என் மலர்
புதுச்சேரி
வரி செலுத்தாத கடைக்கு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் சீல் வைத்தார்.
புதுச்சேரி:
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் வரி பாக்கி சுமார் ரூ.3 லட்சம் உள்ளது. சொத்து மற்றும் வீட்டு வரி செலுத்தாமல் சுமார் ரூ.2 கோடி பாக்கி இருந்து வருகிறது. மேலும் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வணிக வளாகங்களில் வாடகை பாக்கி ரூ. 13 லட்சம் உள்ளது. இதுபோல் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சுமார் ரூ.5 கோடிக்கு மேல் வரிவசூல் செய்ய வேண்டியுள்ளது.
தீவிர வரி வசூலை பெற்று பாகூர் பஞ்சாயத்தில் உள்ள கிராமங்களில் வளர்ச்சித் திட்ட பணிக்கு செலவு செய்யவும், புதிய திட்டங்களை கொண்டு வரவும் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனால் முகாம்கள் அமைத்து வரி வசூல் செய்ய வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை முடுக்கிவிட்டுள்ளார். வரி பாக்கியை வருகிற மார்ச் மாதத்திற்குள் வசூல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கன்னியகோவிலில் உள்ள கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வணிக வளாகத்தில் ரூ. 2 லட்சத்துக்கு மேல் வரி செலுத்தாமல் இருந்த கடைக்கு ஆணையர் கார்த்திகேயன் தலைமையிலான ஊழியர்கள் சீல் வைத்தனர். மேலும் இந்த நடவடிக்கை தொடரும் எனவும், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் நலத்திட்ட பணிகள் தொடங்க குடிநீர் மற்றும் வீட்டுவரியை பொதுமக்களும், தொழில் நிறுவனங்களும் உடனுக்குடன் செலுத்தமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒதியம்பட்டில் கிராம நிர்வாக அலுவலகம் மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்கும்படி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையரிடம் சிவா எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
புதுச்சேரி:
வில்லியனூர் தொகுதி ஒதியம்பட்டு மெயின் ரோட்டில் வினாயகர் கோவில் அருகில் குடிநீர் வசதிக்காக இயங்கிவந்த ஜெனரேட்டர் 4 ஆண்டாக பழுதடைந்துள்ளது. இதனால் மின்தடை நேரங்களில் குடிநீரின்றி அவதிப்படுவதாகவும், ரேசன் கடை இல்லை என்றும் அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.வும், எதிர்க்கட்சி தலைவருமான சிவாவிடம் முறையிட்டனர்.
இதனையடுத்து சிவா எம்.எல்.ஏ., கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம் உள்ளிட்ட அதிகாரிகளை அழைத்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பழுதாகி கிடக்கும் ஜெனரேட்டரை பழுதுபார்த்து இயக்கவும், ரேசன் கடை அமைத்துத் தரவும் வலியுறுத்தினார். மேலும் அப்பகுதியில் ஏற்கனவே இயங்கி வந்த கிராம நிர்வாக அலுவலகத்தை மீண்டும் இயங்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். பின்னர் கே.வி.நகர் பகுதிக்குச் சென்று அப்பகுதி மக்களின் கோரிக்கையின்படி ரேசன்கடை, அங்கன்வாடி மையம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கும்படியும் ஆணையரிடம் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியின்போது தி.மு.க. பொறுப்பாளர்கள் முருகையன், திருவேங்கடம், குலசேகரன், தொகுதி இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், ராமன் மற்றும் கே.வி. நகரைச் சேர்ந்த பாலு, சிலம்பு, நடராஜன், கிருஷ்ணமூர்த்தி, அண்ணா நகர் பாலு ஆகியோர் உடன் இருந்தனர்.
மீனவர்களின் கோரிக்கையை ஏற்று பாண்டி மெரீனா பீச்சில் ஹைமாஸ் விளக்குகள் பொருத்த கென்னடி எம்.எல்.ஏ. ஏற்பாடு செய்தார்.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் தொகுதிகுட்பட்ட வம்பாகீரப்பாளையம் பாண்டி மெரீனா பீச் அருகில் மீனவர்கள் படகுகள் நிறுத்தும் இடம் இருள் சூழ்ந்து இருந்தது. மேலும் அங்கு விஷபூச்சிகள் தொந்தரவும் இருந்து வந்தது. இதனால் மீனவர்கள் படகுகள் நிறுத்தவும், வளைக்கூடம் அமைத்து தொழில் செய்ய முடியாமல் அவதியடைந்து வந்தனர்.
