என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கடற்கரை சாலையில் உள்ள தலைமை செயலகத்தை எம்.எல்.ஏ.க்கள் நேரு, பிரகாஷ்குமார் ஆகியோர் பொதுமக்களுடன் வந்து முற்றுகையிட்டு தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தினார்கள்.
    • லாஸ்பேட்டையில் வைத்தியநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் பொதுமக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் மின்துறை தனியார் மயமாக்கத்தை கண்டித்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 5-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் புதுவையில் மின் தடை தொடர்கதையாக இருந்து வருகிறது.

    புதுவையில் நகர் மற்றும் கிராமப் புறங்களில் நேற்றும் பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டது. மாலை 5.30 மணி அளவில் நகர், கிராமங்கள் உள்பட மாநிலம் முழுவதும் மின்தடை ஏற்பட்டது.

    இரவு வெகுநேரமாகியும் மின் வினியோகம் சீராகவில்லை. இ்தனால் பஜார் பகுதியான நேரு வீதி, அண்ணாசாலை, காமராஜர் சாலை, புஸ்சி வீதி மற்றும் பஸ் நிலையம், முத்தியால்பேட்டை, வெங்கட்டாநகர், முதலியார்பேட்டை, ஒயிட் டவுன், கடற்கரை சாலை, உப்பளம் ஆகிய பகுதிகளும், கிராமங்களும் இருளில் மூழ்கின.

    இதற்கிடையே கடற்கரை சாலையில் உள்ள தலைமை செயலகத்தை எம்.எல்.ஏ.க்கள் நேரு, பிரகாஷ்குமார் ஆகியோர் பொதுமக்களுடன் வந்து முற்றுகையிட்டு தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தினார்கள். லாஸ்பேட்டையில் வைத்தியநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் பொதுமக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    ராஜா தியேட்டர் சந்திப்பு நெல்லித்தோப்பு தொகுதி, காமராஜர் நகர், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் சாலை மறியல் நடைபெற்றது. கிராமபுற பகுதிகளான திருக்கனூர் கடை வீதி, கொடாத்தூர், சோரப்பட்டு, வாதானூர், விநாயகம் பட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் சாலை மறியல் நடைபெற்றது.

    மாநிலம் முழுவதும் நகர் மற்றும் கிராம புறங்களில் நடந்த திடீர் மறியலால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    இந்த நிலையில் இரவு 9 மணிக்கு மேல் ஒவ்வொரு பகுதியாக மின் விநியோகம் செய்யப்பட்டதால் சகஜ நிலை திரும்பியது. ஆனாலும் வேறு சில இடங்களில் இரவு 11 மணிக்கு பிறகும் மின் விநியோகம் சீராகவில்லை. கிருமாம்பாக்கம், புதுநகர், கன்னியக்கோவில், முள்ளோடை பகுதிகளில் மின் வெட்டு தொடர்ந்ததால் இரு சக்கர வாகனங்கள் கூட நுழைய முடியாத அளவுக்கு தடுப்புகள் வைத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் அங்கு அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன் ஆகியோர் வந்து மின் விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். ஆனாலும், பொதுமக்கள் இரவு 11 மணிக்கு பிறகும் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்தனர்.

    • புதுவை அரசின் பொதுப்பணித்துறை மூலமாக திருக்கனூர் கடைவீதியில் ஆக்கி–ரமிப்புகள் அகற்றும் பணி இன்று காலை நடைபெற்றது.
    • சைடு வாய்க்காலுக்கு வெளியே யாரும் ஆக்கிரமித்து கடை வைக்கக் கூடாது என எச்சரித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் பொதுப்பணித்துறை மூலமாக திருக்கனூர் கடைவீதியில் ஆக்கி–ரமிப்புகள் அகற்றும் பணி  நடைபெற்றது.

    பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மண்ணாடிப்பட்டு கொம்யூன்பஞ்சாயத்து அதிகாரிகள் திருக்கனூர் கடைவீதி–யில் இருந்து தொடங்கி கே .ஆர் .பாளையம் சந்திப்பு வரை கடை வீதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினார்கள்.

