என் மலர்
புதுச்சேரி
இலவச அரிசிக்கு பதிலாக பயனாளிகளின் வங்கி கணக்கில் ரூ.54 கோடி செலுத்த கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் இலவச அரிசி வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி மத்திய அரசு உத்தரவின் படி இலவச அரிசிக்கு பதில் பயனாளிகளின் வங்கி கணக்கில் பணத்தை செலுத்த உத்தரவிட்டார். இதற்கு ஆட்சியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருப்பினும் தொடர்ந்து வங்கி கணக்கில் தான் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது 3 மாத இலவச அரிசிக்கு பதிலாக பயனாளிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்த கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.
இது தொடர்பாக புதுச்சேரி கவர்னர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இலவச அரசு திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்த ரூ.54 கோடிக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி 1லட்சத்து 75 ஆயிரம் சிவப்பு ரேஷன்கார்டுகளுக்கு தலா ரூ.2,200, 1லட்சத்து 50 ஆயிரம் மஞ்சள் ரேஷன்கார்டுகளுக்கு தலா ரூ.1000 வழங்கப்படும். கொரோனா காலத்திற்கு, மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனடையும் பயனாளிகளுக்கு மாதம் தலா 5 கிலோ அரிசிக்கான பணம் வீதம் 8 மாத காலத்திற்கு வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாகூர் பகுதியில் பெய்த தொடர் மழையால் வடிகால் வாய்க்கால் கரை உடைந்து வயல்களில் தண்ணீர் புகுந்தது. 17 வீடுகள் மழைக்கு இடிந்து சேதமடைந்தன.
பாகூர்:
புரெவி புயல் காரணமாக பாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 2 நாட்களாக விடிய விடிய மழை கொட்டியது. இதன் காரணமாக பிள்ளையார் குப்பம் தனியார் மருத்துவக் கல்லூரி எதிரில் புதுச்சேரி- கடலூர் சாலையை மூழ்கடித்தபடி தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.
தொடர் மழையால் வடிகால் வாய்க்கால்களில் தண்ணீர் கரைபுரண்டு செல்கின்றன. தாழ்வான கரை உள்ள இடங்களில் தண்ணீர் வெளியேறுவதால், அந்த பகுதியில் கரையில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு, விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. கன்னியக்கோவில் - பாகூர் சாலையோரம் உள்ள வடிகால் வாய்க்கால் உடைப்பு ஏற்பட்டு அந்த பகுதியில் உள்ள விளைநிலங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதேபோல் பாகூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1000 ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. வாழை, மரவள்ளி வயல்களிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தாழ்வான பகுதிகளான பாகூர் தாமரைக்குளம், பிள்ளையார்குப்பம், கன்னியக்கோவில், கிருமாம்பாக்கம், மதிகிருஷ்ணாபுரம், பரிக்கல்பட்டு, சோரியாங்குப்பம் உள்ளிட்ட 10 இடங்களிலும், நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 2 இடங்களிலும் மின் மோட்டார் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணியில் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஆற்றின் குறுக்கே உள்ள கொம்மந்தன்மேடு படுகை அணை, சித்தேரி அணை நிரம்பி வழிகின்றன. இந்த தண்ணீர் கடலில் சென்று வீணாக கலக்கிறது. புதுச்சேரியின் 2-வது பெரிய ஏரியான பாகூர் ஏரிக்கரையில் பன்றிகள் பள்ளம் பறித்து வைத்துள்ளன. இதனை பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவினர் மண் மூட்டைகளை அடுக்கி சரிசெய்து வருகின்றனர்.
