என் மலர்
புதுச்சேரி
- புதுவை செல்லபெருமாள்பேட்டை விவேகானந்தா வித்யாலயாபள்ளி 10-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் 100ள சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
- 10-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் பங்கேற்ற 24 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.
புதுச்சேரி:
புதுவை செல்லபெருமாள்பேட்டை விவேகானந்தா வித்யாலயாபள்ளி 10-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் 100ள சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்த ஆண்டு நடைபெற்ற 10-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் பங்கேற்ற 24 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.
மாணவி ஆர்த்தி 500-க்கு 466 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடத்தை பிடித்தார். மாணவர் சஞ்சய் 461 மதிப்பெண்களுடன் 2-வது இடத்தையும், மாணவி நிதிலா 454 மதிப்பெண்களுடன் 3-வது இடத்தையும் பிடித்தனர்.
450 மதிப்பெண்களுக்கு மேல் 18 மாணவர்களும், 350-மதிபெண்களுக்கு மேல் 22 மாணவர்களும் பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய அனைவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சாதனை படைத்த மாணவ-மாணவிகளை விவேகானந்தா கல்வி குழுமத்தின் தாளாளரும் எம்.பி.யுமான செல்வகணபதி, முதன்மை முதல்வர் பத்மா, விவேகானந்தா சி.பி.எஸ்.இ பள்ளி துணை முதல்வர் மீனாட்சி ஆகியோர் பாராட்டினார்கள்.
- புதுவை பா.ஜனதா பட்டியல் அணி சார்பில் லாஸ்பேட்டை விமான நிலையம் அருகே உள்ள இருளர் மற்றும் பழங்குடியினருடன் நடந்தது.
- பட்டியல் அணி தலைவர் தமிழ்மாறன் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரவுபதி முர்முவின் வெற்றி கொண்டாட்டம் புதுவை பா.ஜனதா பட்டியல் அணி சார்பில் லாஸ்பேட்டை விமான நிலையம் அருகே உள்ள இருளர் மற்றும் பழங்குடியினருடன் நடந்தது. பட்டியல் அணி தலைவர் தமிழ்மாறன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப் பாளராக மாநில தலைவர் சாமிநாதன் கலந்து கொண்டார். அப்போது 150 குடும்பங்களுக்கு பட்டியல் அணி சார்பில் சர்க்கரை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில துணை த்தலைவர் செல்வம், செயலாளர்ரத்தினவேலு, அலுவலக செயலாளர் மகேஷ்ரெட்டி, தேசிய விவசாய அணி செயற்குழு உறுப்பினர்
பாரதி மோகன், காலாப்பட்டு தொகுதி தலைவர் பிரகாஷ், பொதுச்செயலாளர் குணசீலன், துணைத்தலைவர் லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கருத்தரங்கை கல்லூரி முதல்வர் மலர்க்கண் தொடங்கி வைத்தார்.
- மேலாண்மை துறை தலைவர் பாஸ்கரன் கருத்தரங்க உரை ஆற்றினார்.
புதுச்சேரி:
கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெ க்னாலஜியில் மேலாண்மைத்துறை மாணவர் சங்கம் சார்பில் 'மிடிலைட் 22' கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கை கல்லூரி முதல்வர் மலர்க்கண் தொடங்கி வைத்தார். மணக்குள விநாயகர் கல்விக் குழும தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர். மேலாண்மை துறை தலைவர் பாஸ்கரன் கருத்தரங்க உரை ஆற்றினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக புதுவை லுகாஸ் டி.வி.எஸ். நிறுவன மூத்த அதிகாரி தமிழ்செல்வி கலந்து கொண்டு பேசுகையில், 'மாணவர்கள் முன்னேற்ற பாதையில் செல்ல இலக்குகளை நிர்ணயித்து செயல்பட வேண்டும். தொடர்ச்சியான கற்றல், புதுப்பித்து கொள்ளும் தன்மை, பணிக்கு தேவையான திறன்கள் மற்றும் நிர்ணயித்த இலக்கை அடைய வேண்டிய தன்மைகளை வளர்த்து கொள்ள வேண்டும்' என்றார். கருத்தரங்கில் புதுவை, தமிழகத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பேராசிரியர் அகல்யா கருத்தரங்கு நிறைவு அறிக்கை வாசித்தார். முடிவில் பேராசிரியர் அருண் நன்றி கூறினார். கருத்தரங்க ஏற்பாடுகளை மேலாண்மை துறை பேராசிரியர் மன்சூர் இப்ராஹிம் மற்றும் மாணவர்கள் செய்து இருந்தனர்.
