என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அனைத்து வங்கிகளிலும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    பாகூர்:

    பாகூரில் உள்ள தேசிய வங்கி ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் டெபாசிட் செய்த 10 ரூபாய் நாணயங்களை காசாளர் வாங்க மறுத்துள்ளார். இதுகுறித்து முறையிட்ட போது வங்கி மேலாளரும் அதனை ஆமோதித்துள்ளார். மற்ற வங்கிகளிலும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்துள்ளனர்.

    மத்திய ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயம் செல்லும். தடையின்றி வாங்கிக் கொள்ளுமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ள நிலையில் சில வங்கிகள் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பது வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து வங்கிகளிலும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    காரைக்காலில் 3 கடைகளின் பூட்டை உடைத்து நள்ளிரவில் கைவரிசை காட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    காரைக்கால்:

    காரைக்கால் திருநள்ளாறு சாலை ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே, இஸ்மாயில் என்பவருக்கு சொந்தமான கடை மற்றும் அதே வரிசையில் அடுத்தடுத்து மளிகை மற்றும் கோழிக்கடை உள்ளது.

    நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்துக் கொண்டு அந்த கடைகளை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டனர். நேற்று காலை வழக்கம் போல் கடைகளை திறக்க வந்த போது, ஷட்டர்கள் உடைக்கப்பட்டு பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து கடைக்காரர்கள் 3 பேரும் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் காரைக்கால் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கடை முன்பு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

    அப்போது, நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து ஷட்டரை திறந்து உடலை வளைத்து உள்ளே சென்று திருடி விட்டு தப்பிச் செல்வது பதிவாகி இருந்தது. இதை வைத்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். இதில் கடை அருகே வசிக்கும் ரகுமான் (வயது21) என்பவர், கடை களின் பூட்டை உடைத்து ஷட்டரை திறந்து, கை வரிசை காட்டி இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து காரைக்கால் நகர பகுதியில் பதுங்கி இருந்த ரகுமானை, போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந் தேதி நாடு முழுவதும் தொடங்கப் பட்டது.
    புதுச்சேரி:

    புதுவையிலும் தடுப்பூசி போடும் பணி தொடங்கி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டது.

    முதலில்  முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. அதன் பிறகு பொது மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டினர். 

    இதற்காக சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்கப் பட்டு தடுப்பூசி போடும் பணி முழு அளவில் மேற்கொள் ளப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

    இந்த நிலையில் நாடு முழுவதும் 16-ந் தேதி முதல் 12 முதல் 14 வயது வரையிலான பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

    புதுவையில்  கதிர்காமம் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்க விழா நடந்தது. முதல்-அமைச்சர் ரங்கசாமி தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்தார். 
     
    கே.எஸ்.பி. ரமேஷ் எம்.எல்.ஏ.  முன்னிலை வகித்தார். சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, பள்ளி முதல்வர் சிவகாமி, துணை முதல்வர் கோகிலாம்பாள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் பங்கேற்றனர். 
    கார்பிவேக்ஸ் என்ற தடுப்பூசி 7, 8, 9-ம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு செலுத்தப்பட்டது. 

    புதுவை மாநிலத்துக்கு 54 ஆயிரம் டோஸ் கார்பி வேக்ஸ் தடுப்பூசிகள் வந்துள்ளன. அரசு, தனியார், அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு இந்த தடுப்பூசி போடப் படுகிறது. அந்தந்த பள்ளி வளாகத்திலேயே சுகாதாரத்துறை ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தினர். 

    இதுகுறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறும் போது, ஏற்கனவே 90 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இப்போது 12 முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி உள்ளது என்றார்.
    புதுவை நகர சாலைகளில் வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்க நகராட்சி தனியாருக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை நகராட்சி தனது வருவாயை பெருக்க பல்வேறு வரி வசூல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

    வீட்டுவரி, காலிமனை வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வணிக உரிமம் ஆகியவற்றுக்கான கட்டணத்தை வசூலிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. கூடுதலாக வருவாயை பெருக்க புதிதாக வரி விதிப்பிலும் ஈடுபட்டு வருகின்றன.

