என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • சமூக அமைப்புகளின் சார்பில் குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.
    • போராட்டத்துக்கு அமைப்பினர் தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார்.

    புதுச்சேரி;

    மனித உரிமைகள், நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் மற்றும் சமூக அமைப்புகளின் சார்பில் குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.

    போராட்டத்துக்கு அமைப்பினர் தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் லெனின், பஷீர், பெருமாள், சுவாமிநாதன், லோகு அய்யப்பன், தீனா, அழகர், பிரகாஷ், சாந்தகுமார், பழனி, மருதநாயகம், அய்யாக் கண்ணு, தமிழ்செல்வன், சிவசந்திரன், ராமு, இளமுருகு, கோபிநாதன், சிவக்குமார், குணபூசனம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முத்தியால்பேட்டை சோலை நகரில் இருந்து 9டன் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் பிடிபட்டுள்ளனர். இது குறித்து குடிமைப்பொருள் வழங்கல்துறை எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை.

    வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரிசியை கடத்தியதில் பலர் உட ந்தையாக இருந்துள்ளனர்.

    எனவே ரேஷன் அரிசி கடத்தல் பின்னணியில் உள்ள அனைவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை களை வலியுறுத்தி கோஷம் எழுப்பி ஆர்ப் பாட்டம் நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடு பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    • அரசு ஆரம்பப் பள்ளியில் புதுப்பிக்கும் பணிகள் மற்றும் மேம்படுத்தும் பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது.
    • தொகுதி எம்.எல்.ஏ. நேரு தலைமை வகித்து பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்தசாலை அரசு ஆரம்பப் பள்ளியில் புதுப்பிக்கும் பணிகள் மற்றும் மேம்படுத்தும் பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது.

    தொகுதி எம்.எல்.ஏ. நேரு தலைமை வகித்து பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஸ்ரீதர், உதவி பொறியாளர் அம்புரோஸ் பாக்கியசாலி, கல்வித்துறை இணை இயக்குனர் நடனசபாபதி, துணை ஆய்வாளர் குமார், இளநிலை பொறியாளர் தமிழ்ச்செல்வன், பள்ளி தலைமை ஆசிரியர் சுகந்தி, ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    விழாவில் மனிதநேய மக்கள் சேவை இயக்கத்தை சேர்ந்த ராமலிங்கம், கலியன், சிவராஜ், தங்கராஜ், குணசேகரன், வேலாயுதம், கோவிந்தராஜ், வாசு, ஆதி, சுந்தர், சாய்நாதன், ஜெயராஜ், மணி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • அமாவாசையில் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம்.
    • ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசையில் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம்.

    20-ம் ஆண்டாக பால்குட ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வந்தனர். முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலம் அங்காளம்மன் கோவிலில் நிறைவடைந்தது. அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை தீபாராதனைகள் நடைபெற்றது.

    இதில் முருங்கப்பாக்கம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

    • மாணவர்களுக்கான கலை, இலக்கிய போட்டிகளை முதலியார்பேட்டை ஒய்ஸ்மேன் உயர்நிலைப்பள்ளி இணைந்து நடத்தின.
    • இயக்குனர் மதிவாணன் முன்னிலை வகித்தார்.

    புதுச்சேரி:

    பாரதிதாசன் மைந்தரும், முதுபெரும் தமிழறிஞருமான மன்னர் மன்னன் நினைவு நாளையொட்டி மன்னர் மன்னன் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கான கலை, இலக்கிய போட்டிகளை முதலியார்பேட்டை ஒய்ஸ்மேன் உயர்நிலைப்பள்ளி இணைந்து நடத்தின.

    இதற்கான பரிசளிப்பு விழா ஒய்ஸ்மேன் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் சரோஜா பாபு தலைமை தாங்கி பேசினார். இயக்குனர் மதிவாணன் முன்னிலை வகித்தார். அறக்கட்டளை தலைவரும், மன்னர் மன்னன் மகனுமான கோ.பாரதி கலை, இலக்கிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். இதில் பங்கேற்ற 168 மாணவர்களுக்கும் செயலாளர் வள்ளி, ஒருங்கிணைப்பாளர் செல்வதுரை நீஸ் சான்றிதழ்களை வழங்கினர். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    • காலாப்பட்டு தொகுதி யில் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.
    • இதற்கான பணிகளை தொகுதி எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    காலாப்பட்டு தொகுதி யில் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.

