என் மலர்
புதுச்சேரி
- தேசிய கருத்தரங்கம் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கணேசன் வழி காட்டுதலின் படி ஏற்பாட்டில் நடைபெற்றது.
- கருத்தரங்கில் ஆராய்ச்சி குறிப்புகள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது.
புதுச்சேரி:
விநாயகா மிஷன் பல்கலைக்கழத்திற்குட்பட்ட அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சுகாதார அறிவியல் பிரிவில் பல துறைகள் ஒருங்கிணைந்த 2 நாள் தேசிய கருத்தரங்கம் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கணேசன் வழி காட்டுதலின் படி ஏற்பாட்டில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு துறையின் டீன் செந்தில்குமார் வரவேற்று நோக்கவுரையாற்றினார். பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் சுதிர் தலைமை தாங்கி பேசினார்.
சிறப்பு விருந்தினர்களாக சென்னை ஸ்ரீராமசந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கதிரியக்கவியல் பேராசிரியர் பன்னீர்செல்வம், சென்னை அப்பல்லோ மருத்துவ கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த ஆேலாசகர் அனில்பாண்டே ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
கருத்தரங்கில் ஆராய்ச்சி குறிப்புகள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது. செயல்முறை பயிற்சியினை அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் கண் ஒளியில் பிரிவின் பொறுப்பாளர் பேராசிரியை தமிழ்சுடர், உதவி பேராசிரியர்கள் அஜித்குமார், சுபாஷினி ஆகியோர் அளித்தனர்.
கருத்தரங்கில் மாணவர்களுக்கான ஆராய்ச்சி கட்டுரை, இணைய பட விளக்கம் காட்சி போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்-மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர். இதற்கான ஏற்பாட்டினை துறை உதவி பேராசிரியர்கள் திபீகா, வெங்கடேசன், இன்பசாகர், கலைவாணி, சிலம்பரசன் ஆகியோர் செய்திருந்தனர்.
- மணக்குள விநாயகர் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார். கட்டிட தொழிலாளி. இவருடன் அவரது பாட்டி கமலா வசித்து வந்தார்.
- இந்த நிலையில் கமலாவுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே வி.தட்டாஞ்சாவடி மணக்குள விநாயகர் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார். கட்டிட தொழிலாளி. இவருடன் அவரது பாட்டி கமலா வசித்து வந்தார். வயது முதிர்ச்சி காரணமாக கமலாவுக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்தது.
கடந்த ஒரு வாரமாக அவர் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் கமலாவுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறிது நேரத்தில் கமலா பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- ஏரியின் போக்கு வாய்க்கால் பகுதி பழைய பாலத்தை புதியதாக கட்டவும், போக்குவாய்க்காலை பலப்படுத்தி பாதுகாப்புச் சுவர் அமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- பாலம் கட்டுமானப் பணியை தரமாகவும், விரைவாகவும் கட்டி முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
புதுச்சேரி:
வில்லியனூர் தொகுதி கொம்பாக்கம் ஏரியின் போக்கு வாய்க்கால் பகுதி பழைய பாலத்தை புதியதாக கட்டவும், போக்குவாய்க்காலை பலப்படுத்தி பாதுகாப்புச் சுவர் அமைக்கவும் பொதுப்பணித்துறை நீர்பாசனக் கோட்டம் மூலம் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
முதல்கட்ட பணியை எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார். அப்போது, பாலம் கட்டுமானப் பணியை தரமாகவும், விரைவாகவும் கட்டி முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பொதுப்பணித்துறை நீர்பாசனக் கோட்ட உதவிப் பொறியாளர் மதிவாணன், இளநிலைப் பொறியாளர் சங்கர் மற்றும் தி.மு.க. தொகுதி செயலாளர் ராமசாமி, மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ஒரு கட்சி வளர்ச்சிப் பாதையில் செல்ல முக்கிய பதவிகளில் இளைஞர்களுக்கு, புதியவர்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும்.
