search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவிந்தசாலை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில்  மயானக்கொள்ளை விழா நடைபெற்ற காட்சி.
    X
    கோவிந்தசாலை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா நடைபெற்ற காட்சி.

    அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா

    கோவிந்தசாலை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா நடந்தது.
    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை  கோவிந்தசாலை சின்ன பொய்கை அங்காள பரமேஸ்வரி கோவிலில் பிரம்மோற்சவம் மற்றும் 22-ம் ஆண்டு மயானக் கொள்ளை விழா நடை பெற்றது. 

    இதனையொட்டி, அம்மனுக்கு அபிஷேகம் வள்ளாள கோட்டை அழித்தல் நிகழ்ச்சி நடை பெற்று அம்மன் வீதி உலா நடந்தது. தொடர்ந்து  அபிஷேகம், தேர் புறப்பாடு நடைபெற்றது.

    சுப்புராய பிள்ளை சத்திர மயானத்தில் மயானக் கொள்ளை விழா  நடை பெற்றது. விழாவில்   உருளை யன்பேட்டை தொகுதி தி.மு.க. பொறுப்பாளர்  கோபால், தொகுதி செயலாளர்   சக்திவேல் கிளை செயலாளர்கள் அகிலன், சசிகுமார் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். 

    அம்மன் வேட மணிந்த பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க வீதி உலா வந்தனர்.  விழாவுக்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகிகள் வினோபா, கந்தசாமி, வேலு என்ற வேலாயுதம், இளைய பெருமாள், சண்முகம், மற்றும் ஊர் பொதுமக்கள், இளைஞர்கள், நிர்வாகிகள் செய்திருந்தனர்.
    Next Story
    ×