இதுபற்றி அப்பகுதி மீனவர்கள் கென்னடி எம்.எல்.ஏ.விடம் முறையிட்டனர். இதையடுத்து கென்னடி எம்.எல்.ஏ. மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் மீனவளத்துறை இயக்குனரிடம் எடுத்துக்கூறி அப்பகுதியில் மின்விளக்கு மற்றும் ஹைமாஸ் விளக்கு அமைக்க கோரிக்கை வைத்தார். இதனையேற்று அங்கு உடனடியாக மின்விளக்கு மற்றும் ஹைமாஸ் விளக்கு பொருத்தப்பட்டது. அதனை கென்னடி எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியின் போது தி.மு.க. ஆதி திராவிடர் அணி துணை அமைப்பாளர் தங்கவேலு, கலை மற்றும் இலக்கிய பகுத்தறிவு சந்துரு, ஜெயசீலன், ஸ்டாலின், பாலாஜி, லாரன்ஸ், ரகுமான் ஆகியோர் உடன் இருந்தனர்.
புதுவையில் கொரோனா தொற்று பரவல் 15.26 சதவீதமாகவும், குணமடைவது 95.99 சதவீதமாகவும் உள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா தொற்று பாதிப்பை விட குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 254 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 344 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
தற்போது ஆஸ்பத்திரிகளில் 114 பேர், வீடுகளில் 4 ஆயிரத்து 516 பேர் என 4 ஆயிரத்து 630 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 1,171 பேர் குணமடைந்தனர். அதாவது பாதிப்பை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
புதுவை நெஞ்சக நோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பத்மினி நகரை சேர்ந்த 96 வயது மூதாட்டி பலியானார். இதன்மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 1,947 ஆக உயர்ந்துள்ளது. புதுவையில் தொற்று பரவல் 15.26 சதவீதமாகவும், குணமடைவது 95.99 சதவீதமாகவும் உள்ளது.
நேற்று முன்தினம் முதல் தவணை தடுப்பூசியை 326 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 545 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 261 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 15 லட்சத்து 41 ஆயிரத்து 422 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காரைக்காலில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த துறைமுக ஊழியர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
காரைக்கால்:
தூத்துக்குடியை சேர்ந்தவர் பால்ஜெபகுமார் (வயது36). இவர், காரைக்கால் தனியார் துறைமுகத்தில் வேலை செய்து வருகிறார். காரைக்கால் நகர் பகுதியில் திருமண ஆன ஒரு பெண்ணுடன் கடந்த சில நாட்களாக பால்ஜெபகுமார் பழகி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம், தாய் இல்லாத நேரமாக பார்த்து, அவரது 13 வயது மகளின் கையை பிடித்து இழுத்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.
அப்போது, 13 வயது மாணவி சத்தம் போட்டதால், பால் ஜெபக்குமார் தப்பியோடிவிட்டார். பின்னர், மாணவி நடந்த சம்பவம் குறித்து தாயிடம் கூறியுள்ளார். தாய், காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார், வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய பால்ஜெபகுமாரை கைது செய்தனர்.

கிராம மேம்பாட்டு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு தொகுதி எம்.எல்.ஏ.வை அழைக்காததால் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.
புதுச்சேரி:
மத்திய அரசின் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், புதுவை ஊரக வளர்ச்சி முகமை சார்பில், பாகூர் தொகுதிக்குட்பட்ட மணபட்டு கிராமத்தை முன்மாதிரி கிராமமாக தேர்வு செய்தனர்.
அதன்படி இந்த கிராமத்தை, புதுவை எம்.பி., வைத்திலிங்கம் தத்தெடுத்து, வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.இதற்காக, 22 துறைகள் ஒருங்கிணைத்து ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவிற்கு தெற்கு மாவட்ட துணை கலெக்டர் ரிஷிதா குப்தா தலைவராக இருந்து வருகிறார். இவர், மணப்பட்டு கிராமத்தில் தொடர்ச்சியாக ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் இது சம்பந்தமாக தொகுதி எம்.எல்.ஏ.வை ஆலோசிக்கவில்லை.