    கருவடிக்குப்பம் கால்நடை மருத்துவமனை வீதி, மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள எல் வடிவ வாயக்கால் சுமார் ரூ.16 லட்சம், இடையஞ் சாவடி ரோடு, குறுக்கு தெருக்களுக்கு யூ வடிவ வாய்க்கால் அமைக்க ரூ.42 லட்சம், நாகம்மன் நகர் முழுவதும் ரூ.29 லட்சத்தில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை தொகுதி எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இதில் அதிகாரிகள், ஊர்மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுவை லாஸ்பேட்டையில் நாவலர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் வந்து படித்து வருகின்றனர்.
    • மாணவர்களை இறக்கி விட வந்த பெற்றோர்களும் காத்துக்கிடந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டையில் நாவலர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் வந்து படித்து வருகின்றனர். காலை 8.45 மணியாகியும் பள்ளியின் நுழைவுவாயில் திறக்கப்படவில்லை. இதனால் காலை 7.30 மணி முதல் பள்ளிக்கு வந்த மாணவர்கள் பள்ளியின் வாசலில் காத்திருந்தனர்.

    மாணவர்களை இறக்கி விட வந்த பெற்றோர்களும் காத்துக்கிடந்தனர். காலை 8.45 மணிக்கு ஆசிரியர் வந்து பள்ளியினை திறந்தார். இதன்பின் மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர்.

    பள்ளியினை நேரத்தோடு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களும், மாணவர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக புதுவை மின்துறை, பவர்கிரிட் இந்தியா, புதுப்பிக்கவல்ல எரிசக்தி முகமை இணைந்து பாரதத்தின் ஒளிமயமான எதிர்காலம் மின்சக்தி 2047 என்ற திருவிழாவை காமராஜர் மணிமண்டபத்தில் நடத்துகிறது.
    • திருவிழா தொடங்கி வருகிறள 30-ந் தேதி வரை நடக்கிறது.

    புதுச்சேரி:

    நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக புதுவை மின்துறை, பவர்கிரிட் இந்தியா, புதுப்பிக்கவல்ல எரிசக்தி முகமை இணைந்து பாரதத்தின் ஒளிமயமான எதிர்காலம் மின்சக்தி 2047 என்ற திருவிழாவை காமராஜர் மணிமண்டபத்தில் நடத்துகிறது.

    இந்த திருவிழா தொடங்கி வருகிறள 30-ந் தேதி வரை நடக்கிறது. இந்த திருவிழாவை அமைச்சர் நமச்சிவாயம் இன்று தொடங்கி வைத்தார்.

    பின்னர் அரசு சார்பிலும், பிற அமைப்புகள் சார்பிலும் அமைககப்பட்டுள்ள அரங்கு களை பார்வையிட்டார்.

    அரங்குகளில் 75 ஆண்டுகால மின் வளர்ச்சி, 2047-ம் ஆண்டுக்குள் அடைய வேண்டிய இலக்கு, திட்டங்கள், சூரிய ஒளி மின்கலம் அமைக்க வழங்கப்படும் மானியம், இதைப்பெறும் வழிமுறைகள், மின் நுகர்வோர் உரிமைகள், சட்டம் குறித்து ஒலி, காணொலி காட்சிகளும் நடத்தப்படுகிறது.

    30-ந் தேதி நிறைவு விழாவில் கவர்னர், முதல்-அமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாற்ற உள்ளார். இந்த அரங்குகளை பொதுமக்கள் 30-ந் தேதி வரை காலை 9.30 மணியிலிருந்து இரவு 8 மணி வரை காணலாம்.

    • புதுவை தலைமை ஒருங்கிணைந்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில் வள்ளலார்-200 என்ற பெயரில் வேல்.சொக்க நாதன் திருமண நிலையத்தில் மாநாடு நடைபெற்றது.
    • மாநாட்டை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சபா நாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை தலைமை ஒருங்கிணைந்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில் வள்ளலார்-200 என்ற பெயரில் வேல்.சொக்க நாதன் திருமண நிலையத்தில் மாநாடு நடைபெற்றது.

    இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு அகவல் படித்தல் நிகழ்ச்சி நடந்தது. காலை 7 மணிக்கு சுத்த சன்மார்க்க நீதிக் கொடியை சாது சிவராமன் ஏற்றினார்.