தொடர் மழைக்கு பாகூர், கிருமாம்பாக்கம், பரிக்கல்பட்டு, மடுகரை சுற்றுவட்டார பகுதிகளில் 17 வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த தகவலை வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர். பாகூர் பகுதியில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை 15.3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

புதுவையில் பெய்த தொடர் மழையால் 51 ஏரிகள் நிரம்பின. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதுச்சேரி:
மரக்காணம் அருகே நிவர் புயல் கரையை கடந்ததையொட்டி கடந்த 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை புதுவையில் பலத்த மழை பெய்தது. ஒரே நாளில் 30 செ.மீ. மழை பதிவானது. அப்போது மாநிலம் முழுவதும் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்த சுவடு மறைவதற்குள் அடுத்ததாக வந்த புரெவி புயலால் கடந்த 3 நாட்களாக மழை பெய்தது.
புதுவையில் மொத்தம் 84 ஏரிகள் உள்ளன. தற்போது மழை பெய்து வருவதையொட்டி நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி 51 ஏரிகள் நிரம்பியுள்ளன. இதில் புதுச்சேரியில் மிகப்பெரிய ஏரியான ஊசுடு ஏரி 11.51 அடி உயரம் கொண்டது. இந்த ஏரியின் நீர்மட்டம் தற்போது 9.12 அடியை எட்டியுள்ளது. 9.84 அடி உயரம் கொண்ட பாகூர் ஏரியின் நீர்மட்டம் தற்போது 8.13 அடியாக உள்ளது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த ஏரிகள் நிரம்பி விடும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல் காட்டேரிக்குப்பம், சுத்துக்கேணி, சேதராப்பட்டு, துத்திப்பட்டு, கரசூர், அபிஷேகப்பாக்கம் உள்பட 51 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதையொட்டி ஏரிகளில் இருந்து உபரிநீராக அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. எனவே வாய்க்கால்களை யொட்டி தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மீதம் உள்ள 33 ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

புரெவி புயலால் பலத்த மழை பெய்ததையொட்டி புதுவை வெள்ளக்காடானது. தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் 7,500 வீடுகளில் தண்ணீர் புகுந்தது.
புதுச்சேரி:
புரெவி புயல் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி தமிழகம், புதுவையில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.
அதன்படி ஏற்கனவே விடிய விடிய பெய்த நிலையில் 3-வது நாளாக நேற்றும் பகல் முழுவதும் இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்தது. இதனால் பெரிய வாய்க்கால், உப்பனாறு போன்ற வாய்க்கால்களில் தண்ணீர் நிரம்பிச் சென்றன. நகரில் உள்ள சிறுசிறு கழிவுநீர் வாய்க்கால்களில் இருந்து வரும் தண்ணீர் வடிய வாய்ப்பு இல்லாமல் போனதால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளத்துடன் கழிவுநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. நகரில் உள்ள பூமியான்பேட்டை, நடேசன் நகர், ரெயின்போ நகர், வெங்கட்டா நகர், ஜீவாநகர், பிருந்தாவனம், ராஜா நகர், சுதந்திர பொன்விழா நகர் என பல்வேறு பகுதிகளில் 7 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. தொடர்ந்து மழை பெய்தபடி இருந்ததால் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்ற முடியாமல் அங்கு வசித்து வந்தவர்கள் அவதிப்பட்டனர்.
இதுதவிர ஆயிரக்கணக்கான வீடுகளை சுற்றிலும் மழைவெள்ளம் சூழ்ந்தது. சில இடங்களில் சுமார் 2 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தன. அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாமல் போனது.
நகரப் பகுதியில் இந்திராகாந்தி சிலை, ராஜீவ்காந்தி சதுக்கம், தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை, வழுதாவூர் சாலை, புஸ்சி வீதி, லப்போர்த் வீதி, காந்தி வீதி என பல்வேறு முக்கிய வீதிகளில் வாகனங்கள் நீந்தியபடி சென்றன. சில இடங்களில் இரு சக்கர வாகனங்களில் என்ஜின், சைலன்சருக்குள் தண்ணீர் புகுந்ததால் அவற்றை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளானார்கள்.