- அரசு ஊழியர் வயதாகி விட்டால் பணி ஓய்வு கொடுத்து அனுப்புகின்றனர். வயதானவுடன் சிந்தனை ஓட்டம் மாறிவிடும்.
புதுச்சேரி:
புதுவை காலாப்பட்டு வட்டார காங்கிரஸ் சார்பில் ஒற்றுமை நடைபயணம் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
முன்னாள் அமைச்சர் ஷாஜகான் தலைமை வகித்தார். மாநில தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன், எம்.எல்.ஏ. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், பாலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதில் முன்னாள் அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:-
ஒரு கட்சி வளர்ச்சிப் பாதையில் செல்ல முக்கிய பதவிகளில் இளை ஞர்களுக்கு, புதியவர்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும். கட்சியில் மூத்தவர்கள் முன்வந்து சிலவற்றை விட்டுக் கொடுக்க வேண்டும்.
ஒரு கட்சி நிலைத்து நிற்க வேண்டுமென்றால் கட்சி தொண்டன் வாழ வேண்டும்.
காங்கிரஸ் கட்சியில்தான் ஒரு தொண்டன் எம்.எல்.ஏ., அமைச்சர், முதல்- அமைச்சர் பதவியில் அமர முடியும். ஆனால் சிலர் கட்சிப்பத விகளில் இளைஞர்கள் தொண்டர்கள் வருவதை தடுக்கின்றனர்.
காங்கிரசில் வல்சரா ஜிக்கு அடுத்து நான்தான் சீனியராக உள்ளேன். நான் தலைவர் பதவிக்கு வரக்கூடாது என முக்கிய நபர் தடுக்கிறார்.
கட்சிக்காக கடுமையாக உழைக்க, செலவிட தயாராக உள்ளேன். இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதற்கு சோனியாகாந்தியே முன்மா திரியாக உள்ளார்.
அரசு ஊழியர் வயதாகி விட்டால் பணி ஓய்வு கொடுத்து அனுப்புகின்றனர். வயதானவுடன் சிந்தனை ஓட்டம் மாறிவிடும். ஒரு பணியை சிறப்பாக செய்ய முடியாது. ஆனால் அரசியலில் 70 வயதானலும் போகமாட்டேன் என சிலர் அடம்பிடிக்கின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
- புதுவை-கடலூர் சாலையில் உள்ள சிங்காரவேலர் சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- இந்திய கம்யூனிஸ்டு சார்பில் மாநில செயலாளர் சலீம் தலைமையில் நிர்வாகிகள் அபிஷேகம், கீதநாதன் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்தனர்.
புதுச்சேரி:
புதுவை அரசின் செய்தி துறை சார்பில் சிங்காரவேலர் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
புதுவை-கடலூர் சாலையில் உள்ள சிங்காரவேலர் சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், பாஸ்கர், லட்சுமிகாந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதுவை மாநில தி.மு.க. சார்பில் சிங்காரவேலர் நினைவு தினத்தையொட்டி, கடலூர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி,
செந்தில்குமார், மாநில துணை அமைப்பாளர் அமுதா குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தைரியநாதன், பொதுக்குழு உறுப்பினர் சக்திவேல், தொகுதி செயலாளர்கள் சக்திவேல், சீத்தாராமன், சக்திவேல், மாணவரணி அமைப்பாளர் மணிமாறன், மீனவர் அணி அமைப்பாளர் கோதண்டராமன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தாமோ.தமிழரசன், துணை அமைப்பாளர் பாலபாரதி, வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் குரு, கிளைச் செயலாளர்கள் சசிகுமார், வெங்கட், முருகன், இளைஞர் அணி தொகுதி அமைப்பாளர் அரசு, ஆட்டோ சங்கம் அஜிஷ்பாஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்திய கம்யூனிஸ்டு சார்பில் மாநில செயலாளர் சலீம் தலைமையில் நிர்வாகிகள் அபிஷேகம், கீதநாதன் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்தனர். மேலும் பல்வேறு மீனவ அமைப்புகள் சார்பிலும் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
- வீடு தோறும் சென்று குப்பைகள் சேகரிக்கும் திட்டமானது தற்போது கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
- இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை விருந்தினராகவும் கலந்து கொண்டு திட்டத்தினை தொடங்கி வைத்தனர்.
