என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • தமிழிசை தெலுங்கானாவிற்குத்தான் கவர்னர். அவர் புதுவைக்கு பொறுப்பு கவர்னர்தான்.
    • பொறுப்பு கவர்னராக வருபவர்கள் 6 மாதம் அல்லது ஒரு ஆண்டு பதவியில் இருக்கலாம்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழிசை தெலுங்கானாவிற்குத்தான் கவர்னர். அவர் புதுவைக்கு பொறுப்பு கவர்னர்தான்.

    புதுவையில் நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற அசைன்மெண்ட்டுடன் புதுவை துணை நிலை கவர்னராக நியமிக்கப்பட்டார்.

    பொறுப்பு கவர்னராக வருபவர்கள் 6 மாதம் அல்லது ஒரு ஆண்டு பதவியில் இருக்கலாம். ஆட்சியை கலைத்த பிறகும், தொடர்ந்து அவரை வைத்திருக்கிறார்கள். யார் என்றே தெரியாத 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக கொண்டு வந்தார். ஒரு ராஜ்ய சபா உறுப்பினரை பெற்று கொடுத்தார்.

    இதுபோன்ற ஜனநாயக விரோத பணியை தீவிரமாக பா.ஜனதாவின் முழு விசுவாசியாக இருந்து கவர்னர் செய்து கொடுத்து வருகிறார். அதனால் அவர் புதுவை கவர்னராக நீடித்து வருகிறார். ஆனால் அவர் புதுவை மக்கள் மனநிலைக்கு மாறாக செயல்படுவாரேயானால் மக்கள் போராட்டம் வெடிக்கும்.

    இவ்வாறு சிவா கூறினார்.

    • பாலாஜி வித்யாபீத்தின் ஒரு அங்கமான இந்திரா காந்தி பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, செயற்கை பல் கட்டும் பிரிவு மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து நடத்தியது.
    • புதுவையில் உள்ள முதியோர் இல்லங்களில் முகாம் அமைத்து முதியோர்களின் பல் தேவைகளை அவ்வப்போது நிவர்த்தி செய்து வருகிறது.

    புதுச்சேரி:

    பிள்ளையார் குப்பம் பாலாஜி வித்யாபீத்தின் ஒரு அங்கமான இந்திரா காந்தி பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, செயற்கை பல் கட்டும் பிரிவு மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து, புதுவையில் உள்ள முதியோர் இல்லங்களில் முகாம் அமைத்து முதியோர்களின் பல் தேவைகளை அவ்வப்போது நிவர்த்தி செய்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக, துறை தலைவர் டாக்டர் மனோகரன், உதவி பேராசிரியர் அகத்தியன், மற்றும் டாக்டர் ஆதர்ஷ் ஈஸ்வர் அடங்கிய குழுவினர் லாஸ்பேட்டை கிருஷ்ணா நகரில் உள்ள ஆயுஷ் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களின் பல் சார்ந்த தேவைகளை கண்டறிந்து மொத்தம் 30 முதியோர் பரிசோதிக்கப்பட்டு, பூரண பல் பராமரிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    • புதுவை மதகடிப்பட்டில் உள்ள மணக்குள விநாயகர் என்ஜினீயர் கல்லூரியில் கற்றலை மேம்படுத்துவது குறித்து சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
    • மணக்குள விநாயகர் என்ஜினீயர் கல்லூரி பதிவாளர் அப்பாஸ் மொய்தீன் வரவேற்புரையாற்றினார்.

    புதுச்சேரி:

    புதுவை மதகடிப்பட்டில் உள்ள மணக்குள விநாயகர் என்ஜினீயர் கல்லூரியில் கற்றலை மேம்படுத்துவது குறித்து சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

    இக்கருத்தரங்கில் நிரலாக்கத்தின் விளைவு அடிப்படையிலான கற்பித்தல், கட்டமைப்பு, எம்பெடட் பாடங்கள் மற்றும் ப்ளும்ஸ் டாக்ஸ்னாமி அடிப்படையில் வினா தாள்களை உருவாக்குதல் ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

