என் மலர்
புதுச்சேரி
புதுவையில் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் 428 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 2, காரைக்காலில் 3 பேர் என 5 பேர் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 3, மாகியில் ஒருவர் என 4 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 764 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 785 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். புதுவையில் 5, காரைக்காலில் 10, மாகியில் 2 பேர் என 17 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 17 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது.
புதுவையில் 2-வது தவணை உட்பட 16 லட்சத்து 6 ஆயிரத்து 989 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நிதி கசிவை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க. வலியுறுத்தல்
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:
புதுவை கல்வித் துறை இயக்குனர் தனது பிள்ளையை அரசு பள்ளியில் சேர்த்திருப்பது வரவேற்புக்குரியது.
இதனை அனைத்து அரசு ஊழியர்களும் பின்பற்றி, தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க வேண்டும். தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கும் அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ரூ.25 ஆயிரத்தை அரசு வழங்கி வருகிறது.
இதனை ரத்து செய்து அரசு ஊழியர்களின் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கும் சட்டம் கொண்டுவர வேண்டும். கடந்த ஆண்டு அரசு கல்வித் துறைக்கு ரூ.676 கோடி செலவிட்டுள்ளது. அதுபோல் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.2 ஆயிரம் 500 கோடிவரை செலவு செய்துள்ளது.
ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களில் 6 பேர் மட்டுமே மருத்துவ படிப்பிற்கு தேர்வாகியுள்ளனர்.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் தமிழ கத்தை போல் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங் கும் சட்டத்தை கொண்டு வர வேண்டும்.
தமிழகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனி சாமி கொண்டு வந்த 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு மூலம் கடந்த 2 ஆண்டுகளில் 1018 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் பயன் அடைந்துள்ளனர்.
இது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத ஒன்று. அனைத்து குடும்பத்தினரும் எடப்பாடி பழனிசாமியை தெய்வமாக வணங்குகிறார்கள்.
அரசு ஊழியர்களுக்கு ரூ.25 ஆயிரம் நிதி வழங்குவதைப்போல் 20-க்கும் மேற்பட்ட வழி களில் அரசுக்கு நிதி கசிவு ஏற்படுகிறது. அவைகளை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அன்பழகன் கூறினார்.
மகனை அரசு பள்ளியில் சேர்த்த கல்வித்துறை இயக்குனருக்கு கவர்னர் தமிழிசை பாராட்டியுள்ளார்
புதுச்சேரி:
புதுவை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை பள்ளி கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு தனது பிள்ளையை அரசு பள்ளியில் சேர்த்திருப்பது வரவேற்கத்தக்கது.
அரசு ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை தொடர்ந்து அரசு பள்ளியில் சேர்த்து வருவது மகிழ்ச்சி தருகிறது. இதுபோன்ற நடைமுறைகள் அரசு பள்ளிகள் மீது அவர்களுக்கு உள்ள நம்பிக்கையை காட்டுகிறது.
புதுவையில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தி அரசு அதிகாரிகள் உள்பட அனைவரும் அரசு பள்ளிகளை நோக்கி வருவதற்கான ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதே எனது நோக்கம். அதற்கான முதல்படியாகவே இதை கருதுகிறேன்.
கல்வித்துறை இயக்குனருக்கு எனது மன மார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதுவையில் முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் ரூ.25 லட்சம் நகையை கொள்ளையடித்தது தொடர்பாக கார் டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை ஏனாம் வெங்கடாசலம் பிள்ளை வீதியில் வசித்து வந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ. தனகாந்தராஜ். இவரது மனைவி பார்வதி(வயது75). இவர்களது பிள்ளைகளுக்கு திருமணமாகி அவர்கள் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனகாந்தராஜ் இறந்து விட்டார். இதனால் பார்வதி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். வயது முதிர்ச்சி காரணமாக பார்வதியால் தனியாக நடமாட முடியாது.
