என் மலர்
புதுச்சேரி
காரைக்கால் அருகே இரட்டிப்பு பணம் தருவதாக கூறி 16 பேரிடம் ரூ.70 லட்சம் மற்றும் 88 பவுன் நகை மோசடி செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால்:
காரைக்கால் உமறுபுலவர் வீதியைச் சேர்ந்தவர் மொய்தீன் அப்துல்காதர்(வயது46). இவர் தனது நண்பர் நாகூரைச்சேர்ந்த அப்துல்ரகுமான்(45) அவரது மனைவி ராஜாத்தி ஆயிஷா நாச்சியாள்(40) ஆகிய 3 பேரும் சேர்ந்து, ரியல் எஸ்டேட்டில் இரட்டிப்பு பணம் கிடைக்கும் என, கடந்த சில மாதங்களாக பலரை ஏமாற்றி பணம் பறித்து வந்துள்ளனர். யாரும் புகார் தராத நிலையில், மூவரும் மேலும் பலரை ஏமாற்றிவந்துள்ளனர்.
இந்நிலையில், காரைக்கால் காஜியார் வீதியைச் சேர்ந்த முகமது ஆரிப் மனைவி கமருன்நிசா என்பவர், காரைக்கால் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், எனது தலைமையில் 9 பேரிடம் ரூ. 5 லட்சம் பணம், 72 பவுன் தங்க நகையை, மேற்கண்ட 3 பேரும் கூறிய ஆசைவார்த்தைகளை நம்பி கொடுத்து பல மாதங்கள் ஆகியும், லாபமாக பணமோ, நிலமோ எதையும் தரவில்லை. கேட்கும் போதெல்லாம் அடுத்த மாதம் என சொல்லிவந்தவர்கள், கடந்த சில நாட்களாக ஒன்றும் தர முடியாது.
உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்துகொள் என கூறி, தகாத வார்த்தைகளால் திட்டுகின்றனர். என்னை நம்பி பணம் கொடுத்தவர்கள் என்னிடம் கேட்பதால், நான் பதில் சொல்ல முடியாமல் இருக்கிறேன். அதனால், எனது தலைமையில் கொடுக்கப்பட்ட பணம் ரூ.55 லட்சம், 72 பவுன் தங்க நகையை மீட்டு, 3 பேர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி இருந்தார். அதேபோல், காரைக்கால் மாமாதம்பி மரைக்காயர் வீதியைச் சேர்ந்த ஜெகாபர்சாதிக் மனைவி ஜனாத்துல் பர்லீன், காரைக்கால் டவுன் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில், மேற்கண்ட 3 பேரின் ஆசைவார்த்தைகளை நம்பி, எனது தலைமையில், 5 பேரிடம், ரூ.15 லட்சம் பணம், 16 பவுன் தங்க நகையை கொடுத்து ஏமாந்துள்ளேன். பணம் மற்றும் நகையை கேட்டால் அசிங்கமாக திட்டி விரட்டி விடுகின்றனர்.
எனவே, நான் கொடுத்த ரூ.15 லட்சம் பணம், 16 பவுன் தங்க நகையை மீட்டு தருவதுடன், சம்பந்தப்பட்ட 3 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து, காரைக்கால் நகர காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள 3 பேரையும் தேடிவ ருகின்றனர்.
மேலும் மேற்கண்ட 3 பேர் வேறு யார் யாரை ஏமாற்றியுள்ளனர் என்பது குறித்தும், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுவையில் பா.ஜனதா ஆட்சியை கொண்டு வர சதி வேலையில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றச்சாட்டியுள்ளது.
புதுச்சேரி :
புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய பல்கலைக் கழகங்கள் மற்றும் அதன் இணைப்பில் உள்ள கல்லூரிகளுக்கு இந்த ஆண்டு “க்யூட்’ நுழைவு தேர்வு ஒன்றை புதிதாக மத்திய அரசின் பல்கலைக் கழக மானிய குழு கொண்டு வந்துள்ளது.
இதன் மூலம் மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் சார்ந்த கல்லூரிகளில் உள்ள அனைத்து வகையான பட்ட படிப்புகள் மற்றும் முதுநிலை படிப்புகள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் மத்திய அரசு வைத்து மாநிலத்தின் உரிமைகளை பறித்துள்ளது.
