என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு  தேசிய ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
    X
    புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு தேசிய ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

    தேசிய ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    தேசிய ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
    புதுச்சேரி:

    ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன், அகில இந்திய அஞ்சல் ஊழியர் ஓய்வூதியர் சங்க தலைவர் முத்து ஆகியோர் தலைமை வகித்தனர். 

    ஓய்வூதியர் சங்கங்களின் தலைவர்கள் நடராஜன், கலியமூர்த்தி, கொளஞ்சியப்பன், குப்புசாமி  ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். 

    பாராளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்த அடிப்படையில் 80 வயது முதல் வழங்க கூடிய கூடுதல் ஓய்வூதியத் தொகையை, 65 வயது முதலே அமல்படுத்த வேண்டும். 

    மத்திய அரசு ஊழியர் களுக்கு நல சிகிச்சை மையம் அமைக்க வேண்டும். நல சிகிச்சை மையம் இல்லாத மாவட்டங்களில் உள்ள ஓய்வூதியர்களுக்கு மருத்துவப் படி வழங்கவேண்டும். ஓய்வூதியர்களுக்கு மருத்துவ படி ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். 

    ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு அமலாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திரளான ஓய்வூதியர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    Next Story
    ×