என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வீட்டில் பைப் வெடிகுண்டு வைத்த வழக்கில் 6 பேரும் குற்றவாளிகள் என புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமச்சர் நாராயணசாமியின் வீடு, எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ளது.

    இவர் 2014-ல் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது, இணை அமைச்சராக பதவி வகித்தார். அதே ஆண்டு ஜனவரி 29-ந் தேதி அவரது வீட்டில், காருக்கு அடியில் பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து தேசிய புலனாய்வு அமைப்பு வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. 

    பைப் வெடிகுண்டு வைத்த சம்பவத்தில் தமிழ்நாடு விடுதலை படையை சேர்ந்த திருச்செல்வம் என்ற குமார் சங்கர்முரளி (வயது36), தங்கராசு, தமிழரசன்(38), கவியரசன் என்ற ராஜா (29)காளிலிங்கம் என்ற காளை (37), கார்த்திக் என்ற ஆதிஜீவா (28) ஜான் மார்ட்டின் என்ற இளந்தனால் (23), ஆகிய பேரை கைது செய்தனர். 

    இவ்வழக்கு புதுவை முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கில் 85&க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, இருதரப்பு வாதமும் முடிவடைந்தது. இவ்வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. 

    இதையொட்டி குற்றம் சாட்டப்பட்டிருந்த 6 பேரும் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டனர். வீடியோ கான்பரன்சில் நடந்த வழக்கில் முதன்மை நீதிபதி செல்வநாதன், குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். இவர்களின் தண்டனை விபரம் தொடர்ந்து அறிவிக்கப்பட உள்ளது. 
    தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து புதுவையில் பள்ளி&கல்லூரிகளில் கட்டுப்பாடுகளுடன் வகுப்புகள் நடந்தது.
    புதுச்சேரி:

    உலகம் முழுவதும் கொரோனா ஒமைக்ரான் வைரசாக பரவ தொடங்கியது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. 

    இதேபோல புதுவையிலும் கடந்த  மாதம் 10-ந்தேதி முதல் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மூடப்பட்டது. தொடர்ந்து 10-ம் வகுப்பு முதல் கல்லூரிகள் வரை 18-ந்தேதி மூடப்பட்டது. ஆன்லைனில் வகுப்புகள் நடந்து வந்தது. 

    வேகமாக பரவ தொடங்கிய கொரோனா தொற்றின் வேகம் குறைய தொடங்கியது. படிப்படியாக தொற்று பரவல் குறைந்து வருகிறது. இதனால் மீண்டும் பள்ளி& கல்லூரிகளை திறக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி புதுவையில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் இயங்க தொடங்கியது. 

    கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பள்ளிக்கு வரும் மாணவர்கள் முக கவசம் அணிந்து வந்தனர்.  அவர்களுக்கு வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டு, கிருமி நாசினி வழங்கப்பட்டு பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளியுடன் மாணவர்கள் அமர வைக்கப்பட்டனர். 

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மதிய உணவுக்காக தங்கள் வீடுகளில் இருந்து தட்டு, தம்ளர் கொண்டு வந்தனர். பள்ளிகள் வாரத்தில் 6 நாட்கள் இயங்க கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனால் வருகை பதிவேடு கட்டாய மில்லை. வகுப்புக்கு வராத மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தவும் உத்தரவிடப் பட்டுள்ளது.  இருப்பினும் பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக்கு வந்திருந்தனர். 

    இறை வணக்கம், கலை நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் மாணவர்களை அழைத்து வரும் வாகனங்களை நாள் தோறும் சுத்தப்படுத்த வேண்டும் என உத்தர விடப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவர்களுக்கு வருகிற 19-ந் தேதி முதல் திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளது. 

