என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் தொழில்துறை மாணவர் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நடந்தது.
    புதுச்சேரி:

    புதுவை மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் துறை மாணவர் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நடந்தது. 

    நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தின் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணை தலை வர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    நிகழ்ச்சியில் மாணவர்கள் எவ்வாறு பொறியியல் மற்றும் புதிய தொழில் நுட்பத்தினை மேம்படுத்தி கொள்ளவேண்டும் என்றும் மாணவர்கள், சமூகத்தின் வாயிலாக பொறியியல் துறையில் உள்ள பல்வேறு வாய்ப்புகளை பயன்படுத்திக் வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் துறை தலைவர் ராஜா மற்றும் பேராசிரியர்கள், குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
    சண்முகாபுரத்தில் மகனுடன் தகராறில் மூதாட்டி எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    புதுவை சண்முகாபுரம் நிலையவீதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (வயது63). 

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ராமச்சந்திரன் இறந்து விட்டார். இதையடுத்து ராஜேஸ்வரி தனது மகன் நடராஜனுடன் வசித்து வந்தார்.  ராஜேஸ்வரி தனது மகன் மற்றும் குடும்பத்தி னருடன் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றார்.

    பின்னர் அங்கு நிகழ்ச்சி முடிந்த பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ராஜேஸ்வரிக்கும் அவரது மகனுக்கும் சிறிய வாய்தகராறு ஏற்பட்டது. வீடு வந்து சேர்ந்ததும் ராஜேஸ்வரி சாப்பிடாமல் யாருடனும் பேசாமல் மன விரக்தியுடன் இருந்து வந்தார்.

    மகன் தன்னிடம் தகராறு செய்ததால் மனமுடைந்த ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் இருந்த எலி மருந்தை அவர் எடுத்து தின்று விட்டார்.  ராஜேஸ்வரி தொடர்ந்து வாந்தி எடுத்து மயங்கி விழுந்ததால் அதிர்ச்சியடைந்த அவரது மகன் நடராஜன் தனது தாயிடம் விசாரித்தார்.

    அப்போது  அவர் எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றதை தெரிவித்தார். இதையடுத்து அவரை கதிர்காமம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜேஸ்வரி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது மகன் நடராஜன் கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஏம்பலத்தில் திருமண மண்டப வாசலில் நின்றிருந்த பெண்ணிடம் மர்ம வாலிபர் நகையை பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.
    புதுச்சேரி:

    ஏம்பலம் அய்யனார் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆளவந்தார். இவர் ஏம்பலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த தனது அண்ணன் வீட்டு மஞ்சள் நீராட்டு விழாவுக்காக தனது மைத்துனர் சவுந்தர்ராஜன் மற்றும் அவரது மனைவி கங்கா ஆகியோருடன் சென்றார்.

    பின்னர் நிகழ்ச்சி முடிந்து தனது மைத்துனர் மற்றும் அவரது மனைவி கங்காவை ஊருக்கு வழி அனுப்பி வைக்க திருமண மண்டப வாசலில் 3 பேரும் நின்றுக் கொண்டிருந்தனர்.

    அப்போது ஒரு மர்ம வாலிபர் திருடீரென கங்கா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பியோடினார். அந்த வாலிபரை அங்கிருந்தவர்கள் பிடிக்க முயன்றும் இயலவில்லை. அவர் மின்னல் வேகத்தில் மறைந்து விட்டார். பறிபோன செயினின் மதிப்பு ரூ.1அரை லட்சம் ஆகும்.

    இந்த அதிர்ச்சியில் கங்கா மயங்கி சாய்ந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் கிளினிக்கில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

    இதுகுறித்து ஆளவந்தார் கொடுத்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் புறக் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் திருமண மண்டப வாசலில் பொருத்தப்பட் டிருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்து நகையை பறித்து சென்ற வாலிபரை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    பாகூர் மின்துறை அலுவலகம் எதிரே மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    புதுச்சேரி:

    பெட்ரோல், டீசல் விலையேற்றம், மின்கட்டண உயர்வு, மின்துறை தனியார் மயமாக்குதல் உள்ளிட்டவைகளை கண்டித்து மார்க்சிஸ்டு  கம்யூனிஸ்டு கட்சியினர் பாகூர் மின்துறை அலுவலகம் எதிரே கண்டண ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    பாகூர் கொம்யூன் செயலாளர் சரவணன் தலைமை  தாங்கினார். கொம்யூன் குழு நிர்வாகிகள் கலைச்செல்வன், வடிவேலு, கலியன், மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    கொம்யூன் குழு உறுப்பினர்கள் சேகர், அரிதாஸ், கவுசிகன், கிளை செய லாளர்கள் வெங்கடாசலம், வளர்மதி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    சிவன் கோவில் அருகில் இருந்து டி.வி., மிக்சி மின்விசிறி உள்ளிட்டவற்றை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக புறப்பட்டு பாகூர் கடைவீதி வழியாக மின் துறை பொறியாளர் அலுவலகம் சென்றனர். 