இதற்காக அவருக்கு உதவி செய்ய தங்களுக்கு அறிமுகமான கார் டிரைவர் எட்வர்ட் என்பவரை பார்வதியின் மகன்கள் ஏற்பாடு செய்தனர். தொடக்கத்தில் எட்வர்ட் பார்வதியை நல்ல முறையில் கவனித்து அவருக்கு தேவையான உதவிகளை செய்து வந்தார். இதனால் எட்வர்ட் மீது பார்வதி அதிக நம்பிக்கை வைத்திருந்தார்.
இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் பார்வதி தவறி விழுந்ததில் அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இதனால் பார்வதி படுத்த படுக்கையானார். அவருக்கு வேண்டிய உதவிகளை எட்வர்ட் செய்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பார்வதி பீரோவை திறந்து பார்த்தார். அப்போது பீரோவில் வைத்திருந்த 60 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த நகைகளை யாரோ கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும்.
இதுகுறித்து பார்வதி தனது பிள்ளைகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்களது ஆலோசனையின் பேரில் நகை கொள்ளை குறித்து பார்வதி ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பார்வதியின் வீட்டுக்கு எட்வர்ட்டை தவிர வேறு யாரும் வந்து செல்லாததால் போலீசாருக்கு எட்வர்ட் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து எட்வர்ட்டை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது எட்வர்ட் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் எட்வர்ட்டிடம் தங்களுக்கே உரிய முறையில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பார்வதி வீட்டில் பீரோவில் கள்ளசாவி போட்டு நகையை கொள்ளையடித்ததை எட்வர்ட் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடமிருந்து நகையை மீட்கும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
புதுவை ஏனாம் வெங்கடாசலம் பிள்ளை வீதியில் வசித்து வந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ. தனகாந்தராஜ். இவரது மனைவி பார்வதி(வயது75). இவர்களது பிள்ளைகளுக்கு திருமணமாகி அவர்கள் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனகாந்தராஜ் இறந்து விட்டார். இதனால் பார்வதி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். வயது முதிர்ச்சி காரணமாக பார்வதியால் தனியாக நடமாட முடியாது.
இதற்காக அவருக்கு உதவி செய்ய தங்களுக்கு அறிமுகமான கார் டிரைவர் எட்வர்ட் என்பவரை பார்வதியின் மகன்கள் ஏற்பாடு செய்தனர். தொடக்கத்தில் எட்வர்ட் பார்வதியை நல்ல முறையில் கவனித்து அவருக்கு தேவையான உதவிகளை செய்து வந்தார். இதனால் எட்வர்ட் மீது பார்வதி அதிக நம்பிக்கை வைத்திருந்தார்.
இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் பார்வதி தவறி விழுந்ததில் அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இதனால் பார்வதி படுத்த படுக்கையானார். அவருக்கு வேண்டிய உதவிகளை எட்வர்ட் செய்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பார்வதி பீரோவை திறந்து பார்த்தார். அப்போது பீரோவில் வைத்திருந்த 60 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த நகைகளை யாரோ கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும்.
இதுகுறித்து பார்வதி தனது பிள்ளைகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்களது ஆலோசனையின் பேரில் நகை கொள்ளை குறித்து பார்வதி ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பார்வதியின் வீட்டுக்கு எட்வர்ட்டை தவிர வேறு யாரும் வந்து செல்லாததால் போலீசாருக்கு எட்வர்ட் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து எட்வர்ட்டை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது எட்வர்ட் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் எட்வர்ட்டிடம் தங்களுக்கே உரிய முறையில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பார்வதி வீட்டில் பீரோவில் கள்ளசாவி போட்டு நகையை கொள்ளையடித்ததை எட்வர்ட் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடமிருந்து நகையை மீட்கும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
பள்ளி வாகனத்தில் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே பொறையூர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் குணசுந்தர்(வயது62). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வாகன டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு சீத்தா லட்சுமி என்றமனைவியும், வெங்கடேசன் என்ற மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகி அவர்கள் கணவருடன் தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.
