என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • ஜோதி சிலம்பம் சத்திரிய குருகுலம் மற்றும் பாரதீய ஜனதா கட்சி மாநில கலாச்சாரப் பிரிவு சார்பில் கலைமாமணி டாக்டர் ஜோதி செந்தில் கண்ணன் ஏற்பாட்டில், இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
    • சபாநாயகர் ஏம்பலம்செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    ஜோதி சிலம்பம் சத்திரிய குருகுலம் மற்றும் பாரதீய ஜனதா கட்சி மாநில கலாச்சாரப் பிரிவு சார்பில் கலைமாமணி டாக்டர் ஜோதி செந்தில் கண்ணன் ஏற்பாட்டில், இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் சபாநாயகர் ஏம்பலம்செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

    புதுவை கண் மருத்துவர் கலைமாமணி டாக்டர் தமிழ்வாணன் தலைமையில் மருத்துவர் குழுவினர் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்து, இலவசமாக மூக்குக் கண்ணாடி வழங்கும் விழா பூரணாங்குப்பத்தில் உள்ள ஜோதி சிலம்பம் சத்திரிய குருகுலத்தில் நடைபெற்றது.

    சிறப்பு விருந்தினராக இந்து முன்னணியின் தமிழகத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்துக் கொண்டு பரிசோதிக்கபட்ட பயனாளிகள் அனைவருக்கும் மூக்குக் கண்ணாடி அணிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி புதுவை மாநில தலைவர் சனில்குமார், பாரதீய ஜனதா கட்சி மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் டாக்டர் க.வெற்றிச்செல்வம், இந்து முன்னணி மாநில நிர்வாகிகள் பக்தன், சண்முகம், ராஜேஷ், கிருஷ்ணன், தியாகராஜன், செந்தில், குருகுல பயிற்சியாளர் முன்னாள் ராணுவ வீரர் ஆனந்தராஜ், கலாச்சார பிரிவு நிர்வாகிகள் வக்கீல் ராதாகிருஷ்ணன், பயில்வான் பெரியசாமி, இன்பசேகர், குருகுல சிலம்பம் பயிற்சியாளர் சிவராமகிருஷ்ணன் உள்ளிட்ட குருகுல நிர்வாகிகளும், இந்து முன்னணி நிர்வாகிகளும், பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டுடனர்.

    • முதலியார்பேட்டை ஆலை ரோட்டில் உள்ள பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ. அலுவலகத்தில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
    • அப்துல் கலாம் உருவ படத்துக்கு அசோக் பாபு எம்.எல்.ஏ. மலர் அஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை ஆலை ரோட்டில் உள்ள பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ. அலுவலகத்தில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அப்துல் கலாம் உருவ படத்துக்கு அசோக் பாபு எம்.எல்.ஏ. மலர் அஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் தொகுதி தலைவர் இன்பசேகர், நகர மாவட்ட துணை தலைவர் விஜயரங்கம், மாவட்ட விவசாய அணி தலைவர் அய்யனாரப்பன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கமலக்கண்ணன், திரிசந்திரன், மாவட்ட அமைப்புசாரா தலைவர் சரவணன், தொகுதி பொதுச் செயலாளர் பாலகுரு, விஜயகுமார், துணை தலைவர் கனகராஜ், மாநில மீனவர் அணி துணை தலைவர் நடராஜ், இளைஞர் அணி தலைவர் தமிழரசன், சிறப்பு அழைப்பாளர் பாபு, மாநில பிரசார அணி துணை தலைவர் கார்த்திக், வக்கீல் பிரிவு அய்யப்பன், நிர்வாகிகள் நாகமுத்து, சரவணன், தில்லை கோவிந்தன், ஆதிமூலம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • புதுவை பாரதீய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவர் வி. சாமிநாதன் தலைமையில் தொகுதி தலைவர்கள் தொகுதி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்திற்கு உணவு வழங்கல் துறை அமைச்சர் சாய்.ஜெ. சரவணன் குமார் பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை பாரதீய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவர் வி. சாமிநாதன் தலைமையில் தொகுதி தலைவர்கள் தொகுதி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு உணவு வழங்கல் துறை அமைச்சர் சாய்.ஜெ. சரவணன் குமார் பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் 75-வது சுதந்திர ஆண்டின் நிறைவு நிகழ்ச்சிகளை கொண்டாடுவதற்கான ஆலோசனை நடத்தப்பட்டது மேலும் அனைத்து நிகழ்ச்சியும் செய்வதற்கான தனித்தனியான நிர்வாகிகள் குழு அமைக்கப்பட்டன.

