என் மலர்
புதுச்சேரி
- தொழிலாளர்களுக்கு சம்பளம் அறிவித்து இதுவரை சம்பளமும் வழங்காமல் தொழிற்சாலையும் இயக்காமல் இருந்தது.
- புதுவை- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்பின்கோ எதிரில் ஐ. என்.டி. ரூபி, பி.எம்.சி. தொழிற்சங்கத்தின் தலைவர் சிவசங்கரன் மற்றும் அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் தலைமையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
திருபுவனை கூட்டுறவு நூற்பாலை (ஸ்பின்கோ) கடந்த 8 மாத காலமாக கொள்முதல் பஞ்சு விலை ஏற்றம் காரணமாக மேற்கொண்டு தொழிற்சாலையை இயக்க முடியாமல் புதுவை அரசு மூடியது.
அதில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் அறிவித்து இதுவரை சம்பளமும் வழங்காமல் தொழிற்சாலையும் இயக்காமல் இருந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த 300-க்கும் மேற்பட்ட கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் இன்று காலை 10 அளவில் ஒன்று திரண்டனர்.
அவர்கள் புதுவை- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்பின்கோ எதிரில் ஐ. என்.டி. ரூபி, பி.எம்.சி. தொழிற்சங்கத்தின் தலைவர் சிவசங்கரன் மற்றும் அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் தலைமையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
7 மாதமாக வழங்கப்படாத சம்பள பணம், 7 மாத லேஆப் சம்பள பணம் மற்றும் தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய நிலுவை தொகைகள் வழங்க வேண்டும்.
மீண்டும் தொழிற்சாலையை இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
தகவல் அறிந்த திருபுவனை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பஞ்சாலை தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர்.
மறியல் காரணமாக அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- காரைக்கால் மாவட்டத்தில் 2008-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது சுமார் 650 ஏக்கர் அரசு நிலம் மார்க் என்ற துறைமுகம் அமைத்துக்கொள்ள 30 ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டது.
- முதல்-அமைச்சர், அமைச்சர், தலைமை செயலாளர் அல்லது துறை செயலாளர் மார்க் தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தங்கள், எவ்வளவு காலம்,.?
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
காரைக்கால் மாவட்டத்தில் 2008-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது சுமார் 650 ஏக்கர் அரசு நிலம் மார்க் என்ற துறைமுகம் அமைத்துக்கொள்ள 30 ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டது. இந்த துறைமுகத்தை வைத்து ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பெற்று, கடனை அடைக்க முடியாத சூழ்நிலையை செயற்கையாக உருவாக்கியுள்ளனர்.
இந்த துறைமுகத்தை அதானி குழுமத்திற்கு கொடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. துறைமுகம் அரசு வழங்கிய இடம். இந்த விவகாரத்தில் எந்தவித உரிமையும் இல்லாமல் அரசு பார்வையாளராக இருப்பது தவறானது.
அரசின் கட்டுப்பாட்டில் துறைமுகம் இருக்க வேண்டும். முதல்-அமைச்சர், அமைச்சர், தலைமை செயலாளர் அல்லது துறை செயலாளர் மார்க் தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தங்கள், எவ்வளவு காலம்,.?
அரசுக்கு உள்ள உரிமை, தற்போதைய நிலை, எவ்வளவு கடன் பெறப்பட்டுள்ளது? தற்போது இந்த துறைமுகம் யாரிடம் கைமாற்றப்பட உள்ளது என்பது குறித்து ஒரு வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும். புதியதாக எந்த நிறுவனம் குத்தகைக்கு எடுத்தாலும் ராயல்டியாக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தம் போட வேண்டும். துறைமுகம் கடத்தலுக்கு அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
சட்டத்திற்கு விரோதமான செயல்களும் நடைபெற்றது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என அ.தி.மு.க. பலமுறை வலியுறுத்தியுள்ளது.ஆளும் அரசை பற்றி, ஊழலை பற்றி பேச முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு எந்த தகுதியும் இல்லை. அவர் ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை சொல்ல வேண்டும்.
இந்தியாவை அவமதிக்கும் விதத்திலும், பிரதமருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் சதி செயலில் ஈடுபடும் அமைப்புகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. புதுவையில் குயில் தோப்பு விவகாரத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி காரைக்காலில் இருந்து சப்-ரிஜிஸ்டரை வரவழைத்து பத்திரப்பதிவு செய்தார்.
