என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    புதுவை துறைமுகம் ரூ.304 கோடியில் மேம்படுத்தப்படும் மத்திய துறைமுக மந்திரி பதில்

    புதுவை துறைமுகம் ரூ.304 கோடியில் மேம்படுத்தப்படும் என்று வைத்திலிங்கம் எம்.பி. கேள்விக்கு மத்திய துறைமுக மந்திரி பதில் அளித்துள்ளார்.
    புதுச்சேரி:

    பாராளுமன்றத்தில் புதுவை மாநிலத்தில் “சாகர்மாலா” திட்டத்தின் கீழ் திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதா? அதன் விவரங்கள் என்ன? என்று புதுவை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் எழுப்பிய கேள்விக்கு மத்திய துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை மந்திரி சர்பானந்தா அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:-

    கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் ஒப்புத லுடன் 15.3.2017-ல் சென்னை துறைமுகத்துக்கும், புதுவை துறைமுகத்திற்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதனைத் தொடர்ந்து சென்னை துறைமுகம் மற்றும் புதுவை துறைமுகம் இடையே 25.2.2018-ல் பிரத்யேக சரக்கு கப்பல் மூலம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. 

    அப்போது முகத்து வாரத்தில் சில பகுதிகள் ஆழப்படுத்தப்பட வேண்டியிருப்பது கவனிக்கப்பட்டது. புதுவை  துறைமுகத்தில் 7 லட்சத்து 30 ஆயிரத்து கன மீட்டருக்கு மூலதனத் தூர்வாரும் பணிக்கான டெண்டர் புதுவை அரசின் துறைமுக துறையால் விடப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டது. 27.1.2022 நிலவரப்படி 45 முதல் 50 சதவீதம் வரையிலான தூர்வாரும் பணி முடிந்துள்ளதாக புதுவை துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சாகர்மாலா திட்டத்தின் கீழ் புதுவை துறைமுகத்தை 3 கட்டங்களாக மேம்படுத்த இந்திய அரசின் நிதி உதவிக்காக புதுவை அரசு முன்வைத்தது. முதல் கட்டத்தில் ரூ.75 கோடியில் தூர்வாருதல் மற்றும் பெர்த் கட்டுதல், 2&ம் கட்டத்தில் ரூ.59.60 கோடியில் அனைத்து வசதிகளுடன் அப்ரோச் ஜெட்டி மற்றும் பிரதான ஜெட்டி அமைத்தல், 3&வது கட்டத்தில் ரூ.170.20 கோடி யில் கன்டெய்னர் பெர்த், துறைமுகத்தில் இருந்து சாலை மற்றும் பாலங்கள் கட்டுவதாகும்.

    சுற்றுச்சூழல் மற்றும் கடலோர ஒழுங்கு மண்டலத்தில் அனுமதி பெற்ற பிறகு ஜூலை 2020-ல் இ டெண்டர் விடப்பட்டு பணிகளும் வழங்கப்பட்டது. 

    புதுவை துறைமுகத்தில் தூர்வாரும் பணியை மேற்கொள்வதற்காக இந்திய அரசால் 30.3.2018 அன்று “சாகர்மாலா திட்டத்தின்” கீழ் ரூ.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×