    சைடு வாய்க்காலுக்கு வெளியே யாரும் ஆக்கிரமித்து கடை வைக்கக் கூடாது என எச்சரித்தனர். அதே நேரத்தில் முறையாக அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் ,வாய்க்காலுக்கு வெளியே இருப்பதை மட்டும் அதிகாரிகள் அகற்றுகிறார்கள் எனவும் முறைப்படி கணக்கிட்டு அரசின் இடத்தை அளந்து அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தென்பெண்ணை ஆற்றில் இருந்து மினி லாரியில் மணல் கடத்தி செல்லப்படுவதாக பாகூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • மினி லாரியில் ஆற்று மணலை பதுக்கி வைத்து அதன் மேல் வைக்கோல் போர் போட்டு நூதன முறையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    பாகூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் இருந்து மினி லாரியில் மணல் கடத்தி செல்லப்படுவதாக பாகூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து பாகூர் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் பாகூர் மாஞ்சோலை சாலையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை பார்த்தும் மணல் கடத்தி சென்றவர் மினி லாரியை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டனர். சந்தேகமடைந்த போலீசார் மினி லாரியை சோதனை செய்தனர்.

    அப்போது மினி லாரியில் ஆற்று மணலை பதுக்கி வைத்து அதன் மேல் வைக்கோல் போர் போட்டு நூதன முறையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மணலுடன் அந்த மினி லாரியை பறிமுதல் செய்து பாகூர் போலீஸ் நிலையம் எடுத்து வந்தனர்.

    மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து மணலை கடத்தி செல்ல பயன்படுத்திய மினி லாரி யாருக்கு சொந்தமானது என்பது குறித்தும், தப்பியோடியவர் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து ஆற்றில் மணல் கடத்தல் நடந்து வருவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

    • மின்தடையை சீரமைக்க அரசு பல நடவடிக்கையை எடுத்துள்ளது.
    • பொதுமக்களும் போராட்டங்களை கைவிட்டு அமைதி காக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் மின்துறையை தனியார் மயமாக்க, டெண்டர் கோரப்பட்டதை தொடர்ந்து மின் ஊழியர்களின் தனியார் மய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் கடந்த 28-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    புதுவை, காரைக்கால் மாகி, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் மின்துறை ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்கிறது. வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அந்தந்த பிராந்தியங்களில் உள்ள தலைமை அலுவலகங்களில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    புதுவையில் வம்பாகீரப்பாளையத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் இன்று 4-வது நாளாக வேலை நிறுத்தம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    மின்துறை ஊழியர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகள் 30-ந்தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் என அறிவித்திருந்தது.

    அதன்படி, நேற்று மாலை அண்ணாசிலை அருகில் அவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    எதிர்க்கட்சி தலைவர் சிவா மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி சுப்பிரமணியன், இந்திய தொழிற்சங்க மைய பத்மநாபன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்டு செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தை முதன்மை ஒருங்கிணைப்பாளர் தேவபொழிலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    மின் ஊழியர்கள் போராட்டத்தினால் புதுவை நகரம், புறநகர், கிராமப்புற பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மின்தடையை சீரமைக்க பணியாளர்கள் இல்லாததால் மணிக்கணக்கில் மின் விநியோகம் இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனால் பாதிக்கப்படும் மக்கள் அந்தந்த பகுதிகளில் சாலை மறியல், முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் அதுபோல சில பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.

    மின்துறை ஊழியர்கள் போராட்டத்தினால் தொழிற்சாலைகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. பெரிய தொழிற்சாலைகளில் ஜெனரேட்டர் வைத்து இயக்கி வருகின்றனர். ஆனால் சிறு தொழிற்சாலைகள் மூடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை தொழிற்சாலைகளில் ஏற்பட்ட மின்தடை காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் கிடைக்காத தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே, மின்தடையை போக்கவும், பழுதுகளை சீரமைக்கவும் புதுவை அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக மத்திய பவர்கிரீட்டில் இருந்து 24 அதிகாரிகள் புதுவைக்கு வர உள்ளனர்.