தாழ்த்தப்பட்ட அட்டவணை நிதியில் இருந்து பணம் எடுத்து ஒப்பந்தம் இல்லாமல் பல பகுதிகளில் ரூ.5 கோடிக்கு ஹைமாஸ் விளக்குகள் போடப்பட்டது. இது ஊழல், முறைகேடு இல்லையா? அவர் ஆட்சியில் அரிசி வாங்கியது, முட்டை வாங்கியது, இலவச துணிகள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது.
என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி அரசு கடந்த கால காங்கிரஸ் ஊழல் ஆட்சியினருடன் சமரசமாக சென்று கொண்டிருக்கிறது.
கடந்தகால காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஊழல் குறித்து இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது தவறான ஒன்று. ஊழல் செய்தவர்களுடன் சமரசமாக போக கூடாது. ஆதாரமற்ற குற்றசாட்டுகளை அள்ளி வீசுவதிலேயே நாராயணசாமி காலத்தை கடத்துகிறார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பிம்ஸ் மருத்துவ கல்லூரி மகப்பேறு மருத்துவ துறை சார்பில் கர்ப்பபை வாய் புற்றுநோய் வாரத்தை யொட்டி, மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த சோதனை செய்வது நல்லதாகும் என்றார்.
புதுச்சேரி:
பிம்ஸ் மருத்துவ கல்லூரி மகப்பேறு மருத்துவ துறை சார்பில் கர்ப்பபை வாய் புற்றுநோய் வாரத்தை யொட்டி, மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது.
புதுவை கடற்கரை சாலையில் நடந்த பேரணிக்கு பிம்ஸ் மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன் தலைமை தாங்கினார். டாக்டர் பத்மா முன்னிலை வகித்தார்.
சீனியர் போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுகுமார் பேரணியை தொடக்கி வைத்து இந்த நோயின் தாக்கத்தை கண்டறிந்து தகுந்த சிகிச்சை மூலம் தடுக்க முடியும் என்றார்.
மருத்துவ கண்காணி ப்பாளர் பீட்டர் மனோகரன் பொதுவாக பெண்களுக்கு மார்பாக புற்றுநோய், கர்ப்பபை புற்றுநோய் ஆகிய பிரச்சினை ஏற்படலாம். இதில் கருப்பை வாய் புற்றுநோய் முக்கிய ஒன்றாகும்.
இதை ஆரம்ப கட்டத்திலே உரிய முறையான பரிசோதனை மூலம் கண்டறிந்து சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கான தடுப்பூசியும் உள்ளது.
எங்கள் பிம்ஸ் மருத்துவமனை மகப்பேறு மருத்துவ துறை சார்பில் இலவசமாக (13-ந் தேதி) முதல் வருகிற 18-ந் தேதி வரை இலவச கர்ப்பபை வாய் புற்றுநோய் பரிசோதனை செய்யப்படுகிறது. 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த சோதனை செய்வது நல்லதாகும் என்றார்.
இதில் பேராசிரியர்கள் நிர்மலா, பாலோ, பவித்ரா உள்பட மருத்துவ நிபுணர்கள், மருத்துவ மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
- புதுவை மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா ஆட்சியில் அனைத்து துறைகளிலும் புரோக்கர்கள் மூலம் ஊழல் நடக்கிறது.
- கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்கள் முடக்கப்ப ட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் மவுன ஆட்சி நடக்கிறது.
புதுச்சேரி:
காரைக்காலில் காங்கிரஸ் சார்பில் நடந்த மக்கள் சந்திப்பு நடைபயணத்தில் முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
புதுவை மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா ஆட்சியில் அனைத்து துறைகளிலும் புரோக்கர்கள் மூலம் ஊழல் நடக்கிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. பணியில் உள்ள பலர் வேலையிழக்கும் நிலையில் உள்ளனர். பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் சுற்றுலா வளர்ச்சியடையும் என அரசு கூறியது.
