என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • அம்பேத்கார் மாற்றுத் திறனாளிகள் புரட்சி இயக்கம் சார்பில் சமூகநலத்துறை நுழைவு வாயில் முன்பு பிச்சையெடுக்கும் போராட்டம் நடந்தது.
    • முதல்-அமைச்சர் தலைமையில் மாற்றுத்திறனாளி பிரதி நிதிகள் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    அம்பேத்கார் மாற்றுத் திறனாளிகள் புரட்சி இயக்கம் சார்பில் சமூகநலத்துறை நுழைவு வாயில் முன்பு பிச்சையெடுக்கும் போராட்டம் நடந்தது.

    போராட்டத்துக்கு இயக்கத்தின் தலைவர் முத்துக்குமரன் தலைமை வகித்தார். துணைத்தலைவர்கள் பாலசுப்பிரமணியன், ராஜதுரை, செயலாளர் அந்தோணிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    துணை செயலாளர்கள் லட்சுமணன், கார்த்திகேயன், பொருளாளர் சுவாமிநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    மாதாந்திர உதவித்தொகையை பிரதிமாதம் 7-ந் தேதி வழங்க வேண்டும். முதல்-அமைச்சர் தலைமையில் மாற்றுத்திறனாளி பிரதி நிதிகள் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். 4 சதவீத வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். மேம்பாட்டுக்கழகத்தில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். குடியிருப்பில் 5 சதவீதம் ஒதுக்க வேண்டும். மருத்துவ சான்றிதழை சமூகநலத்துறை அலுவலகத்திலேயே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. கையில் தட்டேந்தி பொதுமக்களிடம் பிச்சையெடுத்தனர்.

    • புதுவை மாநிலத்தில் ரேஷன்கடைகளை திறந்து அரிசி, பருப்பு உட்பட அத்தியாவசிய பொருட் களை வழங்க வேண்டும்.
    • மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆகஸ்டு 2-ந் தேதி தலைமை செயலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் ரேஷன்கடைகளை திறந்து அரிசி, பருப்பு உட்பட அத்தியாவசிய பொருட் களை வழங்க வேண்டும்.

    மாநில அரசின் இலவச அரிசி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அரிசி வழங்காத 15 மாதங்களுக்கு சிகப்பு ரேஷன்கார்டுக்கு ரூ.9 ஆயிரமும், மஞ்சள் கார்டுக்கு ரூ.4 ஆயிரத்து 500-ம் உடனடியாக வழங்க வேண்டும்.

    தகுதியுள்ள ஏழைகளுக்கு சிகப்பு அட்டை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆகஸ்டு 2-ந் தேதி தலைமை செயலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.

    இதையொட்டி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தெருமுனை பிரசாரம், மக்கள் சந்திப்பு, கையெழுத்து இயக்கம் ஆகியவை நடத்தப்படுகிறது.

    தட்டாஞ்சாவடி குடிமைப்பொருள் வழங்கல்துறை முன்பு இன்று போராட்டத்தை தொடங்கினர். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பிரதேச செயலாளர் ராஜாங்கம் தலைமை வகித்தார்.

    முன்னாள் செயலாளர் பெருமாள், பிரதேசக்குழு உறுப்பினர் முருகன், கொளஞ்சியப்பன்,

    சி.ஐ.டி.யூ. சீனுவாசன், சந்தியா, இளவரசி, கலா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    பொதுமக்களிடம் கையெழுத்து பெறுவதை கட்சியின் முன்னாள் மத்தியக்குழு உறுப்பினர் சுதா சுந்தர்ராமன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து 1-ந் தேதி வரை புதுவையில் வீதி, வீதியாக பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

    • கர்நாடகா ராக்கிங் ஸ்டார் நடிகர் யாஷ் ரசிகர் மன்ற பெயர் பலகை ரெட்டியார்பாளையத்தில் நடந்தது.
    • ரசிகர் மன்ற திறப்பு நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    கர்நாடகா ராக்கிங் ஸ்டார் நடிகர் யாஷ் ரசிகர் மன்ற பெயர் பலகை ரெட்டியார்பாளையத்தில் நடந்தது.

