search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    2 மாநில கவர்னர் பொறுப்புகளையும் நல்ல முறையில் பார்த்துக்கொள்வேன்-கவர்னர் தமிழிசை பேச்சு
    X

    புதுவை ஜிப்மர் தேசிய குழந்தைகள் நல மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர்களின் மாநாட்டினை கவர்னர் தமிழிசை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த காட்சி.

    2 மாநில கவர்னர் பொறுப்புகளையும் நல்ல முறையில் பார்த்துக்கொள்வேன்-கவர்னர் தமிழிசை பேச்சு

    • புதுவை ஜிப்மர் மருத்துவமனை கலையரங்கத்தில் 18-வது தேிய குழந்தைகள் நல மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர்களின் வருடாந்திர மாநாடு நடந்தது.
    • இன்றைய காலத்தில் மருத்துவ தொழில் பழகுவது என்பது மிகவும் சவாலான ஒன்று. இந்த துறையில் இன்னும் பல்வேறு ஆராய்ச்சிகளை தொடர வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மர் மருத்துவமனை கலைய ரங்கத்தில் 18-வது தேிய குழந்தைகள் நல மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர்களின் வருடாந்திர மாநாடு நடந்தது.

    மாநாட்டை கவர்ன் தமிழிசை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார்.

    அவர் பேசியதாவது:-

    அரசு மருத்து வமனைகளை மேம்படுத்த புதுவை அரசு கவனம் செலுத்தி வருகிறது. மருத்துவத் துறையின் வளர்ச்சிகளும், தொழில்நுட்பங்களும் சாதாரண மக்கள் பயனடையும் வகையில் சென்றடைய வேண்டும். இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ேவண்டும். தொழில்நுட்பத்திற்கும், மக்களுடைய புரிதலுக்கும் இடையிலான ஒரு சமநிலையை மருத்துவர்கள் கடைபிடிக்க வேண்டும்.

    இன்றைய காலத்தில் மருத்துவ தொழில் பழகுவது என்பது மிகவும் சவாலான ஒன்று. இந்த துறையில் இன்னும் பல்வேறு ஆராய்ச்சிகளை தொடர வேண்டும். ஆராய்ச்சிகளும், கண்டுபிடிப்புகளும் மக்களுக்கு பயன்படும்.

    நான் ஒரு மகப்பேறு மருத்துவர் என்பதால் குழந்தைகள் மருத்துவத்திலும் நல்ல அனுபவம் கிடைத்தது. இருப்பினும் நான் கடந்த 2009-ல் இருந்து மருத்துவம் பார்ப்பதை நிறுத்தி விட்டேன். வேலை இல்லாதவர்கள் தான் அரசியலுக்கு வருவார்கள் என கூறுவார்கள். ஆனால் நான் மருத்துவராக இருந்தபோது அதிக வேலை பளு இருந்தது. இருந்த போதும் அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசையால் வந்தேன்.

    தற்போது கவர்னராக உள்ளேன். நான் தெலுங்கானாவில் கவர்னராக பொறுப்பேற்ற போது, இவர் ரொம்ப இளம் வயதானவர், கவர்னராக எப்படி இவரால் புதிய மாநிலத்தை பார்த்து கொள்வார் என்ற பேச்சுகள் வந்தது. பிறகு, கூடுதலாக புதுவை துணைநிலை கவர்னர் பொறுப்பும் கொடுக்கப்பட்டது.

    அப்போது இவர் எப்படி 2 மாநிலங்களை பார்ப்பார்? என்ற பேச்சுக்கள் வந்தன. ஆனால், நான் மகப்பேறு மருத்துவர் என்பதால் ஒரு குழந்தையாக இருந்தாலும் சரி, இரட்டை குழந்தையாக இருந்தாலும் சரி, நல்ல முறையில் பார்த்துக் கொள்ள தெரியும்.

    அதுபோல் 2 மாநில கவர்னர் பொறுப்புகளையும் நல்ல முறையில் பார்த்துக்கொள்வேன்.

    இவ்வாறு கவர்னர் தமிழிசை பேசினார்.

    Next Story
    ×