்கள் அண்டைமாவட்ட உறவினர்கள், நண்பர்கள் மூலம் மதுபானங்களை பெற்றனர்.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக மதுபான கடைகள் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மதுபான பிரியர்கள் போதைக்காக பல்வேறு வழிகளை கையாண்டனர்.
கஞ்சா, வார்னிஷ், ஈஸ்ட், இளநீர், பழக்கலவை ஆகியவற்றின் மூலம் போதை தரும் வஸ்துகளை பயன்படுத்தி வந்தனர். தமிழகத்தில் 7-ந்தேதி டாஸ்மாக் திறக்கப்பட்டபோது அங்கு படையெடுத்து சென்றனர்.
அங்கிருந்து மது பானங்களை வாங்கிவந்து குடித்தனர். 2 நாளில் டாஸ்மாக் மூடியதால் மிகவும் சோகமடைந்தனர். இதனால் புதுவையிலிருந்து ஆந்திரா, கர்நாடகா செல்லும் லாரி டிரைவர்களிடம் பணம் கொடுத்து அங்கிருந்து மதுபானங்களை வாங்கி வரச்செய்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் புதுவை மது பிரியர்கள் அண்டைமாவட்டங்களான கடலூர், விழுப்புரம் ஆகியவற்றுக்கு அதிகாலையிலேயே புறப்பட்டு சென்றனர்.
அங்குள்ள உறவினர்கள், நண்பர்கள் மூலம் மதுபானங்களை பெற்றனர். இதனால் புதுவைக்குள் தமிழக மதுபானங்கள் பல்வேறு வழிகளில் தாராளமாக உள்ளே நுழைந்துள்ளது.

புதுவையில் மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் வளையலை நொறுக்கி தின்று பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை கொம்பாக்கம் செட்டிக்களம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கும் பண்ருட்டியை சேர்ந்த விஜயா (வயது22) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. விஜயா தனது கணவர் வீட்டிலேயே வசித்து வந்தார்.
இதற்கிடையே விஜயாவுக்கும் அவரது மாமியார் வசந்தாவுக்கும் சிறுசிறு பிரச்சனைகளில் அடிக்கடி தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் விஜயா தங்கியிருந்த அறை கதவை அவரது மாமியார் வசந்தா வேகமாக சாத்தினார். அதை பார்த்த விஜயா மாமியாரிடம் தட்டிக்கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த விஜயா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து கையில் அணிந்திருந்த கண்ணாடி வளையல்களை கழற்றி உடைத்து தின்று தற்கொலைக்கு முயன்றார். மேலும் வீட்டில் இருந்த மாத்திரைகளையும் அளவுக்கு அதிகமாக தின்றார். இதில் விஜயா வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்ததும் அவரது கணவர் பிரகாஷ் அதிர்ச்சி அடைந்து விஜயாவை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடலூர், விழுப்புரம் பகுதியில் இருந்து யாரும் புதுவைக்கு வராத வகையில் முட்களை கொட்டி வேலி அமைத்து முழுவதும் மூடி, போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியை ஒட்டியுள்ள கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டு விழுப்புரம் நகரில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனை மற்றும் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.
இதே போல் கடலூர் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.கடலூர், விழுப்புரம் மாவட்ட பகுதிகளில் உள்ளவர்கள் கிராமப்புற சாலைகள் வழியாக இருசக்கரவாகனங்களில் புதுச்சேரிக்கு வந்து செல்கின்றனர்.
இவர்கள் மூலம் புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து எல்லைகளும் முழுவதுமாக மூடப்பட வேண்டும் என்று நாராயணசாமி எச்சரித்தார்.
இதையடுத்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் புதுவை எல்லைகளை உடனடியாக முற்றிலும் முள்வேலி அமைத்து மூட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள காவல் நிலைய அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து பாகூர் பகுதியில் அரங்கனூர், சித்தேரி அணைக்கட்டு, சோரியாங்குப்பம், ஏரிக்கரை பகுதி, இருளன்சந்தை ஆகிய 5 இடங்களில் பொதுப்பணித்துறை ஊழியர்கள், மற்றும் பாகூர் போலீசார் இணைந்து கடலூர், விழுப்புரம் பகுதியில் இருந்து யாரும் புதுவைக்கு வராத வகையில் முட்களை கொட்டி வேலி அமைத்து முழுவதும் மூடினர். மேலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருக்கனூர் விழுப்புரம் மாவட்ட எல்லையில் உள்ளது. தமிழக பகுதியான ஐவேலி, பொம்பூர், பக்கிரிபாளையம், கண்டமங்கலம், பெரிய பாபுசமுத்திரம்,குயிலாப்பாளையம், மதுரப்பாக்கம் வழியாக வருபவர்கள் மணலிப்பட்டு, சோரப்பட்டு, செல்லிப்பட்டு, மண்ணாடிப்பட்டு, கூனிச்சம்பட்டு கிராமங்களில் நுழைந்து வருகின்றனர். இதனால் திருக்கனூர், காட்டேரிகுப்பம் பகுதிகள் முழுவதும் “சீல்” வைக்கப்பட்டு பொதுப்பணித்துறை மற்றும் போலீசாரின் முழு கண்காணிப்பில் உள்ளது.