பிற்பகலில் ஓரளவு மழை ஓய்ந்த நிலையில் பல இடங்களில் தண்ணீர் வடியத் தொடங்கியது. பாவாணர் நகர், பூமியான்பேட்டை, வெங்கட்டா நகர், ரெயின்போ நகர் உள்ளிட்ட பகுதிகளில் ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
வெங்கட்டா நகரில் தேங்கிய தண்ணீரை வள்ளலார் சாலையை எந்திரம் மூலம் துண்டித்து வாய்க்கால் தோண்டி அதன் வழியாக வடிய வைத்தனர். இருந்தபோதிலும் தொடர்ந்து மழை பெய்ததால் தண்ணீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டது. சின்னமணிக் கூண்டு குபேர் மீன் அங்காடி, நெல்லித்தோப்பு மார்க்கெட் மழை தண்ணீரில் மூழ்கின.
காமராஜர் சாலையில் ஏ.டி.எம். மையத்துக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்களால் அங்கு பணம் எடுக்க செல்ல முடியவில்லை. 45 அடி ரோட்டில் பெட்ரோல் பங்க்கில் தண்ணீர் புகுந்ததால் வாகன ஓட்டிகள் அங்கு செல்ல முடியாமல் தவித்தனர். நகரில் எங்கு பார்த்தாலும் மழையால் சேதமடைந்து சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன. 100 அடிரோடு, கடலூர் ரோடு, விழுப்புரம் ரோடு என பல்வேறு சாலைகள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக உள்ளது.
காலாப்பட்டு, பிள்ளைச் சாவடியில் 2 குடிசை வீடுகள் இடிந்து விழுந்தன. அப்போது வீட்டில் யாரும் இல்லாமல் போனதால் உயிர்சேதம் இல்லாமல் போனது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் பொதுமக்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவித்துள்ள போதிலும் ஆங்காங்கே கடற்கரையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசார் ஒலி பெருக்கி மூலம் எச்சரித்து வருகின்றனர்.
தற்போது புதுச்சேரியில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பின. கிராமப்புறங்களில் சில ஏரிகள் உடையும் அபாயத்தை எட்டி உள்ளன. விளைநிலங்களில் தண்ணீர் புகுந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மீனவர்கள் தொடர்ந்து நேற்றும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் வருமானமின்றி வாழ்வாதாரத்தை இழந்துள்ளதால் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகளும், மீனவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுவை வெள்ளக்காடாக மாறியுள்ள நிலையில் மழை நீரை பொதுப்பணி, உள்ளாட்சித் துறை ஊழியர்கள் ராட்சத மோட்டார்கள் மூலம் வெளியேற்றி வருகின்றனர். சாலைகளில் உள்ள வாய்க்கால்களில் அடைப்பு இருந்தால் அதை அப்புறப்படுத்தினார்கள். இரவு, பகலாக இந்த பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 3 நாட்களாக இடைவிடாது பெய்து வரும் மழையால் பொதுமக்கள் யாரும் வெளியே வராமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், வியாபாரிகள், மீனவர்கள், கூலித் தொழிலாளர்கள் என அனைவரும் வருமானமின்றி தவித்து வருகிறார்கள். தற்போது மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருப்பது மேலும் அவர்களை கவலையடைய வைத்துள்ளது.
மழையால் பாதிப்பு அதிகரித்ததையொட்டி மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை நேற்று காலை முதல்-அமைச்சர் நாராயணசாமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கிய பகுதிகளில் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அப்போது அங்கு பணியில் இருந்தவர்களிடம் தண்ணீரை விரைவாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். உயர் அதிகாரிகளை தொடர்புகொண்டு சில இடங்களில் கூடுதலாக மோட்டார்களை வைத்து மழைநீரை வெளியேற்ற கேட்டுக்கொண்டார். அவருடன் ஜான்குமார் எம்.எல்.ஏ. உடனிருந்தார்.

புதுவை காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மேலிட பார்வையாளரான தினேஷ் குண்டுராவ் ஆலோசனை மேற்கொண்டார்.