வெங்கடேசன் சென்னையில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 4 மாதமாக சீத்தா லட்சுமி தனது மகனுக்கு உதவியாக சென்னையில் தங்கியிருந்து வருகிறார். இதனால் குணசுந்தர் முத்திரையர்பாளையம் கல்கி நகரில் உள்ள தனது மூத்த மகள் நிஷா வீட்டில் தங்கி பள்ளிக்கு வேலைக்கு சென்று வந்தார்.
இதற்கிடையே குண சுந்தருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. குணசுந்தர் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு மகள் வீட்டு வந்தார். இதனை நிஷா கண்டித்தார்.
குணசுந்தர் தான் வேலை பார்க்கும் பள்ளி வாகனம் பழுதாகி விட்டது என்றும் அதனை சரி செய்ய செல்வதாக மகளிடம் கூறி சென்றார்.
ஆனால் அதன் பிறகு குணசுந்தர் வீட்டுக்கு சாப்பிட வராததால் நிஷா போன் செய்து கேட்ட போது வேலை இருப்பதால் தன்னை எதிர்பார்க்க வேண்டாம் என்று குணசுந்தர் கூறினார்.
இந்தநிலையில் குணசுந்தர் தான் வேலை பார்க்கும் பள்ளி வாகனத்திலேயே தூக்குபோட்டு பிணமாக தொங்கினார். மது குடித்ததை மகள் கண்டித்ததால் குணசுந்தர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது மகள் நிஷா கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எம்.ஐ.டி. கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவை கலிதீர்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி) கல்லூரியில் சென்னை வோல்டெக் குரூப் நிறுவனங்கள் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
முகாமிற்கு வருகை புரிந்த அந்நிறுவன மனிதவள துறை மேலாளர் பிரவீன் மற்றும் குழுவினர், நிறுவனத்தின் விவரங்கள், நிறுவனத்தில் வேலை செய்வதற்கு உண்டான சூழல், எதிர்கால குறிக்கோள்கள், சம்பளம் என அனைத்து விவரங்களையும் விளக்கி கூறினார்.
நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த முகாமை கல்லூரி முதல்வர் மலர்க்கண் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அனைத்து துறை சார்ந்த வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அந்நிறுவனத்தின் பணி நியமன ஆணை பெற்று பயனடைந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் மற்றும் மின் மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் செய்து இருந்தனர்.
அமலோற்பவம் பள்ளி மாணவர்களை பள்ளி முதல்வர் லூர்துசாமி பாராட்டினார்.
புதுச்சேரி:
விப்ரோ எர்த்தியன் நிறுவனம் மற்றும் சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம் சார்பில் செயல்வழிக்கற்றல் நிகழ்ச்சியாக பல்லுயிர் மற்றும் நிலைத்தன்மை என்ற தலைப்பில் மக்களி டையே விழிப்புணர்வு ஏற் படுத்தக்கூடிய படைப்புகள் வெளியிடப்பட்டன. இதில் தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களிலிருந்து பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் புதுவை அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவிகள் திகழ்மதி, அருணாகுமாரி மற்றும் அஷ்விதா ஆகியோரும் மற்றும் 6-ம் வகுப்பு மாணவர்கள் சஞ்சய், பிரித்திகாராஜு, திவ்யஸ்ரீ, ஹரிணி ஆகியோரும் பல்லுயிர் மற்றும் நிலைத்தன்மை என்ற தலைப்பில் ஆய்வுகளை சமர்ப்பித்தனர்.
ஆய்வின் அடிப்படையில் சிறந்த படைப்புகளுக்காக புதுவை மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட 5 சிறந்த படைப்புகளில் ஒன்றாக அமலோற்பவம் பள்ளி ஆரம்பப்பிரிவு மற்றும் உயர்நிலை பிரிவும் தேர்வு செய்யப்பட்டு பாராட்டு சான்றிதழும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது.
சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பள்ளியின் நிறுவனர், தாளாளர் மற்றும் முதுநிலை முதல்வர் லூர்துசாமி பாராட்டி கவுரவித்தார்.