    பள்ளிகள் திறப்பையொட்டி காலைநேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. பெற்றோர்கள் தங்கள் வாகனங்களில் நகர்புறத்தில் உள்ள பள்ளிகளுக்கு குழந்தைகளை அழைத்து சென்றனர்
    புதுவையில் கொரோனாவுக்கு 3 பேர் பலியானார்கள்.
    புதுச்சேரி: 

    புதுவையில் 2 ஆயிரத்து 686 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 431 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 279, காரைக்காலில் 109, ஏனாமில் 34, மாகியில் 9 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    புதுவையில் 82, காரைக்காலில் 20, ஏனாமில் 6, மாகியில் 7 பேர் என 115 பேர் தொற்றுடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  புதுவையில் ஆயிரத்து 102, காரைக்காலில் 399, ஏனாமில் 103,  மாகியில் 4 பேர் என ஆயிரத்து 608 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். 

    புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 563 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 159 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 

    புதுவையில் 3 ஆயிரத்து 322, காரைக்காலில் ஆயிரத்து 685, ஏனாமில் 300, மாகியில் 36 பேர் என 5 ஆயிரத்து 343 பேர்  வீட்டு தனிமையில் உள்ளனர்.  புதுவை மாநிலத்தில் இப்போது 5 ஆயிரத்து 458 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர்.  புதுவை வாழைக்குளத்தை சேர்ந்த 79 வயது முதியவர், முத்தியால்பேட்டையை சேர்ந்த 73 வயது முதியவர், காரைக்காலை சேர்ந்த 72 வயது மூதாட்டி என 3 பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தனர்.  
    இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு  பலியானோர்  எண்ணிக்கை ஆயிரத்து 946 ஆக உயர்ந்துள்ளது. புதுவையில் 2&வது தவணை உள்பட 15 லட்சத்து 40 ஆயிரத்து 256 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 

    இத்தகவலை  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    பொதுத்தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவர்களுக்கு வருகிற 19-ந் தேதி முதல் திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளது.
    புதுச்சேரி:

    உலகம் முழுவதும் கொரோனா ஒமைக்ரான் வைரசாக பரவ தொடங்கியது.

    இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது.

    இதேபோல புதுவையிலும் கடந்த மாதம் 10-ந் தேதி முதல் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மூடப்பட்டது. தொடர்ந்து 10-ம் வகுப்பு முதல் கல்லூரிகள் வரை 18-ந் தேதி மூடப்பட்டது. ஆன்லைனில் வகுப்புகள் நடந்து வந்தது.

    வேகமாக பரவ தொடங்கிய கொரோனா தொற்றின் வேகம் குறைய தொடங்கியது. படிப்படியாக தொற்று பரவல் குறைந்து வருகிறது. இதனால் மீண்டும் பள்ளி- கல்லூரிகளை திறக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி புதுவையில் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் இயங்க தொடங்கியது.

    கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பள்ளிக்கு வரும் மாணவர்கள் முக கவசம் அணிந்து வந்தனர்.

    அவர்களுக்கு வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டு, கிருமி நாசினி வழங்கப்பட்டு பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளியுடன் மாணவர்கள் அமர வைக்கப்பட்டனர்.

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மதிய உணவுக்காக தங்கள் வீடுகளில் இருந்து தட்டு, தம்ளர் கொண்டு வந்தனர். பள்ளிகள் வாரத்தில் 6 நாட்கள் இயங்க கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனால் வருகை பதிவேடு கட்டாயமில்லை. வகுப்புக்கு வராத மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இருப்பினும் பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக்கு வந்திருந்தனர். இறை வணக்கம், கலை நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் மாணவர்களை அழைத்து வரும் வாகனங்களை நாள்தோறும் சுத்தப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    பொதுத்தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவர்களுக்கு வருகிற 19-ந் தேதி முதல் திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளது.

    பள்ளிகள் திறப்பையொட்டி காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. பெற்றோர்கள் தங்கள் வாகனங்களில் நகர்புறத்தில் உள்ள பள்ளிகளுக்கு குழந்தைகளை அழைத்து சென்றனர்.

    முருங்கப்பாக்கம்&வில்லியனூர் இடையே ரூ.8 கோடி செலவில் தார் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் லட்சுமி நாராயணன்-சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் தொடங்கி வில்லியனூர் கண்ணகி பள்ளி வரை உள்ள சாலை  மேம்படுத்தப்படுகிறது.

