என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    எம்.ஐ.டி. கல்லூரியில் தேசிய அளவிலான வினாடி-வினா போட்டி நடைபெற்றது.
    புதுச்சேரி:
     
    புதுவை கலித்தீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் புதுச்சேரி மனிதவள வட்டாரம் இணைந்து நடத்திய தேசிய அளவிலான வினாடி-வினா நிகழ்ச்சி எம்.ஐ.டி. கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    2 நிலைகளாக போட்டி நடந்தது. இதில் மணக்குள விநாயகர் கல்விகுழுமத்திலிருந்து எம்.ஐ.டி.கல்லூரி, மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி, மைலம் பொறியியல் கல்லூரிகளுடன் மதுரை தியாகராஜர் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட், சேலம் சோனா கல்லூரி, புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஐ.எப்.இ.டி. பொறியியல் கல்லூரி, ராஜீவ்காந்தி பொறியியல், கல்லூரி, கிறிஸ்ட் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி ஆகியவற்றில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். 

    வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. மணக்குள விநாயகர் கல்வி நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாரன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினார்.

    எம்.ஐ.டி. கல்லூரி வேலைவாய்ப்பு அதிகாரி ஜெயகுமார் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் மலர்கண் சிறப்புரையாற்றினார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு புதுவை ஐ.ஜி.சந்திரன் பரிசு வழங்கினார்.

    விழாவில் மனிதவள வட்டார முன்னாள் தலைவர் டட்லி டக்லஸ், தற்போதைய தலைவர் கண்ணன், துணை தலைவர் ஹரிஹர பாண்டியன், செயலாளர் வரதராசு, பொருளாளர் ரோஜி, இணைசெயலாளர் புவனேஸ்வரி, இணை பொருளாளர் பாலமுரளி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் லோகேஸ்வரி, போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கல்லூரி மேலாண்மைதுறை தலைவர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்புதுறை ஒருங்கினைப்பாளர்கள், மேலாண்மைதுறை பேராசிரியர்கள், புதுச்சேரி மனிதவள வட்டார உறுபினர்கள் செய்திருந்தனர்.
    புதுவை மாநில வன்னியர் சங்க புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    புதுச்சேரி:

    பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆகியோர் ஒப்புதலுடன் புதுவை மாநில வன்னியர் சங்க புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மாநில வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி நியமித்துள்ளார். 

    அதன்படி புதுவை மாநில வன்னியர் சங்க தலைவராக கவுண்டர்பாளையம் துரை என்கிற ஜெயக்குமார் செயலாளர்களாக மணவெளி முருகன், சிவராந்தகம் நாவப்பன், பொருளாளராக லாஸ்பேட்டை நரசிம்மன், துணை தலைவர்களாக மேட்டுப்பாளையம் பாண்டு ரங்கன், பூரணசிங்க பாளையம் தங்கமணி, சுள்ளியாங்குப்பம் சிவசங்கரன், துணை செயலாளர்களாக கலிதீர்த்தாள்குப்பம் ராஜசேகர், செய்யாள், மாநில வன்னியர் சங்க இளைஞர் அணி செயலாளராக நல்லவாடு ஜெயக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். 

    இத்தகவலை மாநில பா.ம.க. அமைப்பாளர் கணபதி தெரிவித்துள்ளார்.
    தவறு செய்ததாக கூறி பள்ளி மாணவன் மீது தாக்குதல் கராத்தே மாஸ்டர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை தேங்காய்த்திட்டு தமிழ்கண்ணன், தா.ராம கிருஷ்ணன் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தேங்காய்த் திட்டு அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த 14 வயது மாணவன் 9-ம் வகுப்பு படித்து  வருகிறான்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளி சென்ற மாணவன் தவறு செய்ததாக கூறி அதே பள்ளியில் பணிபுரியும் கராத்தே மாஸ்டரான செல்வமணி கம்பால் மாணவனை சரமாரியாக தாக்கியுள்ளார்.

    இதில் காயமடைந்த பள்ளி மாணவன் இதுகுறித்து தனது தாய் வேளாங்கண்ணியிடம் முறையிட்டான். 
    இதுகுறித்து வேளாங்கண்ணி குழந்தைகள் நல வாரியத் திடமும், முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நகர பகுதியில் மீன்களை இறக்க அரசு 2 ஆண்டுகளுக்கு முன் தடை விதித்தது. இருப்பினும் மீனவர்கள் நேருவீதியில் அதிகாலையில் வாகனங்களை நிறுத்தி மீன்களை இறக்கிச் செல்வது தொடர்கதையாகி வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை நகர பகுதியில் நேருவீதி, காந்தி வீதி சந்திப்பில் குபேர் மீன் அங்காடி பாரம்பரியமாக பிரெஞ்சு காலத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது.