    இந்நிகழ்ச்சிக்கு யாஷ் பேன்ஸ் கிளப் தலைமை சேர்மன் உமாசங்கர், துணை செயல் அதிகாரி விக்ரமாதித்தன், துணை சேர்மன்கள் சீனிவாச பெருமாள், அஸ்வின், பிரபாகரன், ராக்பேட்ரிக், யாஷ் பேன்ஸ் தலைவர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் முகிலன். பொருளாளர் சுபாஷ், துணைத்தலைவர்கள் பாபு. சங்கர், சசிதரன், சூர்யா, செயலாளர்கள் பிரான்சிஸ். ஆனந்தராஜ், சங்கர் கணேஷ், மருது, சந்திரபோஸ் மற்றும் 'யாஸ் பேன்ஸ் கிளப் கிளப் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ரசிகர் மன்ற திறப்பு நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. ஏழை - எளிய பொது மக்களுக்கு அரிசி மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

    • கனமழை மற்றும் கோதாவரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கின் காரணமாக ஏனாம் பிராந்திய மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டனர்.
    • புதுவை அரசு அறிவித்துள்ள ரூ.5 ஆயிரம் நிவாரணம் போதாது. ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    கனமழை மற்றும் கோதாவரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கின் காரணமாக ஏனாம் பிராந்திய மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டனர்.

    புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான சிவா தலைமையில்

    எம்.எல்.ஏ.க்கள் சம்பத், செந்தில்குமார், துணை அமைப்பாளர் செந்தில் குமார், சண்.குமாரவேல், முகிலன் உட்பட நிர்வாகிகள் ஏனாம் சென்று மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர். மக்க ளுக்கு உணவு உட்பட நிவாரண பொருட்களையும் வழங்கினர்.பின்னர் ஏனாம் மண்டல நிர்வாகி அமன்ஷர்மாவை சந்தித்து, வெள்ளப் பாதிப்பு, மீட்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.பின்னர் சிவா எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறிய–தாவது:-

    மழை மற்றும் கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் ஏனாம் பிராந்தியத்தில் உள்ள வீடு–களுக்குள் நீர் புகுந்துள்ளது. வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும் சேதமடைந்து, மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். புதுவை அரசு அறிவித்துள்ள ரூ.5 ஆயிரம் நிவாரணம் போதாது. ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

    கோதாவரி ஆற்றின் கரையில் தடுப்பு சுவர் கட்டாததுதான் வெள்ளத் துக்கு காரணம். உடனடியாக தடுப்பு சுவர் கட்ட வேண்டும். அரசுத்துறைகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வெள்ளத்தால் சேதமான ஏனாமிற்கு உயிர் கொடுக்க வேண்டும். முறையாக களப்பணி ஆற்ற வேண்டும்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி ஏனாம் பிராந்தி–யத்தின் மீது மனக்கசப்பை மறக்க வேண்டும். ஏனாம் பிராந்தியத்தை பார்வை–யிட்டு, மக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. கூறினார்.

    • தமிழகம்-புதுவை அளவில் அதிக வருமான வரி செலுத்தியவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது
    • விருது நடிகர் ரஜினிக்கு வழங்கப்பட்டது. ரஜினியின் சார்பில் அவரது மகள் ஐஸ்வர்யா இந்த விருதை பெற்றுக்கொண்டார்.

    புதுச்சேரி:

    தமிழகம்-புதுவை அளவில் அதிக வருமான வரி செலுத்தியவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் புதுவை கவர்னர் தமிழிசை கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.

    இந்த விருது நடிகர் ரஜினிக்கு வழங்கப்பட்டது. ரஜினியின் சார்பில் அவரது மகள் ஐஸ்வர்யா இந்த விருதை பெற்றுக்கொண்டார்.

    • ஜனாதிபதி தேர்தலில் 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக ஆதரவளித்துள்ளதாக வைத்திலிங்கம் எம்.பி. கூறியுள்ளார்.
    • தொகுதியின் நன்மைக்காக பிரச்சினையின் அடிப்படையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆளும் அரசை எதிர்த்தும், ஆதரவாகவும் செயல்படுவார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜனாதிபதி தேர்தலில் 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக ஆதரவளித்துள்ளதாக வைத்திலிங்கம் எம்.பி. கூறியுள்ளார். அவர் கூறும் 2. எம்.எல்.ஏ.க்களும் தேசிய ஜனநாயக அரசுக்கு ஆதரவளித்துள்ளதாக கடிதம் அளித்ததில்லை அவர்களது தொகுதியின் நன்மைக்காக பிரச்சினையின் அடிப்படையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆளும் அரசை எதிர்த்தும், ஆதரவாகவும் செயல்படுவார்கள்.

    இது அவர்களுடைய நிலைப்பாடு.

