என் மலர்
புதுச்சேரி
- புதுவை சுப்பராய பிள்ளை சத்திரம் நகர் அம்மன் கோவில் வீதியுள்ள உள்ள அரசடி புற்றுமாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாத திருவிழா நடந்து வருகிறது.
- உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. நேரு பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
புதுச்சேரி:
புதுவை சுப்பராய பிள்ளை சத்திரம் நகர் அம்மன் கோவில் வீதியுள்ள உள்ள அரசடி புற்றுமாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாத திருவிழா நடந்து வருகிறது.
மலர் மாலை, மின்விளக்கு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. இதில் உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. நேரு பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் ஆலய நிர்வாகிகளான ஜெயக்குமார், வித்யாபதி, கதிர் பாலசுப்பிரமணியம், அன்பழகன், ராஜசேகரன், ஆனந்த், மணி, மனோகரன், பன்னீர்செல்வம், குமரவேல்,பரமேஸ்வரி, கங்காதரன், அப்பகுதியை சேர்ந்த பாலு, அன்பழகன், ராஜா, சேவியர், ஜோதிகுமார், இஸ்மாயில், லிகோரின், அலெக்ஸ், அசோக், மகேஷ், சூர்யா, ரஞ்சித், மோகன், ஜெகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான சட்டசபை கூட்டத்தொடர் அடுத்தமாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி கூடுகிறது.
- அன்றைய தினம் கவர்னர் தமிழிசை உரையாற்றி கூட்டத்தொடரை தொடங்கி வைக்கிறார்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதில்லை. மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட்டும், ஆகஸ்ட், செப்டம்பரில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டிலும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. மார்ச் மாதம் 5 மாத செலவினங்களுக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான சட்டசபை கூட்டத்தொடர் அடுத்தமாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி கூடுகிறது. அன்றைய தினம் கவர்னர் தமிழிசை உரையாற்றி கூட்டத்தொடரை தொடங்கி வைக்கிறார்.
மறுநாள் நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என தெரிகிறது. கூட்டத்தொடர் குறைந்த பட்சம் 15 நாட்கள் நடைபெறும் என தெரிகிறது.
இத்தகவலை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை 15-வது சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் வரும் ஆகஸ்டு 10-ந் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. அலுவல் ஆய்வுக்குழு கூடி சட்டசபை அலுவல் நாட்களை முடிவு செய்யும். முழு பட்ஜெட்டை முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்வார். காகிதமில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்ய தகவல் தொழில்நுட்ப துறையுடன் பேசி வருகிறோம்.
2012-க்கு பிறகு புதுவை கணக்கை முழுமையாக அதிகாரிகள் தாக்கல் செய்யவில்லை. இதற்காக தனி தணிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக அரங்கில் நாளை (புதன்கிழமை) தணிக்கை குழுவின் கூட்டம் நடக்கிறது. இதில் கவர்னர் தமிழிசை தலைமையில் 600 அதிகாரிகள் பங்கேற்கின்றனர். நானும், பொதுக்கணக்கு குழு தலைவர் கே.எஸ்.பி. ரமேசும் பங்கேற்கிறோம்.
இந்த பட்ஜெட்டில் செலவினங்களை சமர்பித்த பிறகுதான் அடுத்த பட்ஜெட்டில், துறைகளுக்கு நிதி ஒதுக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
கணக்குகளை முழுமையாக ஒப்படைக்கும்போது மத்திய அரசிடம் இருந்து கூடுதலாக நிதி கிடைக்கும். ஒத்துழைப்பு அளிக்காத அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறோம். 25 சதவீத அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவதில்லை.
சட்டமன்றத்தில் பதாகைகள், பேனர் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. புதிய சட்டமன்ற கட்டிடத்தை கட்ட டெல்லியை சேர்ந்த நிறுவனத்திடம் ஒப்படைக்க உள்ளோம். விரைவில் பூமி பூஜை நடத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- புதுவை லாஸ்பேட்டை மகாவீர் நகர் 4-வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் சீனுவாசபெருமாள்.
- புதுவை கலால்துறையில் இயக்குனர் பதவி வாங்கி தருவதாக சீனுவாசபெருமாளிடம் கூறினர்.
புதுச்சேரி:
புதுவை கலால்துறையில் இயக்குனர் பதவி வாங்கி தருவதாக ஜவுளிக்கடை உரிமையாளரிடம் ரூ.26 லட்சம் மோசடி செய்த சென்னை கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுவை லாஸ்பேட்டை மகாவீர் நகர் 4-வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் சீனுவாசபெருமாள். இவர் புதுவை நேரு வீதியில் பிரபல ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.