மேலும் மதகடிப்பட்டு, காலாப்பட்டு, கோட்டக்குப்பம்,கோரிமேடு எல்லை பகுதிகளிலும் போலீசார் அதிக அளவில் நிறுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் இருந்து புதுவைக்கு சுகாதாரம், செவிலியர் பணிக்கு வருபவர்களை மட்டும் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கின்றனர்.

அனைத்து அரசு துறைகளும் செலவினங்களை குறைத்து சிக்கன நடவடிக்கைகளை பின்பற்றவேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி:
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது ஊதியத்தை 30 சதவீதம் குறைத்து கொள்வதாக அறிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி மாளிகையில் பல சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். இந்த நிலையில் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு துறைகளும் செலவுகளை குறைத்து சிக்கன நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளேன். நடப்பு ஆண்டு திட்டமிடப்பட்ட சம்பளம், ஓய்வூதியம், சுகாதாரம், கல்வி, ஏழைகளுக்கு இலவச அரிசி போன்ற அடிப்படையில் செலவுகள் இருக்க வேண்டும். இதுவரை பணத்தை இழந்து வரும் சேவைகளில் இருந்து வருமானத்தை திரட்டவேண்டும். இதுபற்றி அனைத்து துறைகளும் ஏற்கனவே எச்சரிக்கையாக உள்ளன.
ஜனாதிபதி மாளிகையைபோல் புதுச்சேரி கவர்னர் மாளிகையும் அனைத்து செலவுகளிலும் கடுமையான கட்டுப்பாட்டை முழுமையாக பின்பற்றும். ஏற்கனவே சமூக பொறுப்புணர்வு நிதியை சமூக நிகழ்வுகளுக்கு செயல்படுத்துவதன் மூலம் நிதி செலவு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரி டெல்லி அலுவலகத்துக்கு புதிய கார் வாங்க மறுத்துவிட்டேன். கார் வாங்குவதை தொடர வேண்டாம் என்று கொரோனா சூழல் உருவாகும் முன்பே தெரிவித்து விட்டேன். ஜனாதிபதி நாட்டுக்கே சரியான முன்மாதிரியாக இருப்பதை கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது பல சவால்களை கூட்டாக எதிர்கொள்ள உதவும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சுய உதவிக்குழு பெண்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் கடன் வழங்குவது குறித்து வங்கி அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி:
கொரோனா வைரஸ் ஊரடங்கால் கிராமப்புற ஏழை, எளிய குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களை பாதுகாத்திட புதுச்சேரி ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் கீழ் செயல்படும் 2,804 சுய உதவிக்குழுக்களில் உள்ள 37,003 உறுப்பினர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்ய வங்கிகள் மூலம் கடன் உதவி அளிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.37 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
காரைக்கால் மாவட்டத்தில் செயல்படும் 784 சுய உதவிக் குழுக்களின் 10,785 உறுப்பினர்கள் பயன்பெறும் வகை யில் கடன் தொகை சுமார் ரூ.10 கோடியே 78 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கடனை பெற்ற பயனாளிகள் 6 மாதங்களுக்கு பிறகு தவணை தொகையை திரும்பச் செலுத்தி 30 மாத தவணைக்குள்ளாக கட்டி முடிக்க வேண்டும்.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இதுவரை 624 சுய உதவிக்குழுக்களிலுள்ள 8,337 உறுப்பினர்களுக்கு பல்வேறு வங்கிகள் மூலம் ரூ.7 கோடியே 68 லட்சத்து 40 ஆயிரம் கடன் வழங்கப்பட்டது. மீதமுள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு விரைவில் கடன் வழங்கப்பட உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் சட்டசபை வளாகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கி, சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் இந்தியன் வங்கியின் துணை பொதுமேலாளர் வீரராகவன், நபார்டு வங்கி அதிகாரி உமா குருமூர்த்தி, இந்தியன் வங்கியின் முன்னோடி வங்கி மேலாளர் உதயகுமார் மற்றும் அனைத்து வங்கிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். அவர்கள் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்க உறுதி அளித்தனர்.