மாநில பாடத்திட்டங்களில் படித்து வரும் மாணவர்களின் மேல்படிப்பு கனவுகளை கானல் நீராக மாற்றும் வேலை இது. மோடி அரசு பிற்படுத்தப் பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் அதாவது பெரும்பான்மை இந்துக் களின் கல்வி வாய்ப்பை பறித்து, உயர் ஜாதிகளுக்கு கொடுப்பதின் மூலம் இந்து மக்களுக்கு துரோகம் செய்கிறது.
புதுவையில் ஆட்சியை மாற்றி பா.ஜனதா ஆட்சியை கொண்டு வர சதி வேலையில் ஈடுபட்டுள்ள பா.ஜ.க.வினர் மத்திய அரசின் புதிய கல்வித் திட்டங்களையும், பல்கலைக் கழக நுழைவு தேர்வுகளையும் புதுவை மாநிலத்தில் நுழையாமல் என்.ஆர்.காங்கிரஸ் பார்த்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கிறோம். காங்கிரஸ் கட்சியும் தனது தோழமை கட்சிகளோடு சேர்ந்து, தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி எதிர்க்கும்.
இவ்வாறு ஏ.வி.சுப்ரமணியன் அறிக்கையில் கூறியுள்ளார்.
உப்பளம் தொகுதி அப்துல்கலாம் குடியிருப்பில் கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதி அப்துல் கலாம் குடியிருப்பு பல ஆண்டுகளாக பராமரிக் கப்படாமல் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.விடம் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.
உடனே கென்னடி எம்.எல்.ஏ-. அப்துல் கலாம் குடியிருப்பு பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு பாதாள வடிகாலில் சிமெண்டு அடுக்குகள் மூடப்படாமல் இருப்பதையும், தெரு விளக்குகள் எரியாமல் இருப்பதையும், தண்ணீர் பிரச்சினை மற்றும் குடி யிருப்பில் ஜன்னல் கதவுகள் உடைந்த நிலையில் இருப்பதையும் அப்பகுதி மக்கள் கென்னடி எம்.எல்.ஏ.விடம் தெரிவித்தனர்.
பராமரிப்பு இல்லாமல் இருக்கும் காலி நிலம் குறித்தும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
உடனே பொதுப் பணித் துறை இளநிலை பொறி யாளர் ராமனை சம்பவ இடத்துக்கு கென்னடி எம்.எல்.ஏ- வரவழைத்தார். அவரிடம் அப்துல் கலாம் குடியிருப்பில் பொது மக்களின் குறைகளை தீர்ப்பதற்கான வழிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். பொதுப் பணித்துறை அதிகாரியிடம் மிக விரைவாக கோரிக்கை களை நிறைவேற்றும்படி அறிவுறுத்தினார்.
இதுகுறித்து பொதுப் பணித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளதாக கென்னடி எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, தொகுதி தி.மு.க. செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, மாநில மீனவர் அணி அமைப்பாளர் தனசேகரன், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜி, கிளை செயலாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அகரம் பாரத் வித்யாஷ்ரம் பள்ளியில் ஓவியம்-கைவினை கண்காட்சி நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவை அகரம் பாரத் வித்யாஷ்ரம் மேல்நிலைப்பள்ளியில் ஓவியம் மற்றும் கைவினைக் கண்காட்சி 'சித்தாரா 2021--2022' நடைபெற்றது. பள்ளி மாணவர்களின் கைவண்ணங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு இந்த கைவினை படைப்புகள் பள்ளியில் காட்சிப் படுத்தப்பட்டது.
அழகிய ஓவியம் மற்றும் கைவினை கண்காட்சி சித்தாரா -2021-22 கைவினை கண்காட்சியை பத்மஸ்ரீ கலைமாமணி விருது பெற்ற கைவினை கலைஞர் முனுசாமி திறந்து வைத்தார். மேலும் மாணவர்களின் ஓவியம் மற்றும் கைவினை பொருட்களைப் பார்வையிட்டார்.
