search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    இலவச கண் கண்ணாடி வழங்கும் விழா
    X

    இலவச கண் கண்ணாடியை செல்வகணபதி எம்.பி.,பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், ஜான்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கிய காட்சி.

    இலவச கண் கண்ணாடி வழங்கும் விழா

    • பிரதமர் மோடியின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
    • இந்த விழாவில் புதுவை பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன், காமராஜ் நகர் தொகுதி ஜான்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடியின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த விழாவின் தொடர் நிகழ்ச்சியாக புதுவை அனைத்து பகுதியை சார்ந்த மக்களுக்கு இலவச கண் கண்ணாடிகள் புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள எம்.பி. அலுவலகத்தில் செல்வகணபதி எம்.பி. வழங்கினார்.

    இந்த விழாவில் புதுவை பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன், காமராஜ் நகர் தொகுதி ஜான்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

    இந்த விழாவில் பா.ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 200-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு சுமார் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

    Next Story
    ×