இவருக்கு நண்பர் மூலம் சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த பிரேமாவதி, சென்னை கொளப்பாக்கத்தை சேர்ந்த செந்தில் மற்றும் கணேசமூர்த்தி, சவுந்தர் ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போன் மூலம் அறிமுகமானார்கள்.
அப்போது தங்களுக்கு மத்திய அரசின் அதிகாரியுடன் நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும், அவர்கள் மூலம் புதுவை கலால்துறையில் இயக்குனர் பதவி வாங்கி தருவதாக சீனுவாசபெருமாளிடம் கூறினர்.
இதனை நம்பி சீனுவாசபெருமாள் ரூ.26 லட்சத்தை அவர்களிடம் கொடுத்தார். ஆனால் அவர்கள் கலால்துறை இயக்குனர் பதவியை வாங்கி கொடுக்கவில்லை. இதுபற்றி சீனுவாசபெருமாள் கேட்ட போது பல்வேறு காரணங்களை கூறி இழுத்தடித்து வந்தனர். மேலும் பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.
இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த சீனுவாசபெருமாள் இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் பணம் மோசடி செய்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி தலைமையில் மக்கள் பெருந்திரள் தூய்மை பணி நடந்தது.
- நகராட்சி ஆணையாளர் பானுமதி முன்னிலை வகித்தார்.
புதுச்சேரி:
கோட்டக்குப்பம் நகர்மன்ற தலைவர் எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி தலைமையில் மக்கள் பெருந்திரள் தூய்மை பணி நடந்தது. நகராட்சி ஆணையாளர் பானுமதி முன்னிலை வகித்தார்.
நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து தூய்மைப்பணி மற்றும் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். தந்திராயன்குப்பம் கடற்கரையில் மரக்கன்றுகள் நடப்பட்டு, 25-வது வார்டில் நீர் நிலை குட்டை தூர்வாரப்பட்டு பனை விதைகள் விதைக்கப்பட்டது.
மேலும் "என் குப்பை என் பொறுப்பு" என்னும் தலைப்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிவசக்தி கலைக்குழு மூலம் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும் வீடுகளில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் வழங்கிய மகளிருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
- இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பூமி பூஜை செய்து வைத்து, பணியை தொடங்கி வைத்தார்.
- சிமெண்ட் சாலை சீரமைக்க மொத்தம் ரூ.36 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் பாகூர் சரஸ்வதி நகரில் தார் சாலை அமைத்தல், குருவிநத்தம் பெரியார் நகரில் சிமெண்ட் சாலை செப்பனிடுதல், இருளஞ்சந்தை பேட் பாலம் அமைத்து சிமெண்ட் சாலை சீரமைக்க மொத்தம் ரூ.36 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பூமி பூஜை செய்து வைத்து, பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், மேலாளர் ரவி, உதவி பொறியாளர் முத்துசிவம், இளநிலை பொறியாளர் பிரதீப்குமார் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- புதுவை வம்பாகீரப்பாளையத்தில் அரசு பெண்கள் தொழிற்பயிற்சி நிலையம் உள்ளது.
- இங்கு நவீன வசதிகள் கொண்ட கணிணி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை வம்பாகீரப்பாளையத்தில் அரசு பெண்கள் தொழிற்பயிற்சி நிலையம் உள்ளது.
இங்கு நவீன வசதிகள் கொண்ட கணிணி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 60 கணிணிகள், கண்காணிப்பு கருவிகள், வைரஸ் தடுப்பு மென்பொருள், அதிவேக இணையதள இணைப்பு, ஒருங்கிணைந்த சர்வர் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த மையத்தை தொழிற்ப யிற்சி மாணவிகள் பயன்படுத்துவதுடன், பிற நிறுவனங்கள் ஆன்லைன் தேர்வு, பயிற்சிகளுக்கு வாடகை அடிப்படையிலும் வழங்கப்பட உள்ளது. இந்த மையத்தை அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமை வகித்து திறந்து வைத்தார். தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் வரவேற்றார். கென்னடி எம்.எல்.ஏ. வாழ்த்தி பேசினார். தொழிலாளர் துறை செயலர் சுந்தரேசன், துணை செயலர் முத்துமீனா, முதல்வர்கள் அழகானந்தம், சோமசுந்தரம் உட்பட பலர் கலந்துகொண்டனர். சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.
