என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சங்கு ஊதும் போராட்டம்
    X

    இந்திய கம்யூ., சார்பில் சங்கு ஊதும் போராட்டம் நடத்திய காட்சி.

    சங்கு ஊதும் போராட்டம்

    • இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகரக்குழு சார்பில் நகராட்சி நிர்வாகத்தை சங்கு ஊதி எழுப்பும் போராட்டம் நடந்தது.
    • மாநிலக்குழு உறுப்பி னர்கள் சிவகுருநாதன், இன்பமொழி, நகரக்குழு உறுப்பினர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகரக்குழு சார்பில் நகராட்சி நிர்வாகத்தை சங்கு ஊதி எழுப்பும் போராட்டம் நடந்தது.

    போராட்டத்தையொட்டி நேருவீதி, பழைய சிறைச் சாலை வளாகம் முன்பு கட்சி நிர்வாகிகள் ஒன்று கூடினர். அங்கிருந்து புறப்பட்ட ஊர்வலத்துக்கு நகர செயலாளர் ஜீவானந்தம், துணை செயலாளர்கள் பன்னீர்செல்வம், சசிக்குமார் தலைமை வகித்தனர்.

    மாநிலக்குழு உறுப்பி னர்கள் சிவகுருநாதன், இன்பமொழி, நகரக்குழு உறுப்பினர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊர்வலத்தை முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன் தொடங்கி வைத்தார். ஊர்வலம் மிஷன் வீதி வழியாக உள்ளாட்சித்துறை அலுவலகத்தை அடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், நிர்வாகக்குழு உறுப்பினர் சேதுசெல்வம், நிர்வாகிகள் ஆனந்து, சகாயராஜ், ஜெயமூர்த்தி, ராதாகிருஷ்ணன், முத்து லட்சுமி, ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகிகள் தயாளன், பாலன், வெள்ளிகிரி, குமார் உட்பட பலர் பங்கேற்னர். நகராட்சிக்கு வருவாய் தரும் பெரியமார்க்கெட்டில் அடிக்காசு பெற்றுக் கொண்டு, வியாபாரி களுக்கு சுகாதார வசதி, மின் வசதி, கழிப்பிடம், குடிநீர் வசதி செய்து தராத நகராட்சி நிர்வாகத்தை தட்டி எழுப்பும் வகையில் சங்கு ஊதினர்.

    Next Story
    ×