புதுச்சேரி:
பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் புதுவை மாநிலத்தில் நகராட்சிகளில் இயங்கி வந்த வீடு தோறும் சென்று குப்பைகள் சேகரிக்கும் திட்டமானது தற்போது கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி முதன் முதலில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஹெச்.ஆர்.ஸ்கொயர் நிறுவனம் சார்பாக வீடு தோறும் சென்று குப்பைகள் சேகரிக்கும் பணி தொடக்க விழா அரியாங்குப்பம் காமராஜர் திருமண நிலையத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை விருந்தினராகவும் எம்.எல்.ஏ. பாஸ்கர் என்கிற தட்சிணாமூர்த்தி சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு திட்டத்தினை தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சித் துறை துணை இயக்குனர்கள் கார்த்திக், சிவகுமார் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், ஹெச்.ஆர்.ஸ்கொயர் நிறுவனத்தின் வேளாண் இயக்குனர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் சார்பில் மிஷன் வீதி மாதா கோவில் எதிரே மத்திய பட்ஜெட்டை கண்டித்து சட்டமன்றம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய பட்ஜெட்டை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் சார்பில் மிஷன் வீதி மாதா கோவில் எதிரே மத்திய பட்ஜெட்டை கண்டித்து சட்டமன்றம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஏ.ஐ.டி.யூ.சி. மாநில தலைவர் தினேஷ் பொன்னையா தலைமை வகித்தார். பொதுச்செய லாளர் சேதுசெல்வம் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் கவுரவ தலைவர் அபிஷேகம், துணைத்தலைவர்கள் சந்திரசேகரன், முருகன், மன்னாதன், மாநில செயலாளர்கள் தயாளன், முத்துராமன், பாஸ்கர், பாண்டியன், ஹேமலதா, செந்தில், முருகன், பொருளாளர் அந்தோணி உட்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய பட்ஜெட்டை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.
- நாடு முழுவதும் இருந்து பல்வேறு கல்லூரி, பல்கலைக்கழகங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- தேசிய அளவிலான ஸ்மார்ட் இந்தியா ஹேகத்தான் போட்டியிலும் எம்.ஐ.டி. கல்லூரி வென்று சாதனை படைத்தனர்.
புதுச்சேரி:
ஏ.எம்.சி.ஏ.டி.-எஸ்.எச்.எல். இணைந்து அகில இந்திய சிக்கல் தீர்க்கும் திட்ட வரைவு மென்பொருள் போட்டியை நடத்தியது. இதில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு கல்லூரி, பல்கலைக்கழகங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெ க்னாலஜி (எம்.ஐ.டி.) கல்லூரியில் தகவல் தொழில் நுட்ப துறை இறுதியாண்டு மாணவர் பிரவீன்குமார் கலந்து கொண்டு இறுதிப்போட்டியில் முதல் பரிசு பெற்றார்.
தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று
கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவரை கல்லூரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், கல்லூரி துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், கல்லூரி முதல்வர் மலர்க்கண் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினார்கள்.
ஏற்கனவே 2021, 2022-ம் ஆண்டு நடந்த தேசிய அளவிலான ஸ்மார்ட் இந்தியா ஹேகத்தான் போட்டியிலும் எம்.ஐ.டி. கல்லூரி வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
- புதிய மின்மாற்றியை பொது மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- மின்துறை அதிகாரிகளை துரிதப்படுத்தி அங்கு ரு.12 லட்சம் செலவில் புதிய மின்மாற்றி அமைத்தார்.