    மரக்கன்றுகள் நடுதல் கட்டுரை போட்டி தலைவரின் சிலைகளை சுத்தம் செய்தல் அனைத்து மாவட்டங்களிலும் கண்காட்சி நடத்துதல் அனைத்து தொகுதிகளும் சாதன விளக்க பேனர் வைப்பது சுவர்களில் எழுதுவது சாதனைகளை விளக்கும் பேரணிகள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    அனைத்து தொகுதியிலும் உள்ள மருத்துவமனைகளை சுத்தம் செய்வது அனைத்து தொகுதிகளும் ஓவியப் போட்டி ,வர்த்தக நிறுவனங்களில் கொடி ஏற்றுதல் தொகுதியில் உள்ள அனைத்து கிளைகளிலும் உள்ள வீடுகளில் கொடி ஏற்றுவதற்கான முயற்சி செய்தல் அனைத்து தொகுதிகளும் தடுப்பூசி முகாம்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் செய்வது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது.

    • மாணவ-மாணவிகளுக்கு சால்வை அணிவித்து பரிசுகளை திருபுவனை தொகுதியின் எம்.எல்.ஏ அங்காளன் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் வழங்கி சிறப்புரையாற்றினார்.
    • இந்நிகழ்ச்சியில் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் எம்.எல்.ஏ. வின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    திருபுவனை தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளான திருபுவனை, மதகடிப்பட்டு பாளையம், சோரப்பட்டு, செல்லிப்பட்டு கொத்தம்புரிநத்தம் ,திருவண்டார் கோவில், கலித்தீர்த்தாள் குப்பம் ஆகிய அரசு பள்ளிகளில் பயின்று வெற்றி பெற்ற 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு சால்வை அணிவித்து பரிசுகளை திருபுவனை தொகுதியின் எம்.எல்.ஏ அங்காளன் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் வழங்கி சிறப்புரையாற்றினார்.

    மேலும் சிறப்பாக கல்வி கற்கும் மாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் இதே போன்று விழா நடத்தப்பட்டு மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கவுரவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் எம்.எல்.ஏ. வின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • புதுவை மாநிலத்தில் இருந்து தமிழக பகுதிக்கு மதுபானம், சாராயம் கடத்தப்படுகிறது.
    • வெளிமாநிலங்களில் இருந்து புதுவைக்கு கஞ்சா கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் இருந்து தமிழக பகுதிக்கு மதுபானம், சாராயம் கடத்தப்படுகிறது. அதுபோல் வெளிமாநிலங்களில் இருந்து புதுவைக்கு கஞ்சா கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    இதனை தடுக்கும் வகையில், மாநில எல்லையான பாகூர் சோரியாங்குப்பம், கொமந்தான்மேடு பகுதியில் பாகூர் இன்ஸ்பெக்டர் கணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் குருவிநத்தம் தூக்கு பாலத்தில், இருசக்கர வாகனங்கள் மற்றும் காரை தடுத்து நிறுத்தி தீவிர சோதனை செய்தனர்.