    அலுவலகம் எதிரே வீதியில் மின்சார பொருட் களை வைத்து மின் கட்டணம் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை திரும்பெற வலியுறுத்தியும், மின்துறையை தனியார் மயமாக்குதலை கைவிட வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    6 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி
    புதுச்சேரி:

    வீராம்பட்டினம் ஜீவரத்தினம் அரசு பெண்கள் நடுநிலைப்பள்ளி, சிங்கார வேலர் உயர்நிலைப்பள்ளி இணைந்து 6 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது. 

    இந்த பயிற்சியின் நிறைவு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். 

    பள்ளி தலைமை ஆசிரியை சாந்திசகாயமேரி தலைமை வகித்தார். ஆசிரியர் பிரசன்னா வரவேற்றார். பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர், பெண் போலீஸ் ஹேமாவதி தற்காப்பு குறித்து விளக்கினார். 

    தற்காப்பு பயிற்சியாளர் சரவணன் வழிகாட்டு தலின்பேரில் மாணவிகள் தற்காப்பு பயிற்சிகளை செய்து காட்டினர். ஒரு மாணவி வேனை கயிற்றால் பிணைத்து பற்களால் இழுத்து  சாகசம் செய்தார். முடிவில் ஆசிரியை மகா லட்சுமி நன்றி கூறினார்.
    பாலத்தின் குறுக்கே ஆட்டோக்களை நிறுத்தி ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டு டிரைவர்கள் ‘திடீர்’சாலை மறியலில் ஈடுபட்டனர்
    புதுச்சேரி:

    கொரோனா ஊரடங்கால் பொது போக்குவரத்து அனைத்தும் முடக்கப்பட்டது. இந்த காலத்துக்கு வாகன புதுப்பித்தல் உரிமம் கட்டும் படி போக்குவரத்துத்துறை நெருக்கடி கொடுத்தது. பல்வேறு போராட்டத்துக்கு பின் புதுவை அரசு 6 மாத கட்டணத்தை தள்ளுபடி செய்தது. 

    ஆட்டோ  புதுப்பித்தல் கட்டணமாக ரூ.700 செலுத்தப்பட்டு வந்தது.  இதை ரூ.4 ஆயிரத்து 600 ஆக உயர்த்தி கட்டும்படி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

    இதனால் ஆட்டோ தொழி லாளர்கள் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளனர். இதுமட்டுமின்றி காப்பீடு ரூ.8 ஆயிரம், சாலை வரி ரூ.ஆயிரத்து 500 செலுத்த வேண்டியுள்ளது. ஆட்டோவை  புதுப்பிக்க தயார் செய்ய ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. 

    பெட்ரோல் விலையும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர்த்தப்பட்ட  புதுப்பித்தல் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி. புதுவை ஆட்டோ தொழி லாளர்கள் சங்கம் சார்பில் போக்குவரத்துத்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடந்தது. 

    போராட்டத்துக்கு ஏ.ஐ.டி.யூ.சி. ஆட்டோ சங்க மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம்,  ஆட்டோ சங்க மாநில தலைவர்  சேகர், பொருளாளர். செந்தில் முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆட்டோ சங்க மாநில நிர்வாகிகள் பாளை யத்தான், ரவிச்சந்திரன், சிவசுப்பிரமணியன், வாசு, ஜீவா, முருகன், பிரகாஷ், ஜான், சதீஷ்குமார், ராஜி, சதிஷ், தேவ நாதன், கண்ணன், நடனமூர்த்தி, ஜெயபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  போராட்டம் தொடங்கியவுடன் காலை 10.15 மணிக்கு 100 அடி சாலையில் மேம் பாலத்தின் இருபுறமும் நூற்றுக்கணக்கான ஆட்டோக் களை நிறுத்தி மறியல் செய்தனர். போக்கு வரத்து அலுவல கத்தை முற்றுகை யிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். 

