என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Junior Handball"
- புதுவை மாநில ஹேண்ட்பால் சங்கத்தின் அனுமதியுடன் புதுவை மாவட்ட ஹேண்ட்பால் சங்கம் சார்பில் 7-வது ஜுனியர் பிரிவு மாணவர்களுக்கான ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டி உப்பளம் விளையாட்டு திடலில் நடந்தது.
- போட்டியில் 6 அணிகள் பங்கேற்றன. போட்டி நாக் அவுட் முறையில் நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவை மாநில ஹேண்ட்பால் சங்கத்தின் அனுமதியுடன் புதுவை மாவட்ட ஹேண்ட்பால் சங்கம் சார்பில் 7-வது ஜுனியர் பிரிவு மாணவர்களுக்கான ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டி உப்பளம் விளையாட்டு திடலில் நடந்தது.
போட்டியை புதுவை மாநில யூலிம் சிக் சங்கத்தின் சீனியர் துணை தலைவரும், மாநில கோ-கோ சங்கத்தின் செயலாளருமான ஜேசு தொடங்கி வைத்தார். ஹேண்ட்பால் சங்கத்தின் மாநில செயலர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.
போட்டியில் 6 அணிகள் பங்கேற்றன. போட்டி நாக் அவுட் முறையில் நடைபெற்றது. முதல் போட்டியில் புதுவை சகோதரர்கள் அணியும், வி.கே.பி. அணியும் விளையாடின. இதில் 14-5 என்ற புள்ளி கணக்கில் புதுவை சகோதரர்கள் அணி வெற்றி பெற்றது.
2-வது ஆட்டத்தில் பெத்திசெமினார் பள்ளி அணியும் புதுவை நண்பர்கள் அணி மோதின. இதில் 13-11 என்ற புள்ளி கணக்கில் பெத்திசெமினார் அணி வெற்றி பெற்றது.
போட்டிக்கான ஏற்பாடுகளை புதுவை மாவட்ட செயலர் அலெக்ஸ், துணை செயலர் ஸ்ரீதர், உறுப்பினர்கள் சிலம்பரசன், ரதீஷ், விக்கி, அருள்அரசு ஆகியோர் செய்து வருகின்றனர்.