மார்ச் மாதத்திற்குள் முழுமையான பட்ஜெட்டை அரசு தாக்கல் செய்யவேண்டும் என பா.ம.க. வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநில பா.ம.க அமைப் பாளர் கணபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
ஒரு மாநிலத்தின் பொருளாதாரத்தின் அடையாளமாக விளங்குவது அம்மாநிலத்தின் பட்ஜெட் ஆகும்.
ஆனால் புதுவை மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக மார்ச் மாதங்களில் முழுமையான பட்ஜெட் சமர்பிக்க வில்லை. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க மட்டும் 4 மாதத்திற்கான அனுமதியைப் பெற்று எந்த புதிய திட்டங்களையும் செயல்படுத்த முடியாமல் போய்விடுகிறது.
அதனால் மக்களுக்குப் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. அவசர காலங்களிலும் தேர்தல் காலங்களில் மட்டுமே இதுபோன்ற அனுமதி பெறும் வழக்கம் உண்டு. ஆனால் புதுவையை பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இதுவே வழக்கமாகி விட்டது. அதனால் புதுவை மாநிலத்தின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு மற்ற மாநிலங்களை விட புதுவை மாநிலம் பின்தங்கியுள்ளது.
எனவே 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இந்த மாதம் இறுதிக்குள் சட்டசபையில் முழுமையாக தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும் மத்தியிலும் மாநிலத்திலும் இணக்கமான ஆட்சி வந்தால்தான் மாநிலம் வளர்ச்சிபெறும் என்று சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டு. மீண்டும் கடந்த காலங்களில் செய்யும் தவறை இந்த அரசு செய்யக்கூடாது.
வெளிப்படையாக தவறும் பட்சத்தில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் உள்ள இடர்பாடுக ளையும், தடை களையும் முதல்&அமைச்சர் பொதுமக்களிடம் வெளிப்படையாக தெரி விக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
திருபுவனை ஏரிக்கரையில் உள்ள பனை மரங்களையும், மதகடிப்பட்டு, திருவண்டார்கோவில் குளங்களையும், நீரோடைகளையும் பாதிக்காத வகையில் 4 வழிச்சாலையை அமைக்கவேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.
புதுச்சேரி:
புதுச்சேரி - விழுப்புரம் இடையே 4 வழிச்சாலை பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணியின்போது திருபுவனை ஏரிக்கரையில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பனைமரங்கள் வெட்டப்பட உள்ளன. அந்த மரங்களை வெட்டுவதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்களும் நடந்து வருகின்றன.
இந்தநிலையில் புதுச்சேரி விவசாயிகள் சங்க தலைவர் கீதநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன் ஆகியோர் தலைமையில் விவசாயிகள் மாவட்ட கலெக்டர் வல்லவனை சந்தித்து பேசினார்கள். அப்போது திருபுவனை ஏரிக்கரையில் உள்ள பனை மரங்களையும், மதகடிப்பட்டு, திருவண்டார்கோவில் குளங்களையும், நீரோடைகளையும் பாதிக்காத வகையில் 4 வழிச்சாலையை அமைக்கவேண்டும் என்று வலியுறுத்தினர். இதுதொடர்பாக மனுவும் அளித்தனர்.
இந்த விவகாரம் குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறையுடன் கலந்து பேசி மேற்கண்ட இயற்கை வளங்கள் பாதிக்காத வகையில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உறுதி கூறினார்.
அரசு பஸ்கள் ஒடாததால் காரைக்காலில் பணியாற்றும் புதுவை ஆசிரியைகள் இன்று காலை தனியார் பஸ்களில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் புதுவையை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை புதுவைக்கு வந்து குடும்பத்தினரோடு இருந்துவிட்டு மீண்டும் திங்கட்கிழமை அதிகாலையில் காரைக்காலுக்கு செல்வார்கள்.
இதற்கு வசதியாக புதுவை அரசின் சாலை போக்குவரத்துக்கழகத்தின் பஸ் அதிகாலை 4.30 மணிக்கு காரைக்காலுக்கு புறப்படும்.