    மணக்குள விநாயகர் என்ஜினீயர் கல்லூரி பதிவாளர் அப்பாஸ் மொய்தீன் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினி துறை பேராசிரியர் பாஸ்கரன் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல் ஆலோசனைகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மணக்குள விநாயகர் கல்வி குழுத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வருமான வெங்கடாசலபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மின்தகன மேடை திட்டத்தை, ஸ்மார்ட் சிட்டி திட்ட நிறுவனமே நேரடியாக செயல்படுத்த வேண்டும் என சம்பத் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.
    • 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த சுடுகாட்டில் தினமும் இறந்தோரின் உடல்கள் எரிப்பதால் சுற்றுச் சூழல் பாதிக்கிறது.

    புதுச்சேரி:

    தேங்காய்திட்டு சுடுகாடு மின்தகன மேடை திட்டத்தை, ஸ்மார்ட் சிட்டி திட்ட நிறுவனமே நேரடியாக செயல்படுத்த வேண்டும் என சம்பத் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

    இது குறித்து அவர், ஸ்மார்ட் சிட்டி திட்ட இணை செயல் அதிகாரியிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    முதலியார்பேட்டை, தேங்காய்திட்டில் சுடுகாடு உள்ளது. இதனை சுற்றி பல குடியிருப்புகள் வந்து விட்டது. இங்கு, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

    இந்த சுடுகாட்டில் தினமும் இறந்தோரின் உடல்கள் எரிப்பதால் சுற்றுச் சூழல் பாதிக்கிறது. மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.

    இதனால் கருவ–டிக்குப்பத்தில் உள்ளது போல மின்தகன மேடை அமைக்க வேண்டும் என நான் கோரிக்கை வைத்தேன். அதனையேற்று அரசு ரூ.4 கோடியை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒதுக்கீடு செய்து, பணியை செயல்படுத்தும் பொறுப்பு புதுவை நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.

    10 மாதங்களாகியும், திட்டத்தை செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இத்திட்டத்தை ஸ்மார்ட் சிட்டி திட்ட நிறுவனமே, நேரடியாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • மின் ஊழியர்களுக்கு கவர்னரும், மின்துறை அமைச்சரும் கடும் எச்சரிக்கை விடுத்தனர்.
    • கைது செய்யப்பட்ட மின் ஊழியர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷமிட்டவாறு பஸ்களில் சென்றனர்.

    புதுச்சேரி:

    மின்துறையை தனியார் மயமாக்கும் அரசின் நடவடிக்கையை கண்டித்து மின் ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இதனால் மின் தடை ஏற்பட்டு மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். புதுவை முழுவதும் இருளில் மூழ்கியதால் கடலூர், விழுப்புரம், திண்டிவனம், கிழக்கு கடற்கரை சாலைகள் என அனைத்து பகுதிகளிலும் மக்கள் மறியல் போராட்டம் நடந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து மின் ஊழியர்களுக்கு கவர்னரும், மின்துறை அமைச்சரும் கடும் எச்சரிக்கை விடுத்தனர். போராட்டத்தில் ஈடுபடும் மின் ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் என கூறியிருந்தனர்.

    மேலும் பாதுகாப்பு பணிக்காக ஆவடியில் இருந்து மத்திய அதிவிரைவு படையினர் (துணை ராணுவம்) வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் அடையாள அணிவகுப்பு நடத்தினர். மேலும் துணை மின்நிலையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இதற்கிடையே நேற்று இரவு புதுவை வம்பாகீரப்பாளையத்தில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்தில் துணை ராணுவம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு வம்சிதரெட்டி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். வளாகத்தினுள் அமர்ந்து தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மின் ஊழியர்களுக்கு போலீசார் 2 முறை எச்சரிக்கை விடுத்தனர்.

    அரசுக்கு சொந்தமான சொத்துக்களை சேதப்படுத்தி போலீசாரால் தேடப்படும் மின் துறை ஊழியர்கள் தலைமறைவாக இருக்க உடந்தையாக இருப்பது சட்டவிரோதமானது. ஆகையால் போலீசாரால் தேடப்படும் நபர்கள் இருந்தால் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். வேலை நேரத்தில் மட்டுமே போராட்டம் நடத்த வேண்டும்.