    பாலத்தின் இருபுறம், சர்வீஸ் சாலைகளிலும் ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டதால் இருசக்கர வாகனங்கள், பஸ், லாரி என எந்த வாகனமும் செல்ல முடியவில்லை. 

    இதனால் பாலத்தின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஒரு கட்டத்தில் பொதுமக்கள் ஆட்டோ டிரைவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு வழிவிடும்படி வலியுறுத்தினர். 

    ஆட்டோ சங்க நிர்வாகி கள், உங்களுக்காகத்தான் போராடுகிறோம் என்றனர். எங்களுக்காக போராடுவதாக இருந்தால்  வழிவிடுங்கள். பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து செல்லும்போது நாங்கள் ஆட்டோவை மறித்தால் ஒத்துக்கொள்வீர்களா? என கேள்வி எழுப்பினர். 

    இதனால் ஆட்டோ தொழி லாளர்கள், பொது மக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் ஆட்டோக்களை அப்புறப் படுத்தும்படி கூறினர். ஆனால் அவர்கள் ஆட்டோக் களை அகற்ற மறுத்து போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.  கடலூருக்கு செல்லும் பால பாதையின் ஒருபுத்தில் இருசக்கர வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தி பொதுமக்கள் செல்ல தொடங்கினர். 

    தொடர்ந்து மறு புறத்தில் போலீசார் இருசக்ககர  வாகனங்களை ஒரே பாதை யில் போகவும், வரவும் செல்ல வழி ஏற்படுத்தினர். ஆனால், 100-க்கும் மேற்பட்ட  கார்கள், பஸ்கள், லாரிகள் செல்ல முடியாமல்  நின்று இருந்தது.

    சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு போராட்டம் முடிந்தது.இதனால் பல்வேறு பணிகள் காரணமாக செல்ல அவ்வழியே வந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.  ஏற்கனவே போக்கு வரத்துத்துறை அலுவலகம் முன்பு முற்றுகை என ஆட்டோ சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இதனால் போலீசார் முன்கூட்டியே மறியலை  தடுத்திருக்க வேண்டும். இதை செய்யாததால் மக்கள் வெயிலில் கடும் அவதிக்கு ஆளாகினர்.  போராட்டம் நடந்த போதும் சில நிமிடங்களில் ஆட்டோக் களை அப்புறப் படுத்தாமல் அலட்சியமாக போலீசார் இருந்ததால் பொதுமக்கள் அவதிக் குள்ளாகினர். 

    பிரதான  சாலைகளில் இதுபோன்ற போராட்டங் களை அனுமதிப்பது பெரும் சட்டம்- ஒழுங்கு சீர் குலைவை ஏற்படுத்தும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
    வல்லுனர் குழு அமைத்து தனியார் மருத்துவமனைகளை ஆய்வு செய்ய வேண்டும் என அ.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் தனியார்களால் நடத்தப்படும் மருத்துவமனைகள், பரிசோதனை கூடங்கள், கிளினிக்குகள் ஏராளமாக உள்ளன.

    அங்கு  கட்டணங்கள், உள்கட்ட வசதிகள், அறுவை சிகிச்சை ஆய்வு கூடங்கள், உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் மருத்துவ சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டியது சுகாதாரத்துறையின் கடமையாகும். 

    எனவே, முதல்-அமைச்சர் மனித உயிர் சம்பந்தமான பிரச்சினையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க, சிறப்பு வல்லுனர்களை கொண்ட ஒரு குழு அமைக்க வேண்டும். 

    அந்த குழு வெளிப்படையான எவ்வித விருப்பு வெறுப்பின்றி புதுவை மாநிலத்தில் இயங்கும் தனியார் மருத்துவ மனைகளை ஆய்வு செய்து அதன் குறைகளை திருத்திக் கொள்ள உரிய வழிவகை எடுத்திட வேண்டும்.

    இவ்வாறு அன்பழகன் கூறியுள்ளார்.
    தவளக்குப்பம் அருகே கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    தவளக்குப்பம் அருகே  நல்லவாடு சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பதாக தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமாருக்கு தகவல் கிடைத்தது. 

    அதன் பேரில் தவளக்குப்பம் போலீசாருக்கு 
    கஞ்சா விற்கும் கும்பலை பிடிக்க உத்தரவிட்டார். தவளக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு   சந்தேகப் படும்படியாக 4 பேர் நின்று கொண்டிருப்பதை போலீசார் கண்டனர். அதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்ற 3 பேரையும் பிடித்து சோதனை செய்த போது அவர்கள் ஏராளமான கஞ்சா   பொட்டலங்கள் வைத்திருந்தனர்.

    இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.   விசாரணையில் அவர்கள் அபிஷேகப்பாக்கம் புது நகர் கெங்கையம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த ரோகித் என்ற லட்சுமி நாராயணன் (வயது 20), நல்லவாடு பகுதியை சேர்ந்த ரஜினி என்கிற ரஜினி ஸ்ரீதர் (29 மற்றும் அதே பகுதியை சேர்ந்த சீமன் என்ற (18) என்பது தெரிய வந்தது.

    அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து  252 கிராம் கஞ்சா  பொட்டலங்கள் பறி முதல்  செய்தனர். மேலும் தப்பி ஓடிய மற்றொருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    வாணரப்பேட்டையில் தகாத வார்த்தையால் திட்டியதை தட்டிக்கேட்ட பெண்ணை தாக்கியவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

     புதுவை வாணரப்பேட்டை ராசுஉடையார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். பெயிண்டர் வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி சூர்யா(வயது31). இவர்களது  பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் சார்லஸ் (43).  இவர்கள் 2 குடும்பத் தினருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. 
    அவ்வப்போது அக்கம் பக்கத்தினர் இரு தரப்பினரையும் சமாதனம் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மதியம் சார்லஸ், சூர்யா வீட்டின் முன்பு நின்றுக் கொண்டு அவரை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனை சூர்யா தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திர மடைந்த சார்லஸ் அங்கு கிடந்த கல்லை எடுத்து சூர்யாவின் தலையில் தாக்கிவிட்டு ஓடி விட்டார்.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த சூர்யா புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். 

    பின்னர் இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சார்லசை தேடி வருகிறார்கள்.
    வசந்தகால திருவிழாவை யொட்டி பிரான்ஸ் நாட்டின் சார்பில் பல்வேறு நாடுகளில் ஏராளமான நிகழ்வுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    புதுச்சேரி:

    புதுவையில் ஏற்கனவே பாய்மர அணிவகுப்பு நடத்தினர். இந்த நிலையில் கடற்கரை சாலையில் பிரமாண்ட பொம்மைகள் அணிவகுப்பு, தமிழிசை பாடல்களுக்கு  நடனமாடும் நிகழ்வும் நடந்தது. 

    பிரெஞ்சு துணை தூதர் லிசே டபோட் பரே, அமைச்சர் லட்சுமி நாரா யணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியை  தொடக்கிவைத்து பார்த்தனர். 

    காதல், உற்சாகம், துள்ளல் என பல்வேறு தமிழிசை பாடல்களுக்கு பிரமாண்ட பொம்மைகள் நடமானடின.  குறிப்பாக இப் பொம்மைக்குள் வெளி நாட்டு கலைஞர்கள் இருந்த படி நடன அசைவு செய்ததை பலரும் வரவேற்றனர். கடற்கரை சாலை காந்தி திடலில் புறப்பட்டு பிரெஞ்சு தூதரகத்தில் இந்த நிகழ்ச்சி நிறைவடைந்தது. 

    தொடர்ந்து நடந்த விழாவில்  பிரெஞ்சு துணை தூதர்,  அமைச்சர் உள்ளிட் டோர் விழா உரையாற்றினர்.பிரெஞ்சு தூதரகத்தினர் கூறுகையில், வசந்தகால திருவிழா கொண்டாட்டம் மிக முக்கியமாக பிரான்சில் நடைபெறும். 

    2 ஆண்டுகளாக  கொரோனா தொற்றால் நிகழ்வுகள் மக்கள் முன்னிலையில் உற்சாகத் துடன் நடத்த இயலவில்லை. வருகிற 7-ந் தேதி இரவு 7 மணிக்கு  அலையன்ஸ் பிரான்சேஸ் அரங்கில் மாடர்ன் சர்க்கஸ் நடக்கும். நாடக நிகழ்வுகள் வருகிற 4, 6, 9-ந்தேதிகளில் நடக்கிறது. வருகிற 6, 8, 9-ந்தேதி இசை நிகழ்ச்சிகள் நடக்கும். 

    இதுபோல் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளோம். புதுவை மட்டுமில்லாமல் சென்னை, திருவனந்தபுரம், ஆரோவில்  என பல இடங்களிலும் பல நிகழ்வுகள் நடக்கிறது.  பிரெஞ்சு தூதரக இணையத்தில் இந்நிகழ்வுகள் விவரங்களை பார்க்கலாம். 