ஆனால் மாநிலத்தில் இரட்டை என்ஜின் ஆட்சி நடக்கிறது. புதுவையில் ரங்கசாமி கட்சி மக்களுக்கு விபூதி கொடுத்து ஏமாற்றும் கட்சியாக உள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் எந்த வளர்ச்சியும் இல்லை. காரைக்காலிலும் எந்த வளர்ச்சியும் இல்லை.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்கள் முடக்கப்ப ட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் மவுன ஆட்சி நடக்கிறது. புதுவை மக்களை வஞ்சிக்கும் அரசாக செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- புதுவை அரசு அறிவித்தபடி 11 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு ரூ.ஆயிரம் வழங்கியுள்ளது.
- விளைநிலங்கள் குறைந்தால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது நமது கடமை.
புதுச்சேரி:
புதுவை அரசு வேளாண், விவசாயிகள் நலத்துறை சார்பில் ஏ.எப்.டி. திடலில் 3 நாட்கள் நடந்த 33-வது மலர், காய், கனி கண்காட்சி நிறைவடைந்தது.
நிறைவு விழாவுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை வகித்தார். அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது:-
புதுவை அரசு அறிவித்தபடி 11 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு ரூ.ஆயிரம் வழங்கியுள்ளது. மீதமுள்ளவர்களுக்கும் விரைவில் வழங்கப்படும். விவசாயிகள் மண்ணுக்கு ஏற்ப விளை பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். தோட்டக்கலை விவசாயிகளின் வருமா னத்தை பெருக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம்.
நான் விவசாய அமைச்சராக பொறுப்பே ற்றபோது புதுவையில் 30 ஆயிரம் ஹெக்டேர் நிலம் இருந்தது. தற்போது நகரின் வளர்ச்சி, தொழிற்சாலை களால் விளைநிலங்கள் குறைந்துவிட்டது. விளைநிலங்கள் குறைந்தால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது நமது கடமை.
அதற்காக வீடுகளில் மாடி தோட்டம் அமைக்க துறை சார்பில் நிதி வழங்கப்ப டுகிறது. புதுவையில் பால் உற்பத்தியை பெருக்க வேண்டியது அவசியம். இதில் விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டும். கறவை மாடுகள் வாங்க அரசு மானியம் வழங்கி வருகிறது. படித்த இளைஞர்கள் மாடுகளை வாங்கி பால் உற்பத்தியை பெருக்க வேண்டும்.
வங்கிகளிடம் உதவி பெற்றுத்தரவும் அரசு தயாராக உள்ளது. புதுவை அரசு விவசாயிகளுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறது. சட்டசபையில் அறிவித்தபடி விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன் விரைவில் தள்ளுபடி செய்யப்படும். சுதேசி மில் பழமை மாறால் சுற்றுலா தலமாக மாற்ற விரைவில் பணிகள் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மலர் ராஜா பட்டம் கருவடிகுப்பம் மேத்தா தட்சிணாமூர்த்திக்கும், மலர் ராணி பட்டம் புதுவை ஜெயஸ்ரீபிரிதர்ஷினிக்கும் வழங்கப்பட்டது. காய்கனி ராஜா பட்டம் கீழ்சாத்த மங்கலத்தை சேர்ந்த புண்ணியக்கோடிக்கும், காய்கனி ராணி பட்டம் பூரணாங்குப்பம் செந்தாம ரைக்கும் வழங்கப்பட்டது. விழாவில் அனிபால்கென்னடி எம்.எல்.ஏ., வேளாண் இயக்குனர் பாலகாந்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- 13 மாநிலங்களுக்கு கவர்னர்களை நியமித்த மத்திய அரசு புதுவைக்கும் முழு நேர கவர்னரை நியமித்திருக்க வேண்டும்.
- மத்திய அரசு ஏன் புதுவைக்கு முழு நேர கவர்னரை நியமிக்கவில்லை என முதல்-அமைச்சர் யோசிக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-
மத்திய அரசு புதிதாக 13 மாநிலம், யூனியன் பிரதேசங்களுக்கு கவர்ன ர்களை நியமித்தி ருப்பது பாராட்டுக்குரியது. 13 மாநிலங்களுக்கு கவர்னர்களை நியமித்த மத்திய அரசு புதுவைக்கும் முழு நேர கவர்னரை நியமித்திருக்க வேண்டும். பொறுப்பு கவர்னர் தமிழிசை பதவியேற்று 2 ஆண்டாகிறது.