    இதில் சந்தேகப்படும் நபர்களை போலீஸ் நிலைத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வாகனங்களுக்கு தகுந்த ஆவணங்கள் இல்லையென்றால் வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்தத் திடீர் வாகன சோதனையால் வாகன ஓட்டிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சோதனையில் போதை பொருட்கள், மதுபானம் எதுவும் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • புதுவை குருசுகுப்பம் வாழைக்குளத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடி குடியிருப்புகளில் 168 வீடுகளை ரூ.1.24 கோடியில் மேம்படுத்த பூமி பூஜை விழா இன்று நடந்தது.
    • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடந்த பூமி பூஜையை அமைச்சர் லட்சுமிநாராயணன் தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை குருசுகுப்பம் வாழைக்குளத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடி குடியிருப்புகளில் 168 வீடுகளை ரூ.1.24 கோடியில் மேம்படுத்த பூமி பூஜை விழா இன்று நடந்தது.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடந்த பூமி பூஜையை அமைச்சர் லட்சுமிநாராயணன் தொடங்கி வைத்தார். ஸ்மார்ட் சிட்டி முதன்மை செயல் அதிகாரி அருண், பொதுப்பணித்துறை தலைமைபொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், ஸ்மார்ட் சிட்டி இணை முதன்மை செயல் அதிகாரி சுதாகர், செயற்பொறியாளர் ஸ்ரீதர், குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், ஒப்பந்ததாரர் ரமேஷ் மற்றும் ஊர் மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விடுதலை போராட்ட வீரர்களின் பெயர்களை கொண்ட கல் வெட்டு பதியப்படுகிறது.
    • தமிழக முதல்-அமைச்சர் அண்ணன் ஸ்டாலின் பரந்த மனப்பான்மையுடன் பிரதமர் படங்களை வைக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி புதுவை கடற்கரை சாலை காந்தி திடலில் தியாக சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

    இதில் விடுதலை போராட்ட வீரர்களின் பெயர்களை கொண்ட கல் வெட்டு பதியப்படுகிறது. இன்று காலை கவர்னர் தமிழிசை கல்வெட்டுகளை பதித்தார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா வீர சாவர்க்கார், திருநெல்வேலி வேலு நாச்சியார் ஆகியோரின் கல்வெட்டுகளை தமிழிசை பதித்தார்.

    தொடர்ந்து கல்வெட்டை சுற்றி வரையப்பட்டுள்ள விடுதலை போராட்ட வீரர்களின் ஓவியங்களை தமிழிசை பார்வையிட்டார். அவற்றில் வீரர்களின் பெயர்களை பதிவிட வேண்டும் என தமிழிசை அறிவுறுத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தியாக சுவர் குழந்தைகளுக்கு தேச உணர்வை ஊட்ட வேண்டும், விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார்.

    புதுவையில் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த அரசு திட்டங்களை தீட்ட வேண்டும். தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைக்க பிரதமர் வருவது மகிழ்ச்சிக்குரியது.

    இதில் எனக்கு ஒரு ஆதங்கம் உள்ளது. போட்டிக்கான வரவேற்பு விளம்பரங்களில் பிரதமரின் படமில்லை. தமிழக முதல்-அமைச்சர் அண்ணன் ஸ்டாலின் பரந்த மனப்பான்மையுடன் பிரதமர் படங்களை வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    அவரிடம் நிருபர்கள், தமிழிசை தன்னிச்சையாக செயல்படுகிறார் என நாராயணசாமி கூறியுள்ளாரே? என கேட்டபோது, நான் தன்னிச்சையாக செயல்படவில்லை. தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறேன். நான் எங்கே பொய் சொன்னேன் என தேடித்தான் பார்க்க வேண்டும். நான் மெய்யாக வேலை செய்கிறேன். தீயாய் வேலை செய்கிறேன். மக்கள் என்னை தினமும் பார்க்கிறார்கள். அவர் ஏதோ விமர்சனம் செய்வதற்காக பேசுகிறார்.

