என் மலர்
புதுச்சேரி

நடிகர் யாஷ் ரசிகர் மன்ற திறப்பு விழாவில் உமாசங்கர் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட காட்
நடிகர் யாஷ் ரசிகர் மன்றம் திறப்பு
- கர்நாடகா ராக்கிங் ஸ்டார் நடிகர் யாஷ் ரசிகர் மன்ற பெயர் பலகை ரெட்டியார்பாளையத்தில் நடந்தது.
- ரசிகர் மன்ற திறப்பு நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
கர்நாடகா ராக்கிங் ஸ்டார் நடிகர் யாஷ் ரசிகர் மன்ற பெயர் பலகை ரெட்டியார்பாளையத்தில் நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு யாஷ் பேன்ஸ் கிளப் தலைமை சேர்மன் உமாசங்கர், துணை செயல் அதிகாரி விக்ரமாதித்தன், துணை சேர்மன்கள் சீனிவாச பெருமாள், அஸ்வின், பிரபாகரன், ராக்பேட்ரிக், யாஷ் பேன்ஸ் தலைவர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் முகிலன். பொருளாளர் சுபாஷ், துணைத்தலைவர்கள் பாபு. சங்கர், சசிதரன், சூர்யா, செயலாளர்கள் பிரான்சிஸ். ஆனந்தராஜ், சங்கர் கணேஷ், மருது, சந்திரபோஸ் மற்றும் 'யாஸ் பேன்ஸ் கிளப் கிளப் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ரசிகர் மன்ற திறப்பு நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. ஏழை - எளிய பொது மக்களுக்கு அரிசி மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது.






