என் மலர்
புதுச்சேரி
ஜிப்மரில் ஒப்பந்த ஊழியர்கள் பணிநீக்கத்தால் திடீர் போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை ஜிப்மரில் ஒப்பந்த அடிப்படையில் தொழில்நுட்ப ஊழியர்களாக 260 பேர் வேலை செய்கின்றனர்.
இவர்களில் 5 பேரை கடந்த சனிக்கிழமை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணிநீக்கம் செய்தனர். இத்தகவல் மற்ற ஊழியர்களுக்கு தெரிய வந்தது.
இதையடுத்து ஒப்பந்த ஊழியர்கள் ஜிப்மர் வளாகத்தில் ஒன்று திரண்டனர். நிர்வாகத்திடம், எப்படி திடீரென பணிநீக்கம் செய்யலாம்? என கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். போலீசாருடன் ஊழியர்கள் வாக்குவாதம் செய்தனர். மேலும் தள்ளு&முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து ஊழியர்களை போலீசார் கைது செய்து கோரிமேடு போலீஸ்நிலையம் அழைத்துச்சென்றனர். அங்கு ஊழியர்கள் போலீஸ்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
போலீஸ் காலிப்பணியிடங்கள் பெண்களுக்கான உடற்தகுதி தேர்வு தொடங்கியது.
புதுச்சேரி:
புதுவை காவல் துறையில் காலியாக இருந்த 390 காவலர்கள்,12 ரேடியோ டெக்னீசியன், 29 டெக்ஹேண்ட்லர் என மொத்தம் 431 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இதில் ஆண்களுக்கான உடற்தகுதி தேர்வு கடந்த 8&ந்தேதி தொடங்கி முடிவடைந்தது. இந்தநிலையில் பெண்களுக்கான உடற்தகுதி தேர்வு (7ந்தேதி) தொடங்கி வருகிற 11ந்தேதி வரை நடைபெறுகிறது.
காலை தொடங்கிய பெண்களுக்கான உடற்தகுதி தேர்வில் 200 மீட்டர் ஓட்டபந்தயம், நீளம் தாண்டுதல்,உயரம் தாண்டுதல் ஆகிய நடைபெற்று வருகிறது/
சேலம்- மற்றும் புதுவையில் உள்ள அப்பா பைத்தியம் சுவாமி கோவில்களில் குருபூஜை விழா நடந்தது. இதில் முதல்&அமைச்சர் ரங்கசாமி-, நமச்சிவாயம் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
சேலம் சூரமங்கலத்தில் உள்ள சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் கோவிலில் 22-ம் ஆண்டு குருபூஜை விழா நடந்தது.
இதையொட்டி காலை 7 மணி முதல் ஞான விநாயகர், ஞான முருகர், சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகளுக்கு மகா அபிஷேகம், 12.30 மணிக்கு மகாதீபாராதனை நடந்தது. மதியம் ஒரு மணிக்கு அன்னமளிப்பு விழா நடந்தது.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீசற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகளின் பக்தர்கள் செய்திருந்தனர். குருபூஜை விழாவில் அமைச்சர் நமச்சிவாயம், அவரது மனைவி மனைவி வசந்தி, காரைக்கால் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகன், அ.தி.மு.க. கிழக்கு மாநில தேர்தல் பிரிவு செயலாளர் வையாபுரி மணிகண்டன் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதபோல புதுவை திலாசுப்பேட்டையில் உள்ள அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் குருபூஜை விழா நடந்தது. காலை 7 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, புனிதநீர் வழிபாடு நடந்தது. 7.30 மணிக்கு அப்பா பைத்தியம் சுவாமிக்கு தமிழில் வேள்வி வழிபாடு, 9 மணிக்கு வேள்வி நிறைவு, திருமுறை விண்ணப்பம், தீபாராதனை நடந்தது.
