என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    புதுச்சேரியில் 5 பேருக்கு கொரோனா

    புதுவையில் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் 428 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 2, காரைக்காலில் 3 பேர் என 5 பேர் தொற்றுடன் சிகிச்சை பெற்று  வருகின்றனர். 

    புதுவையில் 3, மாகியில் ஒருவர் என 4 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். புதுவை மாநிலத்தில்  ஒட்டுமொத்தமாக  இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 764 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 785 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர்.  புதுவையில் 5, காரைக்காலில் 10, மாகியில் 2 பேர் என 17 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 17 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். மாநிலத்தில்  கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது. 
    புதுவையில் 2-வது  தவணை உட்பட 16 லட்சத்து 6 ஆயிரத்து 989 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    Next Story
    ×