    மேலும் வில்லியனூர்  தொகுதிக்குட்பட்ட பாப் பாஞ்சாவடி தொடங்கி கொம்பாக்கம் வழியாக கொம்பாக்கம்பேட், ஒதியம்பட்டு, கே.வி. நகர், உத்திரவானிப்பேட், அம்பேத்கர் நகர், திரு வள்ளுவர் நகர், லூர்து நகர், வில்லியனூர் வரை உள்ள 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு 10 மீட்டர் அகலத்தில் ரூ. 8 கோடியே 56 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பீட்டில் பொதுப்பணித்துறை மூலம் பக்க வாய்க்காலுடன் கூடிய புதிய மேம்படுத்தப்பட்ட தார் சாலை அமைக்கப்படுகிறது.

    இப்பணிக்கான பூமி பூஜை விழா   நடந்தது. சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சிவா எம்.எல்..ஏ   தலைமையில் அமைச்சர் லட்சுமிநாராயணன் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில், அரசு செயலர்  அருண்,  பொதுப் பணித்துறை தலைமை பொறியார் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர் ராஜ சேகரன், உதவிப் பொறியாளர் ராமமூர்த்தி, இளநிலைப் பொறியாளர் திருமுருகன் மற்றும் தி.மு.க. தொகுதி செயலாளர் ராமசாமி, கொம்பாக்கம் தேவநாதன், வேலுபடையாச்சி, ஜெய பால், ஜெகன், ஜனா உள்
    ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முருங்கப்பாக்கம்-வில்லியனூர் இடையே ரூ.8 கோடி செலவில் தார் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் லட்சுமி நாராயணன்-சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் தொடங்கி வில்லியனூர் கண்ணகி பள்ளி வரை உள்ள சாலை  மேம்படுத்தப்படுகிறது.

    மேலும் வில்லியனூர்  தொகுதிக்குட்பட்ட பாப்பாஞ்சாவடி தொடங்கி கொம்பாக்கம் வழியாக கொம்பாக்கம்பேட், ஒதியம்பட்டு, கே.வி. நகர், உத்திரவானிப்பேட், அம்பேத்கர் நகர், திரு வள்ளுவர் நகர், லூர்து நகர், வில்லியனூர் வரை உள்ள 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு 10 மீட்டர் அகலத்தில் ரூ. 8 கோடியே 56 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பீட்டில் பொதுப்பணித்துறை மூலம் பக்க வாய்க்காலுடன் கூடிய புதிய மேம்படுத்தப்பட்ட தார் சாலை அமைக்கப்படுகிறது.

    இப்பணிக்கான பூமி பூஜை விழா   நடந்தது. சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சிவா எம்.எல்..ஏ   தலைமையில் அமைச்சர் லட்சுமிநாராயணன் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில், அரசு செயலர்  அருண்,  பொதுப் பணித்துறை தலைமை பொறியார் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர் ராஜ சேகரன், உதவிப் பொறியாளர் ராமமூர்த்தி, இளநிலைப் பொறியாளர் திருமுருகன் மற்றும் தி.மு.க. தொகுதி செயலாளர் ராமசாமி, கொம்பாக்கம் தேவநாதன், வேலுபடையாச்சி, ஜெய பால், ஜெகன், ஜனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    பிரச்சினைகளை பேசி தீர்க்க தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தை கூட்ட வேண்டும் என கட்சி தலைமையிடம் புதுவை பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் சபாநாயகர், 2 அமைச்சர், பாராளுமன்ற செயலர் பதவிகளில் பா.ஜ.க.வினர் இடம்பெற்றுள்ளனர். 

    சட்டமன்ற பதவியில் இல்லாத என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கப்படும் என தேர்தல் ஒப்பந்தத்தில் உறுதியளிக்கப்பட்டு இருந்தது. கூட்டணியில் இடம் பெற்று வெற்றிவாய்ப்பை இழந்த அ.தி.மு.க.வும் தங்களுக்கு வாரிய பதவி கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்தனர். ஆட்சி அமைந்து 8 மாதம் முடிவடைந்த நிலையில் இதுவரை ஆளும் கட்சி மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய பதவி வழங்கப்படவில்லை.