- புதுவையில் 875 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
- புதுவையில் 73, காரைக்காலில் 15, பேர் என புதிதாக 88 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுச்சேரி:
புதுவையில் 875 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் புதுவையில் 73, காரைக்காலில் 15, பேர் என புதிதாக 88 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 19, காரைக்காலில் 1, ஏனாமில் 3 பேர் என 23 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 982, காரைக்காலில் 194, ஏனா மில் 28, மாகியில் 4 பேர் என ஆயிரத்து 208 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவையில் 104, காரைக்காலில் 47 என 151 பேர் சி கிச்சையில் குணமடைந்தனர்.
இந்த தகவலை சுகாதா ரத்துறை தெரிவித்துள்ளது.
- புதுச்சேரியில் இருந்து வந்தவாசிக்கு காரில் மது பாட்டில் கடத்திய வாலிபரை மதுவிலக்கு போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
- திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் இருந்து வந்தவாசிக்கு காரில் மது பாட்டில் கடத்திய வாலிபரை மதுவிலக்கு போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனை செய்தனர். காருக்குள் 6 அட்டை பெட்டிகளில் 288 மது பாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
விசாரணையில் காரை ஒட்டி வந்தவர் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த நெல்லியாங்குளம் பகுதியைச் சேர்ந்த மாசிலாமணி மகன் சுரேஷ் (வயது 37) என்பதும், புதுவையில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்தியதும் தெரிய வந்தது.
சுரேசை கைது செய்த போலீசார் மது பாட்டில்கள் மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர்.
- சேதராப்பட்டு மயிலம் சாலையில் பிரபல கனரக தொழிற்சாலை உள்ளது.
- தொழிற்சாலை வாசலில் முற்றுகை போராட்டம் செய்து வந்தனர்.
புதுச்சேரி :
சேதராப்பட்டு மயிலம் சாலையில் பிரபல கனரக தொழிற்சாலை உள்ளது. இந்த கம்பெனியில் சுமார் 1500 மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இந்த கம்பெனியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் 259 பேர் தங்களுக்கு பணி நியமனம் குறைந்தபட்ச ஊதியம் கிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் முதல் நிர்வாகத்துடன் கோரிக்கை வைத்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 4 நாட்களாக தொழிலாளர்கள் இரவு பகலாக அங்கேயே சமைத்து சாப்பிட்டு தொழிற்சாலை வாசலில் முற்றுகை போராட்டம் செய்து வந்தனர். தொழிற்சாலையில் பணியாற்றும் யாரையும் இவர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை.
இன்று 259 தொழிலாளர்கள் குடும்பத்தோடு தொழிற்சாலையில் வாசலை மூடி முற்றுகை போராட்டம் நடத்தினர்.
அப்போது சம்பவ இடத்திற்கு வந்த வில்லியனூர் தாசில்தார் கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் .
கம்பெனியில் பணியாற்றும் 135 நிரந்தர ஊழியர்களை மட்டுமாவது உள்ளே அனுமதிக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். இந்த கோரிக்கையை மட்டும் ஏற்ற போராட்டக்காரர்கள். தங்களுக்கு நீதி கிடைக்கும் வரை கம்பெனியின் வாசலில் தொடர்ந்து போராட்டம் நடத்துவதாக கூறியதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகரக்குழு சார்பில் நகராட்சி நிர்வாகத்தை சங்கு ஊதி எழுப்பும் போராட்டம் நடந்தது.
- மாநிலக்குழு உறுப்பி னர்கள் சிவகுருநாதன், இன்பமொழி, நகரக்குழு உறுப்பினர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரி:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகரக்குழு சார்பில் நகராட்சி நிர்வாகத்தை சங்கு ஊதி எழுப்பும் போராட்டம் நடந்தது.
போராட்டத்தையொட்டி நேருவீதி, பழைய சிறைச் சாலை வளாகம் முன்பு கட்சி நிர்வாகிகள் ஒன்று கூடினர். அங்கிருந்து புறப்பட்ட ஊர்வலத்துக்கு நகர செயலாளர் ஜீவானந்தம், துணை செயலாளர்கள் பன்னீர்செல்வம், சசிக்குமார் தலைமை வகித்தனர்.
