என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அகரம் பாரத் வித்யாஷ்ரம் பள்ளியில் ஓவியம்-கைவினை கண்காட்சி நடந்த காட்சி.
    X
    அகரம் பாரத் வித்யாஷ்ரம் பள்ளியில் ஓவியம்-கைவினை கண்காட்சி நடந்த காட்சி.

    ஓவியம்-கைவினை கண்காட்சி

    அகரம் பாரத் வித்யாஷ்ரம் பள்ளியில் ஓவியம்-கைவினை கண்காட்சி நடைபெற்றது.
    புதுச்சேரி:

    புதுவை அகரம் பாரத் வித்யாஷ்ரம் மேல்நிலைப்பள்ளியில் ஓவியம் மற்றும் கைவினைக் கண்காட்சி 'சித்தாரா 2021--2022' நடைபெற்றது. பள்ளி மாணவர்களின் கைவண்ணங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு இந்த கைவினை படைப்புகள் பள்ளியில் காட்சிப் படுத்தப்பட்டது.

    அழகிய ஓவியம் மற்றும் கைவினை கண்காட்சி சித்தாரா -2021-22 கைவினை கண்காட்சியை பத்மஸ்ரீ கலைமாமணி விருது பெற்ற கைவினை கலைஞர் முனுசாமி திறந்து வைத்தார். மேலும் மாணவர்களின் ஓவியம் மற்றும் கைவினை பொருட்களைப் பார்வையிட்டார்.

    பள்ளியின் தாளாளர் டாக்டர்.சந்தான கிருஷ்ணன், முதல்வர் சாந்திஜெயசுந்தர் மேற்பார்வையில் ஓவியம் மற்றும் கைவினை கண்காட்சி சிறப்பான முறையில் நடைபெற்றது.

     இந்நிகழ்ச்சியில் ஓவிய ஆசிரியர் , ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பெற்றோர்- ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம்  நடைபெற்றது.
    Next Story
    ×