மத்திய அரசு ஒரு முழு நேர கவர்னரை நியமிக்காமல் சட்டத்தை மீறுவது சரியல்ல. புதுவையில் மக்கள் அரசு உள்ளது என மத்திய அரசு மதிக்கவில்லை. இருப்பவரை வைத்து தமது அரசியல் வளர்ச்சியை கொண்டு வர வேண்டும் என எண்ணுவதாக தோன்றுகிறது.
மத்திய அரசு ஏன் புதுவைக்கு முழு நேர கவர்னரை நியமிக்கவில்லை என முதல்-அமைச்சர் யோசிக்க வேண்டும். தன் காரியங்கள் சரியாக முடிந்தால் போதும். சட்டம், மரபு, பற்றியோ நிர்வாகம் பற்றி முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு அக்கறை இல்லை.
புதுவையை மத்திய அரசு எப்படி வேண்டுமானாலும் யாரை வைத்து வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளலாம் என்ற நிலை தோன்றியுள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மாநில அளவிலான சிலம்பம் மற்றும் குத்து வரிசை போட்டியை முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தில் நடைபெற்றது.
- போட்டியில் 15-க்கும் மேற்பட்ட சிலம்ப பயிற்சி குழுக்கள் கலந்துகொண்டன.
புதுச்சேரி:
புதுவை சிலம்பக் கலைக்கழகம் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலம்பாட்டக் குழு இணைந்து 7-ம் ஆண்டு மாநில அளவிலான சிலம்பம் மற்றும் குத்து வரிசை போட்டியை முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தில் நடத்தியது.
ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன், மத்திய கலாச்சார பண்பாட்டு அமைச்சக இயக்குனர் கோபால், சுற்றுலாத்துறை மேலாண் இயக்குனர் பாஸ்கர் ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர். போட்டியில் 15-க்கும் மேற்பட்ட சிலம்ப பயிற்சி குழுக்கள் கலந்துகொண்டன.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன், காங்கிரஸ் பொது செயலாளர் சங்கர், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் அய்யப்பன், சிவராமகிருஷ்ணன், முருகன், தமிழர் களம் அழகர் ஆகியோர் பரிசு, சான்றிதழ்களை வழங்கினர்.
- எங்கள் கூட்டணி முறிந்துவிடும் என நாராயணசாமி சொல்ல, சொல்ல பா.ஜனதாவுடன் கூட்டணி உறுதியாகிக் கொண்டே செல்கிறது.
- நாராயணசாமியின் குற்றச்சாட்டுகளுக்கு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தில் பதில் தரப்படும்.
புதுச்சேரி:
முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவைக்கு கப்பல்கள் வந்து செல்வது மிகவும் நல்லது, வியாபாரம் பெருகும். புதுவை மாநிலத்திற்கு வருவாய் கிடைக்கும். பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஏற்கனவே நாங்கள் கூறியது போல, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பா.ஜனதா-அ.தி.மு.க. கட்சிகளுடன் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணி பாராளுமன்ற தேர்தலிலும் தொடரும். அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் எங்கள் அரசு செய்து வருகிறது. புதிதாக அறிவித்த திட்டங்களையும் செயல்படுத்துகிறோம். உள்கட்டமைப்பு மேம்படுத்தும் பணி, சாலை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
மாநில அந்தஸ்து கிடைத்தால் ஆட்சியாளர்கள் சிறப்பாக ஆட்சி செய்ய முடியும். எங்கள் ஆட்சியில் மாநில அந்தஸ்து பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. நம்பிக்கைதான் எல்லாம். கருப்பு சட்டையெல்லாம் அணிந்து போராடிய நாராயணசாமி மாநில அந்தஸ்து பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
எங்கள் ஆட்சியில் மாநில அந்தஸ்தை பெறுவோம். எங்கள் கூட்டணி முறிந்துவிடும் என நாராயணசாமி சொல்ல, சொல்ல பா.ஜனதாவுடன் கூட்டணி உறுதியாகிக் கொண்டே செல்கிறது. நாராயணசாமியின் குற்றச்சாட்டுகளுக்கு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தில் பதில் தரப்படும்.
இவ்வாறு ரங்கசாமி தெரிவித்தார்.
