என் மலர்
புதுச்சேரி

ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட காட்சி.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
- புதுவை அரசின் பொதுப்பணித்துறை மூலமாக திருக்கனூர் கடைவீதியில் ஆக்கி–ரமிப்புகள் அகற்றும் பணி இன்று காலை நடைபெற்றது.
- சைடு வாய்க்காலுக்கு வெளியே யாரும் ஆக்கிரமித்து கடை வைக்கக் கூடாது என எச்சரித்தனர்.
புதுச்சேரி:
புதுவை அரசின் பொதுப்பணித்துறை மூலமாக திருக்கனூர் கடைவீதியில் ஆக்கி–ரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மண்ணாடிப்பட்டு கொம்யூன்பஞ்சாயத்து அதிகாரிகள் திருக்கனூர் கடைவீதி–யில் இருந்து தொடங்கி கே .ஆர் .பாளையம் சந்திப்பு வரை கடை வீதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினார்கள்.
சைடு வாய்க்காலுக்கு வெளியே யாரும் ஆக்கிரமித்து கடை வைக்கக் கூடாது என எச்சரித்தனர். அதே நேரத்தில் முறையாக அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் ,வாய்க்காலுக்கு வெளியே இருப்பதை மட்டும் அதிகாரிகள் அகற்றுகிறார்கள் எனவும் முறைப்படி கணக்கிட்டு அரசின் இடத்தை அளந்து அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story