என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மரக்கன்று நடும் நிகழ்ச்சி
    X

    மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் மகளிருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கும் காட்சி.

    மரக்கன்று நடும் நிகழ்ச்சி

    • எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி தலைமையில் மக்கள் பெருந்திரள் தூய்மை பணி நடந்தது.
    • நகராட்சி ஆணையாளர் பானுமதி முன்னிலை வகித்தார்.

    புதுச்சேரி:

    கோட்டக்குப்பம் நகர்மன்ற தலைவர் எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி தலைமையில் மக்கள் பெருந்திரள் தூய்மை பணி நடந்தது. நகராட்சி ஆணையாளர் பானுமதி முன்னிலை வகித்தார்.

    நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து தூய்மைப்பணி மற்றும் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். தந்திராயன்குப்பம் கடற்கரையில் மரக்கன்றுகள் நடப்பட்டு, 25-வது வார்டில் நீர் நிலை குட்டை தூர்வாரப்பட்டு பனை விதைகள் விதைக்கப்பட்டது.

    மேலும் "என் குப்பை என் பொறுப்பு" என்னும் தலைப்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிவசக்தி கலைக்குழு மூலம் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும் வீடுகளில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் வழங்கிய மகளிருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    Next Story
    ×