என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    காரைக்காலில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த துறைமுக ஊழியர் கைது

    காரைக்காலில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த துறைமுக ஊழியர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
    காரைக்கால்:

    தூத்துக்குடியை சேர்ந்தவர் பால்ஜெபகுமார் (வயது36). இவர், காரைக்கால் தனியார் துறைமுகத்தில் வேலை செய்து வருகிறார். காரைக்கால் நகர் பகுதியில் திருமண ஆன ஒரு பெண்ணுடன் கடந்த சில நாட்களாக பால்ஜெபகுமார் பழகி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம், தாய் இல்லாத நேரமாக பார்த்து, அவரது 13 வயது மகளின் கையை பிடித்து இழுத்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.

    அப்போது, 13 வயது மாணவி சத்தம் போட்டதால், பால் ஜெபக்குமார் தப்பியோடிவிட்டார். பின்னர், மாணவி நடந்த சம்பவம் குறித்து தாயிடம் கூறியுள்ளார். தாய், காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார், வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய பால்ஜெபகுமாரை கைது செய்தனர்.

    Next Story
    ×