    இப்போது உடனே கலைந்து செல்லுமாறும், இல்லாவிட்டால் கைது செய்வோம் என போலீசார் எச்சரித்து 5 நிமிடம் அவகாசம் வழங்கினர்.

    அதன் பிறகும் அவர்கள் கலைந்து போகாததால் நள்ளிரவு 11 மணி அளவில் 300-க்கும் மேற்பட்ட மின் ஊழியர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை 5 பஸ்களில் எற்றி கோரிமேடு போலீஸ் மைதானத்தில் கொண்டு சென்றனர்.

    கைது செய்யப்பட்ட மின் ஊழியர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷமிட்டவாறு பஸ்களில் சென்றனர்.

    இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே சி.பி.டி.யு. புதுவை மின்துறை ஊழியர் சங்க தலைவர் முருகசாமி செயற்குழு உறுப்பினர் நடராஜ் ஆகிய 2 நிர்வாகிகளை புதுவை அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் 20-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • அமைச்சர்கள் ஆர்.எஸ்.எஸ் சீருடை அணிந்து அணி வகுப்பில் கலந்து கொண்டனர்.
    • பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

    தமிழகத்தில் காந்தி ஜெயந்தி அன்று ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு பேரணி நடத்த தமிழக அரசு அனுமதி மறுத்திருந்தது. இந்நிலையில் புதுச்சேரியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. பாஜகவை சேர்ந்த அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன்குமார் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ் சீருடை அணிந்து இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர்.

    வழக்கமாக அணியும் காக்கி டவுசருக்கு பதில் அவர்கள் காக்கி பேன்ட் அணிந்திருந்தனர். பிற்பகல் தொடங்கிய இந்த பேரணி, காமராஜர் சாலை, நேரு வீதி, மிஷன்வீதி, புஸ்சி வீதி, மறைமலையடிகள் சாலை வழியாக சிங்காரவேலர் சிலையருகே நிறைவு பெற்றது. ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    • புதுவை வாசகர் வட்டம் சார்பில் ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த சத்திய சோதனை புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது.
    • புதுவை கடற்கரை சாலை காந்தி சிலை அருகே வாசகர் வட்டம் சார்பில் சத்திய சோதனை புத்தகம் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை வாசகர் வட்டம் சார்பில் ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த சத்திய சோதனை புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது.

    அதன்படி காந்திஜெயந்தியை முன்னிட்டு புதுவை கடற்கரை சாலை காந்தி சிலை அருகே வாசகர் வட்டம் சார்பில் சத்திய சோதனை புத்தகம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு துணைத்தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் சம்பத்குமார் பொதுமக்களுக்கு புத்தகங்களை வழங்கினார்.

    முன்னதாக இலக்கியசோலை தமிழ் மன்ற தலைவர் சோமசுந்தரம் வரவேற்றார். இதில் நிர்வாகிகள் ஜெகதீசன், முருகையன், கோபாலகிருஷ்ணன், ராஜா, மதுரை முத்து, சவுந்திரவள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மடுகரையில் கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • 2 ஆண்டுகளுக்கு முன்பு முருவனின் வலது காலில் ஈச்சமுள் குத்தி விட்டது.

    புதுச்சேரி:

    மடுகரையில் கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நெட்டப்பாக்கம் அருகே மடுகரை ராம்ஜிநகரை அடுத்த புதுநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் முருவன் (வயது62). கூலி தொழிலாளி. இவருக்கு மொளவி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முருவனின் வலது காலில் ஈச்சமுள் குத்தி விட்டது. ஆனால் இதற்கு மருத்துவம் பார்க்காமல் முருவன் அலட்சியமாக இருந்து விட்டதால் அவருக்கு காலில் காயம் பரவியது. இதனால் தினமும் முருவன் அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில்  கால் வலி அதிகமானதால் முருவன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் வீட்டின் ஜன்னலில் சேலையால் தூக்கு போட்டு தொங்கினார். இதனை அக்கம் பக்கத்தினர் பார்த்து முருவனின் மகன் பழனிச்சாமிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து தனது தந்தையை தூக்கில் இருந்து மீட்டு மினிவேன் மூலம் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே முருவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மகன் பழனிசாமி கொடுத்த புகாரின் பேரில் மடுகரை புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புதுவை மாநில ஹேண்ட்பால் சங்கத்தின் அனுமதியுடன் புதுவை மாவட்ட கைப்பந்து சங்கம் 7-வது ஜுனியர் பிரிவு மாணவர்களுக்கான ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.
    • வெற்றி பெற்ற சகோதரர் அணிக்கு ஒதியஞ்சாலை காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் சுழல் கோப்பை மற்றும் பரிசுப்பொருட்களை வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில ஹேண்ட்பால் சங்கத்தின் அனுமதியுடன் புதுவை மாவட்ட கைப்பந்து சங்கம் 7-வது ஜுனியர் பிரிவு மாணவர்களுக்கான ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.

