என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மொட்டை மாடியில் விவசாயம் செய்யும் என்ஜினீயரிங் பட்டதாரி
    X
    மொட்டை மாடியில் விவசாயம் செய்யும் என்ஜினீயரிங் பட்டதாரி

    மொட்டை மாடியில் நெல் விவசாயம் செய்யும் என்ஜினீயரிங் பட்டதாரி

    ஒன்றில் தொடங்குவது தான் 100 என்பதற்கு உதாரணமாக 26 வயதாகும் என்ஜினீயரிங் பட்டதாரி மோகன்ராஜ் ஒரு நெல் விவசாயியாக மாறி மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்.
    புதுச்சேரி:

    புதுவை மேல்சாத்த மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ்.

    2016-ல் என்ஜினீயர் பட்டம் பெற்ற இவர் சென்னையில் சில காலம் பணியாற்றினார். ஆனால், படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் தனது குடும்ப தொழிலான விவசாயம் பக்கம் திரும்பினார்.

    பள்ளி படிப்பின் போதே தந்தையுடன் சேர்ந்து விவசாய பணி செய்ததால் எளிதில் விவசாயம் கை கொடுத்துள்ளது.

    திருவெண்ணைநல்லூர் பகுதியில் விவசாயி முருகையன் 50 ரகத்தில் பாரம்பரிய நெல்லை 8 ஏக்கரில் இயற்கை முறையில் பயிரிட்டு வருகிறார்.

    அதுவும் ஒரு நெல்லை பயிரிட்டு முறையில் தங்களது குடும்பத்திற்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் பயிர் செய்ய திட்டமிட்டார்.

    ஆனால், பல காலமாய் ரசாயன உரங்களுக்கு பழகி போன நிலம் ஒரு நெல்லை மட்டும் வைத்து நட்டால் விளையாது என கூறி ஏற்கவில்லை.

    இதனால் விவசாயி முருகையனிடம் இலவசமாக பெற்ற கருப்பு கவுணி, மாப்பிள்ளை சம்பா விதை நெல்லை தனது வீட்டின் மொட்டை மாடியில் 800 சதுர அடி இடத்தில் 85 குரோ பையில் ஒரு பைக்கு ஒரு நெல் வீதம் மோகன்ராஜ் நட்டார்.

    இவரது ஆர்வத்தை பார்த்து பாரம்பரிய விதை சேகரிப்பாளர் சுந்தர் காட்டு யானம் ரக நெல்லையும் வாசனை சீரக சம்பா நெல்லையும் அளித்துள்ளார்.

    கடந்த நவம்பர் மாதம் ஒரு பைக்கு ஒரு நெல் என நட்டு ஒரு பங்கு மண் ஒரு பங்கு எரு மட்டுமே பயன்படுத்தி விவசாயம் செய்ததில் தற்போது 4 ரக நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாராகியுள்ளன.”ஒற்றை நெல்லில் விவசாயமா?” என கேலி செய்தவர்கள் இன்று வாயடைத்து போய் இருக்கிறார்கள்.

    இயற்கை முறையில் பாரம்பரிய நெல்லை விளைவிக்க குடும்பதார் சம்மதம் தெரிவித்து கொஞ்சம் நிலத்தையும் ஒதுக்கி கொடுத்துள்ளனர். இந்த நெற்கதிர்களை அடுத்த போகத்திற்கு வயலில் விதை நெல்லாக பயன்படுத்த இளம் விவசாயி மோகன் ராஜ் தயாராகி வருகிறார்.

    ஒன்றில் தொடங்குவது தான் 100 என்பதற்கு உதாரணமாக 26 வயதாகும் என்ஜினீயரிங் பட்டதாரி மோகன்ராஜ் ஒரு நெல் விவசாயியாக மாறி மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார். 
    Next Story
    ×