என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவி வேனை கயிற்றால் பிணைத்து பற்களால் இழுத்து சாகசம் செய்த காட்சி.
அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி
6 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி
புதுச்சேரி:
வீராம்பட்டினம் ஜீவரத்தினம் அரசு பெண்கள் நடுநிலைப்பள்ளி, சிங்கார வேலர் உயர்நிலைப்பள்ளி இணைந்து 6 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சியின் நிறைவு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
பள்ளி தலைமை ஆசிரியை சாந்திசகாயமேரி தலைமை வகித்தார். ஆசிரியர் பிரசன்னா வரவேற்றார். பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர், பெண் போலீஸ் ஹேமாவதி தற்காப்பு குறித்து விளக்கினார்.
தற்காப்பு பயிற்சியாளர் சரவணன் வழிகாட்டு தலின்பேரில் மாணவிகள் தற்காப்பு பயிற்சிகளை செய்து காட்டினர். ஒரு மாணவி வேனை கயிற்றால் பிணைத்து பற்களால் இழுத்து சாகசம் செய்தார். முடிவில் ஆசிரியை மகா லட்சுமி நன்றி கூறினார்.
Next Story