காலை 10 மணிக்கு அபிஷேகம், திருக்குட நன்னீராட்டு, 12 மணிக்கு திருமுறை விண்ணப்பம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், லட்சுமி காந்தன், பாஸ்கர் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
வாரிய தலைவர் பதவி வழங்க ரங்கசாமி தயங்குவது ஏன்? என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-
மத்தியில் பா.ஜ.க. அரசு வந்தபின், மாநில அதிகாரத்தில் இருந்த கல்வி, மருத்துவம், உட்பட பல துறைகள் மத்திய அரசின் அதிகாரத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மருத்துவ துறையில் நீட் தேர்வை கொண்டு வந்து, மத்திய பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படுவதால், தமிழகம், புதுவை மாணவர்கள் பலர் தோல்வி அடைகின்றனர்.
நீட் தேர்வில் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் நிலைப்பாடு என்ன? நீட் தேர்வை ஆதரித்தால், புதுவையில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர் களுக்கு துரோகம் செய்வதாக அமையும். கடந்த காங்கிரஸ் ஆட்சியில், கவர்னர் கிரண் பேடி, அரசின் முடிவையும், அமைச்சரவை முடிவையும் நிராகரித்து கோப்புகளை திருப்பி அனுப்பினார்.
அவர் மத்திய அரசின் ஏஜென்டாகவும், கைப்பாவையாகவும் செயல்பட் டது மக்களுக்கு தெரியும். பாரதீய ஜனதா தலைவர் சாமிநாதன் எத்தனை முறை தேர்தலில் நின்றாலும் தோல்வி அடைவார்.
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட காரைக்கால், நாகை மீனவர்களை விடுவிக்க மத்திய அரசுக்கு, மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
காங்கிரஸ் ஆட்சியில் ஆண்டுதோறும் 10 சதவீதம் அதிகமாக மத்திய அரசிடம் மானிய நிதி வாங்கினோம். தற்போதைய அரசு 10 பைசா கூட கூடுதலாக பெறவில்லை. ரங்கசாமி அறிவித்த எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. ஒட்டு மொத்தமாக செயல்படாத அரசாக உள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் கட்சிக்காரர்களுக்கு வாரியத் தலைவர் பதவிகளை வழங்க முடியாத சூழ்நிலையை கவர்னர் கிரண்பேடி ஏற்படுத்தினார். ஆனால், எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய பதவி, ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் வழங்கப் பட்டது. தற்போது ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் ஆகியும் வாரியத்தலைவர் பதவிகள் வழங்கப்படவில்லை.
எம்.எல்.ஏ.க்களுக்கு வாரியத் தலைவர் பதவியை வழங்க ரங்கசாமி ஏன் தயங்க வேண்டும்? லாபத்தில் இயங்கும் வாரியங்களுக்கு தலைவர் பதவி அளிப்பதில் என்ன பிரச்னை உள்ளது? இதே நிலை நீடித்தால் மாநில வளர்ச்சி பாதாளத்துக்கு சென்றுவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுவையில் எலிமருந்து தின்று வக்கீல் தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை நயினார்மண்டபம் வள்ளலார் நகர் யமுனை வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது73). இவர் புதுவை கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் கணேஷ்(39) என்ற மகன் உள்ளனர். 2 மகள் களுக்கு திருமணமாகி விட்டது. கடந்த 17 ஆண்டுக ளுக்கு முன்பு ரேவதி இறந்து விட்டார்.
கணேஷ் டாக்டருக்கு படித்து முடித்து பெங்களூரு வில் தங்கி மேற்படிப்பு படித்து வந்தார். இதனால் ஆறுமுகம் வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்வதற்காக கணேஷ் தனது தந்தையுடன் இருந்து வந்தார்.
இதற்கிடையே ஆறுமுகம் சிலரிடம் பணம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் மன வருத்தத்தில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை தற்கொலை செய்துகொள்ளும் முடிவில் ஆறுமுகம் இனிப்பில் எலி மருந்து கலந்து தின்று விட்டார்.
