என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அப்துல் கலாம் குடியிருப்பு பகுதியில் கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு நடத்திய காட்சி.
    X
    அப்துல் கலாம் குடியிருப்பு பகுதியில் கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு நடத்திய காட்சி.

    அப்துல்கலாம் குடியிருப்பில் கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு

    உப்பளம் தொகுதி அப்துல்கலாம் குடியிருப்பில் கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.
    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி அப்துல் கலாம் குடியிருப்பு பல ஆண்டுகளாக பராமரிக் கப்படாமல் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.விடம் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். 

    உடனே கென்னடி எம்.எல்.ஏ-. அப்துல் கலாம் குடியிருப்பு பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு பாதாள வடிகாலில் சிமெண்டு அடுக்குகள் மூடப்படாமல் இருப்பதையும், தெரு விளக்குகள் எரியாமல் இருப்பதையும், தண்ணீர் பிரச்சினை மற்றும் குடி யிருப்பில் ஜன்னல் கதவுகள் உடைந்த நிலையில் இருப்பதையும் அப்பகுதி மக்கள் கென்னடி எம்.எல்.ஏ.விடம் தெரிவித்தனர். 
    பராமரிப்பு இல்லாமல் இருக்கும் காலி நிலம் குறித்தும் பொதுமக்கள் தெரிவித்தனர். 

    உடனே பொதுப் பணித் துறை இளநிலை பொறி யாளர் ராமனை சம்பவ இடத்துக்கு கென்னடி எம்.எல்.ஏ- வரவழைத்தார். அவரிடம் அப்துல் கலாம் குடியிருப்பில் பொது மக்களின் குறைகளை தீர்ப்பதற்கான வழிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.  பொதுப் பணித்துறை அதிகாரியிடம் மிக விரைவாக கோரிக்கை களை நிறைவேற்றும்படி அறிவுறுத்தினார்.

    இதுகுறித்து பொதுப் பணித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளதாக கென்னடி எம்.எல்.ஏ. தெரிவித்தார். 

    இந்த ஆய்வின் போது, தொகுதி தி.மு.க. செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, மாநில மீனவர் அணி அமைப்பாளர் தனசேகரன், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜி, கிளை செயலாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×