    புதுவை நகர சாலைகளில் வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்க நகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது. இருசக்கரம், 3 சக்கரம், கார், கனரக வாகனம் என வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலிக் கப்பட உள்ளது. 

    இதற்காக ஒவ்வொரு வீதிகளுக்கும் டெண்டர் ஆரம்ப தொகை நிர்ணயித்துள்ளது. இதற்காக செலுத்தப்பட வேண்டிய முன் வைப்பு தொகையையும் அறிவித்துள்ளது. 31.3.2023 வரை ஓராண்டுக்கு தனியாருக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. 

    இதற்கான மின்னணு ஏலம் வருகிற 25-ந் தேதி நடைபெற உள்ளது. புதுவை புதிய பஸ் நிலையத்துக்குள் வர நுழைவு கட்டணம், எந்திரம் மூலம் வாகன எடை பார்க்க கட்டணம் ஆகியவற்றை வசூலிக்கவும் டெண்டர் கோரப்பட்டுள்ளது. 

    இதுதவிர முத்தியால் பேட்டை, முதலியார் பேட்டை, நெல்லித்தோப்பு, சாரம், சின்னமணிக்கூண்டு மார்க்கெட் ஆகிய பகுதிகளில் உள்ள மார்க்கெட் உள் கடைகள், வெளிப்புற கடைகளில் அடிக்காசு வசூலிக்கவும் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

    நகர பகுதிகளில்  வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கப்படும் சாலைகளின் விபரம் வருமாறு:& 

    1.பிராவிடன்ஸ் மால் எதிரில் உள்ள சிங்கார வேலர் திடல்,  2. புதிய பஸ் நிலையத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள், 3. பழைய சிறை வளாக பகுதி, 4.நேரு வீதியில் ராஜா தியேட்டர் முதல் போக்குவரத்து போலீஸ் நிலையம் வரை, 
    5. அண்ணா சிலை சதுக்கம் முதல் ராஜா தியேட்டர் சிக்னல் வரை, ராஜா தியேட்டர் சிக்னல் முதல் அதிதி ஹோட்டல் சிக்னல் வரை
     6. அரவிந்தர் ஆசிரமத்தை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் மணக்குள விநாயகர் கோவிலை சுற்றியுள்ள பகுதிகள்,  
    7.பாரதி பூங்கா மற்றும் அரசு பொது மருத்துவமனை சுற்றியுள்ள பகுதிகள்,  8.துய்மா வீதி மற்றும் ரோமன் ரோலண்ட் விதிகள்,  
    9. செயின்ட் லூயி வீதிக்கு கிழக்கில் உள்ள பகுதிகள்,  10.பழைய துறைமுக சாலை டூப்ளே சிலை முதல் பழைய துறைமுக நுழைவு வாயில் வரை, 
    11. தெற்கு புல்வார்ட் சந்திப்பில் உள்ள டூப்லக்ஸ் சிலை முதல் சோளம் பாளையம் சந்திப்பு வரை உள்ள பகுதிகள், 12. எஸ்.வி பட்டேல் சாலை அதிதி ஓட்டல் முதல் பழைய சாராய ஆலை வரை உள்ள பகுதிகள், 
    13. தெற்கு மாட வீதியில் அண்ணா சிலை முதல் சோளம் பாளையம் சந்திப்பு வரை உள்ள பகுதிகள்.
    14. காசிம் வீதி என்.எஸ்.சி. போஸ் சாலை மற்றும் பெரிய வாய்க்கால் மீது அமைந்துள்ள பகுதிகள், 15.மறைமலை அடிகள் சாலையில் தாவரவியல் பூங்காவில் வடக்கு மற்றும் நியூட்டன் தியேட்டர் அருகில் உள்ள பகுதிகள், 16. இந்திரா காந்தி சிலையில் வாசன் கண் மருத்துவமனை வரையிலுள்ள பகுதிகள்,
    17. உள்ளாட்சித்துறை எதிரில் அமைந்துள்ள காலி இடத்தில் உள்ள பகுதி, 18. நூறடி சாலை பாலம் முதல் ஆர்.டி.ஓ. ஆலுவலகம் வரை அமைந்துள்ள காலி இடத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள், 19.மெரினா பீச் பகுதியில் அமைந்துள்ள பகுதிகள் ஆகும்.