    இவ்வாறு  அவர்கள் தெரிவித்தனர்.
    பொது இடத்தில் ரகளை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    மேட்டுப்பாளையத்தில் மதுபான கடை எதிரே ஒரு கும்பல் மது குடித்து விட்டு பொது மக்களுக்கு இடையூறாக ரகளை செய்து கொண்டிருப் பதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. 

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரகளையில் ஈடுபட்ட 3 பேர் கொண்ட கும்பலை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் சண்முகாபுரத்தை அடுத்த பாரதிபுரம் முருகன்கோவில் தெருவை சேர்ந்த சுகுமார் (வயது41), விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்த முருகன்(52), சண்முகாபுரம் மாணிக்க செட்டியார் நகரை சேர்ந்த சீனிவாசன் (48) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதுபோல் ரெட்டியார் பாளையம் அருகே மதுக்கடை அருகே ரகளை செய்த பூமியான்பேட் லாம்பர்ட் சரவணன் நகரை சேர்ந்த துலுக்கானம் (54) மற்றும் மேரி உழவர்கரை ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த அய்யப்பன்(56) ஆகிய 2 பேரை ரெட்டியார்பாளையம் போலீசாரும், தட்டாஞ்சாவடி மார்க்கெட்டிங் கமிட்டி அருகே பொது மக்களுக்கு இடையூறாக தகளையில் ஈடுபட்ட ஜீவானந்தபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுதாகர்(25) என்பவரை கோரிமேடு போலீசாரும் கைது செய்தனர்.
    புதுவை பிரெஞ்சு தூதரகம் சார்பில் கடற்கரை சாலையில் பிரமாண்ட பொம்மைகள் அணிவகுப்பு, தமிழிசை பாடல்களுக்கு நடனமாடும் நிகழ்வு நடந்தது.
    புதுச்சேரி:

    வசந்தகால திருவிழாவையொட்டி பிரான்ஸ் நாட்டின் சார்பில் பல்வேறு நாடுகளில் ஏராளமான நிகழ்வுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    புதுவையில் ஏற்கனவே பாய்மர அணிவகுப்பு நடத்தினர். இந்த நிலையில் கடற்கரை சாலையில் பிரமாண்ட பொம்மைகள் அணிவகுப்பு, தமிழிசை பாடல்களுக்கு நடனமாடும் நிகழ்வும் நடந்தது.

    பிரெஞ்சு துணை தூதர் லிசே டபோட் பரே, அமைச்சர் லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியை தொடக்கிவைத்து பார்த்தனர்.

    காதல், உற்சாகம், துள்ளல் என பல்வேறு தமிழிசை பாடல்களுக்கு பிரமாண்ட பொம்மைகள் நடனமாடின. குறிப்பாக இப்பொம்மைக்குள் வெளிநாட்டு கலைஞர்கள் இருந்தபடி நடன அசைவு செய்ததை பலரும் வரவேற்றனர். கடற்கரை சாலை காந்தி திடலில் புறப்பட்டு பிரெஞ்சு தூதரகத்தில் இந்த நிகழ்ச்சி நிறைவடைந்தது

    தொடர்ந்து நடந்த விழாவில் பிரெஞ்சு துணை தூதர், அமைச்சர் உள்ளிட்டோர் விழா உரையாற்றினர். பிரெஞ்சு தூதரகத்தினர் கூறுகையில், வசந்தகால திருவிழா கொண்டாட்டம் மிக முக்கியமாக பிரான்சில் நடைபெறும்.

    2 ஆண்டுகளாக கொரோனா தொற்றால் நிகழ்வுகள் மக்கள் முன்னிலையில் உற்சாகத்துடன் நடத்த இயலவில்லை. வருகிற 7-ந் தேதி இரவு 7 மணிக்கு அலையன்ஸ் பிரான்சேஸ் அரங்கில் மாடர்ன் சர்க்கஸ் நடக்கும். நாடக நிகழ்வுகள் வருகிற 4, 6, 9-ந்தேதிகளில் நடக்கிறது. வருகிற 6, 8, 9-ந்தேதி இசை நிகழ்ச்சிகள் நடக்கும்.

    இதுபோல் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளோம். புதுவை மட்டுமில்லாமல் சென்னை, திருவனந்தபுரம், ஆரோவில் என பல இடங்களிலும் பல நிகழ்வுகள் நடக்கிறது.

    பிரெஞ்சு தூதரக இணையத்தில் இந்நிகழ்வுகள் விவரங்களை பார்க்கலாம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    ×