என் மலர்
உள்ளூர் செய்திகள்

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஐ.ஜி.சந்திரன் பரிசு கோப்பைகளை வழங்கிய காட்சி.
எம்.ஐ.டி. கல்லூரியில் தேசிய அளவிலான வினாடி-வினா போட்டி
எம்.ஐ.டி. கல்லூரியில் தேசிய அளவிலான வினாடி-வினா போட்டி நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவை கலித்தீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் புதுச்சேரி மனிதவள வட்டாரம் இணைந்து நடத்திய தேசிய அளவிலான வினாடி-வினா நிகழ்ச்சி எம்.ஐ.டி. கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
2 நிலைகளாக போட்டி நடந்தது. இதில் மணக்குள விநாயகர் கல்விகுழுமத்திலிருந்து எம்.ஐ.டி.கல்லூரி, மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி, மைலம் பொறியியல் கல்லூரிகளுடன் மதுரை தியாகராஜர் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட், சேலம் சோனா கல்லூரி, புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஐ.எப்.இ.டி. பொறியியல் கல்லூரி, ராஜீவ்காந்தி பொறியியல், கல்லூரி, கிறிஸ்ட் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி ஆகியவற்றில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. மணக்குள விநாயகர் கல்வி நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாரன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினார்.
எம்.ஐ.டி. கல்லூரி வேலைவாய்ப்பு அதிகாரி ஜெயகுமார் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் மலர்கண் சிறப்புரையாற்றினார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு புதுவை ஐ.ஜி.சந்திரன் பரிசு வழங்கினார்.
விழாவில் மனிதவள வட்டார முன்னாள் தலைவர் டட்லி டக்லஸ், தற்போதைய தலைவர் கண்ணன், துணை தலைவர் ஹரிஹர பாண்டியன், செயலாளர் வரதராசு, பொருளாளர் ரோஜி, இணைசெயலாளர் புவனேஸ்வரி, இணை பொருளாளர் பாலமுரளி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் லோகேஸ்வரி, போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கல்லூரி மேலாண்மைதுறை தலைவர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்புதுறை ஒருங்கினைப்பாளர்கள், மேலாண்மைதுறை பேராசிரியர்கள், புதுச்சேரி மனிதவள வட்டார உறுபினர்கள் செய்திருந்தனர்.
Next Story