    ஏற்கனவே கடந்த சில ஆண்டுக்கு முன்பு வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்க நகராட்சி முடிவு செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் திட்டம் கைவிடப்பட்டது. 

    வீடுகளுக்கு குப்பை வரி விதிக்கப்பட்டு வசூலிக்கப் பட்டு வந்தது. புதிய அரசு அமைந்தவுடன் குப்பை வரி ரத்து செய்யப்பட்டது. 

    இந்த நிலையில் நகராட்சி சாலைக்கு, சாலை கட்டணம் வசூலிக்க முடிவெடுத் திருப்பது நகர பகுதியில் வாகனங்கள் பயன் படுத்து வோருக்கு கடும் நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளது.
    புதுவையில் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் 458 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    புதிதாக 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவை, காரைக்காலில் தலா ஒருவர் தொற்றுடன் சிகிச்சை பெற்று  வருகின்றனர். காரைக்காலில் 3, மாகியில் ஒருவர் என 4 பேர் சிகிச்சை யில் குணமடைந்தனர். 

    புதுவை மாநிலத்தில்  ஒட்டு மொத்தமாக  இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 766 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 789 பேர் சிகிச்சையில் குண மடைந்துள்ளனர்.  

    புதுவையில் 6, காரைக் காலில் 8, மாகியில் ஒருவர் என 15 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். மாநிலத்தில்  கொரோனாவுக்கு பலியா னோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது. புதுவையில் 2-வது  தவணை உட்பட 16 லட்சத்து 7 ஆயிரத்து 916 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 

    இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    சுற்றுலா பயணிகளுக்காக கடலில் சொகுசு படகு சவாரி தொடங்கியது.
    புதுச்சேரி:

    புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

    வார இறுதியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வருகின்றனர். புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடலில் படகு சவாரி செய்தபடி கடற்கரை அழகை ரசிக்க சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்தது. இதற்காக தனியார் பங்களிப்போடு சொகுசு படகு சேவை இன்று தொடங்கப்பட்டது. 

    பாதுகாப்பு உபகரணங்க ளோடு 40 பயணிகள் இந்த பயணத்தை மேற் கொண்டனர். இந்த படகில் பயணிக்க ஒரு நபருக்கு ரூ.500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த படகு புதுவை கடற்கரை, பாண்டி மெரினா, பாரடைஸ், நீலம், ரூபி உட்பட பல கடற்கரைகள் வழியாக பயணித்து நல்லவாடு வரை சென்று திரும்பும். 

    3 மணி நேரம் படகில் பயணித்து சுற்றுலா பயணிகள் கடற்கரை அழகை காணலாம். காலை, மாலை என 2 முறை இந்த படகு இயக்கப்படுகிறது. இதற்கு முன்பதிவு அவசியம். வார இறுதியில் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளை இந்த படகு சவாரி வெகுவாக கவரும்.
    முறையான அனுமதியின்றி இயங்கிய தனியார் தண்ணீர் கம்பெனி பூட்டை உடைத்து அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை அருகே பூத்துறை பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட தனியார் தண்ணீர் கம்பெனிகள் உள்ளது. இங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டிலில் அடைத்து விற்பனைக்காக புதுவை, விழுப்புரம், கடலூர் போன்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 

    ஒரு சில தண்ணீர் கம்பெனிகள் பூமியில் இருந்து தண்ணீர் எடுத்து டேங்கர் லாரி மூலம் தனியார் கம்பெனிகளுக்கு சப்ளை செய்து வருகிறது. 

    இந்த நிலையில் பூத்துறை கிராமத்தைச் சுற்றியுள்ள தனியார் தண்ணீர் கம்பெனிகளால் அதிகப்படியான நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு பொது மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. 

