search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கவர்னர் மீது எதிர்கட்சி தலைவர் குற்றச்சாட்டு
    X

    கோப்பு படம்.

    கவர்னர் மீது எதிர்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

    • தமிழிசை தெலுங்கானாவிற்குத்தான் கவர்னர். அவர் புதுவைக்கு பொறுப்பு கவர்னர்தான்.
    • பொறுப்பு கவர்னராக வருபவர்கள் 6 மாதம் அல்லது ஒரு ஆண்டு பதவியில் இருக்கலாம்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழிசை தெலுங்கானாவிற்குத்தான் கவர்னர். அவர் புதுவைக்கு பொறுப்பு கவர்னர்தான்.

    புதுவையில் நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற அசைன்மெண்ட்டுடன் புதுவை துணை நிலை கவர்னராக நியமிக்கப்பட்டார்.

    பொறுப்பு கவர்னராக வருபவர்கள் 6 மாதம் அல்லது ஒரு ஆண்டு பதவியில் இருக்கலாம். ஆட்சியை கலைத்த பிறகும், தொடர்ந்து அவரை வைத்திருக்கிறார்கள். யார் என்றே தெரியாத 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக கொண்டு வந்தார். ஒரு ராஜ்ய சபா உறுப்பினரை பெற்று கொடுத்தார்.

    இதுபோன்ற ஜனநாயக விரோத பணியை தீவிரமாக பா.ஜனதாவின் முழு விசுவாசியாக இருந்து கவர்னர் செய்து கொடுத்து வருகிறார். அதனால் அவர் புதுவை கவர்னராக நீடித்து வருகிறார். ஆனால் அவர் புதுவை மக்கள் மனநிலைக்கு மாறாக செயல்படுவாரேயானால் மக்கள் போராட்டம் வெடிக்கும்.

    இவ்வாறு சிவா கூறினார்.

    Next Story
    ×