என் மலர்
புதுச்சேரி
கொரோனா பரவல் சூழலுக்கு ஏற்ப சனிப்பெயர்ச்சி விழா நடத்தப்படும் என அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.
காரைக்கால் :
காரைக்காலை அடுத்த திருநள்ளாற்றில் உலக பிரசித்திப்பெற்ற சனி பகவான் கோவிலில் வருகிற டிசம்பர் 27-ந் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. இதற்கான பந்தல்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி பந்தல்கால்களுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டு, பிரகார உலாவாகக் கொண்டு வரப்பட்டது. பின்னர் கோவில் பிரகாரத்தில் பூஜை செய்து நடப்பட்டது.
நிகழ்ச்சியில் அமைச்சர் கமலக்கண்ணன், மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, துணை கலெக்டரும், கோவில் நிர்வாக அதிகாரியுமான ஆதர்ஷ், தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் கமலக்கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் வருகிற டிசம்பர் 27-ந் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. கொரோனா தொற்று காரணமாக, சில முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதாவது, கொரோனா பரவல் சூழலுக்கு ஏற்ப, நோய் தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு சனிப்பெயர்ச்சி விழா நடத்தப்படும். இதுவரை நடந்த சனிப்பெயர்ச்சி விழாவின்போது, என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டதோ, அவை அனைத்தும் இந்த ஆண்டும் சிறப்பாக செய்யப்படும்.
மாவட்டங்களுக்கு இடையே, பஸ், ரெயில் போக்குவரத்து போன்ற வசதிகள் செய்யப்படும். பக்தர்களுக்கு தேவையான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிவறை, கொரோனா சமூக இடைவெளி, கைகழுவும் வசதி, அன்னதானம், பாதுகாப்பு, மருத்துவம் போன்ற அனைத்து நிலைகளிலும் பக்தர்களுக்கு எவ்வித சிரமமும் இல்லாத வகையில் காரைக்கால் மாவட்டம் நிர்வாகம் உரிய ஏற்பாடுகளை செய்யும்.
பக்தர்கள் வசதிக்காக, வழக்கம்போல் புதுச்சேரியில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்படுவார்கள். விழாவிற்கு முன்னதாக புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர், கோவில் நிர்வாக அதிகாரி, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆகியோர் கோவிலுக்கு வருகை புரிந்து உரிய ஆலோசனைகளை வழங்குவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிவர் புயல் காரணமாக புதுவை, தமிழகம் பகுதியில் எதிர்பார்த்த மழை பொழிந்துள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
சென்னை வானிலை ஆய்வு மையம் நிவர் புயல் குறித்த தகவல்களை பொதுமக்கள் அறியும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வந்தது.
இதன் ஒரு பகுதியாக சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் புவியரசன் கள ஆய்வு செய்வதற்காக தமிழக மற்றும் புதுவை கடற்கரை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
குறிப்பாக நிவர் புயல் கரையை கடந்த பகுதியான மரக்காணம், கூனிமேடு, பொம்மையார் பாளையம், புதுவை கடற்கரை பகுதிகளில் ஆய்வு செய்த அவர் அங்குள்ள மீனவர்களை நேரில் சந்தித்து மழை பொழிவு, காற்றின் வேகம் குறித்து கேட்டறிந்தார்.
கடந்த 4 நாட்களாக வானிலை ஆய்வு மையம் புயல் கரையை கடக்கும் என்பதை அறிவித்திருந்தோம். நாங்கள் கொடுத்த தகவல் சரியாக இருக்கின்றதா? என கடற்கரை பகுதிகளில் ஆய்வு செய்தோம். மழையானது நாங்கள் கணித்த அளவில் இருந்தது. காற்று சற்று குறைந்தது.
புயல் காரணமாக புதுவை, தமிழகம் பகுதியில் நாம் எதிர்பார்த்த மழை பொழிந்துள்ளது. அறிவித்தபடி மழையானது பெய்தது. அடுத்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த வாரம் உருவாக வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு புவியரசன் கூறினார்.

விழுப்புரம் அருகே என்ஜினீயர் வீட்டில் 35 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வானூர்:
விழுப்புரம் அருகே ஆரோவில் போலீஸ் சரகம் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார். (வயது 40).
சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். தற்போது புயல் மழை காரணமாக சசிக்குமார் ஊருக்கு விடுமுறை வந்து உள்ளார். நேற்று இரவு ஒரு அறையில் தனது மனைவி குழந்தைகளுடன் சசிக்குமார் தூங்கினார். இன்னொரு அறையில் அவரது தாய் லலிதா தூங்கினார்.
நள்ளிரவு சமயம் மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த நகையை எடுத்தனர். பின்னர் இன்னொருக்கு அறைக்கு சென்ற கொள்ளையர்கள் அங்கு தூங்கி கொண்டிருந்த லலிதா கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்தனர்.
அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டார். அவரது சத்தம் கேட்டு சசிக்குமார் எழுந்து வந்தார். சுதாரித்து கொண்ட கொள்ளையர்கள் அங்கிருந்து நகையுடன் தப்பி ஓடிவிட்டனர்.
பதறி போன சசிக்குமார் பீரோ இருந்த அறைக்கு சென்றார், அங்கு பீரோவில் இருந்த 30 நகை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் ஆரோவில் போலீசில் புகார் செய்தார். கோட்டக்குப்பம் போலீஸ் டி.எஸ்.பி. அஜய் தங்கம், ஆரோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்மணி ஆகியோர் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். கைரேகை நிபுணர் சோமசுந்தரம் கொள்ளையர்களின் ரேகையை பதிவு செய்து துப்பு துலக்கி வருகிறார்.

புதுச்சேரியில் நேற்று திடீரென பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவால் குழப்பமடைந்து பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
புதுச்சேரி:
நிவர் புயல் தாக்கினால் அதை சமாளிக்க புதுவை அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி கடந்த 24-ந் தேதி இரவு 9 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து மார்க்கெட், கடைகள், தியேட்டர், மால், ஓட்டல்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன.
நள்ளிரவில் மரக்காணம் அருகே புயல் கரையை கடந்ததை தொடர்ந்து இந்த தடை உத்தரவு விலக்கி கொள்ளப்படுவதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்தார். இதற்கிடையே நேற்று காலை முதல் கடைகள், மார்க்கெட், ஓட்டல்கள் திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்படத் தொடங்கின.
இந்தநிலையில் புதுச்சேரி மாவட்ட கலெக்டர் பொறுப்பு வகிக்கும் பூர்வா கார்க் திடீரென வெளியிட்ட அறிவிப்பில், 144 தடை உத்தரவு நேற்று மாலை 6 மணி வரை நீடிக்கும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
அதன்படி போலீசார் ஒவ்வொரு பகுதியாக சென்று திறக்கப்பட்ட ஓட்டல்கள், கடைகளை மூடும்படி அறிவுறுத்தினர். இதனால் திறக்கப்பட்ட கடைகள் மீண்டும் மூடப்பட்டன. மேலும் சாலையில் இருசக்கர வாகனங்களில் சென்றவர்களை மறித்து 144 தடை இன்று (நேற்று) மாலை 6 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கூறி வெளியே நடமாட தடை விதித்து எச்சரித்து அனுப்பினர்.
போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்களில் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்த விவரம் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு சென்றது. இந்தநிலையில் பகல் 11.30 மணியளவில் போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா வாக்கி டாக்கி மூலம் போலீசாரை தொடர்பு கொண்டு 144 தடை உத்தரவு பகல் 12 மணி முதல் விலக்கி கொள்ளப்படுகிறது. எனவே வியாபாரிகள், பொதுமக்களை எச்சரிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.
இப்படி 144 தடை உத்தரவை அமல்படுத்துவதிலும், விலக்கி கொள்வதிலும் ஏற்பட்ட அரசின் குளறுபடியால் பொதுமக்கள் குழப்பமடைந்ததுடன் அவதிக்குள்ளானார்கள். உணவுகள் தயாரித்து வைத்து இருந்த நிலையில் ஓட்டல் உரிமையாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்று கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நிவர் புயலை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படி அரசு துறைகளுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டனர். புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து அவர்களிடம் விவரம் கோரப்பட்டுள்ளது. இதுவரை எந்தவிதமான உயிரிழப்பும் ஏற்படவில்லை.
ஆங்காங்கே மரங்கள் பெயர்ந்து விழுந்துள்ளன. அதனை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மழைநீர் தேங்கியுள்ளதால் சில இடங்களில் மின் இணைப்பு சீராக இல்லை. அதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
புயலை எதிர்கொள்ள ஒருங்கிணைந்து செயல்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. அதற்காக பாடுபட்ட அனைத்து துறையினருக்கும், அரசின் உத்தரவை ஏற்று நடந்த பொதுமக்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். புதுவையில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினருக்கும், காவல்துறையினருக்கும் பாராட்டுக்கள்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
கவர்னர் கிரண்பேடி வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், புதுச்சேரியில் ஏற்பட்ட வெள்ள சேத பாதிப்பு குறித்து ஜனாதிபதி, பிரதமர், உள்துறைக்கு கடிதம் எழுதி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பா.ஜ.க.வுடன் கூட்டணி தொடரும் என்று என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. என்.ஆர். காங்கிரஸ் கட்சி கடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்து எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றது. எனவே நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று முனைப்போடு செயல்பட்டு வருகிறது.