    அதுமட்டும் அல்லாமல் ஒப்பந்த அடிப்படையில் மின்தடையை சீரமைக்கும் பணியாட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஓய்வுபெற்ற மின் தொழிலாளர்கள், ஊழியர்களை மீண்டும் பணிக்கு வருமாறு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

    இவர்களை களத்தில் இறக்குவதன் மூலம் மின்தடையை சமாளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று கவர்னர் தமிழிசை மின்துறை ஊழியர்கள், அதிகாரிகளுக்கு சட்டபூர்வமான பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதி அளித்திருந்தார். இதனையும் மீறி மின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்தால் சட்ட நடவடிக்கைகள் மூலம் எதிர்கொள்ளவும் அரசு தயாராகி வருகிறது.

    இந்த நிலையில் மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-

    மின்துறை ஊழியர்கள், அதிகாரிகள் பணி பாதுகாப்பு உறுதி செய்யப்படும். பொதுமக்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு இது. எனவே, மின்துறை ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பி அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் மின்தடையை ஏற்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகிறது. இதனை அரசு வேடிக்கை பார்க்காது. கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மின்தடையை சீரமைக்க அரசு பல நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனால் பொதுமக்களும் போராட்டங்களை கைவிட்டு அமைதி காக்க வேண்டும்.

    டெண்டர் கோரப்பட்டிருந்தாலும், ஒரே நாளில் மின்துறை தனியார் மயமாகி விடாது. எனவே, மின்துறை ஊழியர்கள் தங்களுடைய குறைகளை அரசிடம் வைக்கலாம். அவர்களது நலனை பாதுகாக்கும் வகையில் நல்ல முடிவுகள் எடுக்கப்படும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுவை மாநில ஹேண்ட்பால் சங்கத்தின் அனுமதியுடன் புதுவை மாவட்ட ஹேண்ட்பால் சங்கம் சார்பில் 7-வது ஜுனியர் பிரிவு மாணவர்களுக்கான ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டி உப்பளம் விளையாட்டு திடலில் நடந்தது.
    • போட்டியில் 6 அணிகள் பங்கேற்றன. போட்டி நாக் அவுட் முறையில் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில ஹேண்ட்பால் சங்கத்தின் அனுமதியுடன் புதுவை மாவட்ட ஹேண்ட்பால் சங்கம் சார்பில் 7-வது ஜுனியர் பிரிவு மாணவர்களுக்கான ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டி உப்பளம் விளையாட்டு திடலில் நடந்தது.

    போட்டியை புதுவை மாநில யூலிம் சிக் சங்கத்தின் சீனியர் துணை தலைவரும், மாநில கோ-கோ சங்கத்தின் செயலாளருமான ஜேசு தொடங்கி வைத்தார். ஹேண்ட்பால் சங்கத்தின் மாநில செயலர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.

    போட்டியில் 6 அணிகள் பங்கேற்றன. போட்டி நாக் அவுட் முறையில் நடைபெற்றது. முதல் போட்டியில் புதுவை சகோதரர்கள் அணியும், வி.கே.பி. அணியும் விளையாடின. இதில் 14-5 என்ற புள்ளி கணக்கில் புதுவை சகோதரர்கள் அணி வெற்றி பெற்றது.

    2-வது ஆட்டத்தில் பெத்திசெமினார் பள்ளி அணியும் புதுவை நண்பர்கள் அணி மோதின. இதில் 13-11 என்ற புள்ளி கணக்கில் பெத்திசெமினார் அணி வெற்றி பெற்றது.

    போட்டிக்கான ஏற்பாடுகளை புதுவை மாவட்ட செயலர் அலெக்ஸ், துணை செயலர் ஸ்ரீதர், உறுப்பினர்கள் சிலம்பரசன், ரதீஷ், விக்கி, அருள்அரசு ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • புதுவை சிவாஜி மன்றம் சார்பில் சிவாஜி பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
    • அரியாங்குப்பத்தில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு-புத்தகம் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை சிவாஜி மன்றம் சார்பில் சிவாஜி பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி புதுவை கிழக்கு கடற்கரைசாலையில் உள்ள சிவாஜி சிலைக்கு மன்ற தலைவர் மாயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனை ெதாடர்ந்து அரியாங்குப்பத்தில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு-புத்தகம் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு புதுவை சிவாஜி மன்ற தலைவர் மாயன் தலைமை தாங்கினார். பாஸ்கரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு-புத்தகம் வழங்கினார்.

