என் மலர்
புதுச்சேரி

அப்துல் கலாம் நினைவு நாளையொட்டி பொதுமக்களுக்கு அசோக்பாபு எம்.எல்.ஏ. அன்னதானம் வழங்கிய காட்சி.
அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம்
- முதலியார்பேட்டை ஆலை ரோட்டில் உள்ள பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ. அலுவலகத்தில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
- அப்துல் கலாம் உருவ படத்துக்கு அசோக் பாபு எம்.எல்.ஏ. மலர் அஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
புதுச்சேரி:
முதலியார்பேட்டை ஆலை ரோட்டில் உள்ள பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ. அலுவலகத்தில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அப்துல் கலாம் உருவ படத்துக்கு அசோக் பாபு எம்.எல்.ஏ. மலர் அஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தொகுதி தலைவர் இன்பசேகர், நகர மாவட்ட துணை தலைவர் விஜயரங்கம், மாவட்ட விவசாய அணி தலைவர் அய்யனாரப்பன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கமலக்கண்ணன், திரிசந்திரன், மாவட்ட அமைப்புசாரா தலைவர் சரவணன், தொகுதி பொதுச் செயலாளர் பாலகுரு, விஜயகுமார், துணை தலைவர் கனகராஜ், மாநில மீனவர் அணி துணை தலைவர் நடராஜ், இளைஞர் அணி தலைவர் தமிழரசன், சிறப்பு அழைப்பாளர் பாபு, மாநில பிரசார அணி துணை தலைவர் கார்த்திக், வக்கீல் பிரிவு அய்யப்பன், நிர்வாகிகள் நாகமுத்து, சரவணன், தில்லை கோவிந்தன், ஆதிமூலம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