    இதைக் கூட புரிந்து கொள்ளாமல் சம்பந்தப்பட்ட 2 எம்.எல்.ஏ.க்களும் எங்கள் அரசுக்கு எப்போது ஆதரவு அளித்தார்கள் என காங்கிரஸ் வைத்தியலிங்கம் எம்.பி. தெளிவுபடுத்த வேண்டும்.ஆளும் அரசுக்கு எதிராக முன்னுக்கு பின் முரணாக பேசும் காங்கிரஸ் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமியையும் மிஞ்சும் வகையில் காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் பேசுவது சரியானது அல்ல.

    ஆக்கிரமிப்புகளை உடனுக்குடன் தடுக்க தவறியதால் புதுவை நகரமே போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது. பல வியாபார நிறுவனங்கள், கடைகளுக்கு வரும் பொது மக்கள் வாகனத்தை நிறுத்த இடமில்லாததால் சாலை முழுவதும் வர்த்தக நிறுவன உபயோகத்திற்கு சொந்தமாக்கப்பட்டுள்ளது பார்க்கிங் வசதி இல்லாத வியாபார நிறுவனங்களுக்கு புதுவை பிளானிங் அத்தாரிட்டி எப்படி அனுமதி வழங்கி உள்ளது என்று தெரியவில்லை.

    அரசு அதிகாரிகள் சட்டத்துக்கு உட்பட்டு பணி செய்வதை தடுக்கும் எந்த அமைப்பாக இருந்தாலும் அவர்களை அரசு புறந்தள்ள வேண்டும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய அரசு எடுக்கும் நேர்மையான பாரபட்சம் இல்லாத நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல்வாதிகளின் செயலை மக்கள் முன் கொண்டு வருவதில் அரசு தவற கூடாது..

    இவ்வாறு அன்பழகன் அறிக்கையில் கூறியுள்ளார்.

    • உலக பணக்காரர் வரிசையில் அதானி 4-ம் இடத்துக்கு உயர்ந்திருப்பதும், இந்தியாவின் பொருளாளதார வீழ்ச்சிக்கும் தொடர்பு இல்லை என கூற முடியாது.
    • அதானியின் நிறுவனத்திடமிருந்து ரூ.20 ஆயிரத்துக்கு மேல் வாங்க மத்திய அரசு கட்டாயப்படுகிறது என முதல்-அமைச்சர் சந்திரசேகர் ராவ் குற்றம்சாட்டுகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உலக பணக்காரர் வரிசையில் அதானி 4-ம் இடத்துக்கு உயர்ந்திருப்பதும், இந்தியாவின் பொருளாளதார வீழ்ச்சிக்கும் தொடர்பு இல்லை என கூற முடியாது. தெலுங்கானாவில் ஒரு டன் நிலக்கரி ரூ.4 ஆயிரத்துக்கு கிடைக்கிறது. அதானியின் நிறுவனத்திடமிருந்து ரூ.20 ஆயிரத்துக்கு மேல் வாங்க மத்திய அரசு கட்டாயப்படுகிறது என முதல்-அமைச்சர் சந்திரசேகர் ராவ் குற்றம்சாட்டுகிறார்.

    வர்த்தகத்திலும், தொழில் துறையிலும் வெற்றி பெற்ற இந்தியர்கள், பணக்காரர்கள், நம்நாட்டு குடியுரிமையை வேண்டாம் என கூறிவிட்டு, வெளிநாட்டில் குடியுரிமை பெற்று வருகின்றனர். 2020-21-ம் நிதியாண்டில் 1.63 லட்சம் பேர், இந்திய பாஸ்போர்ட் வேண்டாம் என கூறியுள்ளனர். இது மிகவும் ஆபத்தான தகவல். பா.ஜனதா ஆட்சிக்கு வந்த 2014 முதல் 4½ லட்சம் இந்தியர்கள் வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளனர்.

    இந்தியாவில் அந்நிய முதலீடுகள் வெளியேறுகிறது, குறைகிறது, அமெரிக்க டாலர் கையிருப்பும் குறைந்து வருகிறது. அந்நிய செலவாணி கையிருப்பும் வேகமாக குறைந்து வருகிறது.

    இன்னும் ஓராண்டில் கச்சா எண்ணெய் உட்பட இந்தியாவுக்கு அவசியமான எந்த பொருட்களும் இறக்குமதி செய்ய முடியாமல், இலங்கை நிலைக்கு தள்ளப்படும்.