    சிவாஜி மன்ற நிர்வாகிகள் செல்வம், சுந்தர்ராஜ், ரமேஷ், மோகன்,ராமு, ஏழுமலை, தனஆனந்தன், அந்தோனிபாஸ்கர், வசந்த் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில் தமிழக பகுதிகளில் போராட்டங்கள், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றது.
    • கோட்டகுப்பம் அடுத்த அனுமந்தையில் வசித்து வரும் விழுப்புரம் மாவட்ட பா.ஜனதா தலைவர் ஏ.டி ராஜேந்திரன் வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில் தமிழக பகுதிகளில் போராட்டங்கள், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றது.

    இந்நிலையில் புதுவை அருகே உள்ள தமிழக பகுதியான திருச்சிற்றம்பலம் கூட் ரோட்டில் வசிக்கும் விழுப்புரம் மாவட்ட பா.ஜனதா பொதுச் செயலாளர் ஜி.கே ராஜன் வீட்டிற்கு ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு மேற்பார்வையில் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதேபோல் கோட்டகுப்பம் அடுத்த அனுமந்தையில் வசித்து வரும் விழுப்புரம் மாவட்ட பா.ஜனதா தலைவர் ஏ.டி ராஜேந்திரன் வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் விழுப்புரத்தில் இருந்து ஆயுதப்படை போலீசார் வரவழைக்கப்பட்டு முக்கிய இடங்களில் ஆங்காங்கே குவிக்கப்பட்டுள்ளனர்.

    கூடுதலாக கோட்டகுப்பத்தில் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • குயவர்பாளையத்தில் ஓட்டல் ஊழியர் தூக்கு போட்டு இறந்து போனார். இதனையறிந்த அவரது நண்பரும் வேதனையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இவர் கேட்டரிங் படித்து விட்டு புதுவை அண்ணா சாலையில் உள்ள ஒரு ரெசிடெண்சியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

    புதுச்சேரி:

    குயவர்பாளையத்தில் ஓட்டல் ஊழியர் தூக்கு போட்டு இறந்து போனார். இதனையறிந்த அவரது நண்பரும் வேதனையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுவை குயவர்பாளை யம் புது அய்யனார் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் பாலமுருகன் (வயது24). இவர் கேட்டரிங் படித்து விட்டு புதுவை அண்ணா சாலையில் உள்ள ஒரு ரெசிடெண்சியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

    இதேபோல் கடலூர் தில்லைநாயகம் புரத்தை சேர்ந்த கார்த்திக்(25) என்பவர் புதுவை வண்ணான்குளத்தில் வாடகை வீட்டில் தங்கி ஓட்டலில் வேலை செய்து வந்தார். பாலமுருகனும், கார்த்திக்கும் நண்பர்கள் ஆவார்கள். அடிக்கடி கார்த்திக் வீட்டுக்கு வந்து பாலமுருகன் சாப்பிட்டு செல்வார்.

    இந்த நிலையில் பாலமுருகன் அவரது வீட்டில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த கார்த்திக் ஆஸ்பத்திரிக்கு சென்று நண்பரின் உடலை பார்த்து கதறி அழுதார்.

    பின்னர் தான் தங்கியிருக்கும் வீட்டுக்கு வந்தார். அப்போது கார்த்திக் சோகத்துடன் இருந்ததால் பக்கத்து வீட்டில் வசிக்கும் கவுரி(51) என்பவர் கார்த்திக்கிடம் சோகத்துக்கான காரணத்தை கேட்டார். அதற்கு கார்த்திக் தான் உயிருக்கு உயிராக பழகிய நண்பர் தற்கொலை செய்து கொண்டதாக கூறி தேம்பிதேம்பி அழுதார். அவருக்கு கவுரி ஆறுதல் தெரிவித்து தூங்கினால் சோகம் குறையும் என்று சமாதானம் செய்து அவரை தூங்க வைத்து விட்டு கவுரி தன் வீட்டுக்கு சென்று தூங்கினார்.

