என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
70 வயதானாலும் அரசியலை விட்டு அகலாமல் சிலர் அடம்பிடிக்கின்றனர்-முன்னாள் அமைச்சர் கந்தசாமி குற்றச்சாட்டு
- ஒரு கட்சி வளர்ச்சிப் பாதையில் செல்ல முக்கிய பதவிகளில் இளைஞர்களுக்கு, புதியவர்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும்.
- அரசு ஊழியர் வயதாகி விட்டால் பணி ஓய்வு கொடுத்து அனுப்புகின்றனர். வயதானவுடன் சிந்தனை ஓட்டம் மாறிவிடும்.
புதுச்சேரி:
புதுவை காலாப்பட்டு வட்டார காங்கிரஸ் சார்பில் ஒற்றுமை நடைபயணம் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
முன்னாள் அமைச்சர் ஷாஜகான் தலைமை வகித்தார். மாநில தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன், எம்.எல்.ஏ. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், பாலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதில் முன்னாள் அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:-
ஒரு கட்சி வளர்ச்சிப் பாதையில் செல்ல முக்கிய பதவிகளில் இளை ஞர்களுக்கு, புதியவர்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும். கட்சியில் மூத்தவர்கள் முன்வந்து சிலவற்றை விட்டுக் கொடுக்க வேண்டும்.
ஒரு கட்சி நிலைத்து நிற்க வேண்டுமென்றால் கட்சி தொண்டன் வாழ வேண்டும்.
காங்கிரஸ் கட்சியில்தான் ஒரு தொண்டன் எம்.எல்.ஏ., அமைச்சர், முதல்- அமைச்சர் பதவியில் அமர முடியும். ஆனால் சிலர் கட்சிப்பத விகளில் இளைஞர்கள் தொண்டர்கள் வருவதை தடுக்கின்றனர்.
காங்கிரசில் வல்சரா ஜிக்கு அடுத்து நான்தான் சீனியராக உள்ளேன். நான் தலைவர் பதவிக்கு வரக்கூடாது என முக்கிய நபர் தடுக்கிறார்.
கட்சிக்காக கடுமையாக உழைக்க, செலவிட தயாராக உள்ளேன். இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதற்கு சோனியாகாந்தியே முன்மா திரியாக உள்ளார்.
அரசு ஊழியர் வயதாகி விட்டால் பணி ஓய்வு கொடுத்து அனுப்புகின்றனர். வயதானவுடன் சிந்தனை ஓட்டம் மாறிவிடும். ஒரு பணியை சிறப்பாக செய்ய முடியாது. ஆனால் அரசியலில் 70 வயதானலும் போகமாட்டேன் என சிலர் அடம்பிடிக்கின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.