இந்நிலையில், மணப்பட்டு கிராமத்தில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு பணிகள் தொடர்பாக ஆலோசிக்க கிராம சபை கூட்டத்திற்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், பங்கேற்க ஊரக வளர்ச்சி துறை, உள்ளாட்சித்துறை, பொதுப்பணித்துறை, மின்துறை உள்ளிட்ட 22 துறை அதிகாரிகள் நேற்று மணப்பட்டு அரசு பள்ளிக்கு வந்தனர்.ஆனால், இது தொடர்பாக, தொகுதி எம்.எல்.ஏ., செந்தில்குமாருக்கு, எந்த தகவலுக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. அதே நேரத்தில், கூட்டத்தை முன்னின்று நடத்தக்கூடிய மாவட்ட துணை கலெக்டர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இதற்கிடையே தகவலறிந்த மணப்பட்டு கிராம மக்கள் அங்கு சென்று, தொகுதி எம்.எல்.ஏ., விற்கு தகவல் தெரிவிக்காமல் எப்படி தன்னிச்சையாக கூட்டத்தை நடத்தலாம் என அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் தரப்பில் இருந்து உரிய விளக்கம் அளிக்கப்படாததால், பொது மக்கள் கூட்டத்தை புறக்கணித்து விட்டு அங்கிருந்து வெளியேறினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனாவுக்கு மூதாட்டி பலியானார்.
புதுச்சேரி:
புதுவையில் 2 ஆயிரத்து 254 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் புதிதாக 344 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 224, காரைக்காலில் 74, ஏனாமில் 39, மாகியில் 7 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 78, காரைக்காலில் 22, ஏனாமில் 6, மாகியில் 8 பேர் என 114 பேர் தொற்றுடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 755, காரைக்காலில் 337, ஏனாமில் 69, மாகியில் 10 பேர் என ஆயிரத்து 171 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத் தமாக இதுவரை ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 907 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 330 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர்.
புதுவையில் 2 ஆயிரத்து 794, காரைக்காலில் ஆயிரத்து 420, ஏனாமில் 270, மாகியில் 32 பேர் என 4 ஆயிரத்து 516 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 4 ஆயிரத்து 630 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். புதுவை பத்மினி நகரை சேர்ந்த 96 வயது மூதாட்டி கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 947 ஆக உயர்ந்துள்ளது.
புதுவையில் 2&வது தவணை உட்பட 15 லட்சத்து 41 ஆயிரத்து 422 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுவையில் 2 ஆண்டாக தனது மகனை மூதாட்டி அலைந்து வருகிறார்
புதுச்சேரி:
தூத்துக்குடியை சேர்ந்த குருசாமி-பேச்சியம்மாள் தம்பதியின் மகன் ரவி(38).
இவர் கடந்த 2019-ம் ஆண்டு புதுவைக்கு வந்த போது மாயமானார். இவர் புதுவையில் விபத்தில் காய மடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டதாக பேச்சியம் மாளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து பேச்சியம்மாள் புதுவைக்கு வந்து விசாரித்தார். ஆனால் எந்த மருத்துவமனையிலும் ரவி இல்லை. போலீசில் புகார் அளித்தும் ரவியை கண்டறிய முடியவில்லை. இதையடுத்து 2019 முதல் புதுவைக்கு 21 முறை பேச்சியம்மாள் வந்துள்ளார். போலீஸ் நிலையம், மருத்துவமனை, நகரப்பகுதி முழுவதும் மகனை தேடுவதும் பின்னர் தன் ஊருக்கு செல்வதுமாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் பேச்சியம்மாள் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் மனு அளிக்க இன்று சட்டசபைக்கு வந்தார். அவர் கூறும்போது, எனது மகனை கண்டுபிடிக்க வேண்டும் என 21 முறை புதுவைக்கு வந்துள்ளேன். இதுவரை ரூ.60 ஆயிரம் வரை செலவு செய்துள்ளேன். என் மகன் எங்கே உள்ளான்? என்றே தெரியவில்லை என்றார்.