    போட்டியில் 6 அணிகள் பங்கேற்றனர். பெத்தி செமினார் பள்ளி அணியை எதிர்த்து புதுவை நண்பர்கள் அணி விளையாடியது. இதில் பெத்தி செமினார் அணியினர் 14-4 என்ற புள்ளி கணக்கில் வென்றனர். 2-வது செமி பைனலில் புதுவை சகோதரர்கள் அணியினர் புதுவை சி.ஆர்.பி அணியை எதிர்த்து 18-8 என்ற புள்ளி கணக்கில் வென்றனர்.

    இறுதி போட்டியில் சகோதரர்கள் அணியினர், புதுவை பெத்தி செமினார் அணியினரை எதிர்த்து 14-12 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றனர்.

    வெற்றி பெற்ற சகோதரர் அணிக்கு ஒதியஞ்சாலை காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் சுழல் கோப்பை மற்றும் பரிசுப்பொருட்களை வழங்கினார். 2-ம் இடத்தை பிடித்த பெத்தி செமினார் அணியினருக்கு உதவி ஆய்வாளர் முருகன் சுழல்கோப்பை மற்றம் பரிசு வழங்கினார்

    நிகழ்ச்சியில் ஹேண்ட்பால் சங்கத்தின் மாநில செயலர் நாராயணசாமி தலைமை தாங்கினார். போட்டிக்கான ஏற்பாடுகளை புதுவை மாவட்ட செயலர் அலெக்ஸ், துணை செயலரர் ஸ்ரீதர் உறுப்பினர்கள் சிலம்பரசன், ரதீஷ், விக்கி, அருள்அரசு ஆகியோர் செய்திருந்தனர்.

    • மயிலம் கல்வி குழுமத்தின் ஓர் அங்கமான மயிலம் இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மெண்டில் 4-ம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழா நடைபெற்றது.
    • மயிலம் என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் ராஜப்பன் மற்றும் மயிலம் செவிலியர் கல்லூரியின் முதல்வர் தமிழ்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    மயிலம் கல்வி குழுமத்தின் ஓர் அங்கமான மயிலம் இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மெண்டில் 4-ம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழா நடைபெற்றது.

    விழாவில் மயிலம் சுப்பிரமணிய சுவாமி கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுகுமாறன், வாழ்த்துரை வழங்கினார். செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தார்.

    மயிலம் இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மன்டின் முதல்வர் பாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். மயிலம் கல்வி குழுமத்தின் இயக்குனர் செந்தில் சிறப்புரை வழங்கினார். மயிலம் என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் ராஜப்பன் மற்றும் மயிலம் செவிலியர் கல்லூரியின் முதல்வர் தமிழ்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக உணவு முன்னோடிகளுக்கான வழிகாட்டி சமையல் செயல்பாட்டு அதிகாரி கவுபிக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    அதனைத் தொடர்ந்து இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான ஐ.டி.சி. கிராண்ட் சோலா, சென்னை, தி ரெசிடென்சி டவர்ஸ், கோவை மற்றும் லிலா பேலஸ், சென்னை போன்ற பிரபலமான சொகுசு ஓட்டல்களில் பயிற்சிக்கான பணி ஆணைக்கான கடிதம் வழங்கப்பட்டது.