    முன்னாள் கவர்னர் கிரண்பேடியை பேய் என்றார். என்னை பொய் என கூறியுள்ளார். கவர்னர் என்றாலே அவர் விமர்சனம் செய்கிறார். இதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. இருப்பினும் நாராயணசாமி அண்ணன் தெரிந்து கொண்டு பேச வேண்டும். இது போன்ற விமர்சனங்கள் வேண்டாம். புதுவையில் மகாகவி பாரதியாருக்கு வானுயர சிலை வைக்க சுற்றுலா திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அந்தப் பகுதியில் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தனர்.
    • இதனை அறிந்த ஒரு சில இளைஞர்கள் போஸ்டர் ஒட்டிய 4 இளைஞர்களை பிடித்து ஆரோவில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    புதுச்சேரி:

    திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் 4 இளைஞர்கள் அந்தப் பகுதியில் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தனர். அந்த போஸ்டரில் பாத்திரக்கடை உரிமையாளர் லட்சுமணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதனை அறிந்த ஒரு சில இளைஞர்கள் போஸ்டர் ஒட்டிய 4 இளைஞர்களை பிடித்து ஆரோவில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு விசாரணை மேற்கொண்ட தையடுத்து போஸ்டர் ஒட்டிய 4 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

    இதனை அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமையில் பாத்திரக்கடை உரிமையாளர் லட்சுமண னின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆரோவில் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அங்கு அவதூறு போஸ்டர் ஒட்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருச்சிற்றம்பலம் ஊராட்சி பகுதியில் அனைத்து தரப்பு மக்களும் சுமூகமாக இருக்கும் இங்கு வெவ்வேறு சமூகத்திற்கு இடையே கலவரத்தை உண்டாக்கும் முயற்சியில் ஒரு சிலர் முயற்சித்து வருவதாகவும் அவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் கோரிக்கை வைத்தனர்.

    அப்போது போலீசா ருக்கும் பொதுமக்களுக்கும் இடையே சிறு வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் போலீஸ் நிலையத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ‌

    பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து அவதூறு போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிடம் முறையிடுவதற்கு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மற்றும் ஊர் பொதுமக்கள் விழுப்புரம் சென்றனர்.

    • புதுவை டி.ஜி.பி. யாக கடந்தாண்டு பொறுப்பேற்ற ரன்வீர் சிங் கிருஷ்ணியா டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
    • புதிய டி.ஜி.பி.யாக மனோஜ்குமார் லால் நியமிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு புதுவைக்கு வந்த அவர், நேற்று மாலை டி.ஜி.பி.யாக பதவியேற்றார்.

    புதுச்சேரி:

    புதுவை டி.ஜி.பி. யாக கடந்தாண்டு பொறுப்பேற்ற ரன்வீர் சிங் கிருஷ்ணியா டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    புதிய டி.ஜி.பி.யாக மனோஜ்குமார் லால் நியமிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு புதுவைக்கு வந்த அவர், நேற்று மாலை டி.ஜி.பி.யாக பதவியேற்றார். அவரை டி.ஜி.பி. இருக்கையில் ரன்வீர் சிங் கிருஷ்ணியா அமர வைத்து பொறுப்புகளை ஒப்படைத்தார்.

    முன்னதாக அவருக்கு காவல்துறை தலைமையகத்தில் போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இன்று காலை முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவைக்கு பல வரலாறு உள்ளதால் மகிழ்ச்சி அளிக்கிறது. அமைதியான முறையில் புதுவை மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆன்மீகம் மற்றும் பல வரலாற்றை புதுவை கொண்டுள்ளதை அறிந்து மகிழ்கிறேன்.

    துய்மையான புதுவைக்கு மக்கள் உறுதுணையாக உள்ளனர். மக்களுக்கு காவல்துறை துணையாக இருக்கும். புதுவையில் ரவுடிகளை ஒடுக்கவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் தனி கவனம் செலுத்தப்படும்.

    சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா நடமாட்டத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் பிரச்சினை–களில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுவையில் ஆயிரத்து 841 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
    • புதுவையில் 70, காரைக்காலில் 22, மாகியில் 7 பேர் என புதிதாக 99 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் ஆயிரத்து 841 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    இதில் புதுவையில் 70, காரைக்காலில் 22, மாகியில் 7 பேர் என புதிதாக 99 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 15, காரைக்கால், ஏனாமில் தலா ஒருவர் என 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 861, காரைக்காலில் 161, ஏனாமில் 34, மாகியில் 3 பேர் என ஆயிரத்து 59 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர்.