    இதுகுறித்து பூத்துறை ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமாரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்ததை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார் தலைமையில் பூத்துறை கிராம பொதுமக்கள் தனியார் தண்ணீர் கம்பெனிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

    கட்டுப்பாடின்றியும்,  அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் தண்ணீரை உறிஞ்சும் தனியார் தண்ணீர் கம்பெனிகளை நிரந்தரமாக மூட வேண்டி மாவட்ட கலெக்டர், வானூர்  தாசில்தார், வட்டார வளர்ச்சி அதிகாரி, ஒன்றிய தலைவர் ஆகியோர்களுக்கு பூத்துறை கிராம மக்கள் மனுவும் அளித்தனர். 

    இந்த நிலையில் வரு வாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தண்ணீர் கம்பெனிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் அதற்கு அவர்கள் உரிய விளக்கம் அளிக்கவில்லை.  மேலும் உரிய அனுமதி இன்றி 6 கம்பெனிகள் இயங்கி வருவதை அறிந்த மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவின் பேரில், வானூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சிவக்குமார், நரசிம்மன், தாசில்தார் உமாமகேஸ்வரன், ஆரோவில்  போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் பூத்துறை பஞ்சாயத்துக்குட்பட்ட மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை அருகே உள்ள தண்ணீர் கம்பெனியையும், பூத்துறை பங்களாமேடு பகுதியில் இயங்கி வந்த 2 தண்ணீர் கம்பெனியையும், குரும்பாப்பேட் பின்புறம் அமைந்துள்ள 3 தண்ணீர் கம்பெனி என மொத்தம் ஆறு கம்பெனிக்கு சீல் வைத்தனர். அதிகாரிகள் வருவதை அறிந்த தண்ணீர் கம்பெனிகள் கம்பெனியை பூட்டிவிட்டு சென்று விட்டனர். 

    ஆனால் அதிகாரிகள் மதிலேறிக் குதித்து உள்பக்கம் மற்றும் வெளிப்பக்கம் உள்ள பூட்டை உடைத்து தண்ணீர் கம்பெனிகளுக்கு சீல் வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    காரைக்கால் அருகே திருமணம் செய்துகொள்வதாக கூறி சிறுமியை கடத்தில் பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    காரைக்கால்:

    காரைக்கால் அருகே திருநள்ளாறை அடுத்த அம்பகரத்தூர் பகுதியில், ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த 7-ந் தேதி வழக்கம் போல், காலையில் பள்ளிக்கு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை.

    சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் சிறுமி குறித்த விபரம் தெரியவில்லை, பள்ளி அருகே விசாரித்ததில், சிறுமி யாரோ ஒரு நபருடன் சென்ற விபரம் அறிந்து, உடனே இதுகுறித்து திருநள்ளாறு போலீஸ் நிலையத்தில், சிறுமியை காணவில்லை. சிறுமியை யாரோ கடத்தி இருக்கலாம் என்று சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர்.

    அந்த புகாரின் பேரில், திருநள்ளாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின்பாரதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து சிறுமியை பல்வேறு மாவட்டங்களில் தேடிவந்தனர்.

    பின்னர், சிறுமியின் செல்போன் எண்ணை வைத்து துப்புதுலக்கிய போது அவர் சென்னையில் இருப்பது கண்டறியப்பட்டது. உடனே அம்பகரத்தூர் புறக்காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார், கடந்த கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை சென்று சிறுமியை மீட்டு காரைக்கால் கொண்டு வந்தனர்.

    விசாரணையில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அருகே செட்டிமண்டபம் முத்தையா நகரை சேர்ந்த முபாரக் என்பவரது மகன் முஷாரப் (வயது 22) (கையில் பச்சை (டாட்டூ) குத்தும் தொழில் செய்துவருபவர்) என்பவர் சிறுமியிடம் வலைதளம் மூலம் ஏற்பட்ட நட்புமூலம் அம்பகரத்தூர் வந்து நேரடி தொடர்பை ஏற்படுத்திகொண்டார்.