புதுச்சேரி:
தமிழகம், புதுச்சேரியில் காங்கிரஸ் மேலிட பார்வையாளரான தினேஷ் குண்டுராவ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய அவர் நேற்று புதுச்சேரிக்கு வந்தார். காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் ஷாஜகான், துணைத்தலைவர்கள் நீல.கங்காதரன், தேவதாஸ், நிர்வாகிகள் தனுசு, கருணாநிதி, ரகுமான், சாம்ராஜ், ரமேஷ், கல்யாணசுந்தரம், காங்கேயன், மகளிர் காங்கிரஸ் பஞ்சகாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் நிர்வாகிகள் குப்பை வரி, மின்சார கட்டண அதிகரிப்பால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், முதியோர்களுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்கவேண்டும் என்றும் தெரிவித்தனர்.
தொடர்ந்து பேசிய முதல்-அமைச்சர் நாராயணசாமி, ஏழைகளுக்கு குப்பை வரி ஏதும் விதிக்கவில்லை. 100 சதுர அடிக்கு மேல் கொண்ட வீடுகளுக்குத்தான் குப்பை வரி விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இறுதியாக பேசிய மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் காங்கிரசார் அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்சியை வெற்றிபெறச் செய்யவேண்டும். கவர்னரின் எதிர்ப்பினையும் மீறி மக்களுக்கு தேவையானதை ஆட்சியாளர்கள் செய்கின்றனர். தனிமனித வளர்ச்சி வெற்றியை தராது. அனைவரும் வெற்றியை குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தன்னை தனியாக சந்தித்தோ அல்லது செல்போன் மூலமாகவோ கட்சி நிர்வாகிகள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று கூறினார்.
கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் கலந்து கொள்ளவில்லை. மழை காரணமாக குறைந்த எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.
பாகூர் பகுதியில் பெய்த தொடர் மழையால் வடிகால் வாய்க்கால் கரை உடைந்து வயல்களில் தண்ணீர் புகுந்தது. 17 வீடுகள் மழைக்கு இடிந்து சேதமடைந்தன.
பாகூர்:
புரெவி புயல் காரணமாக பாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 2 நாட்களாக விடிய விடிய மழை கொட்டியது. இதன் காரணமாக பிள்ளையார் குப்பம் தனியார் மருத்துவக் கல்லூரி எதிரில் புதுச்சேரி- கடலூர் சாலையை மூழ்கடித்தபடி தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.
தொடர் மழையால் வடிகால் வாய்க்கால்களில் தண்ணீர் கரைபுரண்டு செல்கின்றன. தாழ்வான கரை உள்ள இடங்களில் தண்ணீர் வெளியேறுவதால், அந்த பகுதியில் கரையில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு, விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. கன்னியக்கோவில் - பாகூர் சாலையோரம் உள்ள வடிகால் வாய்க்கால் உடைப்பு ஏற்பட்டு அந்த பகுதியில் உள்ள விளைநிலங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதேபோல் பாகூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1000 ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. வாழை, மரவள்ளி வயல்களிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தாழ்வான பகுதிகளான பாகூர் தாமரைக்குளம், பிள்ளையார்குப்பம், கன்னியக்கோவில், கிருமாம்பாக்கம், மதிகிருஷ்ணாபுரம், பரிக்கல்பட்டு, சோரியாங்குப்பம் உள்ளிட்ட 10 இடங்களிலும், நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 2 இடங்களிலும் மின் மோட்டார் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணியில் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஆற்றின் குறுக்கே உள்ள கொம்மந்தன்மேடு படுகை அணை, சித்தேரி அணை நிரம்பி வழிகின்றன. இந்த தண்ணீர் கடலில் சென்று வீணாக கலக்கிறது. புதுச்சேரியின் 2-வது பெரிய ஏரியான பாகூர் ஏரிக்கரையில் பன்றிகள் பள்ளம் பறித்து வைத்துள்ளன. இதனை பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவினர் மண் மூட்டைகளை அடுக்கி சரிசெய்து வருகின்றனர்.