- புதுவைத்தமிழ்ச் சங்கத்தில் அனைத்திந்திய தமிழ்ச் சங்க விழா நடந்தது
- விழாவில் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.முத்து பவள விழா பாமாலை எனும் நூலினை அமைச்சர் லட்சுமி நாராயணன் வெளியிட்டார்.
புதுச்சேரி:
புதுவைத்தமிழ்ச் சங்கத்தில் அனைத்திந்திய தமிழ்ச் சங்க விழா நடந்தது. விழாவில் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.முத்து பவள விழா பாமாலை எனும் நூலினை அமைச்சர் லட்சுமி நாராயணன் வெளியிட்டார். இதனை முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் ஜான்குமார் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.முத்து, அனைத்திந்திய தமிழ்ச் சங்கத் தலைவர் ஆவடிகுமார், தமிழ்ச் சங்க செயலர் சீனு.மோகன்தாசு, பொருளாளர் திருநாவுக்கரசு, துணை தலைவர்கள் ஆதிகேசவன், என்ஜினீயர் பாலசுப்பிரமணியன், உசேன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில் இளைஞர்களுக்கு தேவையான கிரிக்கெட் மட்டை, பந்து, ஸ்டெம்புகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தொகுதி தி.மு.க. துணை செயலாளர் நாசர், இர்பான், தாபித், லாரன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கென்னடி தனது தொகுதி மக்களுக்கு பல்வே று நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
- விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையிலும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி தனது தொகுதி மக்களுக்கு பல்வே று நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையிலும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் தொகுதியை சேர்ந்த இளைஞர்கள் நேரில் சந்தித்து தங்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை தருமாறு கோரிக்கை வைத்தனர்.
அதை ஏற்றுக்கொண்ட அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில் இளைஞர்களுக்கு தேவையான கிரிக்கெட் மட்டை, பந்து, ஸ்டெம்புகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தொகுதி தி.மு.க. துணை செயலாளர் நாசர், இர்பான், தாபித், லாரன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- புதுவையில் ஆயிரத்து 811 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
- புதுவையில் 109, காரைக்காலில் 40, ஏனாமில் 6 பேர் என புதிதாக 155 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுச்சேரி:
புதுவையில் ஆயிரத்து 811 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் புதுவையில் 109, காரைக்காலில் 40, ஏனாமில் 6 பேர் என புதிதாக 155 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 20, காரைக்காலில் 1, ஏனாமில் 3 பேர் என 24 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 949, காரைக்காலில் 190, ஏனாமில் 26, மாகியில் 3 பேர் என ஆயிரத்து 168 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை யில் 172, காரைக் காலில் 20, ஏனாமில் 4 பேர் என 196 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர்.
புதுவை இளங்கோ நகரை சேர்ந்த 74 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 965 ஆக உயர்ந்துள்ளது. புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 17 லட்சத்து 83 ஆயிரத்து 288 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
- சாந்தி நகர் விரிவாக்கம் ஆகிய பகுதிகளில் கன மழை காரணமாக வெள்ளம் புகுந்தது.
- மழை நீர் உள்வாங்க முடியாமல் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்தது தெரியவந்தது.
புதுச்சேரி:
புதுவை உருளையன்பேட்டை தொகுதி சாந்தி நகர் மற்றும் சாந்தி நகர் விரிவாக்கம் ஆகிய பகுதிகளில் கன மழை காரணமாக வெள்ளம் புகுந்தது.
உப்பனாறு வாய்க்கால் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதால் மழை நீர் உள்வாங்க முடியாமல் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்தது தெரியவந்தது. இதையடுத்து உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. நேரு புதுவை நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளையும், ஊழியர்களையும் அழைத்து அப்பகுதியில் மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொண்டார். இதன்படி மழைநீரும் வெளியேற்றப்பட்டது. உடனடியாக மழைநீரை வெளியேற்றிய எம்.எல்.ஏ.வுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
- நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பரவி வருகிறது. கொரோனா 2 தவணை தடுப்பூசியை ஏற்கனவே 17 லட்சம் பேர் செலுத்தியுள்ளனர்.
- புதுவையில் கடந்த ஒரு மாதமாக கொரோனா தொற்று படிப்படியாக உயர்ந்து வருகிறது.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த ஒரு மாதமாக கொரோனா தொற்று படிப்படியாக உயர்ந்து வருகிறது.
நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பரவி வருகிறது. கொரோனா 2 தவணை தடுப்பூசியை ஏற்கனவே 17 லட்சம் பேர் செலுத்தியுள்ளனர். இந்த நிலையில் மத்திய அரசு கடந்த பிப்ரவரியில் பூஸ்டர் தடுப்பூசியை அறிமுகப்படுத்தியது. இந்த ஊசியை கட்டணம் செலுத்தி போட்டுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டை முன்னிட்டு 75 நாட்களுக்கு நாடு முழுவதும் இலவசமாக கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முதல், 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டிய மக்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. கொரோனா முற்றிலும் குறைந்ததும், கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும் காரணமாக இருந்தது.
இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு, கொரோனா மீண்டும் வேகமாக பரவும். அதற்கேற்ப மருத்துவ கட்டமைப்புகளை பலப்படுத்த வேண்டும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. இதனால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பூஸ்டர் தடுப்பூசி செலுத்த பல்வேறு நடவடிக்கை களை அரசு எடுத்து வருகிறது. இதற்காக அரசின் சுகாதாரத்துறை சார்பில் மாநிலம் முழுவதும்
350 குழுக்கள் அமைக்க ப்பட்டுள்ளது. இந்த குழுவினர் வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். ஏற்கனவே முதல், 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கும், தகுதியானவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தி வருகின்றனர். இதில் 70 குழுக்கள் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கதிர்காமம் இந்திராகாந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டிருந்தது. முகாமை முதல்- அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை பார்வையிட்டார். அவருடன் கே.எஸ்.பி.ரமேஷ் எம்எல்ஏ, சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, உதவி இயக்குனர்கள் ராஜாம்பாள், ரகுநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முகாமை தொடங்கி வைத்த முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறும்போது, கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை அனைவரும் செலுத்திக்கொள்ள வேண்டும். கொரோனா விதிமுறைகளையும் கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
- பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
- மோட்டார் சைக்கிள்களில் திடீரென்று ஒரு கும்பல் வந்து இறங்கியது
புதுச்சேரி:
புதுவையில் ரவுடி கொலையில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுவை மேட்டுப் பாளையம் சண்முகாபுரம் வடக்குபாரதிபுரத்தை சேர் ந்தவர் பன்னீர்செ ல்வம் (வயது 24). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் நண்பர்கள் பாலாஜி, சத்தியவாசகன், தினேஷ்குமார் மற்றும் 4 பேருடன் தனது வீட்டில் பன்னீர் செல்வம் மது அருந்திக்கொண்டு இருந்தார்.
இரவு 10.15 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து கொண்டு இருந்த போது மோட்டார் சைக்கிள்களில் திடீரென்று ஒரு கும்பல் வந்து இறங்கியது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் பன்னீர் செல்வம் வீட்டுக்குள் புகுந்தனர்.
அவர்களை பார்த்ததும் பன்னீர்செல்வமும், அவரது நண்பர்கள் பாலாஜி, சத்தியவாசகன், திேனஷ்குமார் ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால், அதற்கு வாய்ப்பு இல்லாத வகையில் கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து 2 நாட்டு வெடிகுண்டுகளை அந்த கும்பல் வீசியது.
பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதால் அந்த பகுதியே அதிர்ந்தது.
வெடிகுண்டுகள் வெடித்த வீட்டிலும், அந்த பகுதியிலும் புகை மண்டலமானது. இதை பயன்படுத்தி தப்பி ஓட விடாமல் பன்னீர்
செல்வம், அவரது நண்பர்கள் சத்தியவாசகன், பாலாஜி, தினேஷ்குமார் ஆகியோரை அந்த கும்பல் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்டித் தள்ளியது.
இதில் அவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதன்பின் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.அதன்பின் பன்னீர்செல்வம், சத்திய–வாசகன், பாலாஜி, தினேஷ்குமார் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கிருந்து மேல்சிகிச்சைக் காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அவர்கள் அனுப்பி வைக் கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பன்னீர் செல்வம் பரிதாபமாக இறந்தார்.
பாலாஜி ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சத்திய வாசகனும், தினேஷ்குமாரும் சிகிச்சை பெற்று வரு கின்றனர். பன்னீர் செல்வத்துடன் இருந்த மேலும் 4 பேர் அக்கும்பல் வெடிகுண்டு வீசும்போது தப்பி ஓடி விட்டதால் காயமின்றி தப்பினர்.
இக்கொலை தொடர்பாக சாண்டி என்கிற செந்தில் நாதன், தீவனூர் பரத், கிளியனூர் அஜித், பாரதி புரம் கனகராஜ், பூத்துறை பரத், காமராஜர் நகர் விமல்ராஜ், ரெட்டியார் பாளையம் வைசாக் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். இக்கொலை தொடர்புள்ள மேலும் சிலரை தேடி வந்தனர். இந்த நிலையில் சண்முகாபுரத்தை சேர்ந்த மூர்த்தி, யுவராஜ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
- இதனையொட்டி புதுவையில் சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரப்படுத்தப்படுகிறார்கள்.