    நகரப்பகுதியில் போக்கு வரத்து நெரிசலை தவிர்க்க புதுவை அரசு நவீன மீன் அங்காடியை கிழக்கு கடற்கரையில் கட்டியுள்ளது. 5 ஆண்டுகளாகியும் மீனவர்கள் யாரும் அங்கு செல்லவில்லை.

    இதனால் நகர பகுதியில் மீன்களை இறக்க அரசு 2 ஆண்டுகளுக்கு முன் தடை விதித்தது. இருப்பினும் மீனவர்கள் நேருவீதியில் அதிகாலையில் வாகனங்களை நிறுத்தி மீன்களை இறக்கிச் செல்வது தொடர்கதையாகி வருகிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை மீன்களை இறக்க வந்த வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் மீனவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மீன்களை இறக்க அனுமதிக்க வலியுறுத்தி டிரைவர்கள், மீன் விற்கும் பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் நேருவீதி, காந்திவீதி சந்திப்பில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    காலை நேரத்தில் பெரிய மார்க்கெட்டுக்கு பொருட்களை வாங்க வந்த வியாபாரிகள், பொதுமக்கள் வாகனங்களால் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

    போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அரசின் உத்தரவையே செயல்படுத்துவதாக தெரிவித்தனர்.தொடர்ந்து இன்று மீன்களை இறக்க அனுமதிப்பதாகவும் அரசுடன் பேசி முடிவு காணுமாறும் போலீசார் அறிவுறுத்தினர். இதையடுத்து போராட்டத்தை மீன் விற்கும் பெண்கள் கைவிட்டனர்.

    நகர பகுதியில் மீன்களை விற்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி முதல்- அமைச்சரை சட்டசபையில் சந்திப்பது என முடிவு செய்துள்ளனர். இதனால் இன்று அதிகாலை சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

    சேதராப்பட்டு அருகே கொலை செய்யும் நோக்கத்தில் நாட்டு வெடி குண்டுகளுடன் மோட்டார் சைக்கிளில் உலா வந்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

    சேதராப்பட்டு:

    புதுவையில் சமீப காலமாக வெடிகுண்டு கலாச்சாரம் தலைதூக்கி உள்ளது. எதிரிகளை வெடிகுண்டுகள் வீசி கொலை செய்த சம்பவம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. வெடி குண்டு கலாச்சாரத்தை ஒழிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இந்த நிலையில் சேதராப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் துத்திப்பட்டு வழுதாவூர் சாலையில் பத்மாவதி நகர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வாலிபரை மறித்து விசாரணை மேற் கொண்டனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

    இதனால் சந்தேகம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் அவரது உடைமைகளை சோதனை செய்தார்.

    மேலும் அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் கவரில் உருண்டையாக மர்ம பொருள் இருந்தது. இது குறித்து கேட்டபோது, கிரிக்கெட் விளையாட பந்து எடுத்துச் செல்வதாக அந்த வாலிபர் போலீசாரிடம் கூறினார்.

    இதனால் சந்தேகமடைந்த போலீசார் டேங்க் கவரில் இருந்த பொருளை சோதனை செய்தனர். அப்போது அதில் 2 நாட்டு வெடிகுண்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். போலீசிடம் வசமாக சிக்கியதை உணர்ந்த வாலிபர் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் பெரிய காலாப்பட்டு சுனாமி குடியிருப்பை சேர்ந்த பெரியசாமி மகன் சுமன் என்ற பிரதீப் (வயது 29) என்பது தெரிய வந்தது.

    இவர் மீது 5 கொலை வழக்கு 5-க்கும் மேற்பட்ட கொலை முயற்சி வழக்குகள், ஆள் கடத்தல், திருட்டு, கூட்டு கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 30 வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

    பின்னர் சுமனை கைது செய்து அவரிடமிருந்த 2 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சுமனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோதனையின் போது நாட்டு வெடிகுண்டை பறிமுதல் செய்து அதன் மூலம் கொலை சதி திட்டத்தை முறியடித்த சேதராப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேசை, இன்ஸ்பெக்டர் பாலமுருகன், போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.

    நாட்டு வெடிகுண்டுகளுடன் மோட்டார் சைக்கிளில் உலாவந்த பிரபல ரவுடி போலீசில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் உள்ள புதுவை யூனியன் பிரதேசத்திலும் அமலானது. பின்னர் ஜூலையில் மீண்டும் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.