பள்ளியின் தாளாளர் டாக்டர்.சந்தான கிருஷ்ணன், முதல்வர் சாந்திஜெயசுந்தர் மேற்பார்வையில் ஓவியம் மற்றும் கைவினை கண்காட்சி சிறப்பான முறையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஓவிய ஆசிரியர் , ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பெற்றோர்- ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
மணக்குள விநாயகர் கலை அறிவியல் கல்லூரி தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது-.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் அங்கமான கலை மற்றும் அறிவியல் பிரிவின் வேதியியல் துறையும், தர்மபுரி பெட்ரோ கெமிக்கல் நிறுவனமான ஸ்ரீலக் பெயிண்ட்ஸ் இணைந்து மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உரு வாக்கும் வகையில் புரிந் துணர்வு ஒப்பந்தம் மற்றும் தொழில்துறை பயிற்சி நடைபெற்றது.
மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், கல்லூரி முதல்வர் வெங்கடாசலபதி, பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், அகாடமிக் டீன் அன்புமலர், கலை மற்றும் அறிவியல் கல்லூரி டீன் முத்துலட்சுமி, கல்லூரி ஆராய்ச்சிதுறை டீன் வேல்முருகன், வேலை வாய்ப்பு துறை அதிகாரி கைலாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வேதியியல்துறை பேராசிரியர் சாவித்ரி வரவேற்று பேசினார். தொழில்துறை பயிற்சியாளர் சீனிவாசன் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பற்றிய தகவல்களை எடுத்துரைத்தார். ஒப்பந்தம் பற்றிய விவரங்களை வேதியியல் துறை தலைவர் தீபா எடுத்து கூறினார். பேராசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் ராஜப்பா செய்திருந்தார்.
ஒன்றில் தொடங்குவது தான் 100 என்பதற்கு உதாரணமாக 26 வயதாகும் என்ஜினீயரிங் பட்டதாரி மோகன்ராஜ் ஒரு நெல் விவசாயியாக மாறி மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்.
புதுச்சேரி:
புதுவை மேல்சாத்த மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ்.
2016-ல் என்ஜினீயர் பட்டம் பெற்ற இவர் சென்னையில் சில காலம் பணியாற்றினார். ஆனால், படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் தனது குடும்ப தொழிலான விவசாயம் பக்கம் திரும்பினார்.
பள்ளி படிப்பின் போதே தந்தையுடன் சேர்ந்து விவசாய பணி செய்ததால் எளிதில் விவசாயம் கை கொடுத்துள்ளது.
திருவெண்ணைநல்லூர் பகுதியில் விவசாயி முருகையன் 50 ரகத்தில் பாரம்பரிய நெல்லை 8 ஏக்கரில் இயற்கை முறையில் பயிரிட்டு வருகிறார்.
அதுவும் ஒரு நெல்லை பயிரிட்டு முறையில் தங்களது குடும்பத்திற்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் பயிர் செய்ய திட்டமிட்டார்.
ஆனால், பல காலமாய் ரசாயன உரங்களுக்கு பழகி போன நிலம் ஒரு நெல்லை மட்டும் வைத்து நட்டால் விளையாது என கூறி ஏற்கவில்லை.
இதனால் விவசாயி முருகையனிடம் இலவசமாக பெற்ற கருப்பு கவுணி, மாப்பிள்ளை சம்பா விதை நெல்லை தனது வீட்டின் மொட்டை மாடியில் 800 சதுர அடி இடத்தில் 85 குரோ பையில் ஒரு பைக்கு ஒரு நெல் வீதம் மோகன்ராஜ் நட்டார்.
இவரது ஆர்வத்தை பார்த்து பாரம்பரிய விதை சேகரிப்பாளர் சுந்தர் காட்டு யானம் ரக நெல்லையும் வாசனை சீரக சம்பா நெல்லையும் அளித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் ஒரு பைக்கு ஒரு நெல் என நட்டு ஒரு பங்கு மண் ஒரு பங்கு எரு மட்டுமே பயன்படுத்தி விவசாயம் செய்ததில் தற்போது 4 ரக நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாராகியுள்ளன.”ஒற்றை நெல்லில் விவசாயமா?” என கேலி செய்தவர்கள் இன்று வாயடைத்து போய் இருக்கிறார்கள்.
இயற்கை முறையில் பாரம்பரிய நெல்லை விளைவிக்க குடும்பதார் சம்மதம் தெரிவித்து கொஞ்சம் நிலத்தையும் ஒதுக்கி கொடுத்துள்ளனர். இந்த நெற்கதிர்களை அடுத்த போகத்திற்கு வயலில் விதை நெல்லாக பயன்படுத்த இளம் விவசாயி மோகன் ராஜ் தயாராகி வருகிறார்.