தாய், மகள் உள்பட 3 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியது எப்படி? என்று புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் விளக்கம் அளித்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரி அரும்பார்த்தபுரத்தை சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவரது குடும்பத்தினர், நண்பர்கள், அவருடன் பணிபுரிந்தவர்கள் மற்றும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என 40 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவரது மனைவி, மகள் மற்றும் நெட்டப்பாக்கத்தை சேர்ந்த நண்பருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதன் மூலம் கதிர்காமம் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் நோய் தொற்றால் சிகிச்சை பெற்று வருபவர் களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. காரைக்காலில் ஒருவர் சிகிச்சை பெற்று வருகின்றார். ஜிப்மரில் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் ஒட்டுமொத்தமாக புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவுக்கு 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த வைரஸ் எவ்வாறு பரவியது என்பது குறித்து ஆராய்ந்தோம். பண்ருட்டியைச் சேர்ந்த பெண் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அந்த வார்டில் நெட்டப்பாக்கத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரின் தாயாரும் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இதில் பண்ருட்டி, பெண்ணுக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அந்த வார்டில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
ஜிப்மர் மருத்துவமனை சென்று தாயின் உடல்நலனை பார்த்து வந்த நபருக்கு கொரோனா வைரஸ் ஒட்டியுள்ளது. அவர் மூலமாக அவரின் நண்பரான அரும்பார்த்தபுரத்தை சேர்ந்த நபருக்கும் தொற்று பரவியது உறுதியானது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் மனைவி, மகள், நண்பர்களுடன் பழகியதன் காரணமாக தற்போது அவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்று எளிதாகவும், வேகமாகவும் பரவக் கூடியது என்பதை மக்கள் இதன் பிறகாவது உணர வேண்டும். சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்கவேண்டும். வருகின்ற 17-ந் தேதிக்கு பின் ஊரடங்கில் மேலும் கட்டுப்பாடுகள் தளர்வு இருக்கும். அப்போது கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கடலூர், விழுப்புரத்தை சேர்ந்தவர்கள் புதுச்சேரிக்கு அதிகம் வருவார்கள். நாம் கவனக்குறைவாக இருந்தால் கொரோனா தொற்று வேகமாக பரவும்.
எனவே கொரோனா அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையையோ, கதிர்காமத்தில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையையோ தைரியமாக அணுகலாம். விழிப்புடன் இருந்து சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது முககவசம் அணிதல், கைகளை கழுவுதல் ஆகியவற்றை செய்து கொரோனா பரவுவதை தடுக்கலாம். இல்லை என்றால் இதுவரை சுகாதாரத்துறை ஊழியர்கள், காவல்துறையினர், நகராட்சி ஊழியர்கள், இணைந்து பணியாற்றியது வீணாகிவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.

புதுவை நெல் விவசாயிகளிடம் இருந்து சுமார் 20 ஆயிரம் டன் அரிசி அளவிற்கான நெல்லை இந்திய உணவுக் கழகத்தின் மூலம் நேரடியாக கொள்முதல் செய்ய, மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் அனுமதி அளித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்தில் நவரை பருவ நெல் அறுவடை விரைவில் விவசாயிகளால் தொடங்கப்பட உள்ளது.
இந்த நெல்லை, இந்திய உணவுக் கழகமே நேரடியாக கொள்முதல் செய்தால், கொரோனா தொற்று தடுப்புக்கான ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பலனளிப்பதாக இருக்கும் என மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வானுக்கு, முதல்-அமைச்சர் நாராயணசாமி கடந்த 6-ந்தேதி கடிதம் மூலம் கோரிக்கை வைத்தார்.
மத்திய வேளாண்துறை மந்திரியிடம் காணொலி காட்சி மூலமாக, வேளாண் அமைச்சர் கமலக்கண்ணனும் கோரிக்கை வைத்திருந்தார். இதன்படி மே 15-ந் தேதி முதல் ஆகஸ்டு 30-ந் தேதி வரையிலான ராபி பருவத்தின்போது, புதுவை நெல் விவசாயிகளிடம் இருந்து சுமார் 20 ஆயிரம் டன் அரிசி அளவிற்கான நெல்லை இந்திய உணவுக் கழகத்தின் மூலம் நேரடியாக கொள்முதல் செய்ய, மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் அனுமதி அளித்துள்ளார்.
இதனால் விவசாயி களின் விளைபொருளுக்கு தகுந்த விலை கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.