தொடர் மழைக்கு பாகூர், கிருமாம்பாக்கம், பரிக்கல்பட்டு, மடுகரை சுற்றுவட்டார பகுதிகளில் 17 வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த தகவலை வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர். பாகூர் பகுதியில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை 15.3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
நடைபயிற்சிக்கு சென்ற சாராயக்கடை உரிமையாளரை கொல்ல முயன்ற தந்தை, மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி:
முதலியார்பேட்டை இந்திரா நகரை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 48). இவர் மணவெளி, வில்லியனூர், பாகூர், மதகடிப்பட்டு, கல்மண்டபம் ஆகிய பகுதிகளில் அரசு அனுமதியுடன் சாராயக்கடை நடத்தி வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உறுவையாறு பகுதியை சேர்ந்த பழனி என்பவருடன் சேர்ந்து பல பகுதிகளில் சாராயக்கடை நடத்தினார்.
இந்தநிலையில் சாராயக் கடைக்கு கிஸ்தி கட்டுவது தொடர்பாக ஜனார்த்தனன், பழனி இடையே பிரச்சினை ஏற்பட்டது. நேற்று அதிகாலை ஜனார்த்தனன் நடைபயிற்சிக்கு சென்றபோது அவரை கொலை செய்யும் நோக்கில் ஒரு காரில் சிலர் பின்தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த சதியில் பழனி, அவரது மகனுக்கு தொடர்பு இருப்பதாக முதலியார்பேட்டை போலீசில் ஜனார்த்தனன் புகார் செய்தார். அதன்பேரில் பழனி, அவரது மகன் கல்யாண் ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
புரெவி புயல் காரணமாக கனமழை பெய்து வருவதால் காரைக்காலில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புரெவி புயல் காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி உள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இன்றும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் காரைக்காலிலும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நடக்கும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து புதுவையில் கொட்டும் மழையில் விளைபொருட்களுடன் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பாதகமாக இருப்பதாகவும் அதை வாபஸ்பெற வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. விவசாயிகளின் தொடர் போராட்டத்துக்கு நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினரும், தொழிற்சங்கத்தினரும் ஆதரிப்பதுடன் போராட்டத்திலும் குதித்து வருகின்றனர்.
அதன்படி விவசாயிகளுக்கு ஆதரவாக புதுவையில் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் குதித்தனர். சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.சி.சி.டி.யு., எல்.எல்.எப்., எம்.எல்.எப்., ஏ.ஐ.யு.சி.யு.சி., அரசு ஊழியர் சம்மேளனம், ஆட்டோ ஓட்டுனர் சங்கம் போன்றவற்றை சேர்ந்தவர்கள் இதில் கலந்துகொண்டனர்.
புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு விவசாய விளைபொருட்களான நெல், கரும்பு, வாழைத்தார், வேளாண் உபகரணங்களான ஏர் கலப்பை, மண்வெட்டி, மருந்து தெளிக்கும் கருவி போன்றவற்றுடன் கொட்டும் மழையில் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெறக்கோரி அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் அபிசேகம், சேதுசெல்வம், தினேஷ்பொன்னையா (ஏ.ஐ.டி.யு.சி.), சீனுவாசன், பிரபுராஜ் (சி.ஐ.டி.யு.), ஞானசேகரன் (ஐ.என்.டி.யு.சி.), புருஷோத்தமன் (ஏ.ஐ.சி.சி.டி.யு.), செந்தில் (எல்.எல்.எப்.), வேதா.வேணுகோபால் (எம்.எல்.எப்.), சிவக்குமார் (ஏ.ஐ.யு.டி.யு.சி), அரசு ஊழியர் சம்மேளன பிரேமதாசன், ஆட்டோ ஓட்டுனர் சங்கம் மணிவண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ரூ.1 லட்சத்துக்கு மேல் வரிபாக்கி வைத்துள்ளவர்களின் பட்டியலை உழவர்கரை நகராட்சி இணையதளத்தில் அதிரடியாக வெளியிட்டது.