அவர் தனது மகனின் போட்டோ, கடைசியாக அவரை தொடர்புகொண்டு தொலைபேசி எண்கள் ஆகியவற்றுடன் வந்திருந்தார். தனது மகனை புதுவை முதல்-அமைச்சர் கண்டுபிடித்து தர வேண்டும் என கதறியழுதது சோகத்தை ஏற்படுத்தியது.
புதுவை துறைமுகம் ரூ.304 கோடியில் மேம்படுத்தப்படும் என்று வைத்திலிங்கம் எம்.பி. கேள்விக்கு மத்திய துறைமுக மந்திரி பதில் அளித்துள்ளார்.
புதுச்சேரி:
பாராளுமன்றத்தில் புதுவை மாநிலத்தில் “சாகர்மாலா” திட்டத்தின் கீழ் திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதா? அதன் விவரங்கள் என்ன? என்று புதுவை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் எழுப்பிய கேள்விக்கு மத்திய துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை மந்திரி சர்பானந்தா அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:-
கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் ஒப்புத லுடன் 15.3.2017-ல் சென்னை துறைமுகத்துக்கும், புதுவை துறைமுகத்திற்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதனைத் தொடர்ந்து சென்னை துறைமுகம் மற்றும் புதுவை துறைமுகம் இடையே 25.2.2018-ல் பிரத்யேக சரக்கு கப்பல் மூலம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
அப்போது முகத்து வாரத்தில் சில பகுதிகள் ஆழப்படுத்தப்பட வேண்டியிருப்பது கவனிக்கப்பட்டது. புதுவை துறைமுகத்தில் 7 லட்சத்து 30 ஆயிரத்து கன மீட்டருக்கு மூலதனத் தூர்வாரும் பணிக்கான டெண்டர் புதுவை அரசின் துறைமுக துறையால் விடப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டது. 27.1.2022 நிலவரப்படி 45 முதல் 50 சதவீதம் வரையிலான தூர்வாரும் பணி முடிந்துள்ளதாக புதுவை துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சாகர்மாலா திட்டத்தின் கீழ் புதுவை துறைமுகத்தை 3 கட்டங்களாக மேம்படுத்த இந்திய அரசின் நிதி உதவிக்காக புதுவை அரசு முன்வைத்தது. முதல் கட்டத்தில் ரூ.75 கோடியில் தூர்வாருதல் மற்றும் பெர்த் கட்டுதல், 2&ம் கட்டத்தில் ரூ.59.60 கோடியில் அனைத்து வசதிகளுடன் அப்ரோச் ஜெட்டி மற்றும் பிரதான ஜெட்டி அமைத்தல், 3&வது கட்டத்தில் ரூ.170.20 கோடி யில் கன்டெய்னர் பெர்த், துறைமுகத்தில் இருந்து சாலை மற்றும் பாலங்கள் கட்டுவதாகும்.
சுற்றுச்சூழல் மற்றும் கடலோர ஒழுங்கு மண்டலத்தில் அனுமதி பெற்ற பிறகு ஜூலை 2020-ல் இ டெண்டர் விடப்பட்டு பணிகளும் வழங்கப்பட்டது.
புதுவை துறைமுகத்தில் தூர்வாரும் பணியை மேற்கொள்வதற்காக இந்திய அரசால் 30.3.2018 அன்று “சாகர்மாலா திட்டத்தின்” கீழ் ரூ.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நீட் தேர்வு விலக்கு மசோதா விவகாரத்தில் தமிழக கவர்னர் கடமையை மீறியுள்ளார் என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
நீட் தேர்வு விலக்குக்கோரிய மசோதாவை தமிழக கவர்னர் திருப்பி அனுப்பியது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கும், ஜனநாயகத்துக்கும் விரோதமானது.
தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பாதது தவறு. தமிழக கவர்னர் கடமையை மீறியுள்ளார்.
மசோதாவை திருப்பி அனுப்ப அதிகாரம் உள்ளதாக புதுவை கவர்னர் தமிழிசை கூறியுள்ளார். ஆனால், மாநிலங்களை பொருத்தவரை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா தொடர்பாக கவர்னர் விளக்கம் கேட்கலாமே தவிர திருப்பி அனுப்பும் அதிகாரம் இல்லை.