    புதுச்சேரி:

    மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம்.

    அதிகரித்து வரும் பண வீக்கத்துக்கு ஏற்ப மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது.

    நாடு முழுவதும் கொரோனா பரவலை தொடர்ந்து 2020-ல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்த அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்தது.

    ஓராண்டுக்கு பிறகு 2021 ஜனவரியில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட்டது. 11 சதவீத அகவிலைப்படி உயர்வானது.

    மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் உள்ள புதுவை யூனியன் பிரதேசத்திலும் அமலானது. பின்னர் ஜூலையில் மீண்டும் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.

    இதனால் 28 சதவீத அகவிலைப்படியானது 31 சதவீதமாக உயர்த்தப்பட்டு கடந்த அக்டோபரில் அமலுக்கு வந்தது.

    இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 1.1.2022 முதல் 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

    இதனால் அகவிலைப்படி 31-ல் இருந்து 34 சதவீதமானது. இது புதுவையிலும் ஜனவரி 1-ந் தேதியை அடிப்படையாக கொண்டு அமலுக்கு வந்துள்ளது. இதை நிதித்துறை சார்பு செயலர் கோவிந்தராஜன் அனைத்து துறை செயலர்கள், பிராந்திய தலைமைக்கும், துறைகளின் தலைவர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளார்.

    இதையும் படியுங்கள்... சோனியா காந்தியுடன் மகாராஷ்டிரா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சந்திப்பு

    அரியூர் அரசு ஆஸ்பத்திரியில் சுகாதார மேளா அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்
    புதுச்சேரி:

    புதுவை அரசு சுகாதாரத்துறை சார்பில் அரியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார அளவிலான சுகாதார மேளா நடந்தது.

    கர்ப்பிணி பெண்கள், தாய்மார்களுக்கு சிறப்பு சிகிச்சை, பிறந்த குழந்தைகள் முதல் அனைத்து குழந்தைகளுக்கும்  உடல் நல பரிசோதனை, வளர் இளம் பருவத்தினருக்கான சிறப்பு ஆலோசனைகள், 30 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய், பல், கண் மருத்துவம், குடும்பக்கட்டுப் பாட்டு சிகிச்சைகள். ஆயுர்வேத மருத்துவம், பிரதமர் மருத்துவ காப்பீடு திட்ட பதிவு செய்தல், யோகா பயிற்சிகள் நடந்தன.

     முகாமை வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். கலெக்டர் வல்லவன், சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, துணை இயக்குனர் ஆனந்தலட்சுமி, குடும்ப நலம் துணை இயக்குனர் ரகுநாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

     அரியூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி பிரேமா மற்றும் ஊழியர்கள் முகாம் ஏற்பாடுகளை செய் திருந்தனர்.
    சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தமிழ் புத்தாண்டையொட்டி வருகிற 13-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை கடற்கரை திருவிழாவாக நடத்த திட்டமிட்டுள்ளதாக புதுவை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவை பொதுப் பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாட்டில் சிறந்த சுற்றுலா தலமாக புதுவையை மாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கர்நாடகா, ஆந்திரா, தமிழக பகுதிகளில் இருந்து வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் புதுவையில் குவிந்து வருகின்றனர்.

    வார வேலை நாட்களிலும் சுற்றுலா பயணிகளை வரவழைக்க பல்வேறு திட்டங்கள், முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கடந்த காலங்களில் சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டது. வம்பாகீரப்பாளையம் பாண்டி மெரினா கடற்கரை, புதுக்குப்பம் மணற்குன்று கடற்கரை, வீராம்பட்டினம் ரூபி கடற்கரை, சின்னவீராம் பட்டினம் ஈடன் கடற்கரை என கடற்கரைகள் மேம்படுத்தப்பட்டு சுற்றுலா பயணிகள் புதுவையில் செலவிடும் நாட்களை அதிகப்படுத்தி உள்ளோம்.

    கொரோனாவால் சுற்றுலா வருவாய் குறைந்தாலும், தீவிர முயற்சியால் அதை மீட்டெடுத்துள்ளோம். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தமிழ் புத்தாண்டையொட்டி வருகிற 13-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை கடற்கரை திருவிழா நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    இதன்மூலம் வழக்கமாக காந்தி திடலுக்கு வரும் சுற்றுலா பயணிகளை புதுவையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள கடற்கரைக்கும் வரவழைக்க முடியும். வருகிற 13-ந்தேதி மாலை 6.30 மணிக்கு கடற்கரை சாலை லேகபேவில் படகு பாடல், இசையுடன் தொடக்க நிகழ்ச்சி நடக்கிறது.

