என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
புதுவை ஆட்சி நிலையற்ற தன்மையை அடைந்துள்ளது.
- புதுவையில் வாகன போக்குவரத்து நெரிசல் நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
- போக்குவரத்து காவல்துறையினர் சரி செய்யாததால் குழந்தைகள் சாலை விபத்தில் இறக்கும் வேதனையான நிகழ்வுகள் நடக்கிறது.
புதுச்சேரி:
புதுவையில் காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் வாகன போக்குவரத்து நெரிசல் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதை போக்குவரத்து காவல்துறையினர் சரி செய்யாததால் குழந்தைகள் சாலை விபத்தில் இறக்கும் வேதனையான நிகழ்வுகள் நடக்கிறது.
இந்திராகாந்தி சிலை முதல் மூலக்குளம் வரையிலும், மரப்பாலம் முதல் அரியாங்குப்பம் வரையிலும் அதிக நெரிசலால் விபத்துகள் நிகழ்கிறது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்படும் நெரிசலால் உள்ளூர் மக்கள் சாலையில் செல்லவே முடியவில்லை.
எனவே போக்குவரத்து நெரிசலை உடனடியாக அரசு சரி செய்ய வேண்டும்.
அரசு அலுவலகங்கள், பள்ளிகள் திறக்கும் நேரம் ஒன்றாக இருப்பதால் அதிக விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே பள்ளிகள் திறக்கும் நேரத்தையும், முடியும் நேரத்தையும் ஒவ்வொரு பகுதியிலும் மாற்றி அமைப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும். அரசு அலுவலக நேரத்தை மாற்றி அமைக்கவும் வழி செய்ய வேண்டும்.
ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும். ஒரே பக்கத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும். ஒரு வழிப்பாதைகளை அமல்படுத்த வேண்டும். இனியும் பெண்கள், குழந்தைகள் இறப்பு நிகழக்கூடாது.
புதிதாகி தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி திரவுபதிமுர்முவுக்கு வாழ்த்துக்கள்.
அவர் கடந்தகாலத்தில் பிரணாப் முகர்ஜி பெற்ற வாக்குகளை விட குறைவாகவே பெற்றுள்ளார். இதையும் மத்திய அரசு பல மாநிலங்களை மிரட்டி, விலை பேசி ஓட்டுகளை வாங்கியுள்ளனர்.
புதுவையில் ஆளும்கட்சியின் வாக்குகள் சிதறியுள்ளது. ஆட்சிக்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் செல்லாத ஒட்டையும், மற்றொருவர் யஷ்வந்த் சின்காவுக்கும் வாக்களித்துள்ளார். இதன் மூலம் புதுவையிலும் மகராஷ்டிராவை போல ஒரு ஏக்நாத் ஷிண்டே உருவாகுகிறாரோ என்ற சந்தேகம் எற்பட்டுள்ளது. புதுவை ஆட்சி நிலையற்ற தன்மையை அடைந்துள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