புதுச்சேரி:
வில்லியனூர் மார்க்கெட் பகுதியில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக அடிக்கடி மின்நிறுத்தம் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் செய்தனர்.
மேலும்,அங்குள்ள பழைய மின்மாற்றியை அகற்றிவிட்டு, அதிக மின்திறன் கொண்ட புதிய மின் மாற்றியை நிறுவ வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. மின்துறை அதிகாரிகளை துரிதப்படுத்தி அங்கு ரு.12 லட்சம் செலவில் புதிய மின்மாற்றி அமைத்தார்.
புதிய மின்மாற்றியை பொது மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில எதிர்க்கட்சித் தலைவர் சிவா புதிய மின்மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், மின்துறை உதவிப் பொறியாளர் முருகேசன், இளநிலைப் பொறியாளர் பாலமுருகன், தி.மு.க. தொகுதி செயலாளர் ராமசாமி, மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், ரமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- அரசு சார்பு நிறுவனங்களில் ஆண்டு கணக்கில் சம்பளம் வழங்கப்படாததால் இன்னலுக்கு ஆளாகியுள்ள அரசு சார்பு நிறுவன தொழிலாளர்கள் பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காண வேண்டும்.
- ஏ.ஐ.டி.யூ.சி. மாநிலத் தலைவர் தினேஷ் பொன்னையா தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் நடைபெற்ற வேலைகள் சம்பந்தமாக பேசினார்.
புதுச்சேரி:
ஏ.ஐ.டி.யூ.சி. மாநில நிர்வாகிகள் கூட்டம் முதலியார் பேட்டை ஏ.ஐ.டி.யூ.சி. அலுவலகத்தில் நடந்தது.
ஏ.ஐ.டி.யூ.சி. மாநிலத் தலைவர் தினேஷ் பொன்னையா தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் நடைபெற்ற வேலைகள் சம்பந்தமாக பேசினார்.
கவுரவ தலைவர் அபிஷேகம், பொருளாளர் அந்தோணி, துணைத் தலைவர்கள் சேகர், மறிகி ரிஸ்டோபர், மன்னாதன், செயலாளர்கள் தயாளன், முத்துராமன், துரை செல்வம், மூர்த்தி, ஹேமலதா, செந்தில்முருகன், பாஸ்கர் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
அரசு சார்பு நிறுவனங்களில் ஆண்டு கணக்கில் சம்பளம் வழங்கப்படாததால் இன்னலுக்கு ஆளாகியுள்ள அரசு சார்பு நிறுவன தொழிலாளர்கள் பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காண வேண்டும்.
மூடி கிடக்கும் பஞ்சாலைகள், கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும்.
அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்திற்கு உறுப்பினர்களை தேர்வு செய்து தேவையான நிதி ஒதுக்கி செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் மின்துறையை தனியார் மயமாக்கும் படுத்தும் முடிவினை கைவிட வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் போராட்டம் நடத்துவது.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- புதுவை நகர மாவட்ட பா.ஜனதா செயற்குழு கூட்டம் தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
- பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு கூடுதலாக 79 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியதற்கும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை நகர மாவட்ட பா.ஜனதா செயற்குழு கூட்டம் தனியார் ஓட்டலில் நடந்தது.
நகர மாவட்டத் தலைவர் அசோக்பாபு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஆனந்த கண்ணன் வரவேற்றார். மாநிலத் தலைவர் சாமிநாதன், அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், ரிச்சர்டு பேசினர்.
மாவட்ட பொறுப்பாளர் ரத்தினவேல் நோக்க உரையாற்றினார்.கட்சியை பலப்படுத்துவது குறித்து மோகன்குமார் பேசினார்.
ஜெயக்குமார், ஆறுமுகம், விஜய் தீர்மானங்கள் வாசித்தனர். கூட்டத்தை விஜயரங்கம் தொகுத்து வழங்கினார்.