    இந்த நிலையில் கவுரி தூங்கி எழுந்த போது வீட்டின் வராண்டாவில் கார்த்திக் மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். நண்பர் பிரிவை தாங்க முடியாமல் மனவேதனையில் கார்த்திக் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதுகுறித்து கவுரி முதலியார்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி கார்த்திக்கின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

    • கடந்த 2 நாட்களாக கன்னியகோவில் புதுநகர், வாக்கால்ஓடை ஆகிய கிராமத்தில் இரவு நேரத்தில் மின்சார தடையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
    • வேலைக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    பாகூர்:

    புதுவை மின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மின் தடை அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.

    இதனை கண்டித்து பல இடங்களில் பொதுமக்கள் அவ்வப்போது போராட்டங்களில் குதித்துள்ளனர். அதிகபட்சமாக சாலை மறியலில் ஈடுபடுகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று பாகூர், கன்னியகோவில், கிருமாம்பாக்கம் ஆகிய பகுதிகளில் இரவு நேரத்தில் மழை பெய்தது. மழையின் காரணமாக மின்சாரம் நிறுத்தப்பட்டிருந்தது. பிறகு அந்த மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கன்னியகோவில் புதுநகர், வாக்கால்ஓடை ஆகிய கிராமத்தில் இரவு நேரத்தில் மின்சார தடையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    இதனால் வேலைக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    மேலும் குடிநீர் விநியோகமும் அவ்வப்போது நிறுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த புதுநகர் மக்கள் கடலூர்-புதுவை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 7.45 மணியளவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இந்த மறியலின் போது வீட்டில் இருந்த பெஞ்ச், மரப்பொருட்களை ரோட்டில் கொட்டி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பெண்களும் பங்கேற்றனர்.

    இந்த போராட்டத்தால் வாகனங்கள் மூலம் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    நீண்ட நேரம் வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்தது. அருகிலுள்ள கல்லூரிக்கு செல்ல வேண்டிய மாணவர்கள் நடந்தே சென்றனர். அதுபோல் தொழிலாளர்களும் நடந்து சென்றனர்.

    தகவல் அறிந்த கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த நிலையில் போலீசாரின் உதவியுடன் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டதால் போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்டம் சுமார் ½ மணி நேரம் நீடித்தது.

    இதே போல பாகூர் அடுத்த குருவிநத்தம் தூக்குப்பாலம் பகுதியில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுடன் மார்க்சிஸ்டு, கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 24 பேரை பாகூர் போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல பாகூர் நகரப் பகுதியில் நேற்று இரவு முதல் காலை வரை மின்சாரம் தடைபட்டு இருந்ததால் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அதற்குள் மின்விநியோகம் செய்யப்பட்டதால் போராட்டத்தை கைவிட்டனர்.

    • பிரதமர் மோடியின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
    • இந்த விழாவில் புதுவை பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன், காமராஜ் நகர் தொகுதி ஜான்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடியின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த விழாவின் தொடர் நிகழ்ச்சியாக புதுவை அனைத்து பகுதியை சார்ந்த மக்களுக்கு இலவச கண் கண்ணாடிகள் புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள எம்.பி. அலுவலகத்தில் செல்வகணபதி எம்.பி. வழங்கினார்.

    இந்த விழாவில் புதுவை பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன், காமராஜ் நகர் தொகுதி ஜான்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

    இந்த விழாவில் பா.ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 200-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு சுமார் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

    • புதுவை கனக–செட்டிகுளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவ–மனையில் 24வயது மதிக்கத்தக்க வாலிபர் கடும் வயிற்று வலியுடன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
    • எண்டோஸ்கோப்பி மூலம் மயக்க மருந்து இல்லாமல் 25 மி.மீ நீளம் கொண்ட சிறு இரும்பு துண்டை அகற்றினர்.