இந்த பஸ்சில்தான் பெரும்பாலான அரசு ஊழியர்கள், ஆசிரியைகள் காரைக்காலுக்கு செல்வர்.
இந்த நிலையில் இன்று சாலை போக்குவரத்துக்கழக ஊழியர்கள் போனஸ் கேட்டு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் காரைக்கால் செல்லும் பஸ் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக வேறு வழியின்றி தனியார் பஸ்களில் ஆசிரியைகள் காரைக்காலுக்கு பயணம் செய்தனர்.
பஸ்சில் இருக்கை நிரம்பி இருந்ததால் பஸ்சின் தளத்திலும், படிக்கட்டிலும் அமர்ந்தபடி ஆசிரியைகள் பயணம் செய்தனர்.
புதுவை அரசின் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு தனது மகன் அசுகோஷை லாஸ்பேட்டை கோலக்கார அரங்கசாமிநாயக்கர் அரசு நடுநிலைப்பள்ளியில் இன்று சேர்த்தார்.
புதுச்சேரி:
கொரோனா பரவல் குறைந்ததையொட்டி பள்ளி, கல்லூரிகளை தொடர்ந்து அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்புகளும் இன்று தொடங்கியது.
அரசு பள்ளி மழலையர் வகுப்பில் ஆர்வத்தோடு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்த்தனர். புதுவை அரசின் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு தனது மகன் அசுகோஷை லாஸ்பேட்டை கோலக்கார அரங்கசாமிநாயக்கர் அரசு நடுநிலைப்பள்ளியில் இன்று சேர்த்தார்.
அவரே பள்ளிக்கு நேரில் வந்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பள்ளி முதல்வரிடம் அளித்து தனது மகனை மழலையர் வகுப்பில் சேர்த்தார். அரசு பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கின்றனர் என குற்றச்சாட்டு நிலவுகிறது.
அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியிலேயே சேர்க்க உத்தரவிட வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் முன்னுதாரணமாக தனது மகனை அரசு பள்ளியில் சேர்த்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து இயக்குனர் ருத்ரகவுடுவிடம் கேட்டபோது, அரசு பள்ளிகளில் அனைத்து வசதிகளும் உள்ளது. மழலையர் வகுப்பில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் அடிப்படை கல்வி சிறப்பாக இருக்கும் என தெரிவித்தார்.
புதுவையில் 2 ஆண்டுக்கு பிறகு மழலையர் வகுப்புகள் 14-ந் தேதி திறக்கப்பட்டது.
புதுச்சேரி:
கொரோனா தொற்று பரவலை தடுக்க புதுவை மாநிலத்தில் 2020-ல் இருந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது.
தொற்று குறையும்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு அதிகரிக்கும்போது மூடப்பட்டு வந்தன. 3-ம் அலை பரவல் குறைந்தவுடன் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஆனால் 2020 முதல் மழலையர் வகுப்புகள் திறக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்ததால் மழலையர் பள்ளிகளை திறக்க அரசு முடிவுசெய்து அறிவித்தது. இதன்படி (திங்கட்கிழமை) முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் திறக்கப்பட்டது.
காலையிலேயே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வ ந்தனர். 2 ஆண்டுக்கு பிறகு பள்ளி திறக்கப்பட்டாதால் பல குழந்தைகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். அவர்களின் உடல் வெப்ப நிலையை பரிசோதித்த ஆசிரியர்கள் கிருமிநாசினி வழங்கி வகுப்பறைக்கு அனுப்பினர்.
சில குழந்தைகள் பள்ளிக்கு வர மறுப்பு தெரிவித்து பெற்றோரை விட்டு அகலவில்லை. அவர்களுக்கு சாக்லெட், பென்சில் போன்ற பரிசு பொருட்களை கொடுத்து சமாதானம் செய்து ஆசிரியர்கள் வகுப்பறைக்கு அழைத்துச்சென்றனர்.