    பா.ஜ.க.வினர் ரங்கசாமியை நேரில் சந்தித்து இதுகுறித்து  கேட்டனர். அப்போது வாரியங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் தலைவர் பதவி அளிக்க முடியாது என ரங்கசாமி மறுத்து விட்டார்.  இது ஆளும்கட்சி, ஆதரவு எம்.எல்.ஏ.க்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டு மின்றி கட்சியில் சீட் கிடைக்காதவர்கள், நீண்டகாலமாக கட்சிக்கு உழைத்தவர்கள், தேர்தலில் வெற்றிக்காக உழைத்தவர்களும் வாரிய தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தனர். அவர்களும் ரங்க சாமியின் பதிலால் ஏமாற்ற மடைந்துள்ளனர். 

    இதனிடையே உள்ளாட்சி தேர்தலில் தொகுதி பங்கீட்டுக்காக 2 முறை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடந்தது. பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா பங்கேற்றார். அப்போது தேர்தல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் கூட்டணி கட்சிகளிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும், பிரச்சினைகளை பேசி தீர்க்கவும் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம் நடத்தப்படவில்லை. 

    இந்த நிலையில் வாரிய தலைவர் பதவியை வழங்க முடியாது என ரங்கசாமி கைவிரித்துவிட்ட நிலையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஆதரவு எம்.எல். ஏ.க்கள் பா.ஜனதா கட்சி தலைமையை தொடர்பு கொண்டனர்.  புதுவை பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவிடம் பேசியுள்ளனர். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டத்தை நடத்த முதல்-அமைச்சர் ரங்கசாமியை பா.ஜனதா மேலிடம் வலியுறுத்த வேண்டும்.  அப்போதுதான் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என வலியுறுத்தியுள்ளனர். அவரும், இதற்கான ஏற் பாடுகளை செய்வதாக உறுதியளித்துள்ளார். 

    இதனிடையே ஆட்சி அமைந்த பிறகு ரங்கசாமி இதுவரை டெல்லி செல்லவில்லை. புதுவை மாநிலத்தோடு தேர்தல் நடந்த தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த முதல்-மந்திரிகள் டெல்லியில் பிரதமரை பலமுறை சந்தித்துள்ளனர். 

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் ரங்கசாமி டெல்லி செல்வதை தள்ளிப்போட்டு வந்தார். 8 மாதம் கடந்துவிட்ட நிலையில் அவர் டெல்லி செல்லாததும் புதுவை பா.ஜனதாவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
    மத்திய பட்ஜெட்டில் புதுவைக்கு கூடுதல் நிதி ஒதுக்காதது வேதனை அளிப்பதாக கென்னடி எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய மந்திரி தாக்கல் செய்த பட்ஜெட்டில் புதுவை மாநிலத்திற்கு என்று எந்த ஒரு திட்டங்களும் சிறப்பு சலுகைகளும் இடம் பெறவில்லை.  சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மத்திய அரசின் நிதி உதவி அளிப்பு ரூ.1729 கோடிதான்  உள்ளது. 

    சட்டசபை தேர்தலின் போது,  மத்திய அரசோடு ஒத்துப்போகவில்லை என்றால் மாநில வளர்ச்சி அடையாது, புதிய தொழில் கூடங்கள் வராது. மூடிய தொழிற்கூடங்களை திறக்க இயலாது, அரசு நிறுவனங்களை லாபகரமாக மீட்டெடுக்க முடியாது என்றெல்லாம் பொய் பிரசாரத்தின் மூலம் இந்த பா.ஜனதா கூட்டணி ஆட்சியினை கட்டமைத்தது.

    மத்திய அரசோடு இணக்கமாக இருந்து  வரும் இந்த ஆட்சி எதிர்பார்த்தபடி- வாக்குறுதி அளித்தபடி எந்த முன்னேற்ற வளர்ச்சிக்கும் மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு இல்லாதது மிகுந்த வேதனை அளிக்கிறது. 