இதில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்த ஆறுமுகத்தை அவரது மகன் கணேஷ் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஆறுமுகம் நேற்று மதியம் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது மகன் கணேஷ் கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் புதுவை முத்திரையர் பாளையம் காந்திதிருநல்லூர் ஓடை தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி ஞானசுந்தரி (39). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
ஞானசுந்தரி மேட்டுப் பாளையத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.
இதற்கிடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணன் திடீரென இறந்து போனார். கணவர் இறந்து போனததால் ஞானசுந்தரி மனவருத்தத்தில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 4&ந் தேதி ஞானசுந்தரி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த எலி மருந்தை தின்று விட்டார். இதில் மயங்கி விழுந்த ஞானசுந்தரியை அவரது மகள்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ஞானசுந்தரி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது மகள் கீர்த்திகா கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திலாஸ்பேட்டையில் முன்விரோதத்தில் வாலிபரை கத்தியால் குத்திய கும்பல் தடுக்க முயன்ற தங்கையையும் தாக்கி சென்றனர்.
புதுச்சேரி:
புதுவை திலாஸ்பேட்டை வீமன்நகர் சிமெண்ட் ரோடு பகுதியை சேர்ந்தவர் மோகன் என்ற சத்தியசீலன் (வயது29). பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அப்பு என்ற மணிகண்டன், நடேசன், துரைராஜ், கார்த்திக் ஆகியோருக்குமிடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு மோகன் அங்குள்ள மதுக்கடைக்கு மது குடிக்க சென்றார். அங்கு மது குடித்துக்கொண்டிருந்த போது ஏற்கனவே அங்கு அப்பு, நடேசன், துரைராஜ், கார்த்திக் ஆகியோர் மது குடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது குடிபோதையில் இரு தரப்பினருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மோகன் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். ஆனால் ஆத்திரம் தீராத அந்த கும்பல் பின் தொடர்ந்து வந்து மோகனை அவரது வீட்டின் அருகே வழிமறித்து சரமாரியாக தாக்கினர்.
மேலும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தலையில் குத்தினர். இதனால் மோகன் அலறினார்.
இந்த அலறல் சத்தம் கேட்டு அவரது தங்கை அனிதா அந்த கும்பலை தட்டிக்கேட்டு தடுக்க முயன்றார். ஆனால் அந்த கும்பல் அனிதாவையும் தாக்கிவிட்டு தப்பி சென்றது.
இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த மோகன் கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் இதுகுறித்து கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பு உள்பட 4 பேரையும் தேடி வருகிறார்கள்.
வீட்டுக்குள் புகுந்த கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை தடுத்து போராடி கொன்று தன்னை வளர்த்த எஜமானரின் குடும்பத்தையே நாய் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது
புதுச்சேரி:
மூலக்குளம் ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் ரமணி. கல்வித்துறை அதிகாரி. இவரது மனைவி சித்ரா. இவர் குருமாம்பேட்டில் உள்ள காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இவர்களது வீட்டில் ராட் வீலர் வகையை சேர்ந்த 2 வெளிநாட்டு நாய்களை வளர்த்து வந்தனர். அவற்றுக்கு லெனி, மிஸ்ட்டி என பெயரிட்டு அழைத்தனர்.
வீட்டை சுற்றி மதில்சுவர் கட்டப்பட்டுள்ள நிலையில் இரவு வேளையில் பாதுகாப்புக்காக நாய்களை கட்டிப்போடாமல் அவிழ்த்து விட்டு விடுவது வழக்கம். இதனால் அவை காம்பவுண்டு சுவருக்குள் சுற்றி வரும்.
இந்தநிலையில் மிஸ்ட்டி என்ற நாய்க்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. முகம் வீங்கியும் மிகவும் சோர்வுடனும் காணப்பட்டது. இதனால் ரமணி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அந்த நாய்க்கு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். அதன்பிறகும் நாய் சோர்வுடனே இருந்து வந்தது.
