என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பா.ஜனதா ஆட்சியை கொண்டு வர சதி- காங்கிரஸ் ஆவேசம்

    புதுவையில் பா.ஜனதா ஆட்சியை கொண்டு வர சதி வேலையில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றச்சாட்டியுள்ளது.
    புதுச்சேரி :

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய பல்கலைக் கழகங்கள் மற்றும் அதன் இணைப்பில் உள்ள கல்லூரிகளுக்கு இந்த ஆண்டு “க்யூட்’ நுழைவு தேர்வு ஒன்றை புதிதாக மத்திய அரசின் பல்கலைக் கழக மானிய குழு கொண்டு வந்துள்ளது.

    இதன் மூலம் மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் சார்ந்த கல்லூரிகளில் உள்ள அனைத்து வகையான பட்ட படிப்புகள் மற்றும் முதுநிலை    படிப்புகள் அனைத்தையும்   தனது கட்டுப்பாட்டில் மத்திய அரசு வைத்து மாநிலத்தின் உரிமைகளை பறித்துள்ளது.

    மாநில பாடத்திட்டங்களில் படித்து வரும் மாணவர்களின் மேல்படிப்பு கனவுகளை கானல் நீராக மாற்றும் வேலை இது. மோடி அரசு பிற்படுத்தப் பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் அதாவது பெரும்பான்மை இந்துக் களின் கல்வி வாய்ப்பை பறித்து, உயர் ஜாதிகளுக்கு கொடுப்பதின் மூலம் இந்து மக்களுக்கு துரோகம் செய்கிறது.

    புதுவையில் ஆட்சியை மாற்றி பா.ஜனதா ஆட்சியை கொண்டு வர சதி வேலையில் ஈடுபட்டுள்ள பா.ஜ.க.வினர்  மத்திய அரசின் புதிய கல்வித் திட்டங்களையும், பல்கலைக் கழக நுழைவு தேர்வுகளையும் புதுவை மாநிலத்தில் நுழையாமல் என்.ஆர்.காங்கிரஸ்  பார்த்துக் கொள்ளும்  என்று எதிர்பார்க்கிறோம். காங்கிரஸ் கட்சியும் தனது தோழமை கட்சிகளோடு சேர்ந்து, தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி எதிர்க்கும்.

    இவ்வாறு ஏ.வி.சுப்ரமணியன் அறிக்கையில் கூறியுள்ளார்.
    Next Story
    ×