    பிறகு மக்கள் புரட்சியை இந்த பா.ஜனதா அரசு சந்திக்க நேரிடும்.

    பா.ஜனதா கூட்டணி கட்சிகள் அதிலிருந்து வெளியேற திட்டமிடும். புதிய கூட்டணி இல்லாம் பா.ஜனதா தனிமைப்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • புதுவையில் வாகன போக்குவரத்து நெரிசல் நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
    • போக்குவரத்து காவல்துறையினர் சரி செய்யாததால் குழந்தைகள் சாலை விபத்தில் இறக்கும் வேதனையான நிகழ்வுகள் நடக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் வாகன போக்குவரத்து நெரிசல் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதை போக்குவரத்து காவல்துறையினர் சரி செய்யாததால் குழந்தைகள் சாலை விபத்தில் இறக்கும் வேதனையான நிகழ்வுகள் நடக்கிறது.

    இந்திராகாந்தி சிலை முதல் மூலக்குளம் வரையிலும், மரப்பாலம் முதல் அரியாங்குப்பம் வரையிலும் அதிக நெரிசலால் விபத்துகள் நிகழ்கிறது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்படும் நெரிசலால் உள்ளூர் மக்கள் சாலையில் செல்லவே முடியவில்லை.

    எனவே போக்குவரத்து நெரிசலை உடனடியாக அரசு சரி செய்ய வேண்டும்.

    அரசு அலுவலகங்கள், பள்ளிகள் திறக்கும் நேரம் ஒன்றாக இருப்பதால் அதிக விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே பள்ளிகள் திறக்கும் நேரத்தையும், முடியும் நேரத்தையும் ஒவ்வொரு பகுதியிலும் மாற்றி அமைப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும். அரசு அலுவலக நேரத்தை மாற்றி அமைக்கவும் வழி செய்ய வேண்டும்.

    ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும். ஒரே பக்கத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும். ஒரு வழிப்பாதைகளை அமல்படுத்த வேண்டும். இனியும் பெண்கள், குழந்தைகள் இறப்பு நிகழக்கூடாது.

    புதிதாகி தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி திரவுபதிமுர்முவுக்கு வாழ்த்துக்கள்.

    அவர் கடந்தகாலத்தில் பிரணாப் முகர்ஜி பெற்ற வாக்குகளை விட குறைவாகவே பெற்றுள்ளார். இதையும் மத்திய அரசு பல மாநிலங்களை மிரட்டி, விலை பேசி ஓட்டுகளை வாங்கியுள்ளனர்.

    புதுவையில் ஆளும்கட்சியின் வாக்குகள் சிதறியுள்ளது. ஆட்சிக்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் செல்லாத ஒட்டையும், மற்றொருவர் யஷ்வந்த் சின்காவுக்கும் வாக்களித்துள்ளார். இதன் மூலம் புதுவையிலும் மகராஷ்டிராவை போல ஒரு ஏக்நாத் ஷிண்டே உருவாகுகிறாரோ என்ற சந்தேகம் எற்பட்டுள்ளது. புதுவை ஆட்சி நிலையற்ற தன்மையை அடைந்துள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • காதல் திருமணம் செய்து வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்ததை தட்டிக்கேட்ட மனைவி-மாமனாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • புதுவை வம்பாகீரப் பாளையம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி.

    புதுச்சேரி:

    காதல் திருமணம் செய்து வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்ததை தட்டிக்கேட்ட மனைவி-மாமனாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை வம்பாகீரப் பாளையம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. மீனவர். இவரது இளைய மகள் மகேஸ்வரி(வயது25). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கண்டாக்டர் தோட்டத்தை சேர்ந்த நாகராஜ்(28) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகள் உள்ளார். தற்போது மகேஸ்வரி 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இதற்கிடையே மகேஸ்வரிக்கும் அவரது கணவர் நாகராஜிக்கும் அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்படும். அப்போ தெல்லாம் தகவல் அறிந்து சுப்பிரமணி இருவரையும் சமாதானம் செய்து வைத்து விட்டு செல்வார்.

    இந்த நிலையில் நாகராஜிக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த மகேஸ்வரி கணவரை கண்டித்தார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுபற்றி மகேஸ்வரி தனது தந்தைக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து சுப்பிரமணி மகள் வீட்டுக்கு வந்தார். அப்போது மகேஸ்வரியை அவரது கணவர் நாகராஜ் பெல்டால் தாக்கி கொண்டிருந்தார். இதனை பார்த்ததும் சுப்பிரமணி மருமகனை தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ் தகாத வார்த்தைகளால் திட்டி அவரை தாக்கி கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்று விட்டார்.