ஒன்றில் தொடங்குவது தான் 100 என்பதற்கு உதாரணமாக 26 வயதாகும் என்ஜினீயரிங் பட்டதாரி மோகன்ராஜ் ஒரு நெல் விவசாயியாக மாறி மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்.
முத்தியால்பேட்டையில் செல்போனில் சூதாடிக் கொண்டிருந்ததை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை முத்தியால் பேட்டை சின்னையாபுரம் நகராட்சி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் விஜயன் (வயது37). சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கு பிரியா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் 8 மாத பெண் குழந்தை உள்ளது.
இதற்கிடையே கடந்த 3 நாட்களாக விஜயன் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு செல்போனில் சூதாடிக்கொண்டிருந்தார்.
இதுபோல் நேற்று விஜயன் வேலைக்கு செல் லாமல் மது குடித்து விட்டு செல்போனில் சூதாடிக் கொண்டிருந்தார். இதனை அவரது மனைவி பிரியா கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த விஜயன் மனைவி மற்றும் குழந்தை களை தாக்கி துரத்தி விட்டு வீட்டின் கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டார்.
வெகுநேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த பிரியா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது படுக்கை அறையில் மின்விசிறியில் கணவன் சேலையால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து பிரியா முத்தியால் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவை செஞ்சி சாலையில் தொழில் போட்டியில் வியாபாரிகள் மோதிக் கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை முத்தியால் பேட்டை சோலைநகர் மருதம் வீதியை சேர்ந்தவர் நடராஜன். இவர் செஞ்சி சாலையில் பொம்மை கடை நடத்தி வருகிறார். இவரது கடையின் அருகே அவரது மனைவி மணிமேகலையும் பொம்மை கடை வைத்துள்ளார்.
இதற்கிடையே இவர்க ளுக்கும் அதே பகுதியில் கைவினை பொருட்கள் விற்படை கடை நடத்தி வரும் லாஸ்பேட்டை குறிஞ்சி நகரை சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கும் தொழில் போட்டி காரணமாக அடிக்கடி பிரச்சினை இருந்து வந்தது.
இந்த நிலையில் மீண்டும் இதுதொடர்பாக அவர்களிடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் இரு தரப்பினருக்கும் வாய்தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது. இரு தரப்பினரும் தடி மற்றும் இரும்பு பைப்பால் தாக்கி கொண்டனர். மேலும் ஒருவருக் கொருவர் கொலை மிரட்டல் விடுத்துக்கொண்டனர்.
இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியே பெரியகடை போலீசில் புகார் செய்தனர். போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காரைக்காலில் வெவ்வேறு இடங்களில் 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால்:
காரைக்கால் கோட்டுச்சேரி அருகே வரிச்சிக்குடி சோனியாகாந்தி நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்கு சிவக்குமார், முத்துக்குமார்(வயது34), சசிகுமார் என்ற 3 மகன்கள் உள்ளனர். 3 பேருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இதில், 2வது மகன் முத்துக்குமார் கொத்தனார் வேலை செய்து வந்தார்.
கடந்த 4 ஆண்டுகளாக முத்துகுமார் தோல் நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில வாரமாக தோல் நோயின் காரணமாக, உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டு அவதியுற்றுவந்தார்.
அரிப்பு அதிக மாகும்போது, அனைவரிடத்திலும் சண்டை போட்டுவந்துள்ளார். இதனால், அவரது மனைவி ஜோதி, முத்துகுமாரிடம் கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. அரிப்பு அதிகமானதால், முத்துகுமார் வீட்டின் மின் விசிறியில் புடவையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து, அவரது தந்தை வெங்கடேசன், கோட்டுச்சேரி காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காரைக்காலை அடுத்த நெடுங்காடு மேலகாசாகுடி பகுதியைச்சேர்ந்தவர் அருமைதாஸ்(65). செக்யூரிட்டி வேலை செய்து வந்த இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக சர்க்கரை மற்றும் இருதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். இதில், மது அருந்தும் பழக்கமும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், நோயிக்கு முறையான மருந்து மாத்திரைகளை சாப்பிடமால் இருந்துவந்தார்.