    புதுவையில் 195, காரைக்காலில் 55, ஏனாமில் 3, மாகியில் ஒருவர் என 254 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 965 ஆக உள்ளது.

    புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 17 லட்சத்து 97 ஆயிரத்து 380 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

    இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    • நேஷனல் ஹெரால்டு வழக்கில் மத்திய அமலாக்கத்துறை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம் இன்று விசாரணை நடத்தியது.
    • அமலாக்கத்துறை பொய்வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறி காங்கிரசார் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் மத்திய அமலாக்கத்துறை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம் இன்று விசாரணை நடத்தியது.

    அமலாக்கத்துறை பொய்வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறி காங்கிரசார் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சோனியாகாந்தியை விசாரணை செய்யும் நாளில், அதை கண்டித்து சத்யாகிரக போராட்டம் நடத்தப்படும் என காங்கிரசார் அறிவித்திருந்தனர்.

    அதன்படி புதுவை மாநில காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தி சிலை அருகே சத்யாகிரக போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ. முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், கார்த்திகேயன், நீலகங்காதரன், சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், காங்கிரஸ் நிர்வாகிகள் சங்கர், தனுசு, கருணாநிதி, ரகுமான், வீரமுத்து, இளையராஜா, விக்னேஷ், பஞ்சகாந்தி, மு.ப.சரவணன், சிவசாமி, மருதுபாண்டியன், திருமுருகன் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    • புதுவை அரசின் செய்தி விளம்பரத்துறை சார்பில் கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டது.
    • கடற்கரை சாலை போர்வீரர் நினைவிடத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள், முப்படையினர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் செய்தி விளம்பரத்துறை சார்பில் கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டது.

    கடற்கரை சாலை போர்வீரர் நினைவிடத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள், முப்படையினர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

    தொடர்ந்து கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சந்திர பிரியங்கா, சாய்.ஜெ. சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், பாஸ்கர், கே.எஸ்.பி. ரமேஷ், அசோக்பாபு, தலைமை செயலர் ராஜீவ் வர்மா, டி.ஜி.பி. மனோஜ்குமார் லால் ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

    இதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதிய குடியரசுத் தலைவருக்கு என் வாழ்த்துக்கள். இந்தியாவில் மிகப்பெரிய சமூக புரட்சி ஏற்பட்டுள்ளது. அடித்தட்டு மக்களுக்காக சேவை செய்து வரும் ஒரு தலைவர், குடியரசு தலைவராக பரிமளிக்க முடியும் என்பதுதான் இந்திய குடியரசின் மாண்பு. இதை நடத்தி காட்டிய பிரதமருக்கு நன்றி.

    குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அடித்தட்டில் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் படித்துக் கொண்டிருக்கிற குழந்தைகளுக்கு கூட மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.

    இன்று கார்கில் வெற்றி தினம். அனைத்து ராணுவ வீரர்களையும் பாராட்டி வெற்றியை கொண்டாட வேண்டும். மூவர்ண தேசியக்கொடி குழந்தைகள் மனதில், இளைஞர்கள் மனதில் பதிய வேண்டும் என்பதற்காக இல்லந்தோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதை மாநில அரசு நடைமுறை படுத்தி வருகிறது. வீடுதோறும் ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி ஏற்றப்படவேண்டும்.

    ஆகஸ்டு 13 முதல் 15-ந் தேதி வரை இயக்கமாகவே முன்னெடுத்துச் செல்கிறோம். இல்லம் தோறும் தேசிய கொடி இளைஞர்கள் மத்தியில் நல்ல எழுச்சியை ஏற்படுத்தும். அனைவரிடத்திலும் தேசிய உணர்வை ஏற்படுத்தும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×