    கடந்த டிசம்பர் மாதம் 30-ந்தேதி மத்திய பட்ஜெட் தயாரிப்பின் போது புதுவை மாநிலத்தின் சார்பிலும் முதல்-அமைச்சர் சார்பிலும், அமைச்சர் லட்சுமி நாராயணன் கலந்துகொண்டு மாநிலத்தில் தற்போது ஏற்பட்டுள்ள-  மாற்றம்  வரும்காலத்தில் ஏற்படப்போகும் இழப்பினை சமாளிக்க ரூ. ஆயிரத்து 710 கோடி தேவை என வைத்த கோரிக்கையின் மீது மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? 

    2022-ம்ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகை நிறுத்தப்பட்டு விடும். அதனால் மாநில அரசு மேலும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகும். இதுகுறித்து மாநில அரசு என்ன அழுத்தம் கொடுத்து இருக்கிறது? ஜி.எஸ்.டி. இழப்பீட்டு வருவாயை எப்படி ஈடுகட்ட போகிறது?

    2022--2023 நிதியாண்டில் ரூபாய் 1300 முதல் 1500 கோடி வரை நிதிப்பற்றாக்குறை ஏற்படும் சூழலுக்கு இந்த அரசு தள்ளப்பட்டிருக்கிறது. வரும் ஒவ்வொரு நிதி ஆண்டும் இதே நிலைமைதான் புதுவை மாநிலத்திற்கு ஏற்படப் போகின்றது. 

    இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.
    எம்.பி.பி.எஸ். சேர்க்கை தாமதம் ஏன்?- என்பது குறித்து ஜிப்மர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மர் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., சேர்க்கை, சான்றிதழ் சரிபார்ப்பு முனனறிவிப்பு இன்றி, கடைசி நேரத்தில் ஒத்தி வைத்ததால்  பெற்றோர்கள், மாணவர்கள் சிரமப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.  எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு இந்திய அரசின் மருத்துவ மற்றும்  குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மருத்துவ கலந்தாய்வு கமிட்டியால் கையாளப்படுகிறது. தகுதி பட்டியல் ஒத்திவைப்பது,  மாற்றியமைப்பது மருத்துவ கலந்தாய்வு குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது. 

    தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் விவரங்களை ஜிப்மர் நிர்வாகத்திற்கு வழங்கிய பின்னரே, சேர்க்கை நடைமுறை அல்லது சான்றிதழ் சரிபார்ப்பை நடத்த முடியும். இந்த விவரங்கள் மருத்துவ  கருத்துரை செயற்குழுவின் இணையதளத்தில் கிடைக்கிறது.
     
    எம்.பி.பி.எஸ். சேர்க்கை தொடர்பான எந்த செயலையும் ஜிப்மர் தன்னிச்சையாக நடத்த முடியாது. இதுதொடர்பான எந்தக் குறையையும் மருத்துவ கலந்தாய்வு கமிட்டிற்கு தெரிவிக்கப்பட வேண்டும். பெற்றோர்களும் மாணவர்களும் மருத்துவ கலந்தாய்வு கமிட்டியின் அறிவிப்பை பெற்ற பிறகு ஜிப்மரை அணுகலாம். 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    சாலை விரிவாக்கத்துக்கு பனைமரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மனு அளித்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் ரவி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில்  கூறியிருப்பதாவது:-

    விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை 4 வழி சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. திருபுவனை தொகுதியில் நிலத்தடி நீர்  ஆதாரமாக பிரெஞ்சுகாரர்கள் வாய்க்கால் மூலம் வரும் மழைநீர் மதகடிப்பட்டு சந்தை எதிரே உள்ள குட்டை, திருவண்டார்கோவில்  உணவுக்கழகம் எதிரே உள்ள குட்டை, திருபுவனை ஏரி, திருவண்டார்கோவில் ஏரி, ஏரிக்கரையில் உள்ள ஆயிரம் பனை மரங்கள் மூலம் சேமிக்கப்பட்டு வருகிறது.