மேலும் கடந்த வாரம் கையில் ஏற்பட்ட காயத்தால் பெரிய அளவில் அவதியுற்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டின் மாடியில் உள்ள கொக்கி ஒன்றில், கைலியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து, அவரது மகன் அல்போன்ஸ்ராஜ், நெடுங்காடு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காரைக்கால் கோட்டுச்சேரி அருகே வரிச்சிக்குடி சோனியாகாந்தி நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்கு சிவக்குமார், முத்துக்குமார்(வயது34), சசிகுமார் என்ற 3 மகன்கள் உள்ளனர். 3 பேருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இதில், 2வது மகன் முத்துக்குமார் கொத்தனார் வேலை செய்து வந்தார்.
கடந்த 4 ஆண்டுகளாக முத்துகுமார் தோல் நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில வாரமாக தோல் நோயின் காரணமாக, உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டு அவதியுற்றுவந்தார்.
அரிப்பு அதிக மாகும்போது, அனைவரிடத்திலும் சண்டை போட்டுவந்துள்ளார். இதனால், அவரது மனைவி ஜோதி, முத்துகுமாரிடம் கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. அரிப்பு அதிகமானதால், முத்துகுமார் வீட்டின் மின் விசிறியில் புடவையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து, அவரது தந்தை வெங்கடேசன், கோட்டுச்சேரி காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காரைக்காலை அடுத்த நெடுங்காடு மேலகாசாகுடி பகுதியைச்சேர்ந்தவர் அருமைதாஸ்(65). செக்யூரிட்டி வேலை செய்து வந்த இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக சர்க்கரை மற்றும் இருதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். இதில், மது அருந்தும் பழக்கமும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், நோயிக்கு முறையான மருந்து மாத்திரைகளை சாப்பிடமால் இருந்துவந்தார்.
மேலும் கடந்த வாரம் கையில் ஏற்பட்ட காயத்தால் பெரிய அளவில் அவதியுற்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டின் மாடியில் உள்ள கொக்கி ஒன்றில், கைலியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து, அவரது மகன் அல்போன்ஸ்ராஜ், நெடுங்காடு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அட்டவணை அறிவிப்பில் இல்லாத மின் கட்டண உயர்வு சட்ட விரோதம் என அ.தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து கடிதம் அளித்தார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஏப்ரல் 1-ந் தேதியிலிருந்து புதிய மின் கட்டண உயர்வை மின்துறை தற்போது வெளியிட்டுள்ளது. ஜனவரி 13--ந் தேதி வெளியிடப்பட்ட கருத்து கேட்பு கூட்டத்தில் 100 யூனிட், 101-200 யூனிட் வரை, மின்சாரம் உபயோகப்படுத்துபவர்களுக்கு மட்டும் கட்டண உயர்வு என அறிவித்து, அது சம்பந்தமாக கருத்து கூறலாம் என தெரிவித்து விட்டு தற்போது 200--300 யூனிட், மின்சாரத்திற்கு மின் கட்டண உயர்வும், வீட்டு உபயோகத்திற்கு பயன் படுத்தப்படும் ஒவ்வொரு கிலோவாட்டுக்கும் மாதம் தோறும் ரூ.30 என 10 மடங்கிற்கு மேல் உயர்த்தி உள்ளது மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.
மின் கட்டண உயர்வு சம்பந்தமாக கருத்து கேட்பு அட்டவணை அறிவிப்பில் இல்லாத மின் பயனாளி களுக்கும் கட்டண உயர்வு என்பது சட்டத்திற்கு விரோத மான செயலாகும்.
கட்டண உயர்வின் மூலம் தற்போது உள்ள கட்ட ணத்தை விட இரு மடங்கு கட்டணம் செலுத்தும் சூழ் நிலை ஏற்படும். இதனால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் பெருமளவில் பாதிக்கப் படுவர்.