    அதைத்தொடர்ந்து சுத்த சன்மார்க்க கொள்கை விழிப்புணர்வு பேரணியை நாமக்கல் மாவட்ட தலைவர் சுகுமாறன் தொடங்கி

    வைத்தார்.

    மாநாட்டை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சபா நாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    அப்போது கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், வள்ளலார் பற்றி பேசுவது மகிழ்ச்சி தருகிறது. நாம் செய்ய வேண்டியதையும், செய்யக் கூடாததையும் பல ஆண்டுகளுக்கு முன்பே எடுத்து சொன்ன தீர்க்கதரிசி வள்ளலார்.

    நோயினும் கொடிய நோய் பசி. அந்த பசியை போக்குவதற்கு அவர் அன்றே வழிகாட்டி இருக்கிறார். வள்ளலாரை படிக்க படிக்க வாழ்க்கை தூய்மை பெறும் என்றார்.

    கடலூர் தமிழ் சங்க தலைவர் குழந்தை வேலனார், புதுவை சன்மார்க்க சங்க தலைவர் கணேசன், பொதுச் செயலாளர் கோதண்டபாணி, செயலாளர்

    கோபாலகிருஷ்ணன், பொருளாளர் கஜபதி, வி.எஸ்.டெக்ஸ் உரிமையாளர்இசை கலைவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி தென்னகத்தின் திருப்பு முனை வள்ளலார் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு மற்றும் யோகாசனம்ந டை பெ ற்றது. மாநாடு நிறைவு விழாவில் சன்மார்க்க நிர்வாகிகளுக்கு முதல்- அமைச்சர் ரங்கசாமி விருது வழங்கி கவுரவித்தார்.

    • வாய்க்கால் மேம்படுத்தும் பணியை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • தி.மு.க. அவை தலைவர் ரவி, கிளை செயலாளர் செல்வம், சோழியன், சங்கரநாராயணன், காந்தி, பீட்டர், பாலாஜி, லாரன்ஸ், விக்கி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்கு உள்பட்ட நேதாஜி நகர் 2-ல் தாழ்வான சிமெண்ட் கான்கிரீட் சாலைகளில் உள்ள அனைத்து வீதிகளிலும் சைடு வாய்க்கால் மேம்படுத்தும் பணியை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    இதை தொடர்ந்து, தாழ்வான பகுதியில் சாலை அமைக்கும் பணிகளையும் தொடங்கி வைத்தார். நேதாஜி நகர் 2-ல் அப்பகுதி மக்கள், எம்.எல்.ஏ.விடம் நீண்ட நாள் கோரிக்கையாக விடுபட்ட சாலை மற்றும் எல்-வடிவ சைடு வாய்க்கால் அமைக்கக் கோரி தேர்தல் பிரச்சாரத்தின் போது கேட்டுக் கொண்டனர். அப்போது அளித்த வாக்குறுதியின் பேரின் நேதாஜி நகர் 2-ல் வீதிகளில் விடுபட்டுள்ள வாய்க்கால்களையும், சாலைகளையும் மேம்படுத்தி தருகிறேன் என எம்.எல்.ஏ. உறுதியளித்தார்.

    பின்னர் சாலை அமைக்கும் பணியை பார்வையிட்டார். இதில் தி.மு.க. அவை தலைவர் ரவி, கிளை செயலாளர் செல்வம், சோழியன், சங்கரநாராயணன், காந்தி, பீட்டர், பாலாஜி, லாரன்ஸ், விக்கி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தவளக்குப்பம் அருகே தவறான ஊசி செலுத்தியதில் பெண் பரிதாபமாக இறந்து போனார்.
    • இதில் மணிக்கட்டு அருகில் வெட்டுபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    தவளக்குப்பம் அருகே தவறான ஊசி செலுத்தியதில் பெண் பரிதாபமாக இறந்து போனார்.

    தவளக்குப்பம் அருகே நல்லவாடு ரோடு பிள்ளை யார் திட்டு பகுதியை சேர்ந்தவர் தேவநாதன். விவசாயி. இவரது மனைவி கவிதா (வயது45). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு கவிதா புல் நறுக்கும் எந்திரத்தில் புல் அறுத்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக எந்திரத்தில் அவரது வலது கை சிக்சிக்கொண்டது. இதில் மணிக்கட்டு அருகில் வெட்டுபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் லாஸ்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அவரது கையில் பிளேட் பொறுத்தப்பட்டது. ஒரு வருடம் கழித்து கையில் பொறுத்தியிருந்த பிளேட்டை அகற்ற வேண்டும் என்று டாக்டர்

    கள் அப்போது அறிவுறுத்தியிருந்தனர்.