என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு கிழக்கு கடற்கரை சாலையில் புதிய கட்சி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. விழாவில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி கலந்துகொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து ரிப்பன் வெட்டி கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் சிறப்பு பூஜை செய்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
விழாவில் கோகுலகிருஷ்ணன் எம்.பி., கோபிகா எம்.எல்.ஏ., முன்னாள் சபாநாயகர் சபாபதி, முன்னாள் அமைச்சர்கள் தேனீ.ஜெயக் குமார், ராஜவேலு, பன்னீர்செல்வம், தியாகராஜன், கல்யாணசுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நேரு, வைத்தியநாதன், மணக்குள விநாயகர் கல்வி குழும செயலாளர் டாக்டர் நாராயணசாமி, கட்சி பிரமுகர் ஜோ.பிரகாஷ்குமார், முன்னாள் வாரிய தலைவர் பாலமுருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
விழாவில் ரங்கசாமி நிருபர்களிடம் கூறும்போது, ‘நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி என்.ஆர். காங்கிரஸ் கட்சி புதிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளை இன்று முதல் தொடங்கியுள்ளோம். ஏற்கனவே நாங்கள் கூட்டணியில் (அ.தி.மு.க., பா.ஜ.க.) தான் இருக்கிறோம். இந்த கூட்டணி தொடரும்’ என்றார்.
புதுச்சேரியில் 144 தடை உத்தரவை இன்று மாலை வரை நீட்டித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி:
வங்கக் கடலின் தெற்குப் பகுதியில் உண்டான நிவர் புயல் நேற்றிரவு 11.30 மணி முதல் இன்று அதிகாலை 2.30 வரை முழுவதுமாக கரையை கடந்துவிட்டது. புயல் கரையை கடந்த நேரத்தில் புதுச்சேரி உள்பட சில பகுதிகளில் மணிக்கு 120 முதல் 130 கி.மீ. வரையில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனை தொடர்ந்து, நிவர் புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து சென்றது. தற்போது நிலப்பரப்புக்குள் நகர்ந்து வரும் நிவர் புயல் படிப்படியாக வலுவிழந்து வருகிறது.
கனமழை காரணமாக புதுச்சேரியில் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. பெரும்பாலான இடங்களில் நீர் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக அவர்கள் வீடுகளில் இருக்குமாறு அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில் புதுச்சேரியில் 144 தடை உத்தரவை இன்று மாலை வரை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக இன்று காலை 6 மணி வரை 144 தடை அமல் படுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று மாலை 6 மணி வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நிவர் புயல் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி, “புதுச்சேரியில் 23 சென்டிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது. பல பகுதிகளில் நீர் தேங்கியும் உள்ளது. இந்த தேங்கிய நீர் கடலில் சென்று வடியவில்லை. இது வடிய காலதாமதம் ஆவதால் புதுச்சேரி நகரப் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. சில பகுதிகள் மட்டுமே மரங்கள் விழுந்துள்ளன. மீனவ பகுதிகளில் படகுகள், வலைகள் ஆகியவற்றுக்கு சேதம் ஏற்பட்டிருக்கிறதா என்றும், உயிர்ச்சேதம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்ய இருக்கிறோம். இதுவரை உயிர் சேதம் குறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை.
புயல் இரவு நேரத்தில் வந்த காரணத்தினால் பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் பாதுகாப்பாக இருந்ததால், பாதிப்பு குறைந்துள்ளது. தடைப்பட்ட மின்சாரம் 12 மணி நேரத்திற்குள் கொடுக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளில் மின்சாரம் கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் படிப்படியாக மின்சாரம் கொடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
கடலுக்கு சென்ற காரைக்கால் மீனவர்கள் 32 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என காரைக்கால் மாவட்ட மீன்வள துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி:
நிவர் புயல் காரணமாக கடலுக்கு யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. இதேபோன்று முன்பே கடலுக்கு சென்றவர்கள் கரைக்கு திரும்பும்படியும் அறிவிக்கப்பட்டது. அதன்படி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. ஏற்கனவே மீன்பிடிக்க சென்றவர்களும் உடனடியாக கரை திரும்பினர்.
இந்நிலையில், காரைக்கால் மாவட்டத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பலர் நிவர் புயலின் காரணமாக இன்னும் ஊர் திரும்பவில்லை. சிலரை தொடர்புகொள்ளவும் முடியவில்லை என மீனவர்கள் தரப்பில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் மாலை வரை 10 படகுகளில் உள்ள மீனவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என காரைக்கால் மாவட்ட மீன்வள துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், காரைக்கால் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் ஆர்.கவியரசன் நேற்று விடுத்துள்ள அறிக்கையில், ‘காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 192 மீன்பிடி விசை படகுகளில், 102 படகுகள் பாதுகாப்பாக காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்தன. 67 மீன்பிடி படகுகள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றடைந்தன. 23 மீன்பிடி படகுகள் மட்டுமே கரை திரும்ப வேண்டியிருந்தது.