இந்தநிலையில் நேற்று வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று ரமணி பார்வையிட்டார். அங்கு பயன்படுத்தாமல் கிடந்த தேங்காய் நார் மெத்தையில் சுமார் 3 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு செத்து கிடந்தது. இதைப்பார்த்ததும் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டுக்குள் செல்ல வந்த அந்த பாம்புடன் மிஸ்ட்டி போராடி கொன்று இருப்பதும் பாம்பு கடித்து விஷம் ஏறியதால் நாய்க்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட காரணமும் அப்போது தான் அவருக்கு தெரியவந்தது.
உடனே அந்த நாயை புதுவை மறைமலையடிகள் சாலையில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். தற்போது நாய் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், ‘பொதுவாக கண்ணாடி விரியன் பாம்பு கடித்தால் விஷம் ரத்தத்தில் கலந்து ஒரு சில மணி நேரங்களில் கடிபட்டவர்கள் உயிரிழந்து விடுவார்கள். நாயின் மூக்கு பகுதியில் பாம்பு கடித்ததால் விஷம் ரத்தத்தில் கலக்கவில்லை. அதனால் நாய் உயிர் பிழைத்தது’ என தெரிவித்தனர்.
நாயை வளர்த்த ரமணி கூறுகையில், ‘நாங்கள் வளர்க்கும் நாய்கள் வேட்டையாடும் வகையை சேர்ந்தது. வீட்டில் புகுந்த பாம்பை, நாய் கடித்து கொன்று விட்டது. நாங்கள் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தபோது இரவு நேரத்தில் இந்த சம்பவம் நடந்து இருக்க வேண்டும். அந்த பாம்பு வீட்டுக்குள் நுழைந்து இருந்தால் விபரீதம் ஏற்பட்டு இருக்கும். அது நாயால் தவிர்க்கப்பட்டிருக்கிறது. அந்த நாய்கள் வீட்டிற்குள் ஒரு தவளை, பூரானை கூட நுழைய விடாது. நாய்க்கு அளித்த சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது . இருப்பினும் அது முழுமையாக குணமடைந்தால் தான் எங்களுக்கு நிம்மதி’ என்றார்.
வீட்டுக்குள் புகுந்த கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை தடுத்து போராடி கொன்று தன்னை வளர்த்த எஜமானரின் குடும்பத்தையே நாய் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சுற்றுலா பயணிகள் வருகையால் புதுச்சேரி களை கட்டியது. சண்டே மார்க்கெட் செயல்படும் காந்திவீதியில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதன்படி நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் நிரம்பி வழிந்தன.
சுற்றுலா பயணிகள் வருகை எதிரொலியாக சுற்றுலா தலங்கள் களை கட்டியது. கடற்கரை, பாரதி பூங்கா, நோணாங்குப்பம் படகு குழாம், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், பாண்டி மெரினா பீச் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
குறிப்பாக கடற்கரை சாலையில் தலைமை செயலகம் எதிரே உள்ள செயற்கை மணல் பரப்பு, பழைய துறைமுக பாலம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
புதுச்சேரி நகர பகுதியில் நேற்று ஏராளமான வெளி மாநில பதிவெண் கொண்ட கார்கள் உலா வந்தன. நேற்று முகூர்த்தநாள் என்பதாலும், சுற்றுலா பயணிகள் வருகையாலும் நகரின் முக்கிய வீதிகளான அண்ணாசாலை, நேருவீதி, புஸ்சி வீதி, கடலூர் சாலை, மரப்பாலம் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் பராமரிப்பு பணி காரணமாக நேற்று குழந்தைகள் ரெயில் இயக்கப்படவில்லை. இதனால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஒயிட் டவுன் பகுதியில் உள்ள கட்டிடங்களில் வரைந்துள்ள ஓவியங்களின் முன்பு நின்று சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
சண்டே மார்க்கெட் செயல்படும் காந்திவீதியில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பேரம் பேசி வாங்கி சென்றனர்.

