என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தொழிற்சாலையில் குடும்பத்தோடு ஊழியர்கள் போராட்டம்
    X

    சேதராப்பட்டு தொழிற்சாலையில் 4-வது நாளாக குடும்பத்தோடு ஊழியர்கள் முற்றுகை போராட்டம் நடத்திய காட்சி.

    தொழிற்சாலையில் குடும்பத்தோடு ஊழியர்கள் போராட்டம்

    • சேதராப்பட்டு மயிலம் சாலையில் பிரபல கனரக தொழிற்சாலை உள்ளது.
    • தொழிற்சாலை வாசலில் முற்றுகை போராட்டம் செய்து வந்தனர்.

    புதுச்சேரி :

    சேதராப்பட்டு மயிலம் சாலையில் பிரபல கனரக தொழிற்சாலை உள்ளது. இந்த கம்பெனியில் சுமார் 1500 மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இந்த கம்பெனியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் 259 பேர் தங்களுக்கு பணி நியமனம் குறைந்தபட்ச ஊதியம் கிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் முதல் நிர்வாகத்துடன் கோரிக்கை வைத்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 4 நாட்களாக தொழிலாளர்கள் இரவு பகலாக அங்கேயே சமைத்து சாப்பிட்டு தொழிற்சாலை வாசலில் முற்றுகை போராட்டம் செய்து வந்தனர். தொழிற்சாலையில் பணியாற்றும் யாரையும் இவர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை.

    இன்று 259 தொழிலாளர்கள் குடும்பத்தோடு தொழிற்சாலையில் வாசலை மூடி முற்றுகை போராட்டம் நடத்தினர்.

    அப்போது சம்பவ இடத்திற்கு வந்த வில்லியனூர் தாசில்தார் கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் ‌.

    கம்பெனியில் பணியாற்றும் 135 நிரந்தர ஊழியர்களை மட்டுமாவது உள்ளே அனுமதிக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். இந்த கோரிக்கையை மட்டும் ஏற்ற போராட்டக்காரர்கள். தங்களுக்கு நீதி கிடைக்கும் வரை கம்பெனியின் வாசலில் தொடர்ந்து போராட்டம் நடத்துவதாக கூறியதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×