    பின்னர், சிறுமியை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசைவார்த்தைகள் கூறி சென்னைக்கு கடத்தி சென்று பலமுறை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, சிறுமியின் வாக்குமூலத்தின் பேரில், முஷாரப் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    வில்லியனூர் அருகே அம்மன் கோவிலில் நகை திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேதராப்பட்டு:

    வில்லியனூர் பெரம்பை சாலையில் அரசூர் கிராமத்தில் புத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    இதுபோல் கோவிலில் பூஜைகள் முடிந்த பின்னர் நிர்வாகிகள் கோவில் கதவை பூட்டி விட்டு செல்வது வழக்கம். நேற்று நள்ளிரவு கோவிலின் கதவுகள் திறக்கப்பட்டு இருந்தது.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கோவில் அறங்காவல் நிர்வாகி முருகனுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் வந்து பார்த்த போது கோவில் பின் பக்கத்தில் உள்ள இரும்பு கதவை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்து அம்மன் கழுத்தில் இருந்த 4 கிராம் தாலி நெற்றியில் இருந்த 4 கிராம் போட்டு ஆகியவற்றை திருடி சென்றிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக வில்லியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அம்மன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    வருகிற நிதி ஆண்டில் புதுவைக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்று மத்திய மந்திரியிடம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
    புதுச்சேரி:

    டெல்லி சென்றுள்ள புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பாராளுமன்ற வளாகத்தில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், அணுசக்தி துறை மற்றும் பிரதமர் அலுவலக விவகாரங்கள் துறை மந்திரி ஜிதேந்திர சிங், மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை இணை மந்திரி முருகன் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

    பின்னர், கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை மந்திரி கிஷண்ரெட்டியை சந்தித்து, புதுவை மாநிலத்தில் உள்ள நல்லவாடு, நரம்பை காலாப்பட்டு ஆகிய கடலோர பகுதிகளை சுதேசிதர்ஷன் (கடற்கரை வட்டம்) திட்டத்தின் கீழ் சுற்றுலாத்தலமாக மேம்படுத்துவதற்கு பொதிய நிதியினை ஒதுக்கி, அப்பகுதிகளில் சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நல்லவாடு, நரம்பை, காலாப்பட்டு ஆகிய கடற்கரை பகுதிகளை இத்திட்டத்தின் கீழ் தற்போது மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள முடியாவிட்டாலும், தங்கள் சுற்றுலா துறையின் கீழ் ஏதாவது ஒரு திட்டத்தில் இப்பகுதிகளை மேம்படுத்தப்பட்ட சுற்றுலாத்தலமக மாற்றுவதற்கு, இந்த ஆண்டே நிதி ஒதுக்கி பணிகளை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை கடிதம் அளித்தார். 

    இதை தொடர்ந்து, நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்தார். அப்போது, புதுவை மாநிலத்தில் நிலவுகின்ற நிதிநிலை குறித்து பேசிய அவர், வருகிற நிதியாண்டில் கூடுதலாக நிதி வழங்க சபாநாயகர் கோரிக்கை விடுத்தார்.

    இந்த சந்திப்பின் போது செல்வகணபதி எம்.பி. அங்காளன் எம்.எல்.ஏ. பா.ஜனதா புதுவை மாநில பொருளாதார பிரிவு பொறுப்பாளர் ரமேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் டி.எம்.வருண் ஆகியோர் உடனிருந்தனர்.
    முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இறுதிக்கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள தகுதியுள்ளவர்கள் பதிவு செய்ய வேண்டும் என சென்டாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.டி., எம்.எஸ் போன்ற முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு இடங்கள் சென்டாக் மூலம் நிரப்பப் பட்டு வருகிறது. ஏற்கனவே 2-ம் கட்ட கலந்தாய்வு மாணவர் சேர்க்கைக்கான பட்டியல் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில் இடம் பெற்ற மாணவர்கள் கடந்த 12-ந் தேதிக்குள் கல்லூரியில் சென்று சேர்ந்தனர். இதற்கிடையே மத்திய மருத்துவ கவுன்சில் மாணவர் சேர்க்கைக்கான தகுதி மதிப்பெண்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி நீட் நுழைவுத்தேர்வில் பொதுப்பிரிவினர் 35 சதவீதம் (247 மதிப்பெண்கள்) பெற்றால் விண்ணப்பிக்கலாம். இதேபோல் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர் 25 சதவீதம் (210 மதிப்பெண்கள்) பெற்றால் விண்ணப்பிக்கலாம். முன்பதிவு செய்யப்படாத மாற்றுத்திறனாளிகள் 30 சதவீதம் (229 மதிப்பெண்கள்) பெற்றால் போதும் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் சென்டாக் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான இறுதி கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதற்காக மாணவர்களிடம் இருந்து விருப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவர்கள் வருகிற 18-ந் தேதி வரை சென்டாக் இணைய தளத்தில் (www.centacpuducherry.in) சென்று பதிவு செய்து கொள்ளலாம். அதன் பின்னர் சென்டாக் இணையதளத்தில் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்படும்.

    மேற்கண்ட தகவலை சென்டாக் கன்வீனர் ருத்ரகவுடு தெரிவித்துள்ளார்.



    கடற்கரை சாலையில் கடல் அழகை ரசிக்கும் வகையில் அரசின் புதிய சொகுசு ஓட்டலை ரங்கசாமி பார்வையிட்டார்
    புதுச்சேரி:

    புதுவை கடற்கரை சாலையின் இறுதியில் அரசின் சாராய வடி ஆலை இயங்கி வந்தது.

    இந்த ஆலை வில்லியனூருக்கு  இடமாற்றம் செய்யப்பட்டதால் கால் நூற்றாண்டாக இயங்காமல் வந்தது. இந்த இடம் பயன் படுத்தப்படாமல் பாழடைந்து சுவர்கள் இடிந்து விழுந்தது. இதையடுத்து அரசு சார்பில் சுற்றுலா மேம்பாட்டில் அப் பகுதியை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. 

    கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அந்த இடத்தில் நட்சத்திர அந்தஸ்துடன் கடல் அழகை ரசிக்கும் வகை யில் ஓட்டல் கட்ட முடிவு செய்யப்பட்டது. 

    இதற்கான பணிகள் ரூ.13 கோடி செலவில் தொடங்கி நடந்து வந்தது. இப்போது பணிகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. 3 ஏக்கர் பரப் பளவு கொண்ட இடத்தில் 3 ஆயிரம் சதுரமீட்டரில் கீழ்தளம், 2 ஆயிரத்து 500 சதுரமீட்டரிலும், அதற்கு மேல் சிறிய பகுதி என 6 ஆயிரம் சதுரமீட்டரில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 

    கீழ்தளத்தில் விழாக்கள் நடத்தும் வகையில் பெரிய அரங்கம் அமைக்கப் பட்டுள்ளது.
    மேல் தளத்தில் 14 அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து அறைகளும் கடல் அழகை பார்க்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது. தரைதளத்தில் திறந்தவெளி திரையரங்கு அமைக்கப் பட்டுள்ளது. மேல் தளத்தில் அறையில் தங்குபவர்கள் கடல் அழகை அருகே சென்று பார்க்கும் வகையிலும் கட்டு மானப்பணி நடந்துள்ளது. 

    தற்போது கட்டடத்துக்கு வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் பார்வையிட்டனர். 

    பொதுப் பணித்துறை நிர்வாக பொறியாளர் ஏழுமலை கட்டிட அமைப்பு குறித்து விளக்கினார். முதல்-அமைச்சர், அமைச்சர் அனைத்து பகுதிக்கும் சென்று பார்வையிட்டனர்.  பின்னர் முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த கட்டடப்பணி 2 மாதத்தில் முழுமையடையும். அரசே கட்டிடத்தை பரா மரிக்கலாமா? தனியாரிடம் வழங்கலாமா? என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் அழகிய கட்டிடமாக வடிவமைக்கப் பட்டுள்ளது. இதை மேலும் அழகுபடுத்தும் பணி நடக்க உள்ளது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும். இவ்வாறு அவர் கூறினார்.
    அவரிடம் உக்ரைனில் இருந்த புதுவை மாணவர்கள் அனைவரும் திரும்பிவிட்டார்களா? என கேட்டபோது, அனைத்து மாணவர்களும் திரும்பிவிட்டனர் என்றார்.
    ×