காரைக்காலில் மாமியாரை பார்க்க சென்ற மருமகன் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால்:
காரைக்கால் கும்ச கட்டளையை சேர்ந்தவர் காளீஸ்வரன் (வயது 36). இவரது மாமியார் அல்போன்ஸ்மேரி. இவர் காரைக்கால் தருமபுரம் பர்மாதெருவில் வசித்து வருகிறார்.
இவரது வீட்டில் காளீஸ்வரன் மகள் ஆதார்கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் உள்ளது. இதனை வாங்குவதற்காக, காளீஸ்வரன் சென்றுள்ளார்.
ஆனால் மாமியார் வீட்டு பூட்டியிருந்தது.அதனால், காளீஸ்வரன் அந்த தெருவின் முனைக்கு வந்து நின்றுள்ளார்.
அப்போது, தருமபுரம் நெடுந்தெருவைச்சேர்ந்த பரமசிவம் (41) என்பவர் சென்றுள்ளார். தெருவின் ஓரம் நின்றுகொண்டிருந்த காளீஸ்வரனை பார்த்த்து, யார் நீ? ஏன் இங்கு நிற்கிறாய் என கேட்டுள்ளார்.
இதை கேட்பதற்கு நீ யார்? என காளீஸ்வரன் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபம் அடைந்த பரமசிவம், தனது இடுப்பில் வைத்திருத கத்தியால் காளீஸ்வரன் இடதுபக்க கழுத்தில் கிழித்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதை பார்த்த தருமபுரம் பர்மா தெரிவைச்சேர்ந்த அலெக்ஸ் என்பவர் காளீஸ்வரனை காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். மருத்துவமனையில் காளீஸ்வவரன் கொடுத்த புகாரின் பேரில், காரைக்கால் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள பரமசிவத்தை தேடி வருகின்றனர்.
லதா மங்கேஷ்கர் மறைவையொட்டி புதுவை கவர்னர், முதல்-அமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கர் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். தனது இனிய குரல் வளத்தால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இசை ரசிகர்கள் அனைவரின் நெஞ்சத்திலும் நிறைந்திருந்தார். அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கும், இசை ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் இசைக்குயில் என்று போற்றப்பட்ட பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் மறைவுச்செய்தி மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் அளிப்பதாக உள்ளது. தனது 13 வயதில் பாடத்தொடங்கி தொடர்ந்து 70 ஆண்டுக்கும் மேலாக இந்திய மக்களின் மனதை இன்னிசை குரலால் ஆட்சி செய்தவர். பல்வேறு இந்திய மொழி களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள அவர், இந்தியாவின் இசை ராணியாக வலம் வந்தவர்.
வேறொருவரையிட்டு நிரப்ப முடியாத வெற்றிடத்தை அம்மையாரது இழப்பு ஏற்படுத்தியுள்ளது. இது அம்மையாரின் திறமைக்கும், உழைப்பிற்குமான சான்றாகும். அம்மையாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உலகெங்கிலும் உள்ள அவரின் ரசிர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறுஅவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்-, முதல்-அமைச்சர் ரங்கசாமி சந்திப்பில் எந்த வித உள்நோக்கமும் இல்லை என்று உள்துறை அமைச்சர் நமச்சிவாம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு புதுவை மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. பட்ஜெட் தொடர்பாக எங்கள் கருத்துக்கள், ஆலோசனைகளை மத்திய மந்திரி நிர்மலாசீத்தாராமனிடம் தெரிவித்துள்ளோம்.
7-வது சம்பள கமிஷன் அரியர் தொகை ரூ.230 கோடியில் ரூ.150 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஜி.எஸ்.டி. இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு திட்டங்க ளுக்கும் முழு நிதி அளிக்கப்படுகிறது. கடந்த காலங்களை விட கூடுதலாக மத்திய அரசு நிதி அளித்துள்ளது. மேலும் கூடுதலாக நிதி தர கேட்டுள்ளோம்.
