search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மார்க்சிஸ்டு கம்யூ. கையெழுத்து இயக்கம்
    X

    தட்டாஞ்சாவடி குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகம் முன்பு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் கையெழுத்து இயக்கம் நடத்திய காட்சி.

    மார்க்சிஸ்டு கம்யூ. கையெழுத்து இயக்கம்

    • புதுவை மாநிலத்தில் ரேஷன்கடைகளை திறந்து அரிசி, பருப்பு உட்பட அத்தியாவசிய பொருட் களை வழங்க வேண்டும்.
    • மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆகஸ்டு 2-ந் தேதி தலைமை செயலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் ரேஷன்கடைகளை திறந்து அரிசி, பருப்பு உட்பட அத்தியாவசிய பொருட் களை வழங்க வேண்டும்.

    மாநில அரசின் இலவச அரிசி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அரிசி வழங்காத 15 மாதங்களுக்கு சிகப்பு ரேஷன்கார்டுக்கு ரூ.9 ஆயிரமும், மஞ்சள் கார்டுக்கு ரூ.4 ஆயிரத்து 500-ம் உடனடியாக வழங்க வேண்டும்.

    தகுதியுள்ள ஏழைகளுக்கு சிகப்பு அட்டை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆகஸ்டு 2-ந் தேதி தலைமை செயலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.

    இதையொட்டி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தெருமுனை பிரசாரம், மக்கள் சந்திப்பு, கையெழுத்து இயக்கம் ஆகியவை நடத்தப்படுகிறது.

    தட்டாஞ்சாவடி குடிமைப்பொருள் வழங்கல்துறை முன்பு இன்று போராட்டத்தை தொடங்கினர். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பிரதேச செயலாளர் ராஜாங்கம் தலைமை வகித்தார்.

    முன்னாள் செயலாளர் பெருமாள், பிரதேசக்குழு உறுப்பினர் முருகன், கொளஞ்சியப்பன்,

    சி.ஐ.டி.யூ. சீனுவாசன், சந்தியா, இளவரசி, கலா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    பொதுமக்களிடம் கையெழுத்து பெறுவதை கட்சியின் முன்னாள் மத்தியக்குழு உறுப்பினர் சுதா சுந்தர்ராமன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து 1-ந் தேதி வரை புதுவையில் வீதி, வீதியாக பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

    Next Story
    ×