- புதுவை மாநிலமெங்கும் 200-க்கும் மேற்பட்ட கவர்ச்சி நடன மதுபார்கள், மதுபான தொழிற்சாலைகளுக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை என்.ஆர்.காங்கிரஸ் அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.புதுவை மாநிலமெங்கும் 200-க்கும் மேற்பட்ட கவர்ச்சி நடன மதுபார்கள், மதுபான தொழிற்சாலைகளுக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை என்.ஆர்.காங்கிரஸ் அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
- பிரீபெய்டு மின் மீட்டர் திட்டத்தை செயல்படுத்துவதை அ.தி.மு.க. சார்பில் வன்மையாக கண்டிப்பது.
புதுச்சேரி:
மறைந்த தமிழக முதல்- அமைச்சரும், அ.தி.மு.க. நிறுவன தலைவருமான ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாடுவது குறித்த ஆலோசனைக்கூட்டம் முத்தியால்பேட்டை அ.தி.மு.க. சார்பில் கட்சி அலுவலகத்தில் நடந்தது.
ஆலோசனை கூட்டத்திற்கு துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
ஜெயலலிதா பிறந்தநாளை, மாநிலம் முழுவதும் கோலாகலமாக ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகளை வழங்கி சீரும், சிறப்புமாக கொண்டாடுவது.
புதுவையில் ஜெயலலிதாவுக்கு உருவ சிலை அமைத்து, பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட அரசு அறிவிப்பு வெளியிடாதது தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு பாடுபட்ட அ.தி.மு.க. தொண்டர்களின் குமுறலா கவும், வேதனையாகவும் உள்ளது. இதை உணர்ந்து புதுவை அரசு உடனடியாக ஜெயலலிதா பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்து உருவச்சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட வேண்டும்.
புதுவை மாநிலமெங்கும் 200-க்கும் மேற்பட்ட கவர்ச்சி நடன மதுபார்கள், மதுபான தொழிற்சாலைகளுக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை என்.ஆர்.காங்கிரஸ் அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.மதுஆலை, மதுபார்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தும் பெண்களின் உணர்வுக்கு முதல்- அமைச்சர் மதிப்பளித்து வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்
பிரீபெய்டு மின் மீட்டர் திட்டத்தை செயல்படுத்துவதை அ.தி.மு.க. சார்பில் வன்மையாக கண்டிப்பது.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் நிர்வாகிகள் பழனிசாமி, கஜேந்திரன், உதயசூரியன், செல்வம், முருகேசன், அந்துவான், மண்ணாங்கட்டி, தனலட்சுமி, ராதா, காந்தி, முனியாண்டி, வினோத், எத்திராஜ், ஆறுமுகம், மற்றும் அ.தி.மு.க. மேற்கு மாநில நிர்வாகிகள் விக்னேஷ் காசிநாதன், மணி, கோபால், ராமமூர்த்தி, காதர் கன்னியப்பன், பரமசிவம், ஜெயபால், நாராயணசாமி, கலைமணி லட்சுமணன், ராஜசேகர், பாவாடை அங்கப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- பிரெஞ்சு குடும்பத்தினர் 3 சக்கர சைக்கிளை சொந்தமாக வாங்கி அதில் புதுவையை வலம் வந்து அசத்துகின்றனர்.
- ஒருவருக்கு நேற்று பிறந்த நாள் என்பதால் அதை 3 சக்கர சைக்கிளில் அமர்ந்து நகரை வலம் வந்தபடியே கொண்டாடினர்.
புதுச்சேரி:
சுற்றுலா நகரமான புதுவைக்கு தினமும் பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
அவ்வாறு வருபவர்கள் புதுவையின் அழகை ரசித்து பார்த்து செல்கின்றனர். புதுவைக்கு வரும் வெளிநாட்டினர் கார், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் போவதை காட்டிலும் கை ரிக்ஷாக்களில் சென்று கடற்கரை உள்ளிட்ட ஒய்ட் டவுனின் புராதன பகுதிகளை பார்க்க விரும்புவார்கள்.
அவர்கள் வரிசையாக கை ரிக்ஷாவில் அமர்ந்து புதுவை கடற்கரை சாலையில் பயணிக்கும் காட்சி கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்த நிலையில் புதுவைக்கு சுற்றுலா வந்த ஒரு பிரெஞ்சு குடும்பத்தினர் 3 சக்கர சைக்கிளை சொந்தமாக வாங்கி அதில் புதுவையை வலம் வந்து அசத்துகின்றனர்.