தலைமைச்செயலர், மின் துறை செயலர், மற்றும் மின் துறை உயரதிகாரிகளின் சட்டவிரோதமான தன்னிச்சையான மின் கட்டண உயர்வின் அறிவிப்பினை முதல்-அமைச்சர் ரத்து செய்ய வேண்டும். மின் கட்டண உயர்வு சம்பந்தமாக ஜனவரி மாதத்தில் நடை பெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்படாத மின் உபயோக சம்பந்தமான அடுக்கு முறைக்கு, உயர்த்தப் பட்டுள்ள மின் உயர்வு சம்பந்தமாக மீண்டும் பொது மக்களின் கருத்து கேட்பு கூட்டம் நடத்த முதல்& அமைச்சர் உத்தரவிட வேண்டும்.
அதுவரையில் ஒட்டு மொத்தத்தில் சட்டத்திற்கு விரோதமாக உயர்த்தப்பட் டுள்ள மின் கட்டண உயர்வு அட்டவணையை முதல்-அமைச்சர் நிறுத்தி வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுவை மக்களுக்காக பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று டெல்லியில் மு.க.ஸ்டாலினிடம் புதுவை தி.மு.க.வினர் மனு அளித்தனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில சட்டசபை எதிர்கட்சித் தலைவர் .சிவா தலைமையில், தி.மு.க. அவைத் தலைவர் எஸ்.பி.சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், நாகதியாகராஜன், துணை அமைப்பாளர் சண்.குமாரவேல், தொகுதி பொறுப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் டெல்லியில் தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க பாராளு மன்றக்குழு உறுப்பினர் களை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவை நிதி மற்றும் நிர்வாக சுதந்திரம் இல்லாத யூனியன் பிரதேசமாக நீடிக்கிறது. மாநில அந்தஸ்து இல்லாதாதல் மத்திய அரசின் நிதிக்குழுவில் புதுவை சேர்க்கப்படாமல் உள்ளது. சட்டசபை இருப்பதால் யூனியன் பிரதேசங்களை போல வரிச்சலுகையும் தருவதில்லை.
மத்திய அரசு கடனை தள்ளுபடி செய்யாமலேயே தனி கணக்கு தொடங்கியதால் புதுவையின் கடன் ரூ.10 ஆயிரம் கோடியாக உள்ளது. மாநிலத்தில் தேர்வாணையம் இல்லாததால் பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல் நீடிக்கிறது.
மத்திய நிதிக்குழுவில் புதுவையை சேர்க்க வேண்டும். மாநில அந்தஸ்து மட்டுமே புதுவையின் வளர்ச்சிக்கு ஒரே தீர்வாக இருப்பதால் அதற்கு தி.மு.க. குரல் கொடுக்க வேண்டும்.
புதுவையில் உள்ள பொதுத்துறை நிறுவனங் களையும், பஞ்சாலை களையும் புனரமைக்கும் பொருட்டு மத்திய அரசு கூடுதல் நிதியினை வழங்க வேண்டும்.
இடஒதுக்கீடுடன் உள்ளாட்சி தேர்தலை நடத்த வழி செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை தி.மு.க.வின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பாராளுமன்ற அவைகளில் புதுவை மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கோவிந்தசாலை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா நடந்தது.
புதுச்சேரி:
உருளையன்பேட்டை கோவிந்தசாலை சின்ன பொய்கை அங்காள பரமேஸ்வரி கோவிலில் பிரம்மோற்சவம் மற்றும் 22-ம் ஆண்டு மயானக் கொள்ளை விழா நடை பெற்றது.
இதனையொட்டி, அம்மனுக்கு அபிஷேகம் வள்ளாள கோட்டை அழித்தல் நிகழ்ச்சி நடை பெற்று அம்மன் வீதி உலா நடந்தது. தொடர்ந்து அபிஷேகம், தேர் புறப்பாடு நடைபெற்றது.
சுப்புராய பிள்ளை சத்திர மயானத்தில் மயானக் கொள்ளை விழா நடை பெற்றது. விழாவில் உருளை யன்பேட்டை தொகுதி தி.மு.க. பொறுப்பாளர் கோபால், தொகுதி செயலாளர் சக்திவேல் கிளை செயலாளர்கள் அகிலன், சசிகுமார் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
அம்மன் வேட மணிந்த பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க வீதி உலா வந்தனர். விழாவுக்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகிகள் வினோபா, கந்தசாமி, வேலு என்ற வேலாயுதம், இளைய பெருமாள், சண்முகம், மற்றும் ஊர் பொதுமக்கள், இளைஞர்கள், நிர்வாகிகள் செய்திருந்தனர்.






