என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அரசு பள்ளியில் மேம்பாட்டு பணிகள்  நேரு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    X

    கோவிந்தசாலை அரசு பள்ளி மேம்பாட்டு பணிகளை நேரு எம்.எல்.ஏ. பூமி பூஜை தொடங்கி வைத்த காட்சி.

    அரசு பள்ளியில் மேம்பாட்டு பணிகள் நேரு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    • அரசு ஆரம்பப் பள்ளியில் புதுப்பிக்கும் பணிகள் மற்றும் மேம்படுத்தும் பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது.
    • தொகுதி எம்.எல்.ஏ. நேரு தலைமை வகித்து பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்தசாலை அரசு ஆரம்பப் பள்ளியில் புதுப்பிக்கும் பணிகள் மற்றும் மேம்படுத்தும் பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது.

    தொகுதி எம்.எல்.ஏ. நேரு தலைமை வகித்து பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஸ்ரீதர், உதவி பொறியாளர் அம்புரோஸ் பாக்கியசாலி, கல்வித்துறை இணை இயக்குனர் நடனசபாபதி, துணை ஆய்வாளர் குமார், இளநிலை பொறியாளர் தமிழ்ச்செல்வன், பள்ளி தலைமை ஆசிரியர் சுகந்தி, ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    விழாவில் மனிதநேய மக்கள் சேவை இயக்கத்தை சேர்ந்த ராமலிங்கம், கலியன், சிவராஜ், தங்கராஜ், குணசேகரன், வேலாயுதம், கோவிந்தராஜ், வாசு, ஆதி, சுந்தர், சாய்நாதன், ஜெயராஜ், மணி உள்பட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×