புதுச்சேரி:
உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உழவர்கரை நகராட்சி எல்லைக்குட்பட்ட வீடு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 2020-21-ம் ஆண்டுக்கான சொத்துவரி செலுத்த வேண்டிய கேட்பு அறிக்கை அனைத்து கட்டிட உரிமையாளர்களுக்கும் இந்நகராட்சியால் கொடுக்கப்பட்டு விட்டது. இதன்படி நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.3.95 கோடி மட்டுமே சொத்துவரியாக வசூலிக்கப்பட்ட நிலையில் இன்னமும் அதிகப்படியானோர் வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர்.
சொத்துவரி என்பது ஒவ்வொரு நிதியாண்டின் ஆரம்ப கட்டத்திலேயே அதாவது ஒரு நிதியாண்டில் முதல் அரையாண்டுக்கு ஏப்ரல் மாதம் 15-ந்தேதி மற்றும் அடுத்த அரையாண்டுக்கு அக்டோபர் மாதம் 15-ந்தேதிக்குள் செலுத்தியாக வேண்டும். தவறும்பட்சத்தில் சொத்துவரி செலுத்தாத உரிமையாளர்களின் கட்டிடங்களில் உள்ள அசையும் பொருட்களை புதுச்சேரி நகராட்சிகள் சட்டத்தின்படி ஜப்தி செய்யப்படும்.
மேலும் சொத்துவரியை கட்டிட உரிமையாளர்கள் செலுத்த தவறினால் அந்த கட்டிடத்தில் வாடகைக்கு அல்லது மற்றும் போகியத்திற்கு இருப்பவர்கள் மேற்சொன்ன சொத்துவரியை செலுத்த புதுச்சேரி நகராட்சிகள் சட்டத்தின்படி கடமைப்பட்டவர்கள் ஆவர். அவர்களும் தவறும்பட்சத்தில் சொத்துவரியை செலுத்தாத காரணத்தால் அக்கட்டிடத்தில் வாடகை அல்லது போகியத்துக்கு இருப்பவர்களின் அசையும் பொருட்கள் கண்டிப்பாக ஜப்தி செய்யப்படும்.
சொத்துவரி செலுத்தாத வணிக நிறுவனங்களது வணிக உரிமம் ரத்து செய்யப்பட்டு ஜப்தி செய்யப்படும். மேலும் ரூ.1 லட்சத்துக்கு மேல் வரிபாக்கி வைத்துள்ள நபர்களின் விவரங்கள் நகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆதலால் சொத்துவரி பாக்கி வைத்துள்ளவர்கள் காலதாமதம் செய்யாமல் சொத்துவரியை உடனே தட்டாஞ்சாவடி வி.வி.பி.நகர் அல்லது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன மீன் அங்காடி அல்லது ஜவகர் நகரில் உள்ள நகராட்சியின் கணினி சொத்துவரி வசூல் மையத்தில் செலுத்தி ஜப்தி நடவடிக்கையை தவிர்க்கவும். சொத்துவரி பாக்கியை https://lgrams.py.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாகவும் கட்டலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் இன்று 42 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,119 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 95 லட்சத்தை தாண்டியது. மொத்த பாதிப்பு 95,34,965 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 35,551 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 526 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,38,648 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 89,73,373 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 40,726 பேர் குணமடைந்துள்ளனர். நேற்றும் புதிய பாதிப்புகளை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் இன்று 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,119ஆக உயர்ந்துள்ளது.

புரெவி புயல் முன்னெச்சரிக்கையாக காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால்:
காரைக்காலில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
புரெவி புயல் காரணமாக காரைக்காலில் கனமழை பெய்து வருகிறது. இதனால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் அர்ஜூன் தர்மா அறிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில பகுதியான காரைக்கால் தமிழகத்தின் நாகை மாவட்டத்திற்கு அருகில் உள்ளது. காரைக்கால் பகுதியில் புரெவி புயல் காரணமாக நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.