கூட்டத்தில் 1.1.2023 முதல், மேலும், ஓராண்டுக்கு உணவு தானியங்களை இலவசமாக வழங்க உத்தரவிட்டதற்கும், பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு கூடுதலாக 79 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியதற்கும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மணிமாறன் நன்றி கூறினார்.
- புதுவை ஜிப்மர் மருத்துவமனை கலையரங்கத்தில் 18-வது தேிய குழந்தைகள் நல மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர்களின் வருடாந்திர மாநாடு நடந்தது.
- இன்றைய காலத்தில் மருத்துவ தொழில் பழகுவது என்பது மிகவும் சவாலான ஒன்று. இந்த துறையில் இன்னும் பல்வேறு ஆராய்ச்சிகளை தொடர வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை ஜிப்மர் மருத்துவமனை கலைய ரங்கத்தில் 18-வது தேிய குழந்தைகள் நல மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர்களின் வருடாந்திர மாநாடு நடந்தது.
மாநாட்டை கவர்ன் தமிழிசை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார்.
அவர் பேசியதாவது:-
அரசு மருத்து வமனைகளை மேம்படுத்த புதுவை அரசு கவனம் செலுத்தி வருகிறது. மருத்துவத் துறையின் வளர்ச்சிகளும், தொழில்நுட்பங்களும் சாதாரண மக்கள் பயனடையும் வகையில் சென்றடைய வேண்டும். இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ேவண்டும். தொழில்நுட்பத்திற்கும், மக்களுடைய புரிதலுக்கும் இடையிலான ஒரு சமநிலையை மருத்துவர்கள் கடைபிடிக்க வேண்டும்.
இன்றைய காலத்தில் மருத்துவ தொழில் பழகுவது என்பது மிகவும் சவாலான ஒன்று. இந்த துறையில் இன்னும் பல்வேறு ஆராய்ச்சிகளை தொடர வேண்டும். ஆராய்ச்சிகளும், கண்டுபிடிப்புகளும் மக்களுக்கு பயன்படும்.
நான் ஒரு மகப்பேறு மருத்துவர் என்பதால் குழந்தைகள் மருத்துவத்திலும் நல்ல அனுபவம் கிடைத்தது. இருப்பினும் நான் கடந்த 2009-ல் இருந்து மருத்துவம் பார்ப்பதை நிறுத்தி விட்டேன். வேலை இல்லாதவர்கள் தான் அரசியலுக்கு வருவார்கள் என கூறுவார்கள். ஆனால் நான் மருத்துவராக இருந்தபோது அதிக வேலை பளு இருந்தது. இருந்த போதும் அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசையால் வந்தேன்.
தற்போது கவர்னராக உள்ளேன். நான் தெலுங்கானாவில் கவர்னராக பொறுப்பேற்ற போது, இவர் ரொம்ப இளம் வயதானவர், கவர்னராக எப்படி இவரால் புதிய மாநிலத்தை பார்த்து கொள்வார் என்ற பேச்சுகள் வந்தது. பிறகு, கூடுதலாக புதுவை துணைநிலை கவர்னர் பொறுப்பும் கொடுக்கப்பட்டது.
அப்போது இவர் எப்படி 2 மாநிலங்களை பார்ப்பார்? என்ற பேச்சுக்கள் வந்தன. ஆனால், நான் மகப்பேறு மருத்துவர் என்பதால் ஒரு குழந்தையாக இருந்தாலும் சரி, இரட்டை குழந்தையாக இருந்தாலும் சரி, நல்ல முறையில் பார்த்துக் கொள்ள தெரியும்.
அதுபோல் 2 மாநில கவர்னர் பொறுப்புகளையும் நல்ல முறையில் பார்த்துக்கொள்வேன்.
இவ்வாறு கவர்னர் தமிழிசை பேசினார்.