- புத்தாடை அணிவித்து அவர்களுக்கு பழக்கூடை மற்றும் பொருட்களை வழங்கினர்.
புதுச்சேரி:
இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி அமுத பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி புதுவையில் சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரப்படுத்தப்படுகிறார்கள். அதன்படி முத்தியால்பேட்டை தொகுதியை சேர்ந்த தியாகிகள் கிருஷ்ணராஜ்(வயது88) மற்றும் சுப்புராயலு(97) ஆகிய இருவரையும் புதுவை அரசின் நில அளவை பதிவேடுத்துறை இயக்குனர் ரமேஷ் தலைமையில் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. 2 தியாகிகளின் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு சந்தன மாலை மற்றும் புத்தாடை அணிவித்து அவர்களுக்கு பழக்கூடை மற்றும் பொருட்களை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் மணிகண்டன் மற்றும் தியாகிகள் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
- நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பு தலைவர் ரோகு. அருள்தாஸ் தலைமை தாங்கி நோட்டு புத்தகங்களை வழங்கினார்
- நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் கலைமணி முன்னிலை வகித்தார்.
புதுச்சேரி:
புதுவை ஒருங்கிணைந்த ஆதிதிராவிடர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அம்பேத்கர் பிறந்த நாளை உலக கல்வி தின விழாவாகவும், காமராஜர் பிறந்த நாளை விழாவை முன்னிட்டு அபிஷேகப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பு தலைவர் ரோகு. அருள்தாஸ் தலைமை தாங்கி நோட்டு புத்தகங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் கலைமணி முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கலைமன்னன், விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி நூலக ஆசிரியர் கலைவாணன், பள்ளி தலைமை ஆசிரியர் உமா மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு எழுது பொருட்களை வழங்கினர். கவுரவ தலைவர் திருமால், நகரத் தலைவர் ஆதிகேசவன், அமைப்பு செயலாளர் பொன்னிவேல், கொள்கை பரப்பு செயலர் பரமசிவம், மாநில செயலாளர்கள் பாவேந்தன், கண்ணன், செய்தி தொடர்பாளர் கன்னியப்பன் மாணவர் கூட்டமைப்பு தலைவர் மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில பொருளாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.
- முகாமை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.
- இன்று தவளக்குப்பத்தில் உள்ள சுப மங்கள மஹால் திருமண நிலையத்தில் நடைபெற்றது.
புதுச்சேரி:
மணவெளி தொகுதியை சேர்ந்த மாற்று திறனாளிகளுக்கு இலவச முடநீக்கு உபகரணங்கள் பெறுவதற்கான பதிவு முகாமை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார். புதுவை அரசின் சமூக நலத்துறை சார்பில் மணவெளி தொகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச முடநீக்கு உபகரணங்கள் பெறுவதற்கான பதிவு முகாம் இன்று தவளக்குப்பத்தில் உள்ள சுப மங்கள மஹால் திருமண நிலையத்தில் நடைபெற்றது.
இந்த முகாமினை தொகுதி எம்.எல்.ஏ.வும், சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சமூக நலத்துறை துணை இயக்குனர் கலாவதி, மணவெளி தொகுதி முக்கிய பிரமுகர்கள் பா.ஜனதா மாநில விவசாய அணி பொறுப்பாளர் ராமு, கிருஷ்ணமூர்த்தி, தவளைகுப்பம் கூட்டுறவு சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி, இயக்குனர் சக்திவேல், முன்னாள் கவுன்சிலர் ராஜா, மணி, ரமேஷ், சிவா, செல்வி, வாழுமுனி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த முகாமில் 350-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு அவர்களுக்கான உபகரணங்கள் வேண்டி பதிவு செய்து கொண்டனர். இந்த முகாமில் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கை கால்களை இழந்தவர்களுக்கும் சக்கர நாற்காலி, செயற்கை கை மற்றும் கால், ஊன்றுகோல் உள்ளிட்ட உபகரணங்களும் காதுகேளாதோருக்கு காது கேட்கும் கருவிகளும் கண் பார்வை குன்றியவர்களுக்கு உரிய உபகரணங்களும் இந்த முகாமில் பதிவு செய்யப்பட்டு அளவுகள் எடுக்கப்பட்டு அவர்களுக்குரிய உபகரணங்கள் ஒரு மாத காலத்தில் வழங்கப்படும்.