இந்த வாகனம் வித்தியாசமாகவும், சவுகரியமாகவும் உள்ளதால் புதுவையில் தங்கியுள்ள அனைத்து நாட்களிலும் இந்த வாகனத்திலேயே சென்று பல்வேறு பகுதிகளை பார்வையிட முடிவு செய்துள்ளனர்.அதில் ஒருவருக்கு நேற்று பிறந்த நாள் என்பதால் அதை 3 சக்கர சைக்கிளில் அமர்ந்து நகரை வலம் வந்தபடியே கொண்டாடினர்.
இந்த காட்சிகள் புதுவை மக்களையும், சுற்றுலா வந்த மற்ற ஊர்க் காரர்களையும் வெகுவாக கவர்ந்தது.
- கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்களை தள்ளுபடி செய்வதாக சட்டசபை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது.
- விவசாய பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தினை முழுமையாக நிறைவேற்றி, விவசாயிகளுக்கு மீண்டும் பயிர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
புதுச்சேரி:
அங்காளன் எம்.எல்.ஏ. தலைமையில் புதுவை சோரப்பட்டு வேளாண் கூட்டுறவு கடன் சங்க தலைவர் சீதாராமன், துணைத் தலைவர் யுவ ராஜ், இயக்குனர்கள் மாரி முத்து, ராமகிருஷ்ணன், ராஜகோபால் ஆகியோர் அமைச்சர் தேனீ.ஜெயக்குமாரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்களை தள்ளுபடி செய்வதாக சட்டசபை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் இதுவரையில் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. இதனால், தற்போது கடன் தள்ளுபடி திட்டத்தில் உள்ள விவசாய உறுப்பினர்கள், புதிதாக பயிர் கடன் வழங்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனவே அவர்களின் கடன் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், விவசாய பயிர் கடன் தள்ளு படி திட்டத்தினை முழுமையாக நிறைவேற்றி, விவசாயிகளுக்கு மீண்டும் பயிர் கடன் வழங்க நட வடிக்கை எடுக்க வேண் டும்
இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
- தேசிய அளவிலான தேக்வாண்டோ போட்டியை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
- தேக்வாண்டோ பெடரேசன் ஆப் இந்தியா வால் அங்கீகரிக்கப்பட்ட புதுவை உள்பட 35 மாநிலங்களை சேர்ந்த வீரர்-வீராங்கணைகள் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
புதுவையில் தேசிய அளவிலான தேக்வாண்டோ போட்டியை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
தேக்வாண்டோ ஆப் இந்தியாவின் 38-வது தேசிய அளவிலான சீனியர் நேஷனல் தேக்வாண்டோ போட்டிகள் புதுவை உப்பளம் இந்திராகாந்தி உள் விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெறுகிறது.
தேக்வாண்டோ பெடரேசன் ஆப் இந்தியா வால் அங்கீகரிக்கப்பட்ட புதுவை உள்பட 35 மாநிலங்களை சேர்ந்த வீரர்-வீராங்கணைகள் பங்கேற்றனர்.
தொடக்க நிகழ்ச்சியில் வீரர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. அணிவகுப்பு மரியாதையை போலீஸ் ஐ.ஜி.சந்திரன் ஏற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சிக்கு தொழில் அதிபரும் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகருமான புவனா புவனேஸ்வரன் தலைமை தாங்கினார். நேற்று 2-வது நாளாக நடந்த அனைத்து பிரிவுகளின் போட்டியை முதல்-அமைச்சர் ரங்கசாமி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
தேக்வாண்டோ பெட ரேசன் ஆப் இந்தியாவின் தலைவர் ஐசரி கணேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் மனுல்கர் முன்னிலை வகித்தார். ஜேஸ்பீர் சிங்கில், ராக்கேஷ் குமார் பாண்டே ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
புதுவை தேக்வாண்டோ விளையாட்டு சங்க நிறுவனர் ஸ்டாலின், செயலாளர் மஞ்சுநாத், துணை தலைவர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் அரவிந்த், அஸ்வின், நந்தகுமார், உதயகுமார், அருள்கோஷ், அஸ்வினி, தனுஷ்பிரியா, பகத்சிங் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இப்போட்டி யில் 36 மாநிலங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கணைகள் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டனர். இன்று மாலை பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.