அதில் 7 படகுகள் ஆங்காங்கே கரை திரும்பிய நிலையில், மீதமுள்ள 16 படகுகளில் 14 படகுகள் காரைக்கால் துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. எஞ்சிய 2 படகுகளில் சென்ற 32 மீனவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் 32 மீனவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை’ என கூறி உள்ளார்.
மீனவர்களை தொடர்புகொள்ள முடியாததால் உறவினர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
நிவர் புயலை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் வரும் 28ந்தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
புதுச்சேரி:
வங்க கடலில் மையம் கொண்டிருந்த அதிதீவிர நிவர் புயல், புதுச்சேரி-மரக்காணம் இடையே நேற்று இரவு கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நேரத்தில் புதுச்சேரி உள்பட சில பகுதிகளில், மணிக்கு 120 முதல் 140 கி.மீ. வரையில் பலத்த காற்றும், கனமழையும் பெய்தது.
இதனை தொடர்ந்து, நிவர் புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து செல்கிறது. அடுத்த 3 மணிநேரத்தில் தீவிர புயல், புயலாக வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. நிவர் புயலால் புதுச்சேரியின் வடகிழக்கில் மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வரை வேகத்தில் பலத்த காற்று வீசும்.
இதன்பின்னர் அடுத்த 3 மணிநேரத்தில் அதன் வேகம் மெல்ல குறைந்து 65 முதல் 75 கி.மீ. வேகத்தில் காற்று வீச கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
நிவர் புயலால் புதுச்சேரி, காரைக்காலில் கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனையடுத்து, இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. எனினும், புயலை தொடர்ந்து பெய்து வரும் கனமழை, வீடுகள் மற்றும் கட்டிடங்களை சூழ்ந்து காணப்படும் வெள்ள நீர், மின் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வரும் 28ந்தேதி வரை விடுமுறையை நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகள் வாரியாக கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன என்று உள்ளாட்சித்துறை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி உள்ளாட்சித்துறை இயக்குனர் மலர்க்கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- நிவர் புயலை எதிர்கொள்ள நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்கள் வாரியாக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி அனைத்து நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளிலும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. அவை 24 மணி நேரமும் இயங்கும். பேரிடர் காலத்தில் மக்களுக்கு உதவ பணியாளர்களை கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுக்கள் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருக்க வேண்டும். மக்கள் வசிக்கும் தாழ்வான பகுதிகளில் ஏற்படும் நீர் தேக்கத்தை உடனுக்குடன் வெளியேற்ற பம்பு செட்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நோய் தொற்று பரவாமல் தடுக்க திடக்கழிவுகள் உடனடியாக அகற்றிடவும் கிருமி நாசினி தெளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பேரிடர் காலத்தில் மக்கள் தங்குவதற்கு எல்லா சமுதாய கூடங்களும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மழைநீர் வெளியேறும் இடங்களில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்யவும், மரங்கள் விழுந்தால் அதனை உடனடியாக அப்புறப்படுத்தவும் பொக்லைன் மற்றும் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டு அறைகளை தொடர்பு உதவி பெறலாம். புதுவை நகராட்சி 0413-2227518, உழவர்கரை-2200382, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து-2601376, பாகூர்-2633438, மண்ணாடிப்பட்டு-2640161, நெட்டப்பாக்கம்-2699108, வில்லியனூர்-2660401 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மாநில பேரிடர் மையத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் நாராயணசாமி ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி:
நிவர் புயலானது இன்று புதுச்சேரி அருகே கரையை கடக்கும் நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மாநில பேரிடர் மையத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் நாராயணசாமி ஆய்வு மேற்கொண்டார்.
தகவல் பரிமாற்றம் குறித்து மையத்தில் உள்ள அதிகாரிகடம் விசாரித்த அவர், புயல் வருவதை அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணிக்கவும், பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருந்தால் முன்னெச்சரிக்கையாக தகவல் அளிக்கவும் கேட்டுக்கொண்டார்.
மேலும் பொதுமக்கள் அவசர கால மையத்தை தொடர்பு கொண்டால் உடனடியாக தொடர்புடைய துறைக்கு தகவல் அளிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் பின்னா், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறியது. இது இன்று காலை வலுவடைந்து புயலாக வலுவடைந்தது.
மேலும், நிவர் புயல் இன்று மாலை தீவிர புயலாக மாறி, காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகே நாளை பிற்பகலில் கரையை கடக்க உள்ளது. அப்போது, மணிக்கு 100 கி.மீ. முதல் 110 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 120 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் நாளை கரையைக் கடக்க உள்ளதால் புதுச்சேரியில் இன்று இரவு 9 மணி முதல் 26-ந்தேதி காலை 6 மணிவரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் தெரிவித்துள்ளார்.