என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதுவை சவரி ராயலு அரசு மழலையர் பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு ஆசிரியை பாடம் நடத்திய காட்சி.
2 ஆண்டுக்கு பிறகு மழலையர் வகுப்புகள் திறப்பு
புதுவையில் 2 ஆண்டுக்கு பிறகு மழலையர் வகுப்புகள் 14-ந் தேதி திறக்கப்பட்டது.
புதுச்சேரி:
கொரோனா தொற்று பரவலை தடுக்க புதுவை மாநிலத்தில் 2020-ல் இருந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது.
தொற்று குறையும்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு அதிகரிக்கும்போது மூடப்பட்டு வந்தன. 3-ம் அலை பரவல் குறைந்தவுடன் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஆனால் 2020 முதல் மழலையர் வகுப்புகள் திறக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்ததால் மழலையர் பள்ளிகளை திறக்க அரசு முடிவுசெய்து அறிவித்தது. இதன்படி (திங்கட்கிழமை) முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் திறக்கப்பட்டது.
காலையிலேயே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வ ந்தனர். 2 ஆண்டுக்கு பிறகு பள்ளி திறக்கப்பட்டாதால் பல குழந்தைகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். அவர்களின் உடல் வெப்ப நிலையை பரிசோதித்த ஆசிரியர்கள் கிருமிநாசினி வழங்கி வகுப்பறைக்கு அனுப்பினர்.
சில குழந்தைகள் பள்ளிக்கு வர மறுப்பு தெரிவித்து பெற்றோரை விட்டு அகலவில்லை. அவர்களுக்கு சாக்லெட், பென்சில் போன்ற பரிசு பொருட்களை கொடுத்து சமாதானம் செய்து ஆசிரியர்கள் வகுப்பறைக்கு அழைத்துச்சென்றனர்.
Next Story






