என் மலர்
புதுச்சேரி

ஏனாம் மண்டல நிர்வாகி அமன்ஷர்மாவை எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசினர்.
மன கசப்பை மறந்து செயல்பட வேண்டும்- எதிர்கட்சித்தலைவர் சிவா வேண்டுகோள்
- கனமழை மற்றும் கோதாவரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கின் காரணமாக ஏனாம் பிராந்திய மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டனர்.
- புதுவை அரசு அறிவித்துள்ள ரூ.5 ஆயிரம் நிவாரணம் போதாது. ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
புதுச்சேரி:
கனமழை மற்றும் கோதாவரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கின் காரணமாக ஏனாம் பிராந்திய மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டனர்.
புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான சிவா தலைமையில்
எம்.எல்.ஏ.க்கள் சம்பத், செந்தில்குமார், துணை அமைப்பாளர் செந்தில் குமார், சண்.குமாரவேல், முகிலன் உட்பட நிர்வாகிகள் ஏனாம் சென்று மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர். மக்க ளுக்கு உணவு உட்பட நிவாரண பொருட்களையும் வழங்கினர்.பின்னர் ஏனாம் மண்டல நிர்வாகி அமன்ஷர்மாவை சந்தித்து, வெள்ளப் பாதிப்பு, மீட்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.பின்னர் சிவா எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறிய–தாவது:-
மழை மற்றும் கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் ஏனாம் பிராந்தியத்தில் உள்ள வீடு–களுக்குள் நீர் புகுந்துள்ளது. வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும் சேதமடைந்து, மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். புதுவை அரசு அறிவித்துள்ள ரூ.5 ஆயிரம் நிவாரணம் போதாது. ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
கோதாவரி ஆற்றின் கரையில் தடுப்பு சுவர் கட்டாததுதான் வெள்ளத் துக்கு காரணம். உடனடியாக தடுப்பு சுவர் கட்ட வேண்டும். அரசுத்துறைகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வெள்ளத்தால் சேதமான ஏனாமிற்கு உயிர் கொடுக்க வேண்டும். முறையாக களப்பணி ஆற்ற வேண்டும்.
முதல்-அமைச்சர் ரங்கசாமி ஏனாம் பிராந்தி–யத்தின் மீது மனக்கசப்பை மறக்க வேண்டும். ஏனாம் பிராந்தியத்தை பார்வை–யிட்டு, மக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. கூறினார்.