    சாலை விரிவாக்க பணிக்காக வாய்க்காலை மூடிவிட்டாலும், பனைமரங்களை வெட்டி அகற்றிவிட்டாலும் நிலத்தடி நீர் சேகரிப்பு குறைந்து கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும்.  எனவே இந்த நீர்நிலைகளை பாதுகாக்கவும், பனை மரங்களை வெட்டாமல்  பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய சங்கம் சார்பில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  

    இதில் நீர்நிலைகளை ஆக்கிரமிக்காமல் எதிர்புறம் சாலை அமைக்க கோரி உள்ளோம். இந்த கோரிக்கையை பரிசீலித்து 10 மீட்டர் தள்ளி  சாலை அமைக்க வேண்டும்.
     
    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 
    புதுவை அருகே வி‌ஷ பூச்சி கடித்ததில் நர்சிங் கல்லூரி பேராசிரியை பலியான சம்பவம் குறித்து திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை அருகே சிலுக்காரிபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெகதீஷ்.

    இவர் ஏரிப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிரசன்யா. (வயது 33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பிரசன்யா கலிதீர்த்தாள் குப்பத்தில் உள்ள நர்சிங் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

    கடந்த 2-ந்தேதி காலை வழக்கம் போல் பிரசன்யா கல்லூரிக்கு பணிக்கு சென்றார்.

    அதே போல் ஜெகதீஷ் மதியம் 2-வது ஷிப்ட் வேலைக்காக புறப்பட்டு சென்றார். மாலை பணி முடிந்து பிரசன்யா வீட்டுக்கு வந்தார்.

    பின்னர் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு வேலை சம்பந்தமாக சென்றார். அங்கு கழிவறைக்கு சென்ற பிரசன்யாவை வி‌ஷபூச்சி ஒன்று கடித்து விட்டதாக கூறப்படுகிறது.

    உடனே மயங்கி சாய்ந்த அவரை உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பிரசன்யா அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பிரசன்யா நேற்று மதியம் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது கணவர் ஜெகதீஷ் கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாகூர் அருகே மூதாட்டி கற்பழிப்பு சம்பவ குற்றவாளிகளை கைது செய்ய கோரி தாசில்தார் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
    புதுச்சேரி:

    பாகூரை அடுத்த கிராமப் பகுதியைச் சேர்ந்த 63 வயதுள்ள மூதாட்டி ஒருவர் கடந்த 29-ந் தேதி சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றின் அருகே உள்ள தன்னுடைய நிலத்திற்கு வேலை செய்வதற்காக சென்றார். 

    அங்கு நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது சுமார்  25 வயதுள்ள இளைஞர் ஒருவர் உருட்டு கட்டையால் தாக்கி மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் படுகாயமடைந்த மூதாட்டி புதுவை மகளிர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள். 

    இதற்கிடையே சோரியாங்குப்பம் கிராமப் பகுதியில் இருக்கும் மதுக்கடைகளால் அடிக்கடி பெண்களிடம் பாலியல் சீண்டல்கள் நடைபெற்று வருவதாகவும், தொடர்ந்து அந்த பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை நடந்து வருவதாகும் கிராம மக்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

    இந்நிலையில்,  சோரியாங்குப்பத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 100&க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாகூர் தாசில்தார் அலுவலகம் எதிரே   முற்றுகை போராட்டம் நடத்தினர். 

    அதில், பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு ரூ. 20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். மூதாட்டியை தாக்கியவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லைப் புறங்களில் உள்ள விவசாய நிலம் அருகே உள்ள மதுக்கடைகளை உடனே அகற்ற வேண்டும். 

    குடியிருப்புக்கும், விவசாய நிலங்களுக்கும் அருகில் மதுக்கடைகளை வைத்து விவசாய நிலங்களையும் சுற்றுச்சூழலையும் அழிவினை ஏற்படுத்தும் அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். 

    இந்த முற்றுகைப் போராட் டத்திற்கு சோரியாங்குப்பம் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் தமிழ்ச்செல்வன், அருள்ஒளி, வடிவேலு, முருகன், முத்துலிங்கம், வெங்கடாச்சலம், ஜீவா, பூபதி, குமுதம், ராசா, குமரகுரு, முத்து உள்ளிட்ட 100 பேர் ஈடுபட்டனர்.
    ×