    புதுச்சேரி:

    புதுவை கனக–செட்டிகுளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவ–மனையில் 24வயது மதிக்கத்தக்க வாலிபர் கடும் வயிற்று வலியுடன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரை பரிசோதித்த பொது மருத்துவர் டாக்டர் ரவீந்திர பாரதி மற்றும் மருத்துவ குழுவினர் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது வாலிபரின் வயிற்று பகுதியில் சிறிய இரும்பு துண்டு இருப்பதும் அதன் காரணமாக அவர் வயிற்று வலியால் அவதிப்படுவதை உறுதி செய்தனர்.

    உடனடியாக எண்டோஸ்கோப்பி மூலம் மயக்க மருந்து இல்லாமல் 25 மி.மீ நீளம் கொண்ட சிறு இரும்பு துண்டை அகற்றினர்.

    இதுகுறித்து டாக்டர் ரவீந்திர பாரதி, கூறியதாவது:-

    வாலிபர் பல்வலிக்கு சிகிச்சைக்காக சென்ற–போது இந்த இரும்பு துண்டை விழுங்கியுள்ளார்.

    அந்த இரும்பு துண்டு உணவுடன் கலந்து மிதந்ததால், அதனை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் சி.ஆர்ம் என்று சொல்லக்கூடிய தொடர் எக்ஸ்ரே கருவி மூலம் நிதானமாக 3 மணிநேர முயற்சிக்கு பின் இரும்பு துண்டு வெற்றிகரமாக அகற்றப்பட்டது. வாலிபர்  வீடு திரும்பினார்.

    இவ்வாறு டாக்டர் ரவீந்திர பாரதி கூறினார்.

    சிக்கலான இந்த சிகிச்சையை மயக்க மருந்து இல்லாமல் எண்டோஸ் கோப்பி மூலம் மேற்கொண்ட டாக்டர் ரவீந்திர பாரதி மற்றும் குழுவினரை பிம்ஸ் மருத்துவ கல்லூரி நிர்வாக குழு முதன்மை ஆலோசகர் பாபு டேனியல், கல்லூரி முதல்வர் அனில் பூர்த்தி, மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன் ஆகியோர் பாராட்டினர்.

    • கைதிகளை அழைத்து செல்லும் போலீஸ் வாகனத்தின் சீட் சேதமடைந்தும், வாகனத்தின் உள்ளே உள்ள நடைபாதையில் பெரிய ஓட்டையும் உள்ளது.
    • ஒரு வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கிளை சிறைச்சாலையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    காரைக்கால் சிறையில் இருந்த தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் புதுவை காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கைதிகளின் வழக்குகள் காரைக்கால் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இதனால், கைதிகளை அவ்வப்போது ஆயுதப்படை போலீசார் பாதுகாப்புடன் புதுவை சிறையில் இருந்து காரைக்கால் நீதிமன்றத்திற்கு போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்வது வழக்கம்.

    கைதிகளை அழைத்து செல்லும் போலீஸ் வாகனத்தின் சீட் சேதமடைந்தும், வாகனத்தின் உள்ளே உள்ள நடைபாதையில் பெரிய ஓட்டையும் உள்ளது. இது தொடர்பான ஒரு வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

    இது குறித்து போலீசாரிடம் கேட்டதற்கு, கைதிகளை ஏற்றி செல்லும் பல வாகனங்களின் நிலை இதுதான். இது பற்றி காவல் வாகன அதிகாரியிடம் புகார் தெரிவித்தால் முடிந்தால் இருக்கும் வாகனத்தில் எஸ்கார்ட் பணிக்கு சென்று வாருங்கள் இல்லை என்றால் செல்ல வேண்டாம் என கூறி வருவதாக வேதனை தெரிவித்தனர்.

    போலீஸ் துறையை நவீனப்படுத்த பல கோடி ஒதுக்கீடு, 1000 போலீசார் நியமனம் என அடிக்கடி ஆட்சியாளர் கூறி வருகிறார்கள். ஆனால் அடித்தளம் பலமாக இல்லை என்பதை சுட்டி காட்டியும் சீரமைப்பதில்லை என சமூக வலைதளத்தில் மக்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    ×