என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆட்டோ டிரைவர்கள் மறியலில் ஈடுபட்ட காட்சி.
ஆட்டோ டிரைவர்கள் ‘திடீர்’சாலை மறியல்
பாலத்தின் குறுக்கே ஆட்டோக்களை நிறுத்தி ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டு டிரைவர்கள் ‘திடீர்’சாலை மறியலில் ஈடுபட்டனர்
புதுச்சேரி:
கொரோனா ஊரடங்கால் பொது போக்குவரத்து அனைத்தும் முடக்கப்பட்டது. இந்த காலத்துக்கு வாகன புதுப்பித்தல் உரிமம் கட்டும் படி போக்குவரத்துத்துறை நெருக்கடி கொடுத்தது. பல்வேறு போராட்டத்துக்கு பின் புதுவை அரசு 6 மாத கட்டணத்தை தள்ளுபடி செய்தது.
ஆட்டோ புதுப்பித்தல் கட்டணமாக ரூ.700 செலுத்தப்பட்டு வந்தது. இதை ரூ.4 ஆயிரத்து 600 ஆக உயர்த்தி கட்டும்படி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இதனால் ஆட்டோ தொழி லாளர்கள் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளனர். இதுமட்டுமின்றி காப்பீடு ரூ.8 ஆயிரம், சாலை வரி ரூ.ஆயிரத்து 500 செலுத்த வேண்டியுள்ளது. ஆட்டோவை புதுப்பிக்க தயார் செய்ய ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது.
பெட்ரோல் விலையும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர்த்தப்பட்ட புதுப்பித்தல் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி. புதுவை ஆட்டோ தொழி லாளர்கள் சங்கம் சார்பில் போக்குவரத்துத்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு ஏ.ஐ.டி.யூ.சி. ஆட்டோ சங்க மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம், ஆட்டோ சங்க மாநில தலைவர் சேகர், பொருளாளர். செந்தில் முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆட்டோ சங்க மாநில நிர்வாகிகள் பாளை யத்தான், ரவிச்சந்திரன், சிவசுப்பிரமணியன், வாசு, ஜீவா, முருகன், பிரகாஷ், ஜான், சதீஷ்குமார், ராஜி, சதிஷ், தேவ நாதன், கண்ணன், நடனமூர்த்தி, ஜெயபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டம் தொடங்கியவுடன் காலை 10.15 மணிக்கு 100 அடி சாலையில் மேம் பாலத்தின் இருபுறமும் நூற்றுக்கணக்கான ஆட்டோக் களை நிறுத்தி மறியல் செய்தனர். போக்கு வரத்து அலுவல கத்தை முற்றுகை யிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பாலத்தின் இருபுறம், சர்வீஸ் சாலைகளிலும் ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டதால் இருசக்கர வாகனங்கள், பஸ், லாரி என எந்த வாகனமும் செல்ல முடியவில்லை.
இதனால் பாலத்தின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஒரு கட்டத்தில் பொதுமக்கள் ஆட்டோ டிரைவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு வழிவிடும்படி வலியுறுத்தினர்.
ஆட்டோ சங்க நிர்வாகி கள், உங்களுக்காகத்தான் போராடுகிறோம் என்றனர். எங்களுக்காக போராடுவதாக இருந்தால் வழிவிடுங்கள். பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து செல்லும்போது நாங்கள் ஆட்டோவை மறித்தால் ஒத்துக்கொள்வீர்களா? என கேள்வி எழுப்பினர்.
இதனால் ஆட்டோ தொழி லாளர்கள், பொது மக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் ஆட்டோக்களை அப்புறப் படுத்தும்படி கூறினர். ஆனால் அவர்கள் ஆட்டோக் களை அகற்ற மறுத்து போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. கடலூருக்கு செல்லும் பால பாதையின் ஒருபுத்தில் இருசக்கர வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தி பொதுமக்கள் செல்ல தொடங்கினர்.
தொடர்ந்து மறு புறத்தில் போலீசார் இருசக்ககர வாகனங்களை ஒரே பாதை யில் போகவும், வரவும் செல்ல வழி ஏற்படுத்தினர். ஆனால், 100-க்கும் மேற்பட்ட கார்கள், பஸ்கள், லாரிகள் செல்ல முடியாமல் நின்று இருந்தது.
சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு போராட்டம் முடிந்தது.இதனால் பல்வேறு பணிகள் காரணமாக செல்ல அவ்வழியே வந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஏற்கனவே போக்கு வரத்துத்துறை அலுவலகம் முன்பு முற்றுகை என ஆட்டோ சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இதனால் போலீசார் முன்கூட்டியே மறியலை தடுத்திருக்க வேண்டும். இதை செய்யாததால் மக்கள் வெயிலில் கடும் அவதிக்கு ஆளாகினர். போராட்டம் நடந்த போதும் சில நிமிடங்களில் ஆட்டோக் களை அப்புறப் படுத்தாமல் அலட்சியமாக போலீசார் இருந்ததால் பொதுமக்கள் அவதிக் குள்ளாகினர்.
பிரதான சாலைகளில் இதுபோன்ற போராட்டங் களை அனுமதிப்பது பெரும் சட்டம்- ஒழுங்கு சீர் குலைவை ஏற்படுத்தும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
Next Story






