என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பனைமரம் வெட்ட எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மனு அளித்தனர்.
    X
    பனைமரம் வெட்ட எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மனு அளித்தனர்.

    பனை மரங்களை வெட்ட விவசாயிகள் எதிர்ப்பு

    சாலை விரிவாக்கத்துக்கு பனைமரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மனு அளித்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் ரவி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில்  கூறியிருப்பதாவது:-

    விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை 4 வழி சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. திருபுவனை தொகுதியில் நிலத்தடி நீர்  ஆதாரமாக பிரெஞ்சுகாரர்கள் வாய்க்கால் மூலம் வரும் மழைநீர் மதகடிப்பட்டு சந்தை எதிரே உள்ள குட்டை, திருவண்டார்கோவில்  உணவுக்கழகம் எதிரே உள்ள குட்டை, திருபுவனை ஏரி, திருவண்டார்கோவில் ஏரி, ஏரிக்கரையில் உள்ள ஆயிரம் பனை மரங்கள் மூலம் சேமிக்கப்பட்டு வருகிறது.

    சாலை விரிவாக்க பணிக்காக வாய்க்காலை மூடிவிட்டாலும், பனைமரங்களை வெட்டி அகற்றிவிட்டாலும் நிலத்தடி நீர் சேகரிப்பு குறைந்து கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும்.  எனவே இந்த நீர்நிலைகளை பாதுகாக்கவும், பனை மரங்களை வெட்டாமல்  பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய சங்கம் சார்பில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  

    இதில் நீர்நிலைகளை ஆக்கிரமிக்காமல் எதிர்புறம் சாலை அமைக்க கோரி உள்ளோம். இந்த கோரிக்கையை பரிசீலித்து 10 மீட்டர் தள்ளி  சாலை அமைக்க வேண்டும்.
     
    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×