ரங்கசாமி தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராகவும் உள்ளார். அவர் நடிகர் விஜய்யை சந்தித்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை. விஜய் சந்திப்பு தொடர்பான யூகங்களுக்கு பதில் தர முடியாது. எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. இலவச அரிசி 75 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. மீதமும் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஜிப்மரின் செயல்பாடுகளை ஆய்வுசெய்ய மத்திய சுகாதார மந்திரி புதுவைக்கு நேரடியாக வர உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ்தான் கவர்னர்களை ஒற்றர்களாக பயன்படுத்தியது என்று புதுச்சேரி பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமி நாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கவர்னர்களை ஒற்றர்களாக மத்திய அரசு பயன் படுத்துவதாக முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமி கூறியுள்ளார். அவருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
பல மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது தான் கவர்னர்கள் ஒற்றர்களாகவும், தொலைபேசியை ஒட்டுக் கேட்பவர்களாகவும்பயன்படுத்தப்பட்டனர். காங்கிரஸ் ஆட்சியில் 356-வது சட்டப் பிரிவை பயன்படுத்தி கவர்னர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பல ஆட்சிகள் கலைக்கப்பட்டது.
ஆனால் வாஜ்பாய், மோடியின் 14 ஆண்டு கால ஆட்சியில் இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எதுவும் கலைக்கப்பட்ட தில்லை. நாராயணசாமி இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் ஒற்றர்களாக எப்படி செயல் படுகின்றனர்? என்பதை தெரிவிக்க வேண்டும்.
காங்கிரஸ் இல்லாத புதுவை உருவாகியுள்ளது. இதற்கு நாராயணசாமிதான் காரணம். இப்போது காங்கிரசுக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் மட்டும்தான் உள்ளனர். அவர்கள் இருவருமே இறக்குமதி செய்யப்பட்டவர்கள்தான்.
பல மாநிலங்களில் காங்கிரஸ் வீழ்ச்சியை சந்தித் துள்ளது. புதுவை கவர்னர் தமிழிசை நேர்மையாக செயல்படுகிறார். நிதி தட்டுப்பாடும் புதுவைக்கு இல்லை. மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்ற முழுமையான நிதியை மத்திய அரசே தருகிறது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியின் 5 ஆண்டு காலத்தில் சாலை, வாய்க்கால் உட்பட உள்கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. இப்போது சாலை பணிகளை தொடங்கியுள்ளோம். எங்கள் ஆட்சியில் நகரம், கிராமம் என அனைத்து பகுதியிலும் சாலைகள் மேம்படுத்தப்படும்.
புதுவை பா.ஜனதாவை அமைப்பு ரீதியில் பலப்படுத்த தொகுதி நிர்வாகிகள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பட்ஜெட் குறித்து மாநில நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை நடத்த மத்திய மந்திரி பிரகாஷ்சிங் படேல் புதுவைக்கு வருகிறார். வருகிற (புதன்கிழமை) சன்வே ஓட்டலில் கட்சி பொறுப்பாளர் சுரானா, மத்திய மந்திரி ஆகியோர் நிர்வாகிகளுடன் பேசுகின்றனர்.
வாரிய பதவி நிதியை சரி செய்த பின் தருவதாக முதல்-அமைச்சர் கூறியுள் ளார். எம்.எல்.ஏ.க்கள், கட்சியினருக்கு வாரிய தலைவர் பதவி அளிக்கப்படும். கட்சி என்றால் கருத்து வேறுபாடு இருக்கத்தான் செய்யும். அதை நாங்கள் பேசி தீர்ப்போம்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி முழுமை யாக 5 ஆண்டுகள் நீடிக்கும். கடந்த 5 ஆண்டு காலத்தில் சென்சார் போர்டு உட்பட பல்வேறு பதவிகள் மத்திய அரசால் புதுவை பா.ஜனதாவினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.