மத்தியில் பா.ஜனதா ஆட்சி வந்த பிறகு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கவர்னர்கள் மத்திய அரசின் ஒற்றர்களாகவும், ஏஜெண்டுகளாகவும் செயல்படுகிறார்கள். அது இப்போது தெளிவாக தெரிகிறது.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
காரைக்கால் பகுதியில் அரிசி குடோனாக வகுப்பறைகள் மாறியதால் மரத்தடியில் அமர்ந்து மாணவர்கள் படித்தனர்.
கோட்டுச்சேரி:
கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து, புதுச்சேரி, காரைக்காலில் நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால், மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மாணவர்கைள வெப்ப பரிசோதனை, கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்த பின்னரே வகுப்பறைக்குள் செல்ல அனுமதித்தனர்.
இந்தநிலையில் காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு, நெடுங்காடு, கோட்டுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
வகுப்பறைகள் அரிசி குடோனாக மாறியதால், வெளியே மரத்தடியில் மாணவர்களை அமர வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தினர். இதிலும் சில ஆசிரியர்கள் அரிசி வினியோகம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
எனவே மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் அரிசி வினியோகம் செய்யும் பணியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே மாணவர்களின் கல்வி பாதிக்கும் வகையில் வகுப்பறைகளில் வைக்கப்பட்டுள்ள அரிசி மூட்டைகளை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம் தெரிவித்துள்ளார்.

முதல்-அமைச்சர் ரங்கசாமி நடிகர் விஜய்யை திடீரென சந்தித்தார். இருவரும் அரசியல் குறித்து ஆலோசித்தார்களா? என்ற பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றதையடுத்து முதல்-அமைச்சராக ரங்கசாமி பொறுப்பேற்றார். இதையொட்டி ரங்கசாமியை சந்திக்க நடிகர் விஜய் விரும்புவதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது நடிகர் விஜய் புதுவைக்கு வந்தால் அவரது ரசிகர்கள் அதிகம் வருவார்கள். இதனால் கொரோனா சூழலில் இந்த சந்திப்பை ரங்கசாமி விரும்பவில்லை என்று தெரிகிறது.
இதனால் சென்னைக்கு வரும் சந்தர்ப்பத்தில் அங்கு வைத்து நடிகர் விஜய்யை சந்திப்பதாக ரங்கசாமி தெரிவித்து இருந்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தநிலையில் சென்னையில் நடந்த திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் ரங்கசாமி நேற்று அங்கு சென்றார். திருமணத்தில் கலந்து கொண்டு விட்டு கிழக்கு கடற்கரை சாலையில் நீலாங்கரை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டிற்கு ரங்கசாமி திடீரென சென்றார். அங்கு விஜய்யை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது, படப்பிடிப்புக்கு புதுச்சேரி சிறந்த இடம், பிரெஞ்சு கட்டிட கலைகள், நேரான, அழகான சாலைகள் உள்ளன. அங்குள்ள மக்களும் நல்ல ஆதரவு தருகின்றனர். எனவே ஏராளமான திரைப்படங்கள் புதுவையில் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் தற்போது அரசால் படப்பிடிப்பு கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு திரைப்படங்கள் எடுக்க சிரமமாக உள்ளது. எனவே கட்டணத்தை அரசு குறைக்க வேண்டும். புதுவையில் திரைப்பட கல்லூரி ஒன்றை அரசு சார்பில் தொடங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் நடிகர் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
அரசியலில் குதிக்க நடிகர் விஜய் ஆயத்தமாகி வரும் நிலையில் அதுகுறித்து ரங்கசாமியுடன் ஆலோசனை நடத்தி இருக்கலாம் என்றும் பரபரப்பாக பேச்சு அடிபடுகிறது. இந்த சந்திப்புக்குப் பின் அங்கிருந்து புறப்பட்டு நேற்று இரவு ரங்கசாமி புதுச்சேரி வந்தார்.
நடிகர் விஜய்யுடனான சந்திப்பு குறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கேட்ட போது, சென்னை சென்ற இடத்தில் மரியாதை நிமித்தமாக நடிகர் விஜய்யை சந்தித்து பேசியதாக தெரிவித்தார்.