மாநிலக்குழு உறுப்பி னர்கள் சிவகுருநாதன், இன்பமொழி, நகரக்குழு உறுப்பினர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊர்வலத்தை முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன் தொடங்கி வைத்தார். ஊர்வலம் மிஷன் வீதி வழியாக உள்ளாட்சித்துறை அலுவலகத்தை அடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், நிர்வாகக்குழு உறுப்பினர் சேதுசெல்வம், நிர்வாகிகள் ஆனந்து, சகாயராஜ், ஜெயமூர்த்தி, ராதாகிருஷ்ணன், முத்து லட்சுமி, ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகிகள் தயாளன், பாலன், வெள்ளிகிரி, குமார் உட்பட பலர் பங்கேற்னர். நகராட்சிக்கு வருவாய் தரும் பெரியமார்க்கெட்டில் அடிக்காசு பெற்றுக் கொண்டு, வியாபாரி களுக்கு சுகாதார வசதி, மின் வசதி, கழிப்பிடம், குடிநீர் வசதி செய்து தராத நகராட்சி நிர்வாகத்தை தட்டி எழுப்பும் வகையில் சங்கு ஊதினர்.
- அம்பேத்கார் மாற்றுத் திறனாளிகள் புரட்சி இயக்கம் சார்பில் சமூகநலத்துறை நுழைவு வாயில் முன்பு பிச்சையெடுக்கும் போராட்டம் நடந்தது.
- முதல்-அமைச்சர் தலைமையில் மாற்றுத்திறனாளி பிரதி நிதிகள் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும்.
புதுச்சேரி:
அம்பேத்கார் மாற்றுத் திறனாளிகள் புரட்சி இயக்கம் சார்பில் சமூகநலத்துறை நுழைவு வாயில் முன்பு பிச்சையெடுக்கும் போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு இயக்கத்தின் தலைவர் முத்துக்குமரன் தலைமை வகித்தார். துணைத்தலைவர்கள் பாலசுப்பிரமணியன், ராஜதுரை, செயலாளர் அந்தோணிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துணை செயலாளர்கள் லட்சுமணன், கார்த்திகேயன், பொருளாளர் சுவாமிநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.
மாதாந்திர உதவித்தொகையை பிரதிமாதம் 7-ந் தேதி வழங்க வேண்டும். முதல்-அமைச்சர் தலைமையில் மாற்றுத்திறனாளி பிரதி நிதிகள் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். 4 சதவீத வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். மேம்பாட்டுக்கழகத்தில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். குடியிருப்பில் 5 சதவீதம் ஒதுக்க வேண்டும். மருத்துவ சான்றிதழை சமூகநலத்துறை அலுவலகத்திலேயே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. கையில் தட்டேந்தி பொதுமக்களிடம் பிச்சையெடுத்தனர்.
- புதுவை மாநிலத்தில் ரேஷன்கடைகளை திறந்து அரிசி, பருப்பு உட்பட அத்தியாவசிய பொருட் களை வழங்க வேண்டும்.
- மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆகஸ்டு 2-ந் தேதி தலைமை செயலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் ரேஷன்கடைகளை திறந்து அரிசி, பருப்பு உட்பட அத்தியாவசிய பொருட் களை வழங்க வேண்டும்.
மாநில அரசின் இலவச அரிசி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அரிசி வழங்காத 15 மாதங்களுக்கு சிகப்பு ரேஷன்கார்டுக்கு ரூ.9 ஆயிரமும், மஞ்சள் கார்டுக்கு ரூ.4 ஆயிரத்து 500-ம் உடனடியாக வழங்க வேண்டும்.
தகுதியுள்ள ஏழைகளுக்கு சிகப்பு அட்டை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆகஸ்டு 2-ந் தேதி தலைமை செயலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.
இதையொட்டி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தெருமுனை பிரசாரம், மக்கள் சந்திப்பு, கையெழுத்து இயக்கம் ஆகியவை நடத்தப்படுகிறது.
தட்டாஞ்சாவடி குடிமைப்பொருள் வழங்கல்துறை முன்பு இன்று போராட்டத்தை தொடங்கினர். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பிரதேச செயலாளர் ராஜாங்கம் தலைமை வகித்தார்.
முன்னாள் செயலாளர் பெருமாள், பிரதேசக்குழு உறுப்பினர் முருகன், கொளஞ்சியப்பன்,
சி.ஐ.டி.யூ. சீனுவாசன், சந்தியா, இளவரசி, கலா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பொதுமக்களிடம் கையெழுத்து பெறுவதை கட்சியின் முன்னாள் மத்தியக்குழு உறுப்பினர் சுதா சுந்தர்ராமன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து 1-ந் தேதி வரை புதுவையில் வீதி, வீதியாக பிரச்சாரம் செய்ய உள்ளனர்.