    இந்த தாக்குதலில் காயமடைந்த மகேஸ்வரி ராஜீவ்காந்தி குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து சுப்பிரமணி ஓதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நெட்டப்பாக்கம்-மடுகரையில் குடிபோதையில் தகராறு செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • நெட்டப்பாக்கம் போலீசார் காண்டீபன் மற்றும் கார்த்திகைராஜன் ஆகியோர் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம்-மடுகரையில் குடிபோதையில் தகராறு செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    நெட்டப்பாக்கம் போலீசார் காண்டீபன் மற்றும் கார்த்திகைராஜன் ஆகியோர் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நெட்டப்பாக்கத்தில் ஒரு தனியார் கம்பெனி அருகே ஒரு வாலிபர் குடிபோதையில் நின்றுக்கொண்டு அவ்வழியே செல்வோரை திட்டி ரகளை செய்து கொண்டிருந்தார்.

    மேலும் அவர் சிலரிடம் தகராறிலும் ஈடுபட்டார். இதையடுத்து ரோந்து சென்ற போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தமிழக பகுதியான வி.மாத்தூரை சேர்ந்த சக்திவேல்(வயது24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    அதுபோல் மடுகரை-சிறுவந்தாடு ரோடு சந்திப்பில் மது குடித்து விட்டு ஒருவர் ரகளை செய்வதாக மடுகரை புறக்காவல் நிலைய போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரகளையில் ஈடுபட்ட வாலிபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் தமிழக பகுதியான அரசமங்கலம் பகுதியை சேர்ந்த பாலகுரு என்ற பிரதாப்(24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    இதுபோல் திருக்கனூர் அருகே கே.ஆர்.பாளையம் புளியந்தோப்பு பகுதியில் குடிபோதையில் ரகளை செய்த விக்கிரவாண்டி அருகே மூங்கில் பேட்டையை சேர்ந்த அன்பரசன்(46) என்பவரை திருக்கனூர் போலீசார் கைது செய்தனர்.

    • புதுவை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கை
    • ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட திரவுபதி முர்முவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட திரவுபதி முர்முவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

    ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் தமிழக முதல்- அமைச்சர் ஆதரித்த மதச்சார்பற்ற கூட்டணியின் வேட்பாளருக்கு புதுவையில் கூடுதலாக ஒரு வாக்கு கிடைத்திருப்பது எங்கள் அணிக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறோம்.

    இவ்வாறு சிவா அறிக்கையில் கூறியுள்ளார்.

    • சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மகாபலிபுரத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது.
    • உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டரங்கில் கவர்னர் தமிழிசை ஜோதியை வரவேற்று தொடர் ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மகாபலிபுரத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது.

    இதற்கான ஒலிம்பியாட் ஜோதி புதுவைக்கு வந்தது. உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டரங்கில் கவர்னர் தமிழிசை ஜோதியை வரவேற்று தொடர் ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமி நாராயணன், கென்னடி எம்.எல்.ஏ. கல்வித்துறை செயலர் முத்தம்மா, கல்வித்துறை இயக்குனர் ருத்ர கவுடு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

    செஸ்போட்டியில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். பிரதமர் போட்டியை தொடங்கி வைக்க வருவது நமக்கு பெருமை. பிரதமர் விளையாட்டு வீரர்களை அழைத்து தேநீர் விருந்து வைக்கிறார், வெற்றி பெற்றவர்களை பாராட்டுகிறார். நம் கலாச்சாரத்தை உலக நாடுகள் அறியும் வகையில் ஒலிம்பியாட் அமையும். மாணவர்கள் படிப்புக்கு மேல் விளையாட்டையும் கற்க வேண்டும்.

    வாழ்க்கையில் எதையும் போட்டியாக எடுத்து, சாதனை புரிய விளையாட்டு கற்றுத்தருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    செஸ் போட்டிகள் மூளைக்கு வேலை கொடுக்கிறது. இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் செஸ் விளையாட்டில் தேர்ந்த வீரர்கள் உள்ளனர்.

    விமான பணி பெண்களுக்கு முதலுதவி கொடுப்பதில் பயிற்சி கொடுக்க வேண்டும் என்பது என் கருத்து. மருத்துவ உபகரணங்களை உடனடியாக எடுத்து சிகிச்சை தரும் வகையில் விமானங்களில் முதலுவித பெட்டிகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×