    அதன்படி கடந்த 20-ந் தேதி கையில் பொறுத்தப்பட்ட பிளேட்டை அகற்ற கவிதா ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    22-ந் தேதி அறுவை சிகிச்சை செய்து கையில் இருந்த பிளேட்டு அகற்றப்பட்டு 24-ந் தேதி கவிதா ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    வீட்டில் ஓய்வில் இருந்து வந்த கவிதாவுக்கு நேற்று காலை கையில் வலி அதிகம் ஏற்பட்டது. உடனே அவரது தாயார் வசந்தா ஜிப்மர் ஆஸ்பத்திரியில் எழுதி கொடுத்த மருந்து சீட்டை எடுத்து சென்று ஜிப்மர் பார்மசியில் ஊசி மருந்து வாங்கி கொண்டு வந்தார்.

    பின்னர் கவிதாவை தானம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் கிளினீக் அழைத்து சென்று தான் வாங்கி வந்த ஊசி மருந்தை டாக்டரிடம் கொடுத்து கவிதாவுக்கு செலுத்தினார். ஊசி போட்ட சிறிது நேரத்தில் கவிதா மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த டாக்டர் உடனே கவிதாவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தினார்.

    இதையடுத்து அங்கிருந்த ஆட்டோ மூலம் கவிதாவை தவளக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கவிதாவை கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கவிதா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    அப்போது டாக்டர்கள் விசாரித்த போது கவிதாவுக்கு செலுத்தப்பட்ட ஊசி மருந்தை உறவினர்கள் காண்பித்தனர். அதனை பார்த்த டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    வலிக்கு நிவாரணம் அளிக்கும் ஊசி மருந்துக்கு பதிலாக அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு செலுத்தப்படும் ஊசியை கவிதாவுக்கு செலுத்தியதால் அவர் இறந்து போனது தெரியவந்தது.

    இதையடுத்து கவிதாவின் கணவர் தேவநாதன் தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனியார் கிளினீக் டாக்டர் நாங்கள் வாங்கி கொடுத்த ஊசி மருந்தை சரியாக படித்து பார்க்காமல் கவனக்குறைவாக தனது மனைவி கவிதாவுக்கு செலுத்தியதால் மரணம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் வேலைவாய்ப்பு துறை மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் இணைந்து 2-ம் ஆண்டு என்ஜினீயரிங் மாணவர்களுக்கு எம்.ஐ.டி. கல்லூரியில் பயிலரங்கம் நடைபெற்றது.
    • கல்லூரி முதல்வர் மலர்க்கண் வரவேற்புரை ஆற்றினார்.

    புதுச்சேரி:

    புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் வேலைவாய்ப்பு துறை மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் இணைந்து 2-ம் ஆண்டு என்ஜினீயரிங் மாணவர்களுக்கு எம்.ஐ.டி. கல்லூரியில் பயிலரங்கம் நடைபெற்றது.

    இப்பயிலரங்கத்தை எம்.ஐ.டி. கல்லூரியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணைதலைவர், சுகுமாறன் மற்றும் செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கல்லூரி முதல்வர் மலர்க்கண் வரவேற்புரை ஆற்றினார். டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவன மேலாளர் கணேஷ் திருநாவுக்கரசு பயிலரங்கை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தை சேர்ந்த ஹேமா பிரகாஷ் ரகு மற்றும் பாலாஜி ஆகியோர் பயிலரங்கை நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் மற்றும் பேராசிரியர் மெய்யப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • வீராம்பட்டினம் கிராமத்தில் தடகள விளையாட்டு மைதானத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது.
    • போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    வீராம்பட்டினம் கிராமத்தில் தடகள விளையாட்டு மைதானத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ஜெ.பி.பொது அறக்கட்டளை தலைவர் பிரேம்நாதன், அவரது மகன் டேனியல் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆடிட்டர் தீனா, கிருத்திகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனைத்தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    மேலும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பொதுத்தேர்வில் அதிக மதிபெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ரொக்கபரிசு வழங்கப்பட்டது. விழாவி ற்கான ஏற்பாடுகளை லிங்கேஸ்வரன், சத்தியசீலன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் உடற்கல்வி ஆசிரி யர் கோபு நன்றி கூறினார்.

    ×