    முடிவில் மயிலம் இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மெண்டின் விரிவுரையாளர் மரியஜெனவி நன்றி கூறினார்.

    • பிரதமர் மோடியின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்டங்கள் நடைபெற்று க்கொண்டிருக்கிறது.
    • இவ்விழாவில் ஜிப்மர் மருத்துவமனையின் டீன் பங்கஜ் குந்த்ரா வரவேற்ப்புரையாற்றினார்.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடியின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்டங்கள் நடைபெற்று க்கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக மோடி- 20 கருத்தரங்கம் ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

    இவ்விழாவில் ஜிப்மர் மருத்துவமனையின் டீன் பங்கஜ் குந்த்ரா வரவேற்ப்புரையாற்றினார். முன்னாள் நீதிபதி அருள் தொடக்க உரையாற்றினார். செல்வகணபதி எம்.பி தலைமை விருந்தினராக பங்கேற்று கருத்தரங்கை தொடங்கிவைத்தார்.

    அவர் பேசுகையில் மோடியின் 20 ஆண்டுகள் சாதனைகளை மாநில அளவிலும் தேசிய அளவிலும் பட்டியலிட்டார்.

    பாரதியார் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினரும் கல்வியாளரும்மான காயத்திரி இக்கருத்தரங்கில் மோடி 20 என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

    இந்த கருத்தரங்கில் 300-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் மிகவும் உற்சாகத்துடன் பங்கேற்றார்கள்.

    இறுதியில் ஜிப்மர் மருத்துவமனையின் பதிவாளர் பேராசிரியர் ரவிக்குமார் சிட்டோரிஸ் நன்றியுரை வழங்கினார்.

    இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஜிப்மர் மருத்துவமனையின் அலுவலர்கள் மற்றும் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • பொதுப்பணித்துறை சார்பில் தடுப்புச் சுவற்றில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டு சில வாரங்களுக்கு முன்பு அதில் கருப்பு-வெள்ளையில் இரு வர்ணங்கள் பல லட்சம் செலவில் பூசப்பட்டு அழகுற காணப்பட்டது.
    • அதனால் மீண்டும் போஸ்டர் சில காலம் யாரும் சுவற்ரின் மேல் போஸ்டர் ஒட்டாமல் இருந்தனர்.

    புதுச்சேரி:

    திருக்கனூர் கடைவீதியில் இரு புறங்களுக்கும் நடுவில் தடுப்புச் சுவர் 1 உள்ளது.

    இதனை அழகுப்படுத்தும் விதத்தில் புதுவை அரசின் பொதுப்பணித்துறை சார்பில் தடுப்புச் சுவற்றில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டு சில வாரங்களுக்கு முன்பு அதில் கருப்பு-வெள்ளையில் இரு வர்ணங்கள் பல லட்சம் செலவில் பூசப்பட்டு அழகுற காணப்பட்டது.

    அழகாக காணப்படும் தடுப்பு சுவற்றின் மீது போஸ்டர்கள் ஒட்டக்கூடாது என பொதுமக்களுக்கு பொது ப்பணித்துறை–யினரும் அறிவுறுத்தி இருந்தனர்.

    அதனால் மீண்டும் போஸ்டர் சில காலம் யாரும் சுவற்ரின் மேல் போஸ்டர் ஒட்டாமல் இருந்தனர். இதனால் கடைவீதி தடுப்புச் சுவர் அழகாக காணப்பட்டது. ஆனால் கடந்த இரு தினங்களாக அழகாக காணப்பட்ட தடுப்புச் சுவற்றின் மேல் சிலர் பல்வேறு விதமான போஸ்டர்களை ஒட்ட தொடங்கியுள்ளனர்.

    அதனால் பல லட்சம் செலவு செய்து வர்ணம் பூசப்பட்ட தடுப்புச் சுவர் அதன் அழகை இழக்கும் நிலை உள்ளது.

    மேலும் அரசின் பணம் வீணாகும் சூழ்நிலையும் ஏற்பட்டு உள்ளது. இதனைப் போக்க கடை வீதியின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் போஸ்டர்களை ஒட்டுபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வியாபாரிகளும் பொதுப்பணித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×