    இதில் கவர்னர், முதல்-அமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்று விழாவை தொடங்கி வைக்கின்றனர். அன்றைய தினம் காந்தி திடல் கைவினை பொருள் கண்காட்சியில் கடல் உணவுத்திருவிழா தொடங்குகிறது. விழா நடைபெறும் 16-ந்தேதி வரை காலை 10.30 முதல் இரவு 9.30 மணி வரை கடல் உணவு திருவிழா நடைபெறும்.

    13-ந்தேதி லேகபேவில் நாட்டுப்புற இசை, நடன நிகழ்ச்சியும், பாண்டி மெரினாவில் கர்நாடக இசை, தப்பாட்டம், சிலம்பம் ஆகியவையும் நடைபெறும்.

    14-ந்தேதி காலாப்பட்டு முதல் புதுவைக்கு அதிகாலை 6 மணிக்கு சைக்கிள் மராத்தான் நடைபெறும். பாரடைஸ் கடற்கரையில் காலை 9 முதல் மாலை 6 மணி வரை மணல்சிற்ப கண்காட்சியும், மாலையில் நடனம், இசை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

    புதுக்குப்பம் மணற்குன்று கடற்கரையில் காலை 10.30 முதல் மதியம் 1.30 மணி வரை புதுவை கலைஞர்களின் திறனை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி, பாண்டி மெரினாவில் காலை 10 மணி முதல் பட்டம் விடுதல், மதியம் 4 மணிக்கு கடற்கரை வாலிபால் போட்டிகள் நடக்கிறது. மேலும் லேகபேவில் மாலை 5.30 முதல் கடல் பொருட்கள் ஆபரண கண்காட்சி, மூங்கில் இசை விழாவும், பாண்டி மெரினாவில் சினிமா இசை நிகழ்ச்சியும், பாரடைஸ் பேச்சில் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது.

    15-ந்தேதி பாண்டி மெரினாவில் பட்டம் பறக்க விடுதல், பொம்மலாட்டம், புதுக்குப்பம் கடற்கரையில் மலிவுவிலை பொருட்கள் அங்காடி, உறியடி நிகழ்ச்சி, பாண்டி மெரினாவில் வாலிபால் போட்டிகள், வயலின் இசை நிகழ்ச்சி, ஜிம்னாஸ்டிக், லேகபேவில் இசை, நடன நிகழ்ச்சி, சீகல்சில் பே‌ஷன்ஷோ நடக்கிறது.

    16-ந்தேதி காந்தி திடலில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு சூரிய உதய மீன் சுற்றுலா நிகழ்ச்சியும், லேகபேவில் மாலை 5.30 முதல் 9 மணிவரை இந்தோ ஆப்ரிக்கன் இசை நிகழ்ச்சியும், பாண்டி மெரினாவில் ஜூகல்பந்தி, துடுப்பாட்டம், மால்கம்பம் நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்றை தினம் இரவு 7 மணிக்கு நிறைவு விழா, பரிசளிப்பு விழா நடக்கிறது.

    நாள்தோறும் கடற்கரைக்கும், மனிதருக்கும் உள்ள உறவை மையப்படுத்தி கருத்தரங்கும் நடக்கிறது. ஆண்டுதோறும் கடல் திருவிழா நடத்த திட்டமிட்டுள்ளோம். அடுத்த ஆண்டு முதல் யுகாதி பண்டிகை, விசு விழாவையும் கலை நிகழ்ச்சிகளோடு நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து புதுவை சட்டமன்றத்தை தி.மு.க. முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என சிவா எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    5 மாநில தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து தினமும் பெட்ரோல் டீசல் விலையும், சமையல் கியாஸ் விலையும் உயர்த்தப் பட்டு வருகிறது. 

    அத்துடன் டோல்கேட் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும்  உயர்ந்து ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாவார்கள். மேலும், பஸ் கட்டண உயர்வுக்கும் இது வழிவகுக்கும்.

     இதுமட்டுமல்லாமல் மத்திய அரசு 850 வகையான உயிர்காக்கும் மருந்துகள் விலையையும் 11 சதவீதம் அளவிற்கு உயர்த்தியுள்ளது.  இதனால் நோயாளிகள் மருந்து, மாத்திரைகளை முறையாக சாப்பிடுவதையே கைவிட்டுவிடுவர். 

    எனவே மத்திய அரசின் இந்த போக்கை கண்டித்தும், புதுவையில் மின்துறை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து அரசு எடுத்து வருவதை கண்டித்தும், மின்துறை பொறியாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதை கைவிட்டு, நிரந்தரமாக எடுக்க வலியுறுத்தியும் வருகிற 7-ந் தேதி காலை 10 மணியளவில் தி.மு.க. சார்பில் புதுவை சட்டசபையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். 

    இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. அறிக்கையில் கூறியுள்ளார்.
    தேசிய ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
    புதுச்சேரி:

    ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன், அகில இந்திய அஞ்சல் ஊழியர் ஓய்வூதியர் சங்க தலைவர் முத்து ஆகியோர் தலைமை வகித்தனர். 

    ஓய்வூதியர் சங்கங்களின் தலைவர்கள் நடராஜன், கலியமூர்த்தி, கொளஞ்சியப்பன், குப்புசாமி  ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். 

    பாராளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்த அடிப்படையில் 80 வயது முதல் வழங்க கூடிய கூடுதல் ஓய்வூதியத் தொகையை, 65 வயது முதலே அமல்படுத்த வேண்டும். 

    மத்திய அரசு ஊழியர் களுக்கு நல சிகிச்சை மையம் அமைக்க வேண்டும். நல சிகிச்சை மையம் இல்லாத மாவட்டங்களில் உள்ள ஓய்வூதியர்களுக்கு மருத்துவப் படி வழங்கவேண்டும். ஓய்வூதியர்களுக்கு மருத்துவ படி ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். 

    ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு அமலாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திரளான ஓய்வூதியர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    முத்தியால்பேட்டை சோலை நகரில் நடுக்கடலில் மீன் பிடித்த போது படகு கவிழ்ந்ததில் மீனவர் பலியானார்.
    புதுச்சேரி:

    புதுவை முத்தியால் பேட்டை சோலை நகர் வடக்கு பகுதி சிங்காரவேலர் தெருவை சேர்ந்தவர் கலை யரசன் (வயது41). மீனவர். இவருக்கு இலக்கியா என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

    கலையரசன் தினமும் அதிகாலை தனக்கு சொந்தமான விசைபடகில் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது வழக்கம். அதுபோல்  இன்று அதிகாலை 2-.45 மணி அளவில் கலையரசன் விசைபடகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றார்.

    நடுகடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக படகு திடீரென கவிழ்ந்தது. அப்போது அருகில் யாரும் இல்லாததால் அவரை காப்பாற்ற இயலவில்லை. சிறிது நேரத்தில் கலையரன் உடல் மற்றும் படகு அதே பகுதியில் கரை ஒதுங்கியது.  அவரது உடலை பார்த்து மனைவி மற்றும் உறவினர் கள் கதறி அழுதனர். இது கல்நெஞ்சை கரைய வைப்பதாக இருந்தது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் சோலைநகர் புறக்காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நடுக்கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கோரிமேடு அருகே திருமண ஏக்கத்தில் வாலிபர் தூக்குபோட்டு இறந்து போனார்.
    புதுச்சேரி:

    கோரிமேடு அருகே ஆலங்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை.கூலி தொழிலாளி. இவரது மகன் பாலு(வயது30). இவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வந்தார்.

    மேலும் மது பழக்கத்துக்கு ஆளான பாலு தினமும் மது குடித்துவிட்டு தனது தாய் சுசீலாவிடம் தனக்கு திருமணம் செய்து வைக்கு மாறு வலியுறுத்தி வந்தார்.  அதற்கு சுசீலா மது குடிக்காமல் வேலைக்கு சென்றால் திருமணம் செய்து வைப்பதாக தெரிவித்து வந்தார்.

    ஆனாலும் பாலு மது பழக்கத்தை கைவிடவில்லை. இதனை அவரது தாய் சுசீலா கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் பாலு மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார்.

    தனது நண்பர்களுக்கெல்லாம் திருமணம் முடிந்த நிலையில் தனக்கு மட்டும் பெற்றோர் திருமண ஏற்பாடு செய்யவில்லையே என பாலு விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். 

    மது குடித்து விட்டு அருகில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு சென்ற பாலு அங்கு மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுவை ஜீவானந்தபுரம் அன்னை பிரியதர்சினி வீதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் முகேஷ்கண்ணன்(17). 

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவிந்தன் இறந்து விட்டார். அவரது மனைவியும் மனநலம் பாதிக்கப்பட்டார். இதனால் முகேஷ் கண்ணன் தனது பாட்டி புஷ்பவள்ளி பராமரிப்பில் இருந்து வந்தார். மேலும் கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் தந்தை இறந்து விட்ட நிலையில் தாயும் மனநிலை பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த முகேஷ்கண்ணன் திடீரென தற்கொலை முடிவை கையில் எடுத்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த 2 சம்பவங்கள் குறித்து கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×