என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரெஞ்சு துணை தூதர் லிசே டபோட் பரே, அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோர் பார்வையிட்ட காட்சி.
    X
    பிரெஞ்சு துணை தூதர் லிசே டபோட் பரே, அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோர் பார்வையிட்ட காட்சி.

    புதுவை பிரெஞ்சு தூதரகம் சார்பில் பிரம்மாண்ட பொம்மை நடன நிகழ்ச்சி

    புதுவை பிரெஞ்சு தூதரகம் சார்பில் கடற்கரை சாலையில் பிரமாண்ட பொம்மைகள் அணிவகுப்பு, தமிழிசை பாடல்களுக்கு நடனமாடும் நிகழ்வு நடந்தது.
    புதுச்சேரி:

    வசந்தகால திருவிழாவையொட்டி பிரான்ஸ் நாட்டின் சார்பில் பல்வேறு நாடுகளில் ஏராளமான நிகழ்வுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    புதுவையில் ஏற்கனவே பாய்மர அணிவகுப்பு நடத்தினர். இந்த நிலையில் கடற்கரை சாலையில் பிரமாண்ட பொம்மைகள் அணிவகுப்பு, தமிழிசை பாடல்களுக்கு நடனமாடும் நிகழ்வும் நடந்தது.

    பிரெஞ்சு துணை தூதர் லிசே டபோட் பரே, அமைச்சர் லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியை தொடக்கிவைத்து பார்த்தனர்.

    காதல், உற்சாகம், துள்ளல் என பல்வேறு தமிழிசை பாடல்களுக்கு பிரமாண்ட பொம்மைகள் நடனமாடின. குறிப்பாக இப்பொம்மைக்குள் வெளிநாட்டு கலைஞர்கள் இருந்தபடி நடன அசைவு செய்ததை பலரும் வரவேற்றனர். கடற்கரை சாலை காந்தி திடலில் புறப்பட்டு பிரெஞ்சு தூதரகத்தில் இந்த நிகழ்ச்சி நிறைவடைந்தது

    தொடர்ந்து நடந்த விழாவில் பிரெஞ்சு துணை தூதர், அமைச்சர் உள்ளிட்டோர் விழா உரையாற்றினர். பிரெஞ்சு தூதரகத்தினர் கூறுகையில், வசந்தகால திருவிழா கொண்டாட்டம் மிக முக்கியமாக பிரான்சில் நடைபெறும்.

    2 ஆண்டுகளாக கொரோனா தொற்றால் நிகழ்வுகள் மக்கள் முன்னிலையில் உற்சாகத்துடன் நடத்த இயலவில்லை. வருகிற 7-ந் தேதி இரவு 7 மணிக்கு அலையன்ஸ் பிரான்சேஸ் அரங்கில் மாடர்ன் சர்க்கஸ் நடக்கும். நாடக நிகழ்வுகள் வருகிற 4, 6, 9-ந்தேதிகளில் நடக்கிறது. வருகிற 6, 8, 9-ந்தேதி இசை நிகழ்ச்சிகள் நடக்கும்.

    இதுபோல் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளோம். புதுவை மட்டுமில்லாமல் சென்னை, திருவனந்தபுரம், ஆரோவில் என பல இடங்களிலும் பல நிகழ்வுகள் நடக்கிறது.

    பிரெஞ்சு தூதரக இணையத்தில் இந்நிகழ